Friday, December 5, 2008

தோழா தோழா


தோழா தோழா தோழ்கொடு தோழா.. என்ன பாட்டுப்பாடுறன் என்று நினைக்கவேண்டாம். காதலைப் பற்றிப்போட்டுவிட்டானே... நட்பைப்பற்றிப்போடவில்லையே இவனுக்கு நண்பர்கள் இல்லையோ நட்பைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்றேல்லாம் திட்ட வேண்டாம்.
மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று உங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் அது மிகக்குறைவாகவே இருக்கின்றன.
ஆரம்பத்தில் பாடசாலை முதல் நீங்கள் பல்கலைக்கழகம் முடிக்கும் வரை எத்தனை பாடசாலைகள் எத்தனை கல்விநிறுவனங்கள்எத்தனை நண்பர்கள்.... அத்தனையும் பசுமையின் சின்னங்கள்.
அதன் பின் தொழில் சார் நண்பர்கள் என்று உங்களின் நட்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஆண், பெண் நட்பு அது இன்று சர்வசாதாரணமாகிவிட்டதொன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பாக பழகுவதே ஒரு செய்தி-ஒரு பரபரப்பு- அவர்களை தவறான பார்வையில் பார்ப்பதும் நோக்குவதும் சமூகத்தில் இருந்து வந்தது.
ஆனால் இன்று அது கால ஒட்டத்தில் மறைந்து போய்விட்டது.நமது கலாச்சாரம் வெளிநாட்டின் கலாசாரத்தில் ஒன்றிப்போய்விட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது.ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் நட்பாக பழகலாம் அதில் எந்தத் தப்புமில்லை ஆனால் ஒரு வரையறைஎன்பது கட்டாயம் தேவைப்படுகிறது.நண்பர்களுக்கிடையில் ஒளிவு மறைவு என்பது இருக்கக்கூடாது.கணவன் மனைவிகள் கூட தங்களுக்குள் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.ஏன் நீங்கள் கூட ஒரு விடயத்தை உங்களது பெற்றோர்களிடம் பகிர்ந்துகொண்டீர்களா நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...“நான் எனது அப்பா அமமாவுக்கு எல்லா விடயத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்று.பதில் இல்லையென்டுதான் வரும்.பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விடயத்தையும் நாம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.அவ்வாறு நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் நல்லதோ கெட்டதோ ..... உங்களது மனோ நிலையும் அந்த விடயத்தை நீங்கள் நோக்கும் பொழுது அது உங்களைப் பாதிக்கும் விதமும்தான் முக்கியம்.நீங்கள் நட்புக்கொள்ளும் நண்பர்கள் அனைவரையும் நீங்கள் நண்பர்களாகக் கொண்டாலும் நீங்கள் உங்களது வட்டத்திற்குள் சிலரையே வைத்திருப்பீர்கள். அவ்வாறு வைத்திருக்கும் நண்பனோ நண்பியோ....தான் உங்களது துன்பத்திலும் இன்பதிலும் பங்குகொள்கின்றார்கள்.அதற்காக மற்றவர்கள் பங்குகொள்ள மட்டார்கள் என்று இல்லை..என்னதொடர் கதையா என்று நினைக்க வேண்டாம்....நண்பர்களிடம் நான் இதைபற்றி விவாதித்து விட்டு தொடர்வேன்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...