Friday, November 21, 2008

என்பார்வையில் காதல்


காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது. சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம். ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது. இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.காதலைப்பற்றி எழுத நிறையவே இருக்கின்றது ஆகையால் இன்னும் அது தொடர்ந்து வரும்....

2 comments:

Anonymous said...

உண்மை தான் நண்பா.காதல் உணர்வை உணரத்தான் முடியும்.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.எமக்கே தெரியாமல் வந்துவிடுகின்றது.ஆனால் அது ஒரு முறை ஒருத்தருடன் தான் வரும் என்பது சுத்த பொய்.அப்படி பார்த்தா உலகில் யாருமே திருமணம் செய்திருக்க மாட்டார்கள்.காதல் சொல்கின்ற அந்த உணர்வு எமக்கே தெரியாமல் எம்மை ஆக்கிரமிக்கின்றது.அதேபோல் அந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

-ரன்-

Anonymous said...

ஹாய் ரணங்கள்,
உங்கள் மனதில் உள்ள ரணங்கள் எனக்கு புரிகிறது என்ன செய்வது அது கடந்து போனவை. இனி நடக்க இருப்பவையை பார்ப்போம் ஓகே.
காதலை பற்றி நீங்கள் கூறிக கருத்துக்கள் சூப்பர் இந்த உலகத்தில் எத்தனை காதல்தான் திருமணத்தில் முடிந்தது. அப்பஐ திருமணத்தை சேர்ந்தாலும் அது தொடர்கிறதா எல்லாம்??????????????????????????? தான்.
காதல் என்பது அதிசயம் அது எமக்கு தூர இருக்கும் வரை
காதல் என்பது புனிதமானது அதனை நாம் நேசிக்கும் வரை
காதல் என்பது வாழ்க்கை அது நம்மை நேசிக்கும் வரை
என நன்மையான நோக்கோடு நாம் பார்த்தால் காதலை இரசிக்கலாம் இல்லை அவரவரது வரைவிலக்கணமே காதலாகி விடும்.
இங்கு நீங்கள் வழங்கியுள்ள கருத்து சூப்பர். காதலித்து காதலி காதலனை விட்டு சென்றாலோ காதலன் காதலியை விட்டு சென்றாலோ அது ஒன்றும் தோல்வி அல்ல காரணம் பாலர் பருவம் பள்ளி பருவம் போல காதலும் ஒரு பருவம். காதலிக்காதவனை விட காதலித்து தோற்றுப் போனவனே சிறந்தவன் அவனுக்கு உறவு அன்பு பாசம் கடமை காத்திருத்தல் தோல்வி என்பவற்றின் பெறுமதி தெரியும்.
வாழ்க்கை என்னும் புத்தகத்தில் காதல் என்பது ஒரு அத்தியாயம் அதனை விரும்பினால் நீ படிக்கலாம் அதில் நீ தோற்றாலும் வெற்றி பெற்றாலும் நீ தான் வெற்றியாளன் ஓகே.
தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்.
தமிழன்

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...