Sunday, August 13, 2017

பிக் பஸ்....... (01)
அடடடடா என்னடா அதை இதிலையும் எழுதுகின்றார்களா? என்னகொடுமை சரவணா என்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் வாய்க்குள் முணுமுணுப்பது விளங்குது… அது வேற இது வேற என்று சொன்னா நம்பவா போறீங்க…

சரி…. சுரி…விடயத்திற்கு வருவமே ஏன் வீண் அளப்பறை….. பிக் பஸ் என்றால் பெரி;ய பஸ்…… அட அதிலும் நாமும் பயணம் செய்து பார்போம் என்று கோட்டை பஸ் நிலையத்தி;ல்  களுத்துறைக்கு போகலாம் என்று அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஒருசீட்டைப்பிடித்து அமர்ந்துகொண்டேன்….
நம்மளுக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் இருந்தார்கள் அதில ஒருவனிடம் கேட்டேன் களுத்துறைக்கு நான் செல்கின்ற இடத்தை அவன் சொன்னான் எனக்கு தெரியாது… உங்களிடம் போன் இருக்கா என்று நான் ஆம் என்றேன் … உடனே அவன் கூகுல் மப்பை பார்த்து போங்கள் என்றான்.
நம்மலுக்கு கூள்தான் தெரியும் கூகிள் எங்கதெரியும் என்றேன்….

உடனே அந்த பையன் எனது போனை வாங்கி கூகிள் மப்பை டவுண்லோட் பண்ணி நாம  எந்த இடத்திற்கு பயணிக்கபோறமோ அந்த இடத்திற்கு வழிகாட்டிற விதத்தை சொல்லித்தான் தந்தான்….  விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று எனக்கு மறு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன்…
அவருக்கு வந்தது கோபம் என்னை அடிக்காத குறைதான்…. நீங்களும் உங்கட விஞ்ஞானமும் என்று கோபப்பட்டார்…..


ஏன் அப்படி கோபப்படுகின்றீர்கள் என்று கேட்டால்…..
அதுவா… வீட்டில் யாரும் என்னுடன் பேசுகின்றார்கள் இல்லை.
ஏன் வீட்டில்  சண்டைய என்றேன்….
இல்லை ஏல்லோரும் ஏதோ பேஸ் புக்காம் காலையில் எழுந்ததில இருந்து அதுகள் தூங்கும்மட்டும் அதோடுதானே இருக்கிதுகள்…. என்னத்தை சாப்பிடுதுகள் என்னதை குடிக்குதுகள் என்று அதுகளுக்கே தெரியாது எந்த நேரம் பார்த்தாலும் பேஸ்புக் அதில… அவன் இவ்வளவு லைக் போட்டிக்கான் இவன் இவ்வளவு லைக் போட்டிருக்கான் என்று சண்டைவேற…..

திடீர் என்று தூக்கத்தில சத்தம் போட்டு சிரிக்கிறார்கள்; ஏன் என்று போய் பார்த்தால் பேஸ் புக்கில ஜோக் போட்டிருக்காம் அதைபார்த்து சிரிக்கிறாங்க… இரவு 12 மணிக்கு பிறகு தூங்காமல் விடியும் மட்டும் பேஸ் புக்கில இருக்கிறதுகளாம் (கேட்டா நைட் டேட்டா இலவசமாம்.) அதனால் ஸ்கூலுக்கு கூட லேட்டாக போகிறது. அங்க போய் தூங்கி ரீச்சரிடம் அடிவே வாங்கிக்கட்டுறாங்;கள் என்று தனது ஆதங்கத்தை சொல்லி முடித்தார்.
அப்பதான் நான் யோசிச்சேன் குடும்பம் என்றால் எப்படி கூட்டாக இருந்து கதைத்து மகிழந்திருப்போம் இப்ப குடும்பத்தைவிட பெயர் ஊர் தெரியாத ஆணோடு பெண்ணும் தங்களது குடும்பத்தை பற்றி சொல்வதும் நல்லவர்களா கேட்டவர்களா என்று கூடதெரியாது உறவை வளர்த்துக்கொள்வதுமே இன்று பல குற்றங்களுக்கும்கொலைகளுக்கும் காரணமாகிப்போய்விடுகின்றது. ஏதையும் நாம் கவனத்தோடு இருந்தால்தான் நாம்  எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்..
அட களுத்துறை வந்துவிட்டது நான் இறங்குகின்றேன்…இந்துமுறை எனது அளப்பறையை நிறுத்திக்கொள்கின்றேன்… மீண்டும் அடுத்த பஸ்ஸில் சந்திக்கின்றேன்…
Tuesday, January 24, 2017

இலங்கையில் ஜல்லிக்கட்டு பேரணியும் விதண்டா வாதங்களும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள் தொடர்ந்து 7 நாட்களாக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் எழுச்சியை கண்டுள்ளனர்.. இளைஞர்கள் சமூகவலைத்தளங்களினூடாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். வெற்றியும் கண்டனர்.
தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகநாடுகள் பலவற்றில் இளைஞர்களும் மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் தான் இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு போன்ற இடங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு இலங்கையில் இளைஞர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பொழுது அந்த இளைஞர்களை கொச்சப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நான் இந்த பதிவை மேற்கொள்கின்றேன்……
தமிழக இளைஞர்கள ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராடத்த்தை அன்று ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மேற்கொண்டிருந்தால் அத்தனை உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். அப்படி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வீண் போராட்டம் என்று கொச்சைப்படுத்துகின்றனர்.
2009 ஆம் ஆண்டுதான் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்ட ஆண்டு. சமூகவலைத்தளங்கள் என்பது அறிமுகப்படுததப்பட்டு பெரிதும் இளைஞர்களால் அறியப்படாத ஆண்டாகவே இருந்தது. ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமூகவலைத்தளங்களில் பரவவும் இல்லை பேஸ்புக் டுவிட்டர் கடந்த 5 ஆண்டுகள்தான் மக்களிடத்தில் சென்றடைந்திருக்கின்றது அவ்வாறு இருக்கும்போது எப்படி இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்திருப்பார்கள் அறிவு ஜீவிகளே சொல்லுங்கள் பார்ப்பம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள்தான் மாறிமாறி ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக தமது கட்சிகள் சார்பாகவே ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன தவிர கட்சி பேதம் இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை.
இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கையில் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையத்தளத்தை பார்வையிட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் இது வசைபாடுபவர்களுக்கு தெரியாதா?
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அரசியல் சாராத இளைஞர்களே திரண்டு தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை உளவுத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். சிங்கள இணையத்தளம் ஒன்று கொழும்பில் புலிகள் வந்துவிட்டனர். இது அவர்களின் ஆர்ப்பாட்டம் என்று எழுதியிருந்தது.
தமிழக இளைஞர்களுக்கு நாம் ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று ஒரு நபர் பேஸ்புக்கில் கேட்டிருக்கின்றார்.
ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அண்ணன் முத்துக்குமார் தீக் குளித்தானே அவன்மட்டுமா எத்தனை தமிழக இளைஞர்கள் தீக்குளித்து தமது உயிரை நீத்தார்களே அதுயாருக்காக அவன் ஏன் தன் உயிரை எமக்காக தரவேண்டும். அவனும் தமிழன்தானே அவனுக்கு செய்யும் நன்றிக்கடன் கூட எமக்கு இல்லை.
(தமிழகம் எமக்கு செய்த உதவிகளை சொல்லப்போனால் அதற்கு ஒருபுத்தகமே போடலாம்)
நன்றி மறப்பது நன்றறன்று……
வசைபடுபவர்கள் இப்பவும் நண்டுகளாகவே இருக்கின்றனர்…….
(நண்டுக்கதை தெரியும்தானே எல்லோருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை)
இளைஞர்களை ஊக்கப்படுத்தாமல் அப்ப செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் இப்ப செய்திருக்கலாம் என்ன்? என்ன? கேள்வி முதலில் நீங்கள் வந்து எங்களுடன் களத்தில் இறங்குகள் வீட்டில் இருந்துகொண்டு பேஸ்புக்கில் போட்டுவீட்டு சோம்போறிகளாக இருக்காதீர்கள்…..
விரைவில் …. எமது நாட்டில் இடம்பெறும் உரிமைகளுக்காகவும் காலிமுகத்திடல்லிஎமது இளைஞர் கூட்டம் விரைவில் கூடும்….Saturday, August 8, 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மடல்.....


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு வணக்கம்.
பாராளுமன்ற தேர்தல் வருவதும் வாக்குறுதிகள் கொடுப்பதும் அவை பின்பு காணாமல்போவதும் உலக அரசியலில் நிகழ்ந்து வரும் ஒரு விடயம்தான் அதற்கு கூட்டமைப்பு மட்டும் விதிவிலக்காகிவிட முடியாது....
சரி அது எதற்கு நமக்கு அரசியலில் இது சாதாரணப்பா கவுண்ட மணி ஸ்டைலில் சொல்லவேண்டியிருககின்றது.

இன்முறை பாராளுமன்ற தேர்தல் ஆனது நாட்டில் அமைதி நிலவுகின்ற காலத்தில்வருகின்ற தேர்தல். இம்முறை வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளி;ல் கூடுதல் எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். (சந்தோசம்தான்)

சம்பந்தன் ஐயா கூறியது போன்று இம்முறை தமிழர்களில் தேர்தலில் வெற்றி பெற்று பேரம் பேசும் அரசியலை உருவாக்க கூடிய தகுதி அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகுத்தான் இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் மாண்டவர்களின் ஏன் விதைக்கப்பட்டவர்களின்  கனவு.... தமிழர்கள் சுதந்தரமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே.
இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் ஆவியை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். உலகமே  மிகவும் வேதனை அடைந்த அந்த நாட்கள்.........
ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை... வருது.... அது வந்தால் தமிழர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும் என்று நினைக்கலாமா?

தேர்தல் மேடைகளில் ஐ.நா.விசாரணை அறிக்கையை பற்றி பேசுவதை விடுங்கள்....... அது வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதுபோல் வரும்....
உரிமை இழந்து உறவை இழந்து உணர்வுகளோடு மட்டும்தான் இருக்கின்றோம்.

இன்று மீள் குடியேற்றப்பட்டு வசதிகள் இன்றி மக்கள் கண்ணீர் தவி;கின்றனர்.
அவர்களுக்கு ஐ.நா. அறிக்கையை பற்றி பேசி என்ன பயன்? உயிர் வாழ்வதற்கு அவர்களுக்கு ஒரு அதிகாரம் வேண்டும்.  அதை இம்முறை பேரம் பேசும் அரசியல் மூலம் நீங்கள் பெற்றுக்கொடுக்கலாம்.

கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டாது என்று வீரவசனம் பேசலாம். அதற்கு ஒரு 1000 பேர் வரவேற்பார்கள்..

ஆனால் பாதிக்கப்படப்போவதும் எமது எதிர்கால சந்ததியே... அதை உணர்ந்து
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் அவர்களுக்காக இந்த தேர்தலில் பேரம்பேசும் சக்கியாக மாறி அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டும்.

தமிழர் பிரதேசங்கள் எங்கும் தொழில்சாலைகள் அமைக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும். என்பாட்டன்.. முப்பாட்டான் காலத்தில் இருந்த அதே தெரு அதே கடை இனறும் அதே இடத்தில் இருக்கின்றது. என்றால் நாமும் அதே இடத்தில் தான் நிற்கின்றோம் என்று அர்த்தம்.

அஸ்ரப் காலத்தில் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு பேரம் பேசும் அரசியல் மூலம்  அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிவனங்களிலும் அனைத்து திணைக்களங்களிலும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

ஆனால் தமிழ் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

 அவர்களுக்கு உரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் கடமை பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே இருக்கின்றது.

அதை செய்வீர்கள் என்ற ஆதங்கத்துடன்....

நன்றி
இப்படிக்கு 
வருங்காலம்
Wednesday, January 30, 2013

விஸ்வரூபமா.?........... இல்லை ஜெயாரூபமா


விஸ்வரூபமா.?........... இல்லை ஜெயாரூபமா என்று தெரியவில்லை... இன்று உலக அளவில் தமிழர்களின் மனங்களை கவலைகொள்ள செய்துள்ளது. விஸ்வரூபம் படம் தடையும் தடை நீடிப்பும் அதற்கு எதிரான போராட்டங்களும்தான்.

  • ஏன் தடை? 
  • யாரால் தடை ? 
  • எதற்காக தடை?....

முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் விஸ்வரூபம் படத்தில் காட்சிகள் இருக்க்கின்றன என்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து படத்தை தங்களுக்கு போட்டுக்காட்டினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று தெரிவித்தனர்.. அதனடிப்படையில் படம் வெளியிடுவதற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காட்டியிருக்கின்றார்.் அதன் பிறகு படம் வெளியிடுவதற்கு முதல் நாள் எப்படி இவர்களால் போராட்டத்தில் இறங்க முடிந்தது. யார் இவர்களின் பின்னணியில் உள்ளனர்?
படத்தை முதலில் ஆளும் கட்சியின் தொலைக்காட்சி வேண்டுவதற்கு போட்டி போட்டது. ஆனால் எதிர்த்தரப்பு தொலை க்காட்சிக்கு கமல் தனது தொலைக்காட்சி உரிமையை கொடுத்து இருக்கின்றார். அதை விட படத்தை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்தவள் விநியோகிஸ்தர்களாக படங்களை வேண்டியதா? இல்லை அண்மையில் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் சிதம்பரம்தான் பிரதமராக வரவேண்டும் என்று கமல் பேசியதா? இவை அனைத்தும் தான் ஜெயாவின் கோபத்திற்கு ( விஸ்வரூபத்திற்கு) ஆளாக்கியிருக்கின்றது.

படத்தை வெளியிடுவதற்கு முன்பு சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த சென்சார் சான்றிதழை தமிழக சென்சரில் இருந்தவர் ஒருவர் இஸ்லாமியர் அவருக்கு தெரியவில்லையா இது இஸ்லாமியருக்கு எதிரான படம் என்று?
ஆளும் கட்சியின் அடிவருடிகளௌக இருக்கின்ற பங்காளிக்கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்ககத்திலும் அவர்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தமிழக அரசு தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தொடர் வழக்குகள் தொடர் தாக்குதல் இது இந்து இஸ்லாமிய பிரச்சினையை தமிழக அரசு கட்டவிழ்ந்து விட்டதாகவே தோன்றுகின்றது?
நடிகர்கள் கைவிட்ட நிலையில் கமல்...

விஸ்வரூபத்திற்கு பிரச்சினை ஆரம்பத்திலி வந்த போது நடிகர்கர்கள் கமலுக்கு கைகொடுக்கவில்லை.. நடிகர் சங்கம் ஏதோ ஒரு போக்கு சாக்கிற்கு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டது.
ஆரம்பத்தில் கமலுக்கு துணிந்து ஆதரவு கொடுத்தது பிரகாஷ்ராஜ் குஷ்பு மனோ பாலா கும்கி நாயகன் விக்ரம் ஆனால் அடுத்த முதலமைச்சர் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் விஜய் ஏன் கமலுக்கு ஆதரவாக இதுவரை ஒரு குரல் கொடுக்க வில்லை ஆளும் கட்சி்யை பகைத்துக்கொள்ள பயத்திலா? அஜித் ஏன் ஆதரவு கொடுக்கவில்லை..

கமலுக்கு நேரில் சென்று சிம்பு, சரத்குமார், ராதிகா, அரவிந்தசாமி, மணிரத்தினம் போன்றவர்கள் ஆறுதல் தெரிவித்திருக்கின்றார்கள்.
ரஜினியும் தன் நண்பனுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்தான் இயக்குநர் பாராதிராஜா இயக்குநர் கேயார் இயக்குநர் வசந் அர்ஜுன் என்று நடிகர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.

இதே வேறு ஒரு நடிகருக்கு பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் உண்ணாவிரத்தில் ஈடுபடவேண்டும். அதில் கட்டாயம் கமல் கலந்துகொாள்ள வேண்டும். ஆனால் கமலுக்கு பிரச்சினை தமிழ்சினிமாவின் உயிர்மூச்சு அந்த மூச்சைக்க காப்பாற்ற யாரும் இல்லையா?
கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் மதச்சார்பற்ற ஒரு மாநிலமோ ஒரு நாடோ இருந்தால் நான் அங்கு குடியேறத் தயரார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவ்வாறு கமல் தெரிவித்தது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

தமிழனுக்கே தமிழ் நாட்டில் வசிக்க இடமில்லையா?
எங்கே செல்கின்றது தமிழ் நாடு.

சரி படத்திற்கு வருவம் விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியது. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக காட்டமல் எப்படி காட்ட முடியும்????தலிபான் தீவிரவாத தலைவர் முல்லா உமர் குர் ஆன் படிப்பது போல் காட்டியிருப்பதாக குற்றம் சாட்டுக்கின்றார்கள். நான் கேட்கின்றேன் முல்லா உமர் குர் ஆன் படிக்காமல் கந்தசஷ்டி கவசமா படிக்க முடியும்?

இலங்கையிலும் இப்படத்திற்கு தடையாம்? எந்த நோக்கத்திற்காக இலங்கையில் தடை விதித்தார்கள் இலங்கை அரசாங்கம் தலிபான் தீவிரவாதத்திற்கு ஆதரவு குரல் கொடுப்பதற்காககவா? இல்லை முஸ்ஸில் மக்களையும் முஸ்லிம்அரசியல் வாதிகளையும் தம்பால் ஈர்த்து வைத்துக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. இல்லை கமல் ஒரு தமிழ் என்ற ரீதியில் தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லையா இலங்கையில்?

இதே ஈழத்தமிழன் தன் போராட்ட வரலாற்றை படமாக்கினால் அதை இலங்கை அரசு தடை செய்யாமல் திரையிடுமா? அப்ப முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டமா?

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் படத்திற்கு தடை என்று தமிழ்நாடு அரசு தெரிவிக்கின்றது என்றால் படத்தை தடை செய்வதால்தான் சட்டம் ஒழுங்கு பதிப்படைகின்றது.இது தமிழ் நாட்டு அரசுக்கு தெரியாதா?
கமல் உலக நாயகன் அவன் எந்த நாட்டிலும் எந்த கிரகத்திலும் வாழ்வான்   அவனது திறமையும் அவனது அன்பு உள்ளங்களும் இருக்கின்றது.

பிக் பஸ்....... (01)

அடடடடா என்னடா அதை இதிலையும் எழுதுகின்றார்களா? என்னகொடுமை சரவணா என்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் வாய்க்குள் முணுமுணுப்பது விளங்குது… அது...