Wednesday, November 26, 2008

வர்ணங்கள் ஆயிரம்

கௌதம்மேனனின் உணர்வுகளின் குவியலா அல்லது உணர்ச்சிகளின் குவியலா என்று சொல்லத் தோன்றுகின்றது வாரணம் ஆயிரம் .தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தையும் தன்னால் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கின்றார். அவர் செதுக்கிய சிற்பங்கள் ஆயிரம் சேர்த்துத்தானோ இந்த வாரணம் ஆயிரம்.தந்தை மகன் பாசம் தான் கதை என்றாலும் சின்ன சின்ன உணர்வுகளை காட்டிய விதம் பிரமிக்க வைக்கின்றது.தந்தை 5 அடி பாய்ந்தால் பிள்ளை 20 அடி பாயும் என்பார்கள். அதை போல சிவகுமாரையே மிஞ்சிவிட்டார் சூர்யா.சூர்யா தந்தை மகன் என்று இரண்டு கதாபாத்திரங்கள் சும்மா பின்னியெடுக்கின்றார். ஒவ்வொரு மனிதனுக்கு அவனது தந்தைதான் முன்னோடி. அவ்வாறு இருக்கும் தந்தையையே தனது முன்னோடியாக கொண்டு சிறு வயது முதல் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.தந்தை கதாபாத்திரத்திற்கும் மகன் பாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கின்றார் ஸாரி வாழ்ந்திருக்கின்றார்.சாமிராரெட்டி தமிழுக்கு புதுவரவு நல்லவரவு இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் பட்டாம் பூச்சி.சாமிரா ரெட்டி சூர்யா காதல் இளையராஜாவின் இடைக்காலத்துப் பாடல்கள் கேட்ட அனுபவம்.... இதை நான் சொல்ல வில்லை படத்திலேயே சூர்யா சொன்ன வசனம்.இவர்களது காதலையும் அமெரிக்காவின் அழகையும் பசுமையாக தந்த கமெராமென் ரத்னவேல் சூப்பர்.சிம்ரனின் நடிப்புக்கு ஒரு சபாஸ்போடலாம் தந்தை சூர்யா இறந்தபோது மகன் சூர்யாவை பார்க்கும்பொழுது தனது முகபாவத்தினாலேயே அத்தனை வேதனைகளையும் செய்து விடுகின்றார்.தியா (குத்து ரம்யா) அனைவரதும் வாழ்விலும் காட்டாயம் இப்படி ஒரு பொண்ணு வருவாள் வந்துகொண்டு இருப்பாள் என்பதை புடம் போட்டு காட்டியிருக்கின்றது.கண்களினால் ஒரு கவிதை என்றே சொல்லலாம்.இசை..................................................... படத்தின் பெரும்பலமே ஹரிஸ்ஜெயராஜ் முந்தினம் பார்த்தேனே..... நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... அவ என்னைத் தேடி தேடி வந்த அஞ்சல.. அனல் மேல பனித்துளி... பாடல்கள் இதம். பெண்கவிஞர் தாமரையின் வரிகள் நன்று.என்னடா... படத்தைப்பற்றி இவன் ஓவரா ரீல் விடுறான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நிலவில் கூட கறை ஒன்று இருக்கத்தான் செய்யும். சில காட்சிகளின் நீளம் அதிகம் தான் சூர்யா போதைக்கு அடிமையாகும் காட்சி... மற்றும் காஷ்மீரில் இடம் பெறும் காட்சிகள்...அதை விடுத்துப்பார்த்தால் .வாரணம் ஆயிரம் வர்ணங்கள் ஆயிரம் என்றுதான் சொல்லவேண்டும்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...