Skip to main content

Posts

Showing posts from December, 2008

நடந்து வந்த பாதை

2008 எப்படியிருந்தது சுவடுகளின் நிழலா- சுமைகளின் சுமையா- துன்பங்களின் ரணங்களா- நிலவில் பனியா தெரியவில்லை.(என்னடா சாத்திரக்காரன் மாதிரி சாத்திரம் சொல்லுகின்றனே என்று நினைக்க வேண்டாம்) 2008 இல் அரசியல் என்ன நடந்தது சினிமாவில் என்ன நடந்தது உலகத்தில் என்ன நடந்ந்து என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் அதைப்ப பற்றி நான் இங்கு பதிய வரவில்லை. ஏன் என்றால் நமக்குள் நடக்கும் போராட்டங்களும் ஒரு அரசியல்தானே நம்மைச்சுற்றி எத்தனை சினிமாக்கள். உலகமே ஒரு நாடக மேடைதானோ அதில் நாம் எல்லாம் நடிகர்கள்தானே. ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போதும் நாம் எதாவது ஒரு சபதத்தை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம் அந்த சபதத்தில் நாம் வெற்றி பெறுகின்றோமா இல்லையா? என்று நாம் பார்தால் 100 இற்கு 50 வீதமானோர்தான் வெற்றி பெறுகின்றார்கள்.தோல்வி பெறுப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் நேரம் சரியில்லை காலம் சரியில்லை ஜாதகத்தில் கோளாறு அதிஷ்டம் இல்லை என்று என்னென்னவோ சொல்கின்றார்கள். அவர்கள் ஏன் அப்படிச் சொல்கின்றார் என்றால் அவர்களிடம் முயற்சி இல்லை- தன்னம்பிக்கை இல்லை-சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- உதவிகள் யாரும் செய்ய மாட்டேன்றார்கள் என்று …

சிரிப்பு

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.... இன்றைக்கு அமர்க்களமாக சிரிப்பைப்பற்றி கொஞ்சம் சிரிக்கலாமே.
பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப்போச்சு பழசுகள் சொல்லுங்கள் இந்த டயலொக்கை அந்தக் காலத்தில பெண்கள் சிரிச்சாலே தப்பாக பார்ப்பார்களாம். ( ஏன் அவர்கள் பேய் மாதிரி சிரிக்கின்றார்களோ தெரியவில்லை அதனால் தான் அப்படி சொன்னார்களே) சரி நாம் நாளந்தம் யாருடையாவது முகத்தில் முழிக்கும் பொழுது அவர்கள் முகம் ஏதோ இழவு விழுந்த மாதிரி இருந்தால் அன்று உங்களது நாள் எப்படியிருக்கும் சும்மா அதிருமலே.ஆனால் புன்னகைத்த முகத்துடன் பார்த்தால் உங்களது முகத்தில் எத்தனை சந்தோஷங்கள். அத்தனைக்கும் ஒரு பெண் சிரித்தால் சும்மா அவ சிரிப்பாலயே சிக்ஸர் அடிச்சுட்டு என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
சிரிப்பிலே எத்தனை வகை என்று கேட்டால் கட்டாயம் எனக்குத் தெரியாது. நான் ஒன்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லை அவ்வளவுக்கு சிரிப்பை ஆராய. எனக்குத் தெரிந்த சிரிப்புக்களும் என்னைக் கவர்ந்த சிரிப்புகளும் என்றுதான் சொல்லலாம். (அ...அ.. இவர் ரசித்துப் பார்த்ததை நாங்க ஏன் படிக்க வேண்டும் எங்களுக்கு வேற வேலை இல்லை என்று நீங்கள் மனதுக்குள…

கடலை போடுவது ஆபத்தா?

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை. ஏன் கடலை போடுகின்றார்கள்? எதற்காக போடுகின்றார்கள்? யார் போடுகின்றார்கள்? என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. (ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......) ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற…

இப்படியும் குளிக்கின்றார்களாம்....

இந்தக்குளிரிலும் இப்படிக் குளிக்க இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்துச்சோ தெரியவில்லை. ( என்னடா இவன் குளிக்கேலையா என்று நினைக்க வேண்டாம்)சீனாவின் Liaoning என்னுமிடத்தில் ஆறு பனிக்கட்டிகளாக உறைந்துபோய்யுள்ளது. அதில் குளிப்பதற்கு இவர்களுக்கு வந்த ஆசையினால் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகளை வெட்டி அதற்குள் குளிக்கின்றார்கள் நீச்சல் வீரர்களாம் இவர்கள்.

ஒபாமா அலையாம்........

நட்பு.........................

நட்பைப்பற்றி நண்பர்களுடன் விவாதித்துவிட்டு வருகின்றேன் என்றேன்.விவாதித்தேன்...... சும்மா வந்து விழுந்த அம்புகள் என்னைக்குத்திவிட்டன. அதனையும் எனது நண்பர்கள் எனக்குத்தந்த முத்துக்கள் (எனது அறிவுக்கு) என்றுதான் சொல்ல வேண்டும். (உங்களுக்கு அது முத்தோ இல்லையோ எனக்குத் தெரியாது முத்தாகப் பட்டால் வாழ்த்துங்கள் இல்லையேல் நல்லாகத் திட்டுங்கள்.)
புரிந்துணர்வு... நண்பர்களுக்கிடையில் வருவது முக்கியம் ... புரிந்துகொண்ட நண்பர்கள் இன்று எத்தனை பேர் காதலர்களாகவும் எத்தனை பேர் கணவன் மனைவியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அத்தனைக்கு அவர்களது புரிந்துணர்வுதான் காரணம்.
விட்டுக்கொடுப்பு... ஐயோ சாமி இந்த வார்த்தையைக் கேட்டால் எனக்கு கோபம்கோபம்தான் வரும் ஏன் என்றால் நான் அதிகமாக விட்டுக்கொடுத்திருக்கின்றேன்.. அதனால் பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கின்றது.ஆனால் நான் விடுக்கொடுக்கும்போதேலாம் அதை எனது நண்பர்கள் இவனுக்கு சூடு சுறனை இல்லை என்று திட்டுவார்கள். இவனுக்குகோபமே வராதா? இவன் எல்லாம் ஒரு மனிதனா என்றேலாம்..... கேவலப்படுத்தியிருக்கின்றார்கள் நான் எதனையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.ஏன் என்றால் எனது ந…

தோழா தோழா

தோழா தோழா தோழ்கொடு தோழா.. என்ன பாட்டுப்பாடுறன் என்று நினைக்கவேண்டாம். காதலைப் பற்றிப்போட்டுவிட்டானே... நட்பைப்பற்றிப்போடவில்லையே இவனுக்கு நண்பர்கள் இல்லையோ நட்பைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்றேல்லாம் திட்ட வேண்டாம். மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று உங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் அது மிகக்குறைவாகவே இருக்கின்றன. ஆரம்பத்தில் பாடசாலை முதல் நீங்கள் பல்கலைக்கழகம் முடிக்கும் வரை எத்தனை பாடசாலைகள் எத்தனை கல்விநிறுவனங்கள்எத்தனை நண்பர்கள்.... அத்தனையும் பசுமையின் சின்னங்கள். அதன் பின் தொழில் சார் நண்பர்கள் என்று உங்களின் நட்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆண், பெண் நட்பு அது இன்று சர்வசாதாரணமாகிவிட்டதொன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பாக பழகுவதே ஒரு செய்தி-ஒரு பரபரப்பு- அவர்களை தவறான பார்வையில் பார்ப்பதும் நோக்குவதும் சமூகத்தில் இருந்து வந்தது. ஆனால் இன்று அது கால ஒட்டத்தில் மறைந்து போய்விட்டது.நமது கலாச்சாரம் வெளிநாட்டின் கலாசாரத்தில் ஒன்றிப…

துளிகள்

யார் இந்த நாராயணன்?

இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியும் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகர் இவர்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர் குலைக்க மத்திய அரசுடன் செயல்படுவருபவர். தமிழ் நாட்டில் உளவு துறையை மிகவும் சதூரியமாக கையாளக்குடிய நபர் இவர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்று காத்துக்கிடந்தனர். ஈழத்தின் அவல நிலைமைகளை பிரதமருக்கு சொல்வதற்காக இருந்தனர். அப்போது அவர்களை சந்திக்க விடாமல் செய்தவரும் இவர்தான்.
அப்படிப்பட்ட இந்த நாராயணன். கியூபாவில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டில் இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பதற்கு ஏற்படு செய்துகொடுத்தவர்.
தமிழர்களின் நலனில் அக்கறையில் துளி கூட விரும்பம் இல்லை இந்த நாராயணனுக்கு இவர் தனது பெயரை நரதர் என்று மாற்றி வைத்திருக்கலாமே?
இலங்கையில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் எம்.கே.நாராயணன் மன்மோகன்சிங்கின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி ஏற்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளின.
ஏதோ இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய வீரன் என்ற எண்ணத்தில் அவர் மீது அவ்வளவு பாராட்டு மழை.
பின்ன அவருக்கு இதைக்…