Saturday, February 28, 2009

முல்லைத்தீவு கனவும் முறியடிக்கப்படும் சமரும்


கிளிநொச்சியை இராணுவத்தினர் பிடித்தவுடன் இராணுவத்தினருக்கு ஒரு தென்பை ஏற்படுத்திவிட்டது. அதனைத் தொடர்ந்து ஆனையிறவு முகமாலை விசுவமடு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு என்று இராணுவத்தினர் தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்று இராணுவத்தினரும் அரச ஊடகங்களும் ஆதாரத்துடன் வெளியிட்டுவருகின்றனர்.

ஓகே.... சரி அவர்கள் பிடித்தது உண்மைதான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் சில நாட்களாக விசுவமடு.. திருமுருகண்டி பகுதிகளில் நடைபெறும் சமர் நான் சொல்ல வில்லை அரசாங்கத்தின் பிரசாரப் பீரங்கி ரூபவாஹினிதான் இந்தச் செய்தியையும் வெளியிட்டது அப்படியால் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளில் எப்படி விடுதலைப் புலிகள் ஊடுருவ முடிந்தது.
இவ்வாறு 1995 ஆம் ஆண்டு சந்திராக அரசாங்கம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக பிடித்துவிட்டது என்று அறிவித்தது. ஆனால் நடந்தது என்ன சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, அளவெட்டி, கந்தரோடை போன்ற இடங்களில் விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்தனர்.
இன்றும் அதே நிலைதான் வன்னியில் ஏற்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவை நோக்கி 50 ஆயிரம் இராணுவத்தினர் முன்னேறினாலும் இடையில் இருக்கும் இடங்களில் இராணுவத்தை நிறுத்துவதற்கு ஆள் பற்றாக்குறை நிலவுகின்றது.
சரி.. சரி.. நம்மலுக்கு என்னத்துக்கு இந்த வம்பு மலிந்தால் சந்தைக்கு வந்துதானே தீரவேண்டும்.

Friday, February 27, 2009

மலேசியாவில் ஆர்ப்பாட்டம்


போரினால் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போருக்கு உதவிசெய்யும் சோனியா காந்தி அரசாங்கத்திற்கு எதிராகவும் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
ஆர்பபாட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மைக்கும் சோனியா காந்தியின் பனரையும் கிளித்து எறிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களே இங்கு.....









Thursday, February 26, 2009

தாய் மண்ணே வணக்கம்...

ஒஸ்கார் விருது வென்ற சந்தோஷத்தை தனது தாய்மண்ணில் கொண்டாடினால்தான் அதற்கு ஒரு முழுமை.. அந்த முழுமையை நேற்று ரஹ்மான் தனது தாய்மண்ணில் காலப்பதிக்கும்போது உணர்ந்துகொண்டார்.

அதை அவரது முகத்தில் வருகின்ற உண்மையான சந்தோஷத்தில் இருந்து கண்டுகொள்ளலாம்.நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் தளவாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டார்.தாய் மண்ணில் தனது கழுத்தில் விழுகின்ற மலர்மாலைகளும் ஒவ்வொரு ஒஸ்காருக்குச் சமமம் என்பதை நிறுபித்துக்கொண்டு இருக்கின்றது.விருது பெறும் போது தமிழகத்தில் நடந்த சில சந்தோஷ நிகழ்வுகள் இங்கே..ஒஸ்கார் விருது பெறும்போது ரஹ்மானின் மகள் சகோதரி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷம் கொண்டாடுகின்றனர்.பாடசாலை மாணவர்கள் ரஹ்மான் முகமூடி அணிந்து தமது சந்தோஷங்களைத் தெரிவிக்கின்றனர்.





Wednesday, February 25, 2009

திறந்தவெளிச் சிறையில் தமிழ் உயிர்கள்.......

ஈழத்தமிழன் போர் இன்னல்களிலும் விட மிகவும் கொடுமையான துன்பத்தை இன்று வவுனியா திறந்தவெளி சிறையில் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றான்.தமிழன் என்றால் விடுதலைப் புலி..என்று சொல்லும் அரசாங்கம் போர் நடைபெறும் பிரதேசத்தை விட்டு வாருங்கள் உங்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தருகின்றோம் என்று சொல்லி முல்லைத்தீவில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை அகதி முகாம் என்ற பெயரில் கம்பிவேலிகள் அமைத்து அவர்களை அதற்கு வாழும்படியும் எக்காரணங்கள் கொண்டும் அவர்கள் வெளியேறாதபடி கடும் பாதுகாப்பும் போட்டு இன்று மக்களை கடும் சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.துப்பாக்கி முனையில் கல்வி.... துப்பாக்கி முனையில் குளியல்... என்ன கொடுமை.... எமது சகோதர உறுவுகளுக்கு ...விசாரணையின் பேரில் கற்பழிப்புக்கள்.....யாருக்குத் தெரியும்.....உள்ளுக்குள் நடப்பவை??உலக நாடுகள் கூட சொல்லிப்பார்த்துவிட்டது அரசாங்கத்திற்கு வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு சுதந்திரமாக விடவேண்டும் என்று ஆனால் அரச தரப்பு குருடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.ஒரு அகதி முகாமுக்குள்ளேயே எமது மக்களால் சுதந்திரமாக சுபீட்சமாக வாழ முடியாத நிலையில் எப்படி இந்த நாட்டில் தமிழ் மக்களால் சுபீட்சமாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும்.தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிøமயைக் கொடுப்போம் அவர்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்போம் என்று மஹிந்த அரசாங்கம் சொல்வது... நடக்காத காரியம்.இதை இந்தியா நம்பி (சேர்ந்து) தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணை போகின்றது.பிரிட்டன் அமெரிக்கா ஈழப்பிரச்சினையில் கொண்டிருக்கும் அக்கறை கூட இந்தியாவிடம் இல்லாதது... தேச துரோகமே... அவர்களின் பாணியில் சொன்னால் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே செய்துகொண்டிருக்கின்றது.வெளிநாடுகள் போர்ரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டவுடன் இந்தியா விழுந்து அடித்துக்கொண்டு மக்களை போரில் இருந்து காப்பற்றவேண்டும் என்று பிரணாப் கூறுவது சிரிப்பாகவே இருக்கின்றது.ஐ.நா.வின் அறிக்கைகளைப் பார்த்து இந்தியா பயந்து விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.ஐ.நா.படைகளை இலங்கைக்கு அனுப்பு என்று உலக நாடுகள் பல வற்றில் தமிழர்கள் போராட்டம் மட்டும் மல்ல தீக்குளிப்புக்களையும் நிகழத்திக்கொண்டிருக்கின்ற வேளையில்....சில நேரம் ஐ.நா படைகள் வந்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. பாக்குநீரினையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் வருகை... இந்தியாவின் சகோதர நாடான இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து. குரங்கு ஆப்பு இழுத்த கதையாகத்தான் இந்தியாவின் நிலை மாறப்போகின்றது என்பது நிதர்சனம்.

Monday, February 23, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் நடந்து வந்த பாதை

தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலை.இந்த நிலையில், 1989ம் ஆண்டு இஸ்லாமுக்கு மாறினார் ரஹ்மான். இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக மாறினார் ரஹ்மான். தனது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார்.கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார். ஆனால் சிந்தசைசரில்தான் அவருக்கு அதிக பிரியம். இசையையும், தொழில்நுட்பத்தையும் சரியான கலவையில் இணைக்கும் கருவி என்பதால் சிந்தசைசரில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார்.பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார். இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.1992ம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை தொடங்கினார் ரஹ்மான். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது.இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் தொடங்கிய பின்னர் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு ரஹ்மான் மட்டுமே. ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார்.இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான்.குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிப் போனார் ரஹ்மான். திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் படைத்துள்ளார் ரஹ்மான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்றைய தேதிக்கு இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரஹ்மான்.1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான்.2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான்.இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார். கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 3 வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான்.2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அல்வா சாப்பிடுவது போல.ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.ரஹ்மானின் முதல் படங்கள் ...தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது. இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.மலையாளத்தில் முதல் படம் யோதா.தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ்.ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.ரஹ்மானை அலங்கரித்த விருதுகள் ...எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதை விட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான்.அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).தேசிய விருதுகள்ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).பிலிம்பேர் விருதுகள்ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)ஸ்க்ரீன் விருதுகாதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).தினகரன் சினி விருதுகள்மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).தமிழக அரசு விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).சினிமா எக்ஸ்பிரஸ் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).கலாசாகர் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).பிலிம்பேன்ஸ் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).சினி கோயர்ஸ் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).ஜீ விருதுஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007), சர்வதேச இந்திய திரைப்பட விருதுதால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),குளோபல் இந்தியன் திரை விருதுசிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)

இசை தமிழனுக்கு விருது..


ஒஸ்கார் திரைக்கலைஞர்களின் இமயக் கனவு... வெள்ளைக்காரனுக்கே மட்டும் சொந்தமான இந்த விருது... இன்று ஒரு நம் இசைப்புயல் ஏ.ஆர்.ஆர். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹுமானுக்கு கிடைத்துள்ளது.
இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஓஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட் யூம் டிசைனருக்கான ஓஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.கடந்த 1992ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரேவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' ஓஸ்கர் வழங்கியது. சத்யஜித்ரே இருந்த மருத்து வமனைக்கே ஓஸ்கர் விருதுக் குழுவினர் தேடிவந்து இந்த விருதினை வழங் கினர். இப்படி இருந்த நிலையில் இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லி யனர் படத்துக்கு 8 விருதுகள் கிடைத்துள்ள.லாஸ் ஏன்ஜெல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானுககு ஓஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹே பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.இரு ஓஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் ஒரு விருதும், 'ஜெய் ஹே' பாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹே பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.
ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹே' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார்.
இதன்மூலம் ஓஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.மேலும் சிறந்த படம், இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 6 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத் தில் இந்தப் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.அதிலும் சிறந்த பாடலுக்கான விருதையும் சிறந்த இசையமைப்புக“கான விருதினையும் தனது வசப்படுத் திக்கொண்டார். ரஹ்மான்.கமல் ஒவ்வொரு முறையும் சோதனைகள் செய்து திரைப்படங்களில் நடிக்கும் போதும்.. சொல்வார் தமிழ் சினிமாவுக்கு ஓஸ்கார் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்தால் கிடைத்து விடும்.அது யதார்த்தம் என்பது இன்று அனைவருக்கும் புலனாகின்றது.

Friday, February 20, 2009

புரட்சித் தீ...

அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே
சேகுவாரா
இன்று தமிழ் நாட்டில் வக்கீல்கள் எமக்காக போராடும் போது.. புரிகின்றது.. நாம் அந்த வக்கீல்களுக்கு என்ன செய்யப்போகின்றோம் என்று.. தெரியவில்லை ..
சடடத்தினால் என்ன செய்ய முடியும் மிஞ்சி மிஞ்சிப் போனால் புலிகளைத் தடை செய்ய முடியும். இல்லையேல இந்திய இறையாண்மைக்கு எதிரறீணீ பேசினோம் என்றும் சொல்லிச் சொல்லியே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களின் குரல் வளைகளை நொறுக்கி.. அதன் மூலம் ஈழத் தமிழர்களின் ஆதரவைக் குறைக்க இந்திய மத்திய அரசு செய்யும் செய்துகொண்டிருக்கும் சதிகளுக்கும் வக்கீல்களின் போராட்டம் என்பது பேரிடியாகவே விழும் விழுந்து கொண்டிருக்கின்றது.
அரசியல் சாயம் அற்ற இந்த வக்கீல்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆக்கபூர்வமானதும் கூட.
புரட்சிகள் உலகில் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும் இன்று தமிழக்தில் ஏற்பட்டிருக்கும் புரட்சி ஒரு எழுச்சி என்றுதான் சொல்லவேண்டும்.
தனது நாட்டு மக்களுக்கு என்று இல்லாமல் தமது தொப்பில் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் கொடுக்கும் குரலுக்கு ஒரு சலூட் .
சேகுவாரா பற்றி... இந்த நேரத்தில் குறிப்பிடவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை.....
அதுதான் சேகுவார பற்றி எனக்கு தெரிந்த சில விடயங்களை இங்கு தருகின்றேன்.

சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14ஆம் நாள் அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சேஇ வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும்இ உடற்பயிற்சிஇ வேட்டைஇ மீன் பிடித்தல்இ மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952இல் பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர் பிற்காலத்தில் லட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே பெரோண் ஆட்சியை எதிர்த்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

பட்டம் பெற்ற பிறகு தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (195154) அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு அரசு மருத்துவமனையில் டாக்டர் மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.
1956இல் சே காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956இல் மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும் தோழர்களும் விடுவிக்கப்பட்டபின்இ டிசம்பர் 1956இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும்இ பின் இராணூவ தளபதியாகவும் அதன் பின் கமாண்டராகவும் காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின் சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.
அதைத் தொடர்ந்துஇ தொழிற்துறை தலைவராகவும் பின் தேசிய வங்கியின் தலைவராகவும் 1961இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்திஇ இறக்குமதிகளைக் குறைத்துஇ தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில்இ நட்சத்திரம் கொண்ட தொப்பியில் புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.
சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமேரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும்இ அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும் சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.
சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.
சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால்இ படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு சமூக மருந்து எதுஎன்ற கேள்வி எழுந்தது.
பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ அது ஏன் எட்டாக் கனியாகிறதுடூ ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளாடூ
எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு ஆட்சி முறையின் கேடாடூ சமுதாய அமைப்பு முறையில் கேடா
உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்ஸ என்று எழுதிய நம் பாட்டன்இ கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.
உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்கம் உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.
வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.
ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன் ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.
கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து கலம் இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர்இ கியூபாவில் புரட்சி செய்தனர்இ அதில் வெற்றி கொண்டனர். அமேரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.
கியூபா புரட்சி மட்டும் போதுமாடூ கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாறடூ ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.
எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உறுவாக வேண்டும்.
சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது
ஞசுடு கோழையேஸ நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்ஸஞ
இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.
சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.
போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.
கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.
என்னடா மொட்டைத்தலைக்கும்் முழங்காலுக்கும் முடிச்சு என்று நீங்கள் நினைக்க வேண்டாம்..
புரட்சிகள் தோற்றுவிக்கப்படும் வேளை .... புறப்படு தமிழா......

Wednesday, February 18, 2009

அவலக் குரலை கேட்டகாத உலகம்

முல்லைத்தீவு மரண ஓலங்கள் கேட்டவண்ணம்மாகவே இருக்கின்றது. ஏன் சுடுகாடாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் இறந்த எம் மக்கள் இன்று நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.அத்தனையும் இன்று உலகம் அறியாதது அல்ல... உலகமே ஏன் நீ மௌனீயாக இருக்கின்றாய்.. சிங்களப் பேரினவாதத்துக்கு உனது ஆதரவை நீ மறைமுகமாகச் செய்துகொண்டிருக்கின்றாயே..
சர்வதேசத்தில் இன்று முத்துக்குமார் மூட்டிய தீ... எவ்வளவு எழுச்சிப் பெற்று எத்தனை தீக்குளிப்புகள் எத்தனை கண்டனப் பேரணிகளை எமது தொப்புல்கொடி உறவுகள் நடத்தியும் உனக்கு தெரியாதா? இல்லையேல் தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கின்றாயா? பச்சிளம் குழந்தைகள் ஒன்றும் அறியாப் பாலகர்கள் உலகமே அறியாத குழந்தைகள் அத்தனையும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அழிக்கப்படுகின்றது.
தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் இராணுவத்தினால். அதையும் சர்வதேசம் கண்டு கொள்ளாமல் இருப்பது. அவர்கள் வெட்கித் தலைகுனியவேண்டும்.
இந்தியா அரசியல் வாதிகள் என்ன சோறா திண்ணுகின்றார்கள் என்று தெரியவில்லை.சீமானை பிடிக்க பொலிஸ் தேடி தேடி திரியுது... முதலில் எமக்காக குரல் கொடுப்பவர்களின் குரவல் வளையை நசிக்க நினைக்கின்றது இந்திய மத்திய அரசு.ஒரு சீமானை நீ துரத்த்தி பிடிக்க முயற்சித்தால் ஆயிரம் ஆயிரம் சீமான்கள் தோற்றுவிக்கப்படுவார்கள்.அது கூட தெரியாதா?ஒருத்தன் எப்பொழுதும் அடிமைப்படுத்திக்கொண்டிருக் கும்போதுதான் அங்கு புரட்சி தோற்றுவிக்கப்படுகின்றது.குட்டக் குட்டக் குனிபவன் தமிழன் என்று நினைக்காதே நீ நினைக்காத நேரம் நினைக்காத காலம் தமிழினம் வீறுகொண்டு எழும் அப்பொழுது இந்தியாவின் இறையாண்மை ஏங்கே போகப்போகின்றது என்று தெரியாது.குடும் அரசியலும் குடும்ப நலனுமே கனவாகக் கொண்ட கருணாநிதி என்று செய்கின்றாரோ தெரியவில்லை. ஈழப்பிரச்சினையில் ஆரம்பத்தில் இருந்து நான் தான் பேசி வருகின்றேன். நான் அது செய்தேன் இது செய்தேன் என்று சொல்வதை விடுத்து இப்பொழுது என்னசெய்ய வேண்டும் என்று நினைத்தால் நல்லது.மொத்த தமிழினமும் மாண்ட பின் குரல் கொடுத்து என்ன பிரயோசனம். வீறுகொண்டு எழுடா தமிழா உனக்கான ஒரு நாடு விரைவில்....

Monday, February 16, 2009

ஐ லவ் யூ

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக இதுவரையாரும் பார்க்காத கோணத்தில் புதுவிதமாக காதலை சொல்லப்போகின்றோம் என்று... ஒவ்வொரு இயக்குநரும் தடம் பதிக்க ஆசைப்படுகின்றார்கள் அவர்களுக்காக இதோ.... காதலர் தினம் அன்று உலகில் வானம், பூமி, நீர் என்று.. தங்களது காதலை பரிமாறிக்கொண் டவர்களை நீங்கள்.. பார்க்கலாம்... ஏன் மனிதர்கள் மட்டுமா நாங்கள் இல்லையா என்று இந்தக் கிளிகளும் கேட்கின்றன.இனியாவது தமிழ் சினிமாவில் இப்படியான காதல் வருகிறன்றதா என்று பார்ப்போம்.












Wednesday, February 11, 2009

ஈழத்து இளம் குயிலும் ஒஸ்காரில்...

என்னடா எதோ பறவை ஒன்று ஒஸ்கார் போட்டிக்கு போகுது என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.எங்கட நாட்டு பாடகர்கள் ஒஸ்கருக்காக போட்டியிடுகின்றாரா என்று வாய் பிழக்க வேண்டாம்.எம்மவர்களின் திறமைகள் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் உலகம் அறிந்துகொண்டிருக்கும் வேளையில்..புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்கின்ற ஈழத்து இளம் குயில் அருள்பிரகாசம் மாதங்கி பற்றித்தான் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும்.ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் வரும் ஓ சாய பாடலை பாடியது இந்த மாயா என்ற மதங்கிதான்.மதங்கி என்றவுடன் நீங்கள் நினைக்க வேண்டாம் தென்னிந்திய பின்னணிப் பாடகி மாதங்கி என்று...இவர் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி ஈழத்தில் பிறந்த இவர் தனது 11 ஆவது வயதில் லண்டனுக்கு அகதியாக சென்றார்.அங்குள்ள சென் மார்ஷல் ஆட்ஸ் அகடமியில் தனது கலை பட்டப்படிப்பை முடித்தார்.பட்டபடிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப் பாடல்களை இயற்றுவதிலும் தானாக அல்பங்களை வெளியிடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியொன்றில் மேலைத்தேய பாணியில் பல பாடல்களை பாடிய மாயா இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் படும் அவலங்களையும்துன்பங்களையும் ரணங்களையும் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் துளிகள் சிந்தி பாடலை பாடினார்.அவரது இந்த பாடல் உலகத்தையே கண் கலங்கச் செய்தது. இதற்கமைய அவர் பாடலை பாடி முடிக்க இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் போரை நிறுத்து மக்களை கொல்லாதே என கோஷம் எழுப்பியுள்ளனர்.மாதங்கியின் பாடல்களின் பெரும்பாலானவை ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தை பற்றியவையாகவே உள்ளது.2005 ஆம் ஆண்டு அல்பம் ஒப் த இயர் விருதை பெற்றார். கடந்த வாரம் இடம்பெற்ற கிரம்மி விருதுக்கும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.எனினும் விருது கிடைக்கவில்லை. எனினும் தனது முதல் குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு கிரம்மி விருது வழங்கல் நிகழ்வில் பாடல் பாடி அசத்தியுள்ளார் இந்த மாதங்கி.மாதங்கியின் புகழ் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கவில் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கின்றது . இதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் எமது ஈழத்து இளம் குயிலையும் பாட வைத்திருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடுவதே எம்மவர்களின் கனவாக இருக்கும் போது ரஹ்மானே தனது இசையில் முதல் தடவையாக ஈழத்து இளம் குயிலைச் சேர்த்துக் கொண்டதும் அப்பாடல் ஒஸ்கார் போட்டியில் கலந்து கொண்டுள்ளதும் நம்மலுக்குத்தானே பெருமை.... விருதை பெற மாயாவுக்கு வாழ்த்துக்கள்

Monday, February 9, 2009

ஏ.ஆர் ரஹ்மான் (BAFTA)

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.
விருது மேல் விருது குவித்துவரும் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறந்த இசைக்காக இந்த விருது ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஸ்லம்டாக்...' இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள்.
அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.
அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள்.
நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்.
வாழ்த்துக்கள் ரஹ்மான்

Monday, February 2, 2009

தீக்குச்சி

ஈழத்தின் விடிவெள்ளிக்கு தீக்குச்சியாய் இருந்தவனே.... எங்கள் இதயத்தில் மட்டுமல்ல உலகத் தமிழனின் இதயத்தில் வீற்றிருக்கும் முத்துக்குமாரே. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லட.
நீ தலையை மட்டும் மல்ல உன் உயிரையே எம்மக்களுக்காய் தந்துவிட்டாயே.
நாம் என்ன பரிகாரம் செய்யப்போகின்றோமோ தெரிய வில்லை நீ மூட்டியது தீயா அல்லது சுனாமியா என்று தெரியவில்லை ஆனால் அது ஒரு எழுச்சி என்றே சொல்லலாம்.
ஈழத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு இந்தியாவின் (மத்தியஅரசின்) நிலையில் மாற்றமில்லை. அது வரலாற்றில் மீண்டும் ஒரு தவறையே செய்கின்றது. அது முதலில் செய்த தவறுக்கே இன்னும் மன்னிக்கப்படாமல் இருக்கின்றது. அது இப்பொழுது மீண்டும் ஒரு தவறை செய்கின்றது.
ஈழத்தமிழனுக்கு தொப்புல் கொடி உறவாக இருக்கும் இந்தியாவே
நீ உனது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவா? இல்லையேல் ஈழத் தமிழன் உன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் ஏன் தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் உன்னை மன்னிக்க மாட்டார்கள்.
காந்தி தேசத்தில் அஹிம்சைக்கு இப்பொழுது மதிப்பே இல்லை. உண்ணாவிரதப் போராட்டங்களை மதிப்பதும் இலலை அவர்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பும் இல்லை.
மத்திய அரசியன் வாலைப்பிடித்துக் கொண்டு அரசியல் நடத்தும் கருணாநிதிக்கு உலகத் தமிழர்களின் தலைவன் என்ற கனவு காண்பதை முதலில் விட்டு விடு.
ஈழத்தமிழனின் நலனில் அக்கைறகொள்வது போல் நடிக்காதே.. கனிமொழி ஈழத்தமிழர்களுக்காக ஒரு பக்கம் குரல் கொடுக்கின்றார். கருணாநிதி சோனியாவின் கதையேக் கேட்டுத் தலையசைத்துக் கொண்டிருந்து என்ன பலன்.
இன்று ஒரு முத்துக்குமார் நாளை எத்தனை முத்துக்குமார்கள் தமிழகத்தில் உருவாகப்போகின்றார்களோ தெரியவில்லை .
அப்படி உருவாக யார் காரணம்?
கருணாநிதியா மத்திய அரசா இரண்டும் ஒன்றுதானே 4 இலட்சம் தமிழர்கள் காடுகளின் மரநிழல்களில் வாழ்கின்றார். இது கூட அந்த கிழவனுக்குப் புரியவில்லையா?
விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் காங்கிரஸ்காரரின் ஒரு குறிக்கோள் அதற்கு வெளியில் நல்லவர்கள் போல் நடித்துக்கொண்டும் ஈழத்தமிழனை அழிப்பதற்கு இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு அனுப்பி சிங்களப் பேரினவாதத்தோடு சேர்ந்து இன அழிப்பை மேற்கொண்டுள்ளது.
அமைதிப்படைய என்று பெயரில் முன்பு வந்துவாங்கிக் கட்டிக்கொண்டுபோனது தெரியாதோ?
வல்லரசாக நீ நினைப்பது சரி அதற்காக ஒரு இனத்தை அழித்து நீ வல்லரசாக முடியும் என்றால் அது நீ கானும் பகல் கனவு.
தமிழ் நாட்டில் இன்று இளைய சமுதாயத்தில் மூண்டுள்ள இன பற்று ஏன் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படவிலலை.
கொழும்பில் உள்ள இளையசமுதாயமே நீ உனது இருப்பை இழந்து கொண்டு இருக்கின்றாய் என்று தெரியாமல் வில்லும்,படிக்காதவனும் பார்த்துக்கொண்டு திரிகின்றாய் தமிழ் நாட்டில் தீக்குழித்த முத்துக்குமாருக்கு நீ ஒரு தமிழனாய் என்ன செய்தாய்?
ஒரு நினைவஞ்சலிக்கூட்டம் ஆவது நடத்தினியா?
கொழும்பு தமிழ் சங்கமே ஈழத்தில் எம்மவர்கள் படும் வேதனை உனக்கு புரியவில்லையா?
ஆடலும் பாடலுடன் நீ நடத்தும் நாடகங்கள் என்ன உனக்காக ஒருவன் அங்கு உயிர் திறந்தானே அது கூட உனக்கு தெரியாதா? அவன் என்ன விடுதலைப் புலியா இல்லையே அவன் ஒரு தமிழன் .
கூட்டங்கள் தான் நடத்துவதற்கு பயம் வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்றுவிடுவார்கள் என்று நீங்கள் சொல்லுவதும் கேட்கின்றது. ஏன் ஒருவர் இருவர் என்று நடத்தாமல் ஒரு கூட்டமாகசேர்ந்து நடத்தினால் வெள்ளை வான் உங்கைள என்ன செய்யப்போகின்றது.
இன்று கொழும்பில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சுயநலத்தோடு இருக்கின்றீர்கள்.
இளைய சமுதாயமோ.. களியாட்டங்களிலேயே தனது காலத்தை கடத்திக்கொண்டு இருக்கின்றது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்களுக்கே தெரியாது.
நாளைய சமுதாயமே உன் கையில் தான் இருக்கின்றது. முத்துக்குமாருக்கு வந்த ஆத்திரம் வெறி உனக்கு வரவில்லையா? மானம் கேட்டவனே…

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...