Wednesday, November 26, 2008

வர்ணங்கள் ஆயிரம்

கௌதம்மேனனின் உணர்வுகளின் குவியலா அல்லது உணர்ச்சிகளின் குவியலா என்று சொல்லத் தோன்றுகின்றது வாரணம் ஆயிரம் .தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தையும் தன்னால் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கின்றார். அவர் செதுக்கிய சிற்பங்கள் ஆயிரம் சேர்த்துத்தானோ இந்த வாரணம் ஆயிரம்.தந்தை மகன் பாசம் தான் கதை என்றாலும் சின்ன சின்ன உணர்வுகளை காட்டிய விதம் பிரமிக்க வைக்கின்றது.தந்தை 5 அடி பாய்ந்தால் பிள்ளை 20 அடி பாயும் என்பார்கள். அதை போல சிவகுமாரையே மிஞ்சிவிட்டார் சூர்யா.சூர்யா தந்தை மகன் என்று இரண்டு கதாபாத்திரங்கள் சும்மா பின்னியெடுக்கின்றார். ஒவ்வொரு மனிதனுக்கு அவனது தந்தைதான் முன்னோடி. அவ்வாறு இருக்கும் தந்தையையே தனது முன்னோடியாக கொண்டு சிறு வயது முதல் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.தந்தை கதாபாத்திரத்திற்கும் மகன் பாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கின்றார் ஸாரி வாழ்ந்திருக்கின்றார்.சாமிராரெட்டி தமிழுக்கு புதுவரவு நல்லவரவு இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் பட்டாம் பூச்சி.சாமிரா ரெட்டி சூர்யா காதல் இளையராஜாவின் இடைக்காலத்துப் பாடல்கள் கேட்ட அனுபவம்.... இதை நான் சொல்ல வில்லை படத்திலேயே சூர்யா சொன்ன வசனம்.இவர்களது காதலையும் அமெரிக்காவின் அழகையும் பசுமையாக தந்த கமெராமென் ரத்னவேல் சூப்பர்.சிம்ரனின் நடிப்புக்கு ஒரு சபாஸ்போடலாம் தந்தை சூர்யா இறந்தபோது மகன் சூர்யாவை பார்க்கும்பொழுது தனது முகபாவத்தினாலேயே அத்தனை வேதனைகளையும் செய்து விடுகின்றார்.தியா (குத்து ரம்யா) அனைவரதும் வாழ்விலும் காட்டாயம் இப்படி ஒரு பொண்ணு வருவாள் வந்துகொண்டு இருப்பாள் என்பதை புடம் போட்டு காட்டியிருக்கின்றது.கண்களினால் ஒரு கவிதை என்றே சொல்லலாம்.இசை..................................................... படத்தின் பெரும்பலமே ஹரிஸ்ஜெயராஜ் முந்தினம் பார்த்தேனே..... நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... அவ என்னைத் தேடி தேடி வந்த அஞ்சல.. அனல் மேல பனித்துளி... பாடல்கள் இதம். பெண்கவிஞர் தாமரையின் வரிகள் நன்று.என்னடா... படத்தைப்பற்றி இவன் ஓவரா ரீல் விடுறான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நிலவில் கூட கறை ஒன்று இருக்கத்தான் செய்யும். சில காட்சிகளின் நீளம் அதிகம் தான் சூர்யா போதைக்கு அடிமையாகும் காட்சி... மற்றும் காஷ்மீரில் இடம் பெறும் காட்சிகள்...அதை விடுத்துப்பார்த்தால் .வாரணம் ஆயிரம் வர்ணங்கள் ஆயிரம் என்றுதான் சொல்லவேண்டும்.

Monday, November 24, 2008

பாகம் 2


என்ன தொடரும் என்று போட்டுவிட்டு என்னும் பதியாமல் இருக்கின்றானே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது. இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.
தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.
தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.
காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை. காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம்.

அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள். தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.
தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......

இந்தக்காதல்......

பொறுங்கோ வாரேன்.....

உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?
உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும். ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.
அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.
மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .
அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“
உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவ
னையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.
நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்
என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.
2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....

உடல்கள் இணையும் காதல்.....
அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்று
சிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.
அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
காதலர்கள் காதலியுங்கள்
உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.
பொது இடங்களில் உங்களது காமலீலைகளை
அரங்கேற்றதீர்கள். நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.

Friday, November 21, 2008

என்பார்வையில் காதல்


காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது. சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம். ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது. இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.காதலைப்பற்றி எழுத நிறையவே இருக்கின்றது ஆகையால் இன்னும் அது தொடர்ந்து வரும்....

Monday, November 17, 2008

மாமனார் வீடுக்கு மருமகனின் நன்றி

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி யும் நேற்று(16.11.2008) நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டிருந்தார்.காலை 8 மணி முதல் மாலை4 மணி வரை இந்த உண்ணாவிரதம் இடம்பெற்றது. உண்ணாவிரதம் ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தை விட அதிகமான ரசிகர்கள் மாநிலங்கள் தோறும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர்.அது சரி எல்லா நடிகர்களும் இருக்கும் போது விஜய் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா? அதனால் தான் இப்படி ஒரு உண்ணாவிரதம் என்று கோடம்பாக்கத்தில் இப்பொழுது பரப்பரப்பாக பேசப்படும் விடயம் எவ்வளவு மூத்த நடிகர்கள் விஜயகாந்த்,கமல், ரஜனி போன்ற ரசிகர்படைகளை வைத்திருக்கும் நடிகர்களுக்கு வரத இந்த எண்ணம் விஜய்கு ஏன் வந்தது? என்றுதானே நீங்கள் கேட்கின்றீர்கள்.விஜய் புகுந்த வீடு லண்டனாக இருக்கலாம். ஆனால் அவரது மனைவி சங்கீதா ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அவரதுபூர்வீகம் ஈழம் .மனைவியின் தாய்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் மருகமன் அதற்காக கண்ணீர் விடத்தான் வேண்டும். அதை நல்ல மருகனால்தான் முடியும் அவ்வாறு விஜய் செய்தது வரவேற்கத்தக்கது.அதைவிட உலககலாவிய ரீதியாக நோக்கினாலும் ரஜனிக்கு அடுத்தபடியாக இன்று மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்த நடிகர் என்றால் அது விஜய்தான்.ஈழத்தில் விஜய்க்கு அதிகமான ரசி
கைகள் இருக்கின்றார்கள் எனவே தனது ரசிகர்களுக்காகஅவர் மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் அவர்களின் மனங்களில் ஒருதெம்பையே ஏற்படுத்தியிருக்கின்றது என்று சொல்லலாம். நாம் விரும்பும் நடிகர் இவ்வாறு தங்களுக்காக குரல் கொடுத்தது என்பது அவர்களுக்கு ஆறுதலாகவே இருக்கின்றது என்று சொல்லலாம்.அது சரி என்ன ஒரே விஜய் புரணம் படுகிறான் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.கோடம்பாக்கத்தில் இப்பொழுது பெரும் பரப்பரப்புக்குள்ளான இந்த உண்ணாவிரதம் விஜய் அரசியல் நோக்கோடு இதை பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அடித்தளமாக இந்த உண்ணாவிரதம் இருந்தது என்று சில பட்சிகள் கூறுகின்றன.ஒரு புதிய அரசியல் கட்சியால்கூட இவ்வாறு கூட்டம் கூட்டமுடியுமா என்பது சந்தேகம்தான் சரி பொறுத்திருந்துபார்ப்போம் என்ன நடக்குது என்று.

Wednesday, November 12, 2008

கொண்டாட்டங்களை நிறுத்திய கமல்

எதோ வண்டியை நிறுத்தியதாக நீங்கள் நினைக்கவேண்டாம். ஈழத்தில் நடக்கும் போர் காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அந்த வேளையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கமல் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.ஓகே அதுசரிதான் தனது இரத்த சொந்தங்கள் பாதிக்கப்படும் பொழுது எனக்கு என்ன பிறந்த நாள் கொண்டாட்டம் என்று கமல் நினைத்திருக்காலாம்.ஆனால் கொழும்பில் உள்ள பல இலத்திரனியில் ஊடகங்கள் கமல் பிறந்த நாளை கொண்டாடியது அவர்கள் கொண்டாடியது தப்பில்லை. அவர்கள் எதையும் எப்பவும் கொண்டாடி ஆக வேண்டிய நிலையா நிர்ப்பந்தமா தெரியவில்லை.ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் எதுவுமே தெரியாததுபோல இவர்களின் கொண்டாட்டங்கள் இருந்தன.வியாபார நோக்கத்திற்காக இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடலாமா? இல்லை உண்மையைச் சொன்னால் ஊடகங்களை நிறுத்திவிடுவார்கள் என்ற பயமோ தெரியவில்லை.ஊடங்கங்கள் தான் இவ்வாறான செயல்களில் இருக்கின்றது என்றால் மக்களுமா?ரசிகர்கள் என்ன செய்கின்றார்கள் தங்களது தலைவன் இவ்வாறான ஒரு அறிக்கையை விடுகின்றார் என்றால் இவர்களுக்கு எங்கே போயிற்றுது புத்தி.கொழும்பு எதோ அமெரிக்காவிலும் ஈழம் எதோ அவுஸ்திரேலியாவிலும் இருப்பதுபோல பிரம்மையில் இருக்கின்றார்களா?இல்லாவிட்டால் எங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று இருக்கின்றார்களா என்று தெரியவில்லை.தமிழ் நாட்டில் இன்று இருக்கின்றநிலைமை இலங்கையில் உள்ள மக்களுக்கு அதுவும் கொழும்பில் உள்ள மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏன் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகக் கூட தங்களது ஆதங்கங்களை இந்த ஊடக நிறுவனங்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

Monday, November 10, 2008

ஈழப்பிரச்சினையும்சினிமா ஒப்பனைகளும்

ஈழத்தில் போர் தொடங்கி இற்றைக்கு 30 வருடங்கள் ஆகின்றன ஆனால் சில தமிழ்ச்சினிமா நட்சத்திரங்கள் நேற்றுத்தான் ஈழத்தில் போர் நடப்பதுபோலவும் அங்குள்ள அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள இராணுவத்தினால் எடுக்கப்படுவதை அதிசயமாகப் பார்க்கின்றன.
அது சரி ஈழத்துப்பிரச்சினையைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை உலகம் அறிந்த ஒன்று அகையினால் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகள் கட்டாயம் ஈழமக்களுக்குத் தேவை அது நடிகர்களினால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்றால் அது சிலருக்கு தங்களின் அரசியல் இலாபங்ககளுக்காகவே உண்ணாவிரதப்போராட்டங்களில் ஈடுபடுகின்றனரே என்றே சொல்லத் தோன்றுகின்றது.நடிகர் விஜயகாந்தை அரசியல் வாதி என்பதை நிறுபித்துவிட்டார் பல வருடங்களாக ஈழத்தில் மக்களுக்கு எப்பொழுது அமைதிகிடைக்கின்றதோ அப்போது தனது பிறந்த நாளை கொண்டடுவேன் என்று கூறிய விஜயகாந்தா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
உண்ணாவிரததில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்று அறிவித்தபோதும் கமலின் உரையில் குருதிப்புனல் பட வசனம் உதவியது அது போல ரஜனிகாந்த மத்திய அரசையும் இலங்கை அரசையும் சாட்டை அடி கொடுத்தார் என்றார்கள்.
அது சரி நியாயம் என்று நாம் பார்த்தாலும் ரஜனியின் அடுத்தபடம் ரோபா 150 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படுகின்றது. அதற்கு தயாரிப்பு ஈழத்தைச் சேர்ந்த ஐங்கரன் நிறுவனம். உலக ரீதியில் ரோபோ வெற்றி பெறவேண்டும் என்றால் ஈழத்தமிழரை கட்டாயம் ஆதரிக்கவேண்டிய நிலை ரஜனிக்கு. குறைந்த பட்ஜட் குசேலன்னுக்காக கன்னட மக்களிடம் தான் பேசியது தவறு என்று கூறி அங்கே தனது படத்தை ரிலீஸ் செய்தவர் இவர் .அப்படிப் பார்த்தால் ரோபோவுக்காக இவர் பேசியது என்றே நோக்கத் தோன்றுகிறது தவிர ஈழமக்களுக்காக பேசியிருந்தால் வரவேற்கத்தக்கது.ஏகன், துரை படங்களை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்வதை ஈழத்தமிழர்கள் தடை செய்தார்கள்.அது அந்தப் படத்தின் நாயகர்கள் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்ற வதந்தி என்று சொல்லப்படுகின்றது.அது சரி இது சதியாக இருக்கலாம் என்று யார் ஆவது யோசித்தார்களா இல்லை இந்த இரண்டு படங்களையும் தயாரித்தது இதே ஐங்கரன் நிறுவனம் தான்.அவர்களை படங்கள் தயாரிப்பதில் இருந்து முடக்குவதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சதி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.ஈழத்தமிழர்கள் உணர்ச்சிமிக்கவர்கள் என்பதை புரிந்துகொண்டு அவரான செய்தியை முதலில் வெளியிட்டதே இந்தியப் பத்திரிகை ஒன்று அதன் உண்மைத் தன்மையை புரியாமல் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு நடிகர்களின் மீதும் படங்களின் மீதும் கோபம் கொண்டனர்.
நாயகர்கள் உண்மையாக அப்படி பேசவில்லை என்பது அவர்களின் உண்ணாவிரத உரையில் தெரிகிறது.
ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்தார்கள் இருக்கிறார்கள் வரவேற்கத்தக்கது.அதை விட ரசிகர்கள் போட்டிக்கு போட்டியாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.ஈழத்தமிழருக்காக இருக்கிறார்களா இல்லை தல தளபதி என்றா போட்டியில் இருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்தினார்.அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தார்.விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றார்கள்உண்மையான உணர்வாயின் வரவேற்போம்.
நமூர் காரன் ஆகாஷ் இவரை எப்படித்தான் சொல்வதென்று இருக்கின்றது இவரைப்பற்றி சொல்வதென்றால் பச்சோந்தி என்றே சொல்லத் தோன்றுகின்றது.அப்படி நல்லவர் தமிழ்சினிமா உலகிற்கு விஜய்க்குப்போட்டிய வருவேன் என்று மார்பு தட்டிக்கொண்டு இருக்கிறவர்.அதுசரி இவருக்கு உண்ணாவிரதம் இருக்க என்ன தகுதி இருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இவர்.இலங்கை வரும்போது தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்றும் இந்தியாவில் தான் லண்டனைச் சேர்நதவன் என்றும் தெலுங்கு சினிமா உலகில் தான் பெரிய ஹீரோ என்றும் பொய் சொல்லித் திரிபவர் மட்டுமல்ல தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்காக பத்திரிகைகளில் பொய்யான செய்திகளை வழங்குவதில் இவரைப் போல கில்லாடியை நாம் பார்த்திரு“கக முடியாது.உண்மையான தமிழன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவன் என்ற உணர்வு இருந்தால் தனது அறிக்கைகளை வெளியிட்டு இருக்கலாம். இவரை விட மன்சூர் அலிகான் எவ்வளவோ மேல்..
ரி.ஆதி

Saturday, November 8, 2008

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே
இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவரசர்களுக்கு முடிசூட்டும் விழாவும் விழாவில் ஏற்பட்ட சறுக்கல்களும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ஏன் என்று நீங்கள் கேட்கிறது புரிகிறது.அன்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும்சரி சக்தி ரி.வியில் பார்த்தவர்களும் சரி நிகழ்ச்சியின் ஏற்பாட்டிலும் சரி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மிகவும் சிறப்பாக செய்தார்களா?அவர்கள் நிகழ்ச்சிய நடத்துவதில் இருந்த ஆர்வத்தைக்காட்டிலும் ஏதோ மாட்டு மந்தையை அடுக்குவது போன்று காட்டுக்கத்தல் இருக்கிறதே அதை ரசிக்க ரசிகர்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டார்கள்.குறிப்பாக சக்தி எப்.எம் பொறுப்பாளர் மாயா ( உண்மையான பெயர் மாயாண்டி) அவர் மேடை நிகழ்ச்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்துதான் செய்தாரா?அல்லது வடிவேலுமாதிரி எதாவது காமடி கிமடி பண்ணினாரா என்று தெரியவில்லை.அவர் உச்சரிக்கும் பல வார்த்தைகள் சரியில்லை குறிப்பாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊதியம் கொடுக்கபோகிறோம் என்று அறிவித்தார்.இவரை எல்லாம் யார் மேடை நிகழ்ச்சிக்கு விட்டது?.................................................... இந்த புள்ளி ஏன் இட்டேன் என்றால் வார்த்தைகளால் சொல்ல முடியாத தவறுகள் மயாவில்.
கஜமுகன் ஏனோ தானோ என்று அடிக்கடி விளம்பர இடைவேளை சொல்வதில்லையே கவனமாக இருந்தார்.
பிரியா சக்தி ரி.வி( சக்தி ரி.வியில் வேற அறிவிப்பாளர்கள் இல்லைப்போல)தனக்கும் மேடை நிகழ்ச்சியை நடத்தும் திறமை இருக்கு என்று காட்டிக்கொண்டு திருவிழாவில் காணாமல் போன குழந்தை எவ்வாறு கத்துமோ அவ்வாறு இருந்தது அவரது அறிவிப்பும் ஏனோ தனக்கும் காமடி பண்ண முடியும் என்று ரை பண்ணியிருக்கிறா போலா.
பாராட்டக்கூடிய சில விடயங்கள்
1. நமது கலைஞர்களை ஊக்குவித்தமை
2. இறுதி நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைக்காமை
3. நமது பாடகர்களை நடுவர்களா பயன் படுத்தியது வரவேற்கத்தக்கது
4. இசை இளவரசர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து இவ்வளவு காலமும் நடத்தியமை வரவேற்கத்தக்கது.
சக்தி ரி .வி. இசை இளவரசர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷியா எங்கே?இசை இளவரசர்கள் முடிசூட்டியவர்களுக்கும் முடிசூட்டாதவர்கள் தழைத்தவர்கள் அல்ல அனைவரும் திறமை சாளிகள் என்றே தெரிகிறது.ஏதோ இந்தியா தரத்துடன் ஒப்பிடாமல் நமது கலைஞர்களை நாம் வளர்ப்போம் வாழ்த்துவோம் .

Short movie