Tuesday, June 14, 2022

 இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டம் 



இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி இரண்டாவது மாதத்தில் காலடி எடுத்துவைத்துக்கின்றது கோட்டா கோ கம (Gota Go Home)போராட்டம் . இலங்கை பெரும் அரசியல் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த நெருக்கடிக்கு அரசியல் தலைமைகளே பொறுப்பு கூறவேண்டிய நிலை காணப்படுகின்றது. சீரற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் தலைமைத்துவம் இன்மையால் இலங்கை இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம்  எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பால்மா வகைகளின் தட்டுப்பாடுகாரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பத்தார்கள்.அரசாங்கததை பதவி விலகுமாறு கோரியும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை வீடு செல்லுமாறு வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் முதல் ஆரம்பப்புள்ளியே காலிமுகத்திடலில்  பல்கலைக்கழக மாணவர்களினால்  ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கோம் போராட்டம். காலிமுகத்திடலுக்கு கோட்டா கோ கோம் எனும் கிராமம்  ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டது.  இரவு பகலாக  தொடர் போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கின நாளுக்கு நாள் இந்த காலிமுகத்திடல் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.
இதற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்துக்கு வலுசேர்த்தனர். ஜனாதிபதி கோட்டா பாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொழிற்சங்கங்கள்  வேலைபகிஷ்கரிப்பில் ஈடுபட்டன. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. போக்குவரத்துத்துக்கள்  ஸ்தம்பிதமடையத் தொடங்கியது. மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக உருவெடுத்தது காலிமுகத்திடல் போராட்டம்.

கோட்டா கோ கம (Gota Go Home)

கோட்டா கோ கோம்  காலிமுகத்திடல் போராட்டம் மிகவும் வித்தியாசமான முறையிலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள்  தமது கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்கள் எழுப்பியும்  வீதி நாடகங்கள் பாடல்கள் மூலமாகவும் தமது எதிர்ப்பினை காட்டிவருகின்றனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களம் மிகவும் வித்தியாசமான ஒருபோராட்டகளமாகவே காணப்படுகின்றது. இனம், மதம், பேதங்கள் இன்றி அனைத்து மக்களும், மத தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அமைதி வழியில் மக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக  சுமார் 100 இக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்து  போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உண்பது உறங்குவது  அனைத்தும் போராட்டக்களத்தில்தான். அங்கேய  உடுப்புக்களை துவைத்து அங்கேயே காயவைத்து ஆடைகளை அணிகின்றார்கள். அவர்களுக்கான  கழிவறை வசதிகள் ( மொபைல் டொய்லெட்) காலை மதியம் இரவு என மூன்று வேளைகளும்  உணவுகள்  வழங்கப்படுகின்றன. குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் பானங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவம்  இலவசமாக போன்கள் சார்ஜ் செய்து கொடுகின்றார்கள்.  சூரிய ஒளி மூலம் மீன்சாரம் கோட்டா கோ கமவுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் வழங்கப்படுகின்றது. அங்கு தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் காலை எழுந்தவுடனேயே போராத்தில் ஈடுபடுகின்றார்கள். ஆர்ப்பாட்டத்தில் அமைந்துள்ள கூடாரங்களில்  சட்டம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு, தலைமைத்துவ பண்புகள், பெண் தலைமைத்துவம், மனித உரிமை, நாட்டின் குடிமகன் மன்றம் (CITIZEN FORUM)   நூலகம் போன்ற விடயங்கள்  கூடாரங்கள் அமைத்து மக்களுக்கு தெளிவூட்டப்படுகின்றது.


  இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்
இங்கு அமைக்கப்பட்டுள்ள நூலங்களில் ஸ்டோரி டெல்லிங்  மூலம் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வினையும் சிறுவர் சம்பந்தமான பிரச்சினைகளுக்ககான கலந்துரையாடல்களும் அடுத்த தலைமுறையினருக்கான தகவல்களையும் வழங்குகின்றோம் .
இலங்கையில் ஒரு குடிமகன் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினை என்னவென்றால் சாதாரணதபன குடிமகன் வாழ்க்கை கொண்டு செல்வதற்கு கஷ்டமாகவே இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலரின் வீழ்ச்சியால் இலங்கை அரசாங்கம் அதிகளவிலான பணத்தை அச்சடித்துள்ளார்கள். அதற்கான தீர்வினை மேற்கொள்ளாமல் தொடர்சியாக பணத்தை அச்சடிப்பதால்  தொடர்ந்தும்  அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான விலை உயர்வுமே இன்று எங்களை பாதிக்கின்றது. குறிப்பாக அன்றாட கூலித் தொழில் செய்பவர்களின் நிலைமை ஒரு நேரத்துக்கே சாப்பிடுவதற்கு வழியில்லாமல் இருக்கின்றார். ஆகவே ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்றார்.

இது ஒரு  அமைதியான போராட்டம் என்பதால் நாம் நின்று நிதானமாக ஒரு டெஸ் கிரிக்கெட் மாதிரி போராட வேண்டும்.  பகலில் வேலைகளுக்கு செல்பவர்கள் கூட தங்களது வேலையை முடித்து விட்டு இரவில் வந்து எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றார்கள். கலைஞர்கள் சட்டத்தரணிகள் மாணவர்கள் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள் என  அனைத்து துறைசார்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சுயநல அரசியல் வாதிகளினால் நாடு அதள பாதாளத்தக்கு சென்றுகொண்டிருக்கின்றது. ராஜபக்ஷ குடும்பம் பதவிகளை விட்டு விலகவேண்டும். ஊழல் அரசியல் வாதிகள் பதவிகளை துறவுங்கள். அரசியல் திருடர்கள் நாட்டைகொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்.  என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருக்கின்றார்கள்.
குறிப்பாக கோட்டா கோ கம போராட்ட களத்தில் அதிகளவான பெண்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டிவருகின்றனர். நாட்டை மேம்படுத்துவார் என்றுதான் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் நாட்டை மேம்படுத்தவில்லை. அவரது குடும்பத்தைத்தான் மேம்படுத்தியிருக்கிறார். நாட்டை எத்தியோப்பியா சோமாலியா போன்ற நாடுகளைப் போல ஆக்கிவிடாமல் ஆட்சியாளர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  கோட்டாபா ராஜபக்ஷவுக்கு வாக்களித்த ஒருவர் தெரிவித்தார்.


போராட்டக்காரர்களது கோரிக்கைகள்

*உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலக வேண்டும்.
* பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.
*அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.
* இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
*ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

 பேராசிரியர் சர்வேஸ்வரன்

கொழும்பு பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் சர்வேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்  பிரதமர் பதவி விலக வேண்டும்  பாராளு





மன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என்று போராடுகின்றார்கள். இதில் ஜனாதிபதி தானாக பதவி விலகினாலே தவிர அவரை பதவி விலக்க முடியாது. அது அரசியல் அமைப்புக்கு முரணானது.எந்த வகையிலும் ஜனாதிபதி தனது பதவியை விட்டு விலகமாட்டார். அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து அதை நீதிமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க முடியும். அது சாத்தியமற்றது. பிரதமரை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரரேணை கொண்டு வந்து பதவி விலக்க முடியும்.  இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று 2 வருடங்கள்தான். 5 வருடத்தில் அவர்களுக்கு இப்பொழுது 2 வருடங்கள்தான் முடிவடைந்திருக்கின்றது. இவர்களில் பலர் அடுத்த முறை தேர்தலில் வெற்றிபெறப்போவதில்லை. இதனால் அவர்கள் பதவி விலகமாட்டார்கள். ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம். ஆனால் அதுவும் தற்போதைய நிலையில் சாத்தியமற்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால்தான் இன்று நாடு மோசமான நிலைக்கு வந்துள்ளது. தன்னிச்சையான நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் இதனால் அந்த நிறுவனங்கள்  நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. உர பயன்பாட்டை நிறுத்தியமை இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனாலேயே மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
போராட்டக்காரர்களை பொறுத்தமட்டத்தில்  அரசியல் அமைப்புக்கு அமைவாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கோஷங்கள் போடுதல் ,பாததைகள் பிடித்தல் , ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு முரணாக வன்முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபடாமல் இருப்பது இங்கு வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...