Tuesday, December 23, 2008

சிரிப்பு


சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.... இன்றைக்கு அமர்க்களமாக சிரிப்பைப்பற்றி கொஞ்சம் சிரிக்கலாமே.
பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப்போச்சு பழசுகள் சொல்லுங்கள் இந்த டயலொக்கை அந்தக் காலத்தில பெண்கள் சிரிச்சாலே தப்பாக பார்ப்பார்களாம்.
( ஏன் அவர்கள் பேய் மாதிரி சிரிக்கின்றார்களோ தெரியவில்லை அதனால் தான் அப்படி சொன்னார்களே)
சரி நாம் நாளந்தம் யாருடையாவது முகத்தில் முழிக்கும் பொழுது அவர்கள் முகம் ஏதோ இழவு விழுந்த மாதிரி இருந்தால் அன்று உங்களது நாள் எப்படியிருக்கும் சும்மா அதிருமலே.ஆனால் புன்னகைத்த முகத்துடன் பார்த்தால் உங்களது முகத்தில் எத்தனை சந்தோஷங்கள்.
அத்தனைக்கும் ஒரு பெண் சிரித்தால் சும்மா அவ சிரிப்பாலயே சிக்ஸர் அடிச்சுட்டு என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

சிரிப்பிலே எத்தனை வகை என்று கேட்டால் கட்டாயம் எனக்குத் தெரியாது.
நான் ஒன்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லை அவ்வளவுக்கு சிரிப்பை ஆராய.
எனக்குத் தெரிந்த சிரிப்புக்களும் என்னைக் கவர்ந்த சிரிப்புகளும் என்றுதான் சொல்லலாம்.
(அ...அ.. இவர் ரசித்துப் பார்த்ததை நாங்க ஏன் படிக்க வேண்டும் எங்களுக்கு வேற வேலை இல்லை என்று நீங்கள் மனதுக்குள் பேசுகிறது தெரிகிறது)

மனதுக்குள் சிரிக்கும் பெண்ணே
என் மனம் மறிய மாட்டாயோ
மாரி மழை பொழிந்த வேளையிலும்
மனம் இரங்க மாட்டாயோ

ஐயோ சாமி இது நான் காதலியைப் பார்த்து படித்தது என்று நினைக்க வேண்டாம். எல்லாம் கனவில வந்த வர்ணங்கள் ஆயிரத்தில் ஒன்றுதான்.

புன்னகை இளவரசி சினோகாவும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் புன்னகையையும் பார்த்து எத்தனை நெஞ்சங்கள் மனம் மகிழந்திருக்கின்றன.
சிரித்த முகத்துடன் காணப்பட்டால் அனைவரையும் நீங்கள் கவர்ந்து இழுக்கலாம். அதற்காக ஓவரா சிரிச்சீங்களோ உங்களை இழிச்சவாயன் என்றுதான் நினைப்பார்கள்.
வாரணம் ஆயிரம் தந்த அழகி சாமிரா ரெட்டி .அவளின் கண்கள் கவிதை சொல்ல வில்லை. உதடுகள் உச்சரிக்கவில்லை. கார்கூத்தல் உதிரவில்லை.ஆனால் அவள் உதிர்ந்த புன்கையோ ஆயிரம் அர்த்தங்கள்...
கொஞ்சம் படங்களைப் பாருங்களே ............
சரி எடுத்த மேட்டருக்கு வாரமல் எங்கேயோ போகிறாய் என்று நினைக்க வேண்டாம்.
சிரிப்பு
இந்த நாலு எழுத்துக்களையும் உச்சரிக்கும் உதடுகள் கட்டாயம் சின்னப் புன்னகையாவது உதிரத் தோன்றும்.
நீங்கள் அலுவலகத்தில் செல்லும் பொழுது உங்களது மேலதிகாரி தொடக்கம் உங்களுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களையும் நீங்கள் ஒரு சின்ன புன்னகையித்தால் போதும் அவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்துவிடுவீர்கள்.
உங்களுக்கு கோபங்கள் வரும்பொழு நீங்கள் கண்ணாடி முன் போய் சிரித்துப் பாருங்கள் உங்களது முகம் எப்படி இருக்கும் என்று (அதற்காக நாங்கள் என்ன போகின்ற இடம் எல்லாம் கண்ணாடி கொண்டு போகவா முடியும் என்று கேட்க வேண்டாம்.)
உங்களது வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் வந்தால் அது உங்களது முகத்தில் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் நீங்கள் உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை உலாவ விடுங்கள் அது மற்றவர்களுக்கு சந்தோஷத்தையே கொடுக்கும்.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போய்விடும்..... என்று சொல்வார்கள்.
அதற்காக இரவு 12 மணிக்கு எழும்பி சிரிச்சீங்களோ உங்களுக்கு பேய் பிடித்துவிட்டது என்றுதான் நினைப்பார்கள். அதற்காக நீங்கள் சிரிக்காமல் இருந்து விடக்கூடாது அதற்கா ஒரு நேரம் ஒதுக்கியே இன்று பலர் சிரிப்பையே ஒரு மருந்தாக நினைத்து காலையில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பொழுது குழுவாக சேர்ந்து சிரிக்கின்றார்கள்.
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை சிரிக்கின்றீர்கள் என்பது முக்கியம் அதனால் உங்களது ஆயுள் அதிகரிக்கும் அதேவேளை நீங்கள் இளமையாகவும் இருப்பீர்கள்.குழந்தையின் சிரிப்பில் மகிழாத இதயம் உண்டா சொல்லுங்கள்....
இன்று பலபேருடைய செல்போன்களில் குழந்தைகளின் சிரிப்புக்களே சிருங்காரம் செய்கின்றன.ஏன் நீங்கள் அலுவலகம் விட்டு வீடு களைப்புடன் வீடு செல்லும்போது உங்களது குழந்தைகளின் சிரிப்பைக் கேட்டாலே உங்களது களைப்பு எல்லாம் பறந்துபோய்விடும் அல்லவா.

புன்னகை எனும் ஆயுதம் ஏந்தி
இந்த பூமி தனை ஆண்டிடுவோம்
(சிரியுங்கள் மற்றவர்கள் உங்களை சிரிக்காதவரை..)

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...