Sunday, May 7, 2023

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் காங்கேசன்
துறை துறைமுகத்துக்கும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலுக்குமிடையில் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இடம்பெற இருக்கின்றது. பல தசாப்தங்களாக தடைப்பட்டிருந்த இந்த பயணிகள் சேவை மீண்டும் ஆரம்பமாகவிருப்பது இரு நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இன்ட்சிறி ஃபெரி சேர்விஸ் தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.



காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக் கொண்டது. இந்தப் கப்பல் சேவை மே 15 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும்.
இந்தப் கப்பல் சேவையில் பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர். கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது .
பயணிகள் கப்பல் சேவை கட்டணமாக 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி வசூலிக்கப்படும் . 120 முதல் 150 பேர் வரை  பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.
இந்தப் கப்பலில் பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும்.  காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுச்சேவை தொடர்பில் திட்டமிடுவதற்கு ஐந்து வருடங்கள் எடுத்தன என தெரிவிக்கும் அவர், முதலில், இந்து யாத்திரீகர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆலய தரிசனத்துக்காக அழைத்துச்செல்வதற்கு 5 கப்பல் சேவைகளை நடத்துவதற்கான திட்டத்தினை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
படகு சேவையை தொடங்குவதற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. படகு சேவையை தொடங்குவது இந்தியாவே என இலங்கைதுறை முகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சி டி ல்வா தெரிவித்துள்ளார்.
கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது ..இந்த படகுச்சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம்150 மில்லியனை செலவிட்டுள்ளது. பயணிக்களுக்கான வசதிகள் மற்றும் குடிவரவு திணைக்களத்தின் பிரிவு ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இந்த கப்பல் போக்குவரத்து காரணமாக இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் தமது வியாபாராத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கம் பல வசதிகளை செய்துகொடுப்பதற்கு முன்வந்துள்ளது. காங்கேசன்துறை முகத்தை வச்த வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் காங்கேசன்துறையிலிருந்து ரயில் மூலம் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கான விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்தியாவுக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்கள் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும்.  தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும்.

இதேவேளை, கப்பல் சேவையை தொடங்குவதற்கு ஏதுவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டங்களை அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...