Skip to main content

Posts

Showing posts from 2008

நடந்து வந்த பாதை

2008 எப்படியிருந்தது சுவடுகளின் நிழலா- சுமைகளின் சுமையா- துன்பங்களின் ரணங்களா- நிலவில் பனியா தெரியவில்லை.(என்னடா சாத்திரக்காரன் மாதிரி சாத்திரம் சொல்லுகின்றனே என்று நினைக்க வேண்டாம்) 2008 இல் அரசியல் என்ன நடந்தது சினிமாவில் என்ன நடந்தது உலகத்தில் என்ன நடந்ந்து என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் அதைப்ப பற்றி நான் இங்கு பதிய வரவில்லை. ஏன் என்றால் நமக்குள் நடக்கும் போராட்டங்களும் ஒரு அரசியல்தானே நம்மைச்சுற்றி எத்தனை சினிமாக்கள். உலகமே ஒரு நாடக மேடைதானோ அதில் நாம் எல்லாம் நடிகர்கள்தானே. ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போதும் நாம் எதாவது ஒரு சபதத்தை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம் அந்த சபதத்தில் நாம் வெற்றி பெறுகின்றோமா இல்லையா? என்று நாம் பார்தால் 100 இற்கு 50 வீதமானோர்தான் வெற்றி பெறுகின்றார்கள்.தோல்வி பெறுப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் நேரம் சரியில்லை காலம் சரியில்லை ஜாதகத்தில் கோளாறு அதிஷ்டம் இல்லை என்று என்னென்னவோ சொல்கின்றார்கள். அவர்கள் ஏன் அப்படிச் சொல்கின்றார் என்றால் அவர்களிடம் முயற்சி இல்லை- தன்னம்பிக்கை இல்லை-சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- உதவிகள் யாரும் செய்ய மாட்டேன்றார்கள் என்று …

சிரிப்பு

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.... இன்றைக்கு அமர்க்களமாக சிரிப்பைப்பற்றி கொஞ்சம் சிரிக்கலாமே.
பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப்போச்சு பழசுகள் சொல்லுங்கள் இந்த டயலொக்கை அந்தக் காலத்தில பெண்கள் சிரிச்சாலே தப்பாக பார்ப்பார்களாம். ( ஏன் அவர்கள் பேய் மாதிரி சிரிக்கின்றார்களோ தெரியவில்லை அதனால் தான் அப்படி சொன்னார்களே) சரி நாம் நாளந்தம் யாருடையாவது முகத்தில் முழிக்கும் பொழுது அவர்கள் முகம் ஏதோ இழவு விழுந்த மாதிரி இருந்தால் அன்று உங்களது நாள் எப்படியிருக்கும் சும்மா அதிருமலே.ஆனால் புன்னகைத்த முகத்துடன் பார்த்தால் உங்களது முகத்தில் எத்தனை சந்தோஷங்கள். அத்தனைக்கும் ஒரு பெண் சிரித்தால் சும்மா அவ சிரிப்பாலயே சிக்ஸர் அடிச்சுட்டு என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
சிரிப்பிலே எத்தனை வகை என்று கேட்டால் கட்டாயம் எனக்குத் தெரியாது. நான் ஒன்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லை அவ்வளவுக்கு சிரிப்பை ஆராய. எனக்குத் தெரிந்த சிரிப்புக்களும் என்னைக் கவர்ந்த சிரிப்புகளும் என்றுதான் சொல்லலாம். (அ...அ.. இவர் ரசித்துப் பார்த்ததை நாங்க ஏன் படிக்க வேண்டும் எங்களுக்கு வேற வேலை இல்லை என்று நீங்கள் மனதுக்குள…

கடலை போடுவது ஆபத்தா?

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை. ஏன் கடலை போடுகின்றார்கள்? எதற்காக போடுகின்றார்கள்? யார் போடுகின்றார்கள்? என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. (ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......) ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற…

இப்படியும் குளிக்கின்றார்களாம்....

இந்தக்குளிரிலும் இப்படிக் குளிக்க இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்துச்சோ தெரியவில்லை. ( என்னடா இவன் குளிக்கேலையா என்று நினைக்க வேண்டாம்)சீனாவின் Liaoning என்னுமிடத்தில் ஆறு பனிக்கட்டிகளாக உறைந்துபோய்யுள்ளது. அதில் குளிப்பதற்கு இவர்களுக்கு வந்த ஆசையினால் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகளை வெட்டி அதற்குள் குளிக்கின்றார்கள் நீச்சல் வீரர்களாம் இவர்கள்.

ஒபாமா அலையாம்........

நட்பு.........................

நட்பைப்பற்றி நண்பர்களுடன் விவாதித்துவிட்டு வருகின்றேன் என்றேன்.விவாதித்தேன்...... சும்மா வந்து விழுந்த அம்புகள் என்னைக்குத்திவிட்டன. அதனையும் எனது நண்பர்கள் எனக்குத்தந்த முத்துக்கள் (எனது அறிவுக்கு) என்றுதான் சொல்ல வேண்டும். (உங்களுக்கு அது முத்தோ இல்லையோ எனக்குத் தெரியாது முத்தாகப் பட்டால் வாழ்த்துங்கள் இல்லையேல் நல்லாகத் திட்டுங்கள்.)
புரிந்துணர்வு... நண்பர்களுக்கிடையில் வருவது முக்கியம் ... புரிந்துகொண்ட நண்பர்கள் இன்று எத்தனை பேர் காதலர்களாகவும் எத்தனை பேர் கணவன் மனைவியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அத்தனைக்கு அவர்களது புரிந்துணர்வுதான் காரணம்.
விட்டுக்கொடுப்பு... ஐயோ சாமி இந்த வார்த்தையைக் கேட்டால் எனக்கு கோபம்கோபம்தான் வரும் ஏன் என்றால் நான் அதிகமாக விட்டுக்கொடுத்திருக்கின்றேன்.. அதனால் பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கின்றது.ஆனால் நான் விடுக்கொடுக்கும்போதேலாம் அதை எனது நண்பர்கள் இவனுக்கு சூடு சுறனை இல்லை என்று திட்டுவார்கள். இவனுக்குகோபமே வராதா? இவன் எல்லாம் ஒரு மனிதனா என்றேலாம்..... கேவலப்படுத்தியிருக்கின்றார்கள் நான் எதனையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.ஏன் என்றால் எனது ந…

தோழா தோழா

தோழா தோழா தோழ்கொடு தோழா.. என்ன பாட்டுப்பாடுறன் என்று நினைக்கவேண்டாம். காதலைப் பற்றிப்போட்டுவிட்டானே... நட்பைப்பற்றிப்போடவில்லையே இவனுக்கு நண்பர்கள் இல்லையோ நட்பைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்றேல்லாம் திட்ட வேண்டாம். மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று உங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் அது மிகக்குறைவாகவே இருக்கின்றன. ஆரம்பத்தில் பாடசாலை முதல் நீங்கள் பல்கலைக்கழகம் முடிக்கும் வரை எத்தனை பாடசாலைகள் எத்தனை கல்விநிறுவனங்கள்எத்தனை நண்பர்கள்.... அத்தனையும் பசுமையின் சின்னங்கள். அதன் பின் தொழில் சார் நண்பர்கள் என்று உங்களின் நட்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆண், பெண் நட்பு அது இன்று சர்வசாதாரணமாகிவிட்டதொன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பாக பழகுவதே ஒரு செய்தி-ஒரு பரபரப்பு- அவர்களை தவறான பார்வையில் பார்ப்பதும் நோக்குவதும் சமூகத்தில் இருந்து வந்தது. ஆனால் இன்று அது கால ஒட்டத்தில் மறைந்து போய்விட்டது.நமது கலாச்சாரம் வெளிநாட்டின் கலாசாரத்தில் ஒன்றிப…

துளிகள்

யார் இந்த நாராயணன்?

இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியும் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகர் இவர்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர் குலைக்க மத்திய அரசுடன் செயல்படுவருபவர். தமிழ் நாட்டில் உளவு துறையை மிகவும் சதூரியமாக கையாளக்குடிய நபர் இவர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்று காத்துக்கிடந்தனர். ஈழத்தின் அவல நிலைமைகளை பிரதமருக்கு சொல்வதற்காக இருந்தனர். அப்போது அவர்களை சந்திக்க விடாமல் செய்தவரும் இவர்தான்.
அப்படிப்பட்ட இந்த நாராயணன். கியூபாவில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டில் இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பதற்கு ஏற்படு செய்துகொடுத்தவர்.
தமிழர்களின் நலனில் அக்கறையில் துளி கூட விரும்பம் இல்லை இந்த நாராயணனுக்கு இவர் தனது பெயரை நரதர் என்று மாற்றி வைத்திருக்கலாமே?
இலங்கையில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் எம்.கே.நாராயணன் மன்மோகன்சிங்கின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி ஏற்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளின.
ஏதோ இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய வீரன் என்ற எண்ணத்தில் அவர் மீது அவ்வளவு பாராட்டு மழை.
பின்ன அவருக்கு இதைக்…

வர்ணங்கள் ஆயிரம்

கௌதம்மேனனின் உணர்வுகளின் குவியலா அல்லது உணர்ச்சிகளின் குவியலா என்று சொல்லத் தோன்றுகின்றது வாரணம் ஆயிரம் .தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தையும் தன்னால் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கின்றார். அவர் செதுக்கிய சிற்பங்கள் ஆயிரம் சேர்த்துத்தானோ இந்த வாரணம் ஆயிரம்.தந்தை மகன் பாசம் தான் கதை என்றாலும் சின்ன சின்ன உணர்வுகளை காட்டிய விதம் பிரமிக்க வைக்கின்றது.தந்தை 5 அடி பாய்ந்தால் பிள்ளை 20 அடி பாயும் என்பார்கள். அதை போல சிவகுமாரையே மிஞ்சிவிட்டார் சூர்யா.சூர்யா தந்தை மகன் என்று இரண்டு கதாபாத்திரங்கள் சும்மா பின்னியெடுக்கின்றார். ஒவ்வொரு மனிதனுக்கு அவனது தந்தைதான் முன்னோடி. அவ்வாறு இருக்கும் தந்தையையே தனது முன்னோடியாக கொண்டு சிறு வயது முதல் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.தந்தை கதாபாத்திரத்திற்கும் மகன் பாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கின்றார் ஸாரி வாழ்ந்திருக்கின்றார்.சாமிராரெட்டி தமிழுக்கு புதுவரவு நல்லவரவு இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் பட்டாம் பூச்சி.சாமிரா ரெட்டி சூர்யா காதல் இளையராஜாவின் இடைக்காலத்துப் பாடல்கள் கேட்ட அனுபவம்.... இதை …

பாகம் 2

என்ன தொடரும் என்று போட்டுவிட்டு என்னும் பதியாமல் இருக்கின்றானே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது. இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.
தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.
தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.
காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை. காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம்.
அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள். தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.
தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......
இந்தக்காதல்......
பொறுங்கோ வாரேன…

என்பார்வையில் காதல்

காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது. சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றத…

என்மனம்

மாமனார் வீடுக்கு மருமகனின் நன்றி

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி யும் நேற்று(16.11.2008) நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டிருந்தார்.காலை 8 மணி முதல் மாலை4 மணி வரை இந்த உண்ணாவிரதம் இடம்பெற்றது. உண்ணாவிரதம் ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தை விட அதிகமான ரசிகர்கள் மாநிலங்கள் தோறும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர்.அது சரி எல்லா நடிகர்களும் இருக்கும் போது விஜய் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா? அதனால் தான் இப்படி ஒரு உண்ணாவிரதம் என்று கோடம்பாக்கத்தில் இப்பொழுது பரப்பரப்பாக பேசப்படும் விடயம் எவ்வளவு மூத்த நடிகர்கள் விஜயகாந்த்,கமல், ரஜனி போன்ற ரசிகர்படைகளை வைத்திருக்கும் நடிகர்களுக்கு வரத இந்த எண்ணம் விஜய்கு ஏன் வந்தது? என்றுதானே நீங்கள் கேட்கின்றீர்கள்.விஜய் புகுந்த வீடு லண்டனாக இருக்கலாம். ஆனால் அவரது மனைவி சங்கீதா ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அவரதுபூர்வீகம் ஈழம் .மனைவியின் தாய்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் மருகமன் அதற்காக கண்ணீர் விடத்தான் வேண்டும். அதை நல்ல மருகனால்தான்…

விடுமுறையில் நான் ரசித்த கவிதைகள் சில…

கொண்டாட்டங்களை நிறுத்திய கமல்

எதோ வண்டியை நிறுத்தியதாக நீங்கள் நினைக்கவேண்டாம். ஈழத்தில் நடக்கும் போர் காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அந்த வேளையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கமல் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.ஓகே அதுசரிதான் தனது இரத்த சொந்தங்கள் பாதிக்கப்படும் பொழுது எனக்கு என்ன பிறந்த நாள் கொண்டாட்டம் என்று கமல் நினைத்திருக்காலாம்.ஆனால் கொழும்பில் உள்ள பல இலத்திரனியில் ஊடகங்கள் கமல் பிறந்த நாளை கொண்டாடியது அவர்கள் கொண்டாடியது தப்பில்லை. அவர்கள் எதையும் எப்பவும் கொண்டாடி ஆக வேண்டிய நிலையா நிர்ப்பந்தமா தெரியவில்லை.ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் எதுவுமே தெரியாததுபோல இவர்களின் கொண்டாட்டங்கள் இருந்தன.வியாபார நோக்கத்திற்காக இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடலாமா? இல்லை உண்மையைச் சொன்னால் ஊடகங்களை நிறுத்திவிடுவார்கள் என்ற பயமோ தெரியவில்லை.ஊடங்கங்கள் தான் இவ்வாறான செயல்களில் இருக்கின்றது என்றால் மக்களுமா?ரசிகர்கள் என்ன செய்கின்றார்கள் தங்களது தலைவன் இவ்வாறான ஒரு அறிக்கையை விடுகின்றார் என்றால் இவர்களுக்கு எங்கே போயிற்றுது புத்தி.கொழும்பு எதோ அமெரிக்காவிலும் ஈழம் எதோ அவுஸ்திரே…

ஈழப்பிரச்சினையும்சினிமா ஒப்பனைகளும்

ஈழத்தில் போர் தொடங்கி இற்றைக்கு 30 வருடங்கள் ஆகின்றன ஆனால் சில தமிழ்ச்சினிமா நட்சத்திரங்கள் நேற்றுத்தான் ஈழத்தில் போர் நடப்பதுபோலவும் அங்குள்ள அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள இராணுவத்தினால் எடுக்கப்படுவதை அதிசயமாகப் பார்க்கின்றன.
அது சரி ஈழத்துப்பிரச்சினையைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை உலகம் அறிந்த ஒன்று அகையினால் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகள் கட்டாயம் ஈழமக்களுக்குத் தேவை அது நடிகர்களினால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்றால் அது சிலருக்கு தங்களின் அரசியல் இலாபங்ககளுக்காகவே உண்ணாவிரதப்போராட்டங்களில் ஈடுபடுகின்றனரே என்றே சொல்லத் தோன்றுகின்றது.நடிகர் விஜயகாந்தை அரசியல் வாதி என்பதை நிறுபித்துவிட்டார் பல வருடங்களாக ஈழத்தில் மக்களுக்கு எப்பொழுது அமைதிகிடைக்கின்றதோ அப்போது தனது பிறந்த நாளை கொண்டடுவேன் என்று கூறிய விஜயகாந்தா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
உண்ணாவிரததில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்று அறிவித்தபோதும் கமலின் உரையில் குருதிப்புனல் பட வசனம் உதவியது அது போல ரஜனிகாந்த மத்திய அரசையும் இலங்கை அரசையும் சாட்டை அடி கொடுத்தார் என்றார்கள்.
அது சரி நியாயம் என்று ந…

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே
இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவரசர்களுக்கு முடிசூட்டும் விழாவும் விழாவில் ஏற்பட்ட சறுக்கல்களும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ஏன் என்று நீங்கள் கேட்கிறது புரிகிறது.அன்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும்சரி சக்தி ரி.வியில் பார்த்தவர்களும் சரி நிகழ்ச்சியின் ஏற்பாட்டிலும் சரி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மிகவும் சிறப்பாக செய்தார்களா?அவர்கள் நிகழ்ச்சிய நடத்துவதில் இருந்த ஆர்வத்தைக்காட்டிலும் ஏதோ மாட்டு மந்தையை அடுக்குவது போன்று காட்டுக்கத்தல் இருக்கிறதே அதை ரசிக்க ரசிகர்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டார்கள்.குறிப்பாக சக்தி எப்.எம் பொறுப்பாளர் மாயா ( உண்மையான பெயர் மாயாண்டி) அவர் மேடை நிகழ்ச்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்துதான் செய்தாரா?அல்லது வடிவேலுமாதிரி எதாவது காமடி கிமடி பண்ணினாரா என்று தெரியவில்லை.அவர் உச்சரிக்கும் பல வார்த்தைகள் சரியில்லை குறிப்பாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊதியம் கொடுக்கபோகிறோம் என்று அறிவித்தார்.இவரை எல்லாம் யார் மேடை நிகழ்ச்சிக்கு விட்டது?.........…