Friday, July 31, 2009

கம்பன் செய்த வம்பும் கருணாநிதி செய்கின்ற வம்பும்

இராமாயண காலத்தில் இருந்தே தமிழர்களை அடக்கிக்கி ஆளும் வட இந்தியக் கொள்கைவாதம்.வால்மீகியில் ஆரம்பித்து இன்றைய இந்து ராம் வரைக்கும் தமிழர்களின் தலைவனை கொடுரமான அரக்கர்கள் என்று வர்ணித்துக் கொண்டு வந்திருக் கின்றனர்.அன்று இராவணனை அரக்கன் என்று வர்ணித்தார் வால்மீகி.
கம்பன் ஏன் தமிழில் மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை.அன்று வடஇந்தியாவின் கொள்கைகளை தென்னிந்தியாவிற்கு மாற்றினார் கம்பர் இன்று சோனியா காந்தியின் கொள்கையினை தென்னிந்தியாவுக்கு மாற்றுகிறார் கருணாநிதி.
கம்பன் செய்த வம்பும் கருணாநிதி செய்கின்ற வம்பும் இன்று ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது. இராமாயணத்தில் விபூஸனன் எப்படி இராமரிடம் எட்டபன் போல் போய் ஒட்டிக்கொண்டானோ அதேபோல் இன்று எத்தனை தமிழ் அரசியல் வாதிகள் இந்தியாவின் கதையை நம்பி ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள் அதனால் அன்று இராவணனை இழந்தது தமிழ் இனம் இன்று பிரபாகரனை இழந்து நிற்கின்றது.
அதுசரி ஒரு கெட்டவனை இராமாயணத்தில் விபூசனன் நல்லன் என்று வாரலாறு நம்பவைத்துள்ளது.அதுபோல் பிரபாகரன் என்ற நல்ல வீரனைப்பற்றி வடஇந்திய கொள்கைவாதம் கேட்டவன் என்று வர்ணித்து அதை வரலாறாகவும் மாற்றுவதற்கு அது செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
அன்று ஒரு சீதையை கடத்தியதற்காக.... முழு இலங்கையையே அழித்தது இந்தியா இன்று ஒரு ராஜீவ்காந்திக்குப் பதிலாக முழுத் தமிழினத்தையே அழித்தொழித்திருக்கின்றது.

முன்பு வரதராஜா பெருமாளை தனது தேவைகளுக்காக பயன்படுத்திய இந்தியா அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தது.
இன்று அவரின் நிலைய என்ன???????
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டமாதிரிஇந்தியாவை நம்பி தமிழர்களை தமிழர்களே அழிக்கின்றார்கள்.

Monday, July 13, 2009

மாற்றங்களும் மனிதமும்


மனிதனில் மாற்றங்கள் ஏற்படுவது என்பது இயற்கை அது அவர்கள் வளரும் சூழலைப்பொறுத்து அவர்கள் மாற்றம் அடைவார்கள் என்று சொல்லலாம் அதற்காக மாற்றங்கள் மனிதனைப் புரணப்படுத்தும் என்பது நம்பிக்கை.
நான் இப்படித்தான் வாழ்வேன் என்பது உண்மை நிஜயம்கட்டாயம் என்று வாழ்ந்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தமாவது கிடைக்கும்.நாம் எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் அதுவாகவே தீர்மானிக்கட்டும் என்றுவிடுவது நாம் வாழப் போகின்ற வாழ்க்கைக்கு ஒரு தடையாகவே இருக்கும்.
நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே சூழலில் இருந்து விட்டு ஒருவாரமோ அல்லது ஒரு மாதமோ வேறு ஒரு சூழலில் வாழ்ந்து பார்த்துவிட்டு வந்தீர்கள் என்றால் உங்களில் பல மாற்றங்கள் தென்படும். ஏன் உங்களைச் சுற்றி இருக்கின்றவர்களில் கூட பல மாற்றங்களை நீங்கள் காணலாம். நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவை இழந்து விட்டோம் எவ்வளவை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது புரியும். எது நிஜயம்எது போலி எது நம்பிக்கை எது வாழ்க்கை என்றெல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள மாற்றம் என்பது கட்டாயம் அவசியம்.
மாற்றங்கள் மனிதனினை சீர்படுத்தும் அவனை ஒரு நிலைப்படுத்தும் அவனது இலக்கை அடையக்கூடிய முறையைக் கற்றுக்கொடுக்கும்.

Friday, July 3, 2009

என்ன கொடுமை சரவணா.....

நீண்ட இடைவெளியின் பின் உங்களை சந்திக்கின்றேன் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது.

மக்கள் இனி சுதந்திரமாக வாழ்வார்கள்.. வாழ்கின்றனர் என்ற பசப்பு வார்த்தையை நானும் நம்பி ஒரு தடவை யாழ்ப்பாணம் சென்று வந்தேன்.. சென்று வந்தேன் என்பதை விட நொந்து வந்தேன் என்று தான் சொல்ல முடியும்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாம்? அப்படி என்றால் ஏன் அங்கிருந்து விமானத்தில் வரும் பொழுது பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

மக்கள் நடமாட்டம் இல்லாதஇராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் கட்டுவன் பகுதியில் முதலில் பயணிகள் பொதிகள் அனைத்தும் இராணுத்தினரால் பரிசோதனை செய்யப்பட்டு பின் மொப்ப நாயின் மூலம் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகின்றது.

பின் பயணப் பொதிகளை பயணிகளே தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்ற வேண்டும். சரி அவ்வளவுதான் சோதனை என்று பெரு மூச்சு விட்டுவிட்டு இருந்தேன்.

பெருமூச்சு விட்டு சில நிமிடங்களில் வேறு வாகனங்களில் ஏற்றப்பட்ட பயணிகள் பலாலி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இன்னொரு சோதனை நடவடிக்கை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கும் மொப்ப நாய்களிடம் மீண்டும் எமது பயண பொதிகள் சோதனை செய்யப்படுகின்றது. பின் பயண பொதிகளை இராணுவத்தினர் அக்குவேறு ஆணி வேறாக சோதனை செய்கின்றனர்.

சோதனை செய்த பின் வாகனத்தில் மீண்டும் பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்ற வேண்டும்.. இத்தனைக்கு ஒரு வழி போக்குவரத்திற்கு 11 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது..

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வருவது என்றால் விமானத்தில் வருவது என்ற பெயர் ஒழிய ஆனால் அங்கிருந்து கொழும்பு வருவதென்றால் எவ்வுளவு கஷ்டங்கள்.

இத்தனைக்கும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாம்?
என்ன கொடுமை சரவணா ?

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...