லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது.
பெரும் செல்வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அழகிய பெண் லைலா. காயிஸ் ஏழ்மையான ஒரு கவிஞன். அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். லைலாவுக்காக ஏராளமான கவிதைகளை அவன் எழுதுகிறான்.
ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. லைலாவும் காயிஸும் காதல் கொண்டிருப்பதை அறிந்த லைலாவின் பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு பிரித்து வைக்கிறார்கள்.செல்வந்த இளைஞன் ஒருனுக்கு லைலாவை திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுடன் மாளிகையில் வசித்த போதிலும் காயிஸை பிரிந்ததை லைலாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள்.லைலாவின் திருமணத்தை அறிந்த காயிஸ் பித்துப்பிடித்தவனாகிறான். இறுதியில் லைலாவின் கல்லறைக்கு அருகிலேயே அவன் இறந்து கிடக்கக் காணப்படுகிறான். லைலாவைப் பிரிந்து துயரத்தில் காயிஸ் பித்தனாக அலைந்தமையால் அவன் மஜ்னு அல்லது லைலாவின் மஜ்னுன் என அழைக்கப்பட்டான். இதற்கு "லைலா பைத்தியம்' என அர்த்தம்.
லைலா மஜ்னு கதையும் பல்வேறு விதமாக கூறப்படுகிறது.
மற்றொரு கதையின்படி, லைலாவும் மஜ்னுவும் பாடசாலையொன்றில் முதன்முதலாக சந்திக்கிறார்கள். மிக இளம்பருவத்திலேயே அவர்களுக்கிடையில் காதல் மலர்கிறது. லைலாவின். பெற்றோர் இதை அறிந்து இருவரையும் பிரித்துவைக்கிறார்கள். எனினும் வளர்ந்தபின் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர்.
லைலாவின் சகோதரன் தப்ரெஸ் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஜ்னுவை எச்சரிக்கிறான். இதனால் தப்ரெஸை மஜ்னு கொன்றுவிடுகிறான். அதனால் மஜ்னு கைது செய்யப்படுகிறான்.லைலா செல்வந்த இளைஞனுக்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறாள்.
லைலாவின் மனதில் தொடர்ந்தும் மஜ்னு இருப்பதை அறிந்த லைலாவின் கணவன் மஜ்னுவை கொலைசெய்கிறான். மஜ்னு இறந்துவிட்டதை அறிந்த லைலா தற்கொலை செய்துகொள்கிறாள்.
இன்னொரு விதமான கதையின்படி, லைலாவும் மஜ்னுவும் இந்தியாவுக்கு தப்பிச் சென்று அடைக்கலம் தேடியதகாவும் கூறப்படுகிறது. அவர்களின் கல்லறை ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகஞ்சா மாவட்டத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...
-
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையி...
-
இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவ...
-
அருட்தந்தை ஜெகத் கஸ்பர் மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்கள...
No comments:
Post a Comment