Skip to main content

பாகம் 2


என்ன தொடரும் என்று போட்டுவிட்டு என்னும் பதியாமல் இருக்கின்றானே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது. இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.
தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.
தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.
காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை. காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம்.

அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள். தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.
தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......

இந்தக்காதல்......

பொறுங்கோ வாரேன்.....

உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?
உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும். ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.
அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.
மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .
அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“
உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவ
னையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.
நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்
என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.
2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....

உடல்கள் இணையும் காதல்.....
அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்று
சிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.
அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர்கள் காதலியுங்கள்
உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.
பொது இடங்களில் உங்களது காமலீலைகளை
அரங்கேற்றதீர்கள். நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.

Comments

Anonymous said…
நன்றாக இருந்தது உங்கள் வசன நடை எனது வாழ்த்துக்கள் ... 2இஞ்
Anonymous said…
ஹாய் ரணங்கள்,நீங்கள் கூற வந்த விடயத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்... ஹாய் ரணங்கள்,
நீங்கள் கூற வந்த விடயத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். குறிப்பாக உங்கள் வசன நடை, பாடல் வரிகள், அதற்கான விளக்கங்கள் என அனைத்தும் மிக அருமை.
சிலரிடம் கருத்துக்கள் கொட்டி கிடக்கும். அதனை வாசகர்களிடம் எப்படி கொண்டு செல்வதென தெரியாது. ஆனால், நீங்கள் உங்கள் கடமையை உணர்ந்து அழகாக காலத்திற்கு ஏற்ற வகையில் தந்துள்ளீர்கள்.
காதல் உண்மையில் புனிதமானது. அது எல்லோரிடத்திலும் இருக்கிறது. இனி அதற்கு எதற்கு ஒரு தினம்???????? புரியவில்லை. புனிதமான காதலை சிதைத்து போடுவது இந்த காதல் தினம்தான். அது எமது முன்னோர் கட்டி காத்த கலாசாரத்தை சீர்குழைக்கிறது.
காதலில் காதலர்கள் எட்ட நின்று கண்ணால் பேசும் வரை மட்டுமே காதல் காதலாக இருக்கிறது. என்று பொது இடம் என்று கூட பார்க்காமல் கைக் கோர்க்கிறார்களோ (ஓரு சிலர்) அன்று அது நாய் காதலுக்கு சமன். வேற்று கிரக வாசிகள் போல நடந்து கொள்கிறார்கள்.
எனவே காதலிப்பவர்கள் முதலில் காதல் என்றால் என்ன? என்பதை புரிந்த கொள்ள வேண்டும். பின்னரே காலிக்க வேண்டும்.
எனவே ரணங்கள் உங்கள் சிறப்பான ஆரம்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
தொடர்ந்து உங்களது சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

தமிழன்

Popular posts from this blog

காதல் காவியம் லைலா மஜ்னு

லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது.

பெரும் செல்வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அழகிய பெண் லைலா. காயிஸ் ஏழ்மையான ஒரு கவிஞன். அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். லைலாவுக்காக ஏராளமான கவிதைகளை அவன் எழுதுகிறான்.
ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. லைலாவும் காயிஸும் காதல் கொண்டிருப்பதை அறிந்த லைலாவின் பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு பிரித்து வைக்கிறார்கள்.செல்வந்த இளைஞன் ஒருனுக்கு லைலாவை திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுடன் மாளிகையில் வசித்த போதிலும் காயிஸை பிரிந்ததை லைலாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள்.லைலாவின் திருமணத்தை அறிந்த காயிஸ் பித்துப்பிடித்தவனாகிறான். இறுதியில் லைலாவின் கல்லறைக்கு அருகிலேயே அவன் இறந்து கிடக்கக் காணப்படுகிறான். லைலாவைப் பிரிந்து துயரத்தில் காயிஸ் பித்தனாக அலைந்தமையால் அவன் மஜ்னு அல்லது லைலாவின் மஜ்னுன் என அழைக்கப்பட்டான். இதற்கு "லைலா பைத்…

தலையில் மண்ணை கொட்டிய சூர்யா..

புவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது.
பத்திரிகைக்காயாளர்களினால் தான் இந்த நடிகை நடிகர்கள் வளர்ந்திருக்கின்றார்கள். இன்று நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக மதிப்பதற்கு பத்திரிகைகள் அவர்களுக்கு கொடுத்த ஆதரவுதான் காரணம். அதனால்தான் அவர்கள் ரசிகர்கர்களது மனங்களில் இடம்பிடிக்கவும் செய்திருக்கின்றார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு காட்டாயம் இப்படியான ஒரு எதிர்ப்பு வந்தது நல்லது என்றுதான் சொல்லலாம்.
நடிகர்களை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருத்த்தியவர்கள் பத்திரிகையாளர்கள்.
இன்று சூர்யா நல்ல நிலைக்கு வருவதற்கு அவரது உழைப்பு ஒரு காரணமாகா இருக்கலாம். அந்த உழைப்பை அங்கீகரித்தவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதை சூர்யா மறந்துவிட்டார்போல.
தொடர் வெற்றிகள் என்பது ஒருவனுக்கு தலைகணத்தை ஏற்படுத்தும் அது சூர்யாவுக்கு மிகவும் பொறுந்தும்.
ரஜினி கூட பேசுகையில் பத்திரிகையாளர்ளை மதித்துத்தான் பேசினார்.
அவர் இருக்கும் உச்சத்துக்கு பத்திரிகைகள்தான் காரணம் என்று நன்கு புரிந்தவர்.
நடிகைகள் ஏதோ பத்தினிகள் மாதிரி இவ்வளவு முழக்கமும் போராட்டமும்.
நட…