Monday, July 26, 2010

நடிகர்கள் என்று நிரூபித்த நடிகர்கள்


இலங்கைக்கு நடிகர்கள் செல்லக்கூடாது..... தமிழர்களை கொன்று குவித்த நாட்டில் மஹிந்த அரசாங்கம் நடத்தும் ஐபா திரைப்பட விருது விழாவுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்த போது உலகத் தமிழ் இனமே... நடிகர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் அனுப்பின.... தமிழர்கள் ஒன்று பட்டுவிட்டோம் என்ற சந்தோசத்தில்....

சரி அதன் பிறகு .. அசின் வந்தாங்க... அதற்கு ராதா ரவி அசினுக்கு கட்டாயம் தடை விதிப்போம் என்றார்... என்ன நடந்தது புஷ்வானமாகிவிட்டது.. சரி அதுதான்... புஷ் வானமாகிவிட்டாலும்... அதற்கு நடிகர் சங்கம் எடுத்த முடிவு இல்லை.. எல்லாம் கருணாநிதி எடுத்த முடிவுதான்.. அவரும் நடிகர்தானே... அசின் விவகாரம் அதனால் விஜயின் காவல்காரனுக்கு பாதிப்பு வரும் விஜயை வைத்த தி.மு.கா. அரசியல் நடத்துகின்றது.
சரி அதைவிடுங்கள்... சரத்குமார் எவ்வளவு வீரவசனம் பேசினார் என்ன படமா காட்டுறீங்கள் சரத்குமார் அவர்களே..

ராதிகாவுக்கு இலங்கையில் பல வியாபாரங்கள் இருக்கின்றன.. ராடன் தயாரிப்பு பல சிங்கள ரி.வி நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. அதனால் இலங்கைக்கு அடிக்கடிவரும் ராதிகாவும் சரத்குமாரும் இந்தத் தடையினால் வியாபாராமும் தடைபட்டுவிடுமோ என்ற பயம்தான். அண்மையில் நடிகர் சங்கம் வெளியிட்ட அறிகை.

ஏன். சரத்குமாரும் ராதிகாவும் அடிக்கடி இலங்கை வந்து செல்கின்றனரே ஒரு நாளாவது வன்னிப் பகுதிக்குச் சென்று வந்தார்களா?? இல்லை தமிழ் மக்கள் படும் துன்பங்களில் பங்குகொண்டார்களா?.. சும்மா புலம்பெயர் மக்களையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காகவே நடிகர் சங்கத்தில் இருந்துகொண்டு அறிக்கை விடுகின்றனர்.

நடிகர் குழு அடங்கிய குழு விரைவில் இலங்கை போகும் என்று அறிகை விட்ட சரத்குமார் அவர்களே அடிக்கடி வந்து போகும் உங்களுக்குத் தெரியாதுபோல... சரத்குமாரின் பிறந்தநாளுக்காக கருணாநிதியிடம் ஆசிபெறவா போனார்கள்.. இல்லையே கருணாநிதியிடம் அரசியல் பேசத்தான் போனார்கள்.. நாங்கள் இலங்கையில் பிசினஸ் செய்கின்றம். அதற்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க கருணாநிதியிடம் வியாபாரம் பேசத்தான் போனார்கள்.

இன்று தமிழர்கள் பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.. இதை தடுக்க நடிகர் சங்கம் ஏன் கருணாநிதியை நாடவில்லை..
வன்னிக்கு வந்தால் பைஸ்டார் ஹோட்டல்கள் இல்லையே நீங்கள் தங்குவதற்கு என்ற அச்சமா?

இல்லை வந்தால் யாரும் பணம் தரமாட்டார்களே எங்களது பணம்தான் வீணாகிவிடுமோ என்ற அச்சமா?

மலேசியா சிங்கபூர் டுபாய் லண்டனில் எல்லாம் நட்சத்திர விழாவோ உடனே சென்றுவிடும் நடிகர்களுக்கு ஈழத்தமிழர்களை வந்து பார்ப்பதற்கு என்ன தடை?

எங்களது தொப்புள் கொடி உறவுகள் நாங்கள் என்று கொண்டாடும் நீங்கள் ஒரு தடவை வந்து உங்கள் தொப்புள்கொடி உறவுகளை பார்த்தால் என்ன?

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...