Skip to main content

Posts

Showing posts from April, 2009

திறந்தவெளிச்சிறையில்

மன்னியுங்கள்

தமிழீழம் தமிழனால் சாத்தியமா?

இந்தியாவின் தேர்தல் ஒரு புறம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் மறுபுறம் என்று இன்று காதுகளையும் மனங்களையும் காயப்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்கள் ஆயிரக்கணக்கு.

ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.
(நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியாமல் வேலைப்பழு என்ன செய்யமுடியும் உங்களை ஏமாற்றக்கூடாதே. அரசியல் தலைவர்கள்தான் ஏமாற்றுவார்கள் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். தினமும் பதிவு இட வேண்டும் என்றுதான் நினைப்பேன் முடியாமல் போய்விடும். இந்தப் பதிவும் இரவு 2 மணியளவில்தான் பதியவேண்டிய சூழ்நிலை)
நேற்று ஒரு செய்தியைக் கேட்டு புல்லரித்துப் போனேன் ஒரு நிமிடம் எனது கையை நானே கிள்ளிப் பார்த்துவிட்டேன் என்றால் பாருங்களன்.
தனிஈழம்தான் தமிழர்களுக்குத் தீர்வு என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இவ்வளவு காலமும் உலகத் தமிழர்களின் தலைவன் என்று தன்னை பெருமையோடு கூறிக்கொண்டிருந்த கருணாநிதிக்குக் கூட இந்தச் செய்தி ஒரு இடியாகவேத்தான் இருக்கும்.
வைகோவை பொடா சட்டத்தில் உள்ளுக்குத் தள்ளியதும் இந்த ஜெயலலிதாதான் ஆ…

வெறுங்குடங்களின் கையில் பத்திரிகை

இலங்கையில் ஊடகத்துறை வருங்காலத்தில் ஏன் அடுத்த சந்ததியினருக்கு எப்படி பயனளிக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

அண்மையில் எனக்கு ஒரு பத்திரிகை நண்பருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்ன விடயங்கள் எனது மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது என்றுதான் சொல்லலாம்.

பத்திரிகைத்துறையில் நுழைவதற்காக கனவுடன் திரிபவர்கள் எத்தனை பேர்.... பாரதியர் தொடங்கி இன்று எஸ்.டி.சிவநாயகம் வரை எத்தனை பத்திரிகை ஜாம்பவான்கள் இருந்தார்கள்.

ஏன் இன்றும் எத்தனைபேர் தங்களது திறமைகளை இலைமறை காயாக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

(அது சரி உங்கட நண்பன் உங்களுக்கு சொன்னதை முதலில் சொல்லுங்கள் என்று திட்டுவது எனக்கு தெரிகின்றது)

முன்பெல்லாம் பத்திரிகையாளன் ஆவது என்றால் எழுத்துத்துறையில் ஆர்வமும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று இன்டர் நெட் பார்க்கத் தெரிந்தால் போதும். அதில் வருவதை அப்படியே எடுத்து பிரசுரிக்கின்றார்கள்.அப்படிப் பிரசுரிப்பவர்கள்தான் ஊடகவியலாளர்கள் என்றால், தனது எழுத்தாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லையாம்?ஒருவன் தனது முகவரியைத் தேடிக்கொள்ள முடியாத நிலை ப…

காட்டுக்குள் மிருகங்கள் இருக்கும் ஆனால் மரத்திற்குள்

சிந்திக்க வேண்டிய சித்திரை

தமிழர்களின் புதுவருடப் பிறப்பு நாளை உலகத் தமிழர்களின் தமிழ் முதலாம் நாள் இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்பு சித்திரை வருடப்பிறப்பு என்றால் எத்தனை சந்தோஷம் ஈழத்தமிழனுக்கு.

ஆனால் இன்று ஈழத்தமிழன் சொல்லொண துயரத்தில் இருக்கின்றான் அவனது இருப்புக் கூட கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை மலரப்போகும் விரோதி வருடம் ஈழத்தமிழனுக்கு என்ன செய்யப்போகின்றதோ தெரியவில்லை.

இன்னொரு சோமாலியா போல் முல்லைத்தீவில் பஞ்சம் பட்டிணி மக்களை வாட்டுகின்றது உணவுப்பொருட்களின் விலையோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றது.சிங்களப் பேரினவாதம் விடுதலைப் புலிகளையும் தமிழனையும் அழித்து விட்டுத்தான் தனது சிஙக்ள புதுவருடத்தைக் கொண்டாட திட்டமிட்டிருக்கின்றது.

தமிழனைக் கொன்று குவித்து அவனது இரத்தத்தில் சுகம் காணத் துடிக்கின்றது. விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விட்டதாக நினைக்கின்றது சிங்களப் பேரினவாதம்.

ஆனால் அது இன்னும் விரிவடைந்து வந்து ஒரு ஏழுச்சி நிலையில் நிற்கின்றது. ஆயுதப் போராட்ட ரீதியில் புலிகள் தோல்வியை அடைந்திருப்பது உண்மைதான்.

ஆனால் அவர்களை உலகம் அங்கீரிக்கின்ற ஒரு நிலையை இன்று புலம்பெயர் தமிழர்கள் செய்துவருகின்ற ஆர்ப்பாட்டங்…

லண்டன் உண்ணாவிரதம் உணர்த்துவது என்ன?

லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் உலக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
காந்தி தேசம் கைவிட்ட பின்னர் இன்று உலகத் தமிழர்கள் ஐ.நா.வையே நம்பியிருக்கின்றார்கள்.
தமிழர்கள் இன்று 300 பேரை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவித்திருக்கின்றனர்.
தடுக்குமா உலகம்? இல்லை தட்டிக்கழிக்குமா? காந்தி வழி என்று சொல்வதை விட திலீபன் வழி என்றால் ஈழத்தமிழனுக்கு நல்லது.
உண்ணாவிரதங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று புலம்பெயர் தமிழர்களின் இந்த உண்ணாவிரதம் உலக நாடுகளை கொஞ்சம் அசைக்கும் என்றுதான் தெரிகின்றது.
கடும் குளிரிலும் இந்த உண்ணாவிரதிகளின் கண்களில் சிந்துவது இரத்தக்கண்ணீர் ஈழத்தமிழனுக்காக.... அந்தக் கண்களில்.... என்ன தெரிகின்றது
உலகமே...... கைகொடு ஈழத்தமிழனைக் காப்பாற்ற.லண்டனில் தமிழர்கள் போராட்டம்

லண்டனில் தமிழர்கள் போராட்டம்

ஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
அவர்களை சர்வதேச சமூகம் காப்பாற்றமல் வேடிக்கை பார்க்கின்றது.
நேற்றும் இன்றும் லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் வீதி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையும் படங்களில்...

திரும்பிப்பார்

பாரம்

ரம்பாவின் பிரச்சாரம் ஆரம்பம்

தேர்தல் பிரச்சார மேடையில் ரம்பா தயாராகிக் கொண்டிருக்கின்றார். மானாட மயிலாடா நிகழ்ச்சியில் நடுவரே அவருக்கு இன்று வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா அதற்காகவே அதிரடியாக sorry கவர்ச்சியாக களத்தில் இறங்கிவிடடார் ரம்பா . அது சரி ரம்பா மேட்டருக்கு வாங்களன்... ரம்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றார்.... தொண்டர்கள் அலை மோதிக்கொண்டிருக்கின்றனர். ரம்பா மேடையில் அமர்க்கின்றார்... ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளக்கின்றது. வருங்கால முதலமைச்சர் ரம்பா வாழ்க ரம்பா வாழ்க என்று கலைஞரோ பயந்து விட்டார் எனக்கு பிரச்சாரத்திற்கு அழைத்தால் அவளே வருங்காள முதல்வராம் எப்படி முட்டாள் தனமான தொண்டர்கள் என்று மனதுக்கு வேதனையோடு. கலைஞர் ரம்பா கலைஞரின் தளபதி மு.கா.ஸ்டாலின் அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் குடும்ப குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். பிரச்சாரத்தை கலைஞர் ஆரம்பித்து வைத்தார் எனது கட்சி இன்று பெரும் பின்னடை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. எல்லாப் பக்கதினாலும் அடி அடி அடி அடிக்கின்றார்கள்.நானும் எவ்வளவுதான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. அதற்காகவே தொடை அழகி ரம்பா வை வைத்து பி…