Sunday, August 27, 2017

யார் தமிழர்களின் தலைவர்? பிக் பஸ்....... (02)

முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்வதற்காக பஸ் நிலையம் சென்றேன்… அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நிறைந்திருந்தால்…. பஸ் கிடைப்பதற்கு கஷ்டமாக இருந்தது…. இரவு 12 மணியளவில்தான் ஒரு பஸ் கிடைத்தது. அடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறி ஒரு சீட் பிடித்து அமர்ந்துகொண்டேன்….
பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது…. பக்கத்தில் ஒரு சகோத மொழியைச் சேர்ந்த நபர் ஒருவரர் வந்து அமர்ந்தகொண்டார்… அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது….

நான் மெல்ல அவரிடம் நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டேன்  அதற்கு அவர்
நான் யாழ்ப்பாணத்திற்கு வியாபார விடயமாக செல்கின்றேன் என்றார்….
ஆ…. அப்படியா ரொம்ப நல்லது என்றேன்….

அவரது சொந்த இடம் மாத்தறை…..
இருவரும் பரஸ்பரம் நலன்களை விசாரித்துக்கொண்டிருக்கும்போது….

அந்த சகோதர இன நபர் கேட்டார்…
தமிழர்களுக்கு ஏன் சலுகைகள் வேண்டும். நிர்வாகம் வேண்டும் என்று கேட்கின்றீர்கள் என்றார். உடனே நான் சொன்னேன். நீங்களும் இலங்கையர் நானும் இலங்கையர் என்றால் உங்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள். பதவிகள். நிர்வாக கட்டமைப்புக்கள் மாகாண சபை அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்தானே என்றேன்.

அதற்கு அந்த நபர்  …
நீங்கள் வடக்கு மாகாண சபையை ஒழுங்கா ஆட்சி செய்கின்றீர்கள். இல்லைத்தானே.. ஒரே ஊழலும் அமைச்சர்கள் பதவி விலகலும் முதலமைச்சர் ஒரு புறமும் கூட்டமைப்பு மறுபுறமுமாக சண்டைபிடித்துக்கொண்டுதானே இருக்கின்றீர்கள் மக்களுக்கு தேவையானதை எதையாவது செய்தீர்களா? மாகாண சபைக்கு கிடைக்கும் நீதிகள் கூட திரும்பிப்போகின்றதாமே… அவ்வாறு ஒரு வேலைத்திட்டமும் செய்யாமல் மக்களை ஏன் மாகாண சபை அமைச்சர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்று அந்த நபர் கேட்டபோது….
அதில் சில விடயங்களில் நாமும் ஒன்றுபடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம்..

அதற்கு காரணம் யார்? அரசியல் வாதிகளா? இல்லை நிர்வாக அதிகாரிகளா? இல்லை அமைச்சர்களா?  இல்லை சமூக விரோத குழுக்களா?
கலாசாரத்திலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் ஒரு காலத்தில் ஒரு கட்டமைப்புடனும் வாழ்ந்தவர்கள் இன்று தெறிகெட்டுப்போனதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்… இன்னொரு இனம்  எம்மவர்களை சாடுவதற்கு இடம் கொடுத்ததுயார்? என்று தொடர்ந்து மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

(சகோதர இனத்தவருடனான உரையாடலின் மிகுதி அடுத்த பதிவில்)

Sunday, August 13, 2017

பிக் பஸ்....... (01)




அடடடடா என்னடா அதை இதிலையும் எழுதுகின்றார்களா? என்னகொடுமை சரவணா என்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் வாய்க்குள் முணுமுணுப்பது விளங்குது… அது வேற இது வேற என்று சொன்னா நம்பவா போறீங்க…

சரி…. சுரி…விடயத்திற்கு வருவமே ஏன் வீண் அளப்பறை….. பிக் பஸ் என்றால் பெரி;ய பஸ்…… அட அதிலும் நாமும் பயணம் செய்து பார்போம் என்று கோட்டை பஸ் நிலையத்தி;ல்  களுத்துறைக்கு போகலாம் என்று அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஒருசீட்டைப்பிடித்து அமர்ந்துகொண்டேன்….
நம்மளுக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் இருந்தார்கள் அதில ஒருவனிடம் கேட்டேன் களுத்துறைக்கு நான் செல்கின்ற இடத்தை அவன் சொன்னான் எனக்கு தெரியாது… உங்களிடம் போன் இருக்கா என்று நான் ஆம் என்றேன் … உடனே அவன் கூகுல் மப்பை பார்த்து போங்கள் என்றான்.
நம்மலுக்கு கூள்தான் தெரியும் கூகிள் எங்கதெரியும் என்றேன்….

உடனே அந்த பையன் எனது போனை வாங்கி கூகிள் மப்பை டவுண்லோட் பண்ணி நாம  எந்த இடத்திற்கு பயணிக்கபோறமோ அந்த இடத்திற்கு வழிகாட்டிற விதத்தை சொல்லித்தான் தந்தான்….  விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று எனக்கு மறு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன்…
அவருக்கு வந்தது கோபம் என்னை அடிக்காத குறைதான்…. நீங்களும் உங்கட விஞ்ஞானமும் என்று கோபப்பட்டார்…..


ஏன் அப்படி கோபப்படுகின்றீர்கள் என்று கேட்டால்…..
அதுவா… வீட்டில் யாரும் என்னுடன் பேசுகின்றார்கள் இல்லை.
ஏன் வீட்டில்  சண்டைய என்றேன்….
இல்லை ஏல்லோரும் ஏதோ பேஸ் புக்காம் காலையில் எழுந்ததில இருந்து அதுகள் தூங்கும்மட்டும் அதோடுதானே இருக்கிதுகள்…. என்னத்தை சாப்பிடுதுகள் என்னதை குடிக்குதுகள் என்று அதுகளுக்கே தெரியாது எந்த நேரம் பார்த்தாலும் பேஸ்புக் அதில… அவன் இவ்வளவு லைக் போட்டிக்கான் இவன் இவ்வளவு லைக் போட்டிருக்கான் என்று சண்டைவேற…..

திடீர் என்று தூக்கத்தில சத்தம் போட்டு சிரிக்கிறார்கள்; ஏன் என்று போய் பார்த்தால் பேஸ் புக்கில ஜோக் போட்டிருக்காம் அதைபார்த்து சிரிக்கிறாங்க… இரவு 12 மணிக்கு பிறகு தூங்காமல் விடியும் மட்டும் பேஸ் புக்கில இருக்கிறதுகளாம் (கேட்டா நைட் டேட்டா இலவசமாம்.) அதனால் ஸ்கூலுக்கு கூட லேட்டாக போகிறது. அங்க போய் தூங்கி ரீச்சரிடம் அடிவே வாங்கிக்கட்டுறாங்;கள் என்று தனது ஆதங்கத்தை சொல்லி முடித்தார்.
அப்பதான் நான் யோசிச்சேன் குடும்பம் என்றால் எப்படி கூட்டாக இருந்து கதைத்து மகிழந்திருப்போம் இப்ப குடும்பத்தைவிட பெயர் ஊர் தெரியாத ஆணோடு பெண்ணும் தங்களது குடும்பத்தை பற்றி சொல்வதும் நல்லவர்களா கேட்டவர்களா என்று கூடதெரியாது உறவை வளர்த்துக்கொள்வதுமே இன்று பல குற்றங்களுக்கும்கொலைகளுக்கும் காரணமாகிப்போய்விடுகின்றது. ஏதையும் நாம் கவனத்தோடு இருந்தால்தான் நாம்  எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்..
அட களுத்துறை வந்துவிட்டது நான் இறங்குகின்றேன்…இந்துமுறை எனது அளப்பறையை நிறுத்திக்கொள்கின்றேன்… மீண்டும் அடுத்த பஸ்ஸில் சந்திக்கின்றேன்…








காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...