Tuesday, December 15, 2009

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதற்கு?


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கப்போகின்றது என்பதை ஊடகங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனவே தவிர மக்கள் அதை எதிர்பார்க்கவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயருக்குத்தான் இருக்கின்றார்கள்.

அவர்கள் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்?. வெளிநாடுகளில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அங்கிருந்தபடியே அறிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து என்ன பயன்?
விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் அவர்கள் யாரை பரிந்துரைக்கின்றார்களோ அவர்களைத்தான் மக்கள் தெரிவு செய்தார்கள்.
ஆனால் இன்றைய நிலை தலைகீழாக உள்ளது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

யாழ்.மக்களுக்கு எதுவுமே செய்யாத கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து என்ன பயன்?.
மக்களுக்கு வேலைவாய்புக்கள் பெற்றுக்கொடுப்பதில்லை. நாடாளுமன்றத்தில் தங்களது தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை செய்வதில்லை.
உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் இருப்பதால் என்ன பயன்?
யாழ்.மக்களைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் இராவணன் ஆண்டாள் என்ன? இராமன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு என்ன பயன் என்ற நிலையே?
சரத்பொன்சேகாவை நம்பி சில தமிழ் அரசியல் கட்சிகள் இன்று அவருக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றது.

இதேபோல இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும் பிள்ளையான், கருணா போன்ற தமிழ் அமைப்புக்களும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றனர்.

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் பிரித்தளாப்படுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மலையகம் என்று மூன்று பிரிவுகளையும் சிங்களப் பேரினவாதம் பிரித்து பந்தாடுவது தமிழர்களின் நிலையை சீர் குலைப்பதற்கே அன்றி தமிழர்களின் நலனில் அக்கறைகொண்டு அல்ல என்பதை முதலில் தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அமைச்சுப் பதவிகளுக்காககவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் தமது இனத்தையே கூறுபோடவைத்துவிட்டு வேடிக்க்கை பார்க்கின்றது என்றால் அது தமிழ் இனத்திற்கு கிடைத்த சாபம். தமிழ்க் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத இவர்களால் எப்படி தமிழர் பிரச்சினையில் முன்னேற்த்தைக் காணமுடியும்?
சரத்பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று ஐ.தே.கூட்டமைப்பு கோரிக்கை வைத்தாலும் தமிழ் மக்கள் மனதை வெல்வது என்பது கஷ்டமானகாரியமே.
ஏன்னெனில் சரத்பொன்சேகாவும் வன்னி மனிதப் பேரழிவை மேற்கொண்டவர்களில் ஒருவர் . அதை விட தமிழர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை, இது பௌத்த சிங்கள நாடு என்று சொன்னவர்.

இன்று அரசியல்வாதியாக தன்னை முன்னிலைப்படுத்தி தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அதிகமான சலுகைகளைக் கொடுப்பேன் என்று சொல்வது
அரசியல் நாடகத்தின் உச்சக்கட்டமே. இதை புரிந்துகொள்ளாமல் தமிழ்க்கட்சிகள் அவரின் சொல்லை நம்பி நாசமாகப்போவது மட்டும் உறுதி.
சம்பந்தன் ஐயா என்ன செய்கின்றார் என்றால் தங்களது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மக்களிடம் கணிப்பு எடுக்கப்போகின்றோம் என்று ஒரு புறுடா செய்தியை விட்டு நலுவப் பாக்கின்றார்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான கலாச்சார சீரழிவை நோககிகச் சென்றுக்கொண்டிருக்கிறது. என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் இன்று விபச்சாரம் , குடிப்பழக்கம் என்பன பாடசாலை மாணவர்களை ஆட்டிப்படைக்கின்றன.

அதைவிட மிகவும் மோசமாக பாடசாலை மாணவிகளின் கருக்கலைப்பு நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தமிழர்களின் உரிமையை வென்று எடுக்கின்றோம் என்று சும்மா இருக்காமல் நாளைய நமது தமிழ் சமூகம் சின்னபின்னமாகிப்போய்விடாமல் காக்க துடிப்பான இன்னொரு இளைய தமிழ்த் தலைமை கட்டாயம் தேவை.

Wednesday, December 9, 2009

பரதநாட்டியம் என்பது ஒரு யாத்திரை ரமா வைத்தியநாதன்



பாவங்களின் நாயகியா? இல்லை தச அவதாரங்களின் நாயகியா? அத்தனைக்கும் சொந்தக்காரரான நாட்டியத்தாரகை ரமா வைத்தியநாதன். இவர் கடந்த 20 வருடங்களாக பரத நாட்டிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவரை இசை உலகத்திற்காக நான் சந்தித்தபோது, அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விடயங்கள்......


*உங்களுக்கு பரதநாட்டியம் கற்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?
எல்லோரும் டாக்டர், எஞ்சினியர், வக்கீலாக வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றார்கள். அதுபோல நானும் பரதநாட்டியத்தில் சிறந்தவளாக திகழ வேண்டும் என்று ஆறாவது வயதில் இருந்தே பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டேன். நாட்டியத்தை யாமினி கிருஷ்ணமூர்த்தியிடம் கற்றுக்கொண்டேன்.


*பரதநாட்டியத் துறைக்கு நீங்கள் வந்து 20 வருடங்களாகின்றன. உங்களுக்கு அது முழுத் திருப்பதியைத் தருகின்றதா?
பரதநாட்டியம் என்பது ஒரு யாத்திரை. அந்த யாத்திரையில் ஒரு இலக்கு இருக்கு. அந்த இலக்கை அடைய இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் இப்பொழுது அரைவாசி தூரத்தைத்தான் தாண்டியிருக்கின்றேன். இன்னும் நீண்ட தூரப் பயணம் இருக்கின்றது.

*உங்களுக்குள் ஒரு தனித்துவமான அடையாளத்தை நீங்கள் எவ்வாறு ஏற்படுத்திக்கொண்டீர்கள்?
பரதநாட்டியத்தின் அடிப்படையை மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு உரிய பாணியை நான் உருவாக்கிக் கொண்டதால்தான் என்னை இன்று தனித்துக் காட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எனது கடுமையான உழைப்பும் பரதநாட்டியத்தை நான் ஆத்மார்த்தமாக கற்றுக்கொண்டதும் தான் காரணம். எனதுகுடும்பத்தினரது ஒத்துழைப்பும்தான் என்னை இன்று இந்த இடத்திற்குகொண்டு வந்திருக்கின்றது.


*அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உங்களது நிகழ்ச்சி
பற்றி............?

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி பத்திரிகையின் ஏற்பாட்டில், இந்தியகலாசார நிலையத்தின் அனுசரணையுடன் என்னை இங்கு அழைத்திருந்தார்கள்.
உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. சுமார் 4000 மக்கள் வரை வந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்திருக்கின்றார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
நாம் சாந்தமாகக் கொடுக்கும் பொழுது மக்களின் மனங்களும் நிறைவடைகின்றன. நமக்கு அதில் திருப்தியும் கிடைக்கும்.

*வெளிநாடுகள் பலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றீர்கள்.
உங்கள் பரதநாட்டியத்திற்குக் கிடைத்த வரவேற்பு எப்படி
இருக்கின்றது?

இந்திய அரசின் கலாசார உறவுகள் அமைப்பின் அனுசரணையுடன் ஜப் பான், மெக்சிக்கோ, பனாமா, கொலம்பியா, அமெரிக்கா, கௌதமாலா, வெனிசுலா, ரஷ்யா போன்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி
வருகின்றேன். கூடுதலாக அங்குள்ள தமிழ் மாணவர்கள் பரதநாட்டியத்தை மிகவும் விரும்பிப் படிக்கின்றார்கள். அரங்கேற்றங்களும் செய்கின்றார்கள். அங்கு நிகழ்ச்சிகளை நடத்தும்போது
எனக்கு மிகவும் வரவேற்புக்கிடைக்கின்றது.

*உங்களுக்கு கிடைத்த விருதுகள்...?
இலங்கை அரசின் கலாசார நிலையத்தால் 1998 இல் "பரத ரத்னா' விருது, "ஜய ஜய கங்கை' நிகழ்வுக்காக 1992 இல் இந்திய அரசாங்க கலாசார நிலையத்தினால் சான்றிதழ், அகில இந்திய தேசிய
ஒற்றுமைக்கான தேசிய திறனாற்றல் விருது, 2001 ஏப்ரல் மாதத்தின் அதிசிறந்த நடனக் கலை ஞர், சென்னை மியூஸிக் அகடமியின் "அதிசிறந்த நடனத் தாரகை' விருது, சென்னை ஸ்ரீ ராகம்
நுண்கலை நிலைய "பாலசரஸ்வதி' விருது, 2001இல் சென்னை கார்த்திக் நுண்கலை நிலைய "நடன மாமணி' விருது போன்ற விருதுகள்கிடைத்துள்ளன. ஒவ்வொரு விருது கிடைக்கும் பொழுதும் புதுமையாக
ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது.

Wednesday, December 2, 2009

காதலின் பிரிவுகள்



காதலின் வலிகளையும் காதலின் பிரிவுகளையும் எத்தனைகாலங்கலாக நாம் மறைத்து வைத்திருந்தாலும் அந்த ரணங்களை மீட்டும் போது மனதில் ஒரு வலி ஏற்படும்.. அந்த வலி சுமையாக இருந்தது..


இப்போது மீட்டும்போது சுகமாக இருக்கின்றது.
காதல்... நாம் விரும்பும் பெண்ணை விட நம்மை விரும்பும் பெண்ணை நாம் ஏற்றுக்கொண்டால் அந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்..


(இது எங்கேயோ படத்தில கேட்டமாதிரி என்று நினைக்கின்றீர்கள் அதுசரிதான்)


நாம் ஒரு பெண்ணை விரும்பினால் அந்த பெண் நம்மளை விரும்புகிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு உடனேயே நீங்கள் அந்த பெண்ணிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள் அதற்கு பதில் நல்லதோ ?கேட்டதோ? அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


அதைவிடுத்து ஒரு பெண்ணுடன் நீங்கள் பழகுகின்றீர்கள் அதை நட்பா? காதலா? என்று முதலில் நீங்கள் உங்கள் மனதில் தீர்மானித்துக்கொள்ளுங்கள் நட்பாக பழகிவிட்டு திடீர் என்று காதலை நீங்கள் வெளிப்படுத்தும்போது அது உங்கள் மீதான வெறுப்பாகவே இருக்கும்.


அப்படியான காதலை ஒரு போதும் பெண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


அப்படி ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் முயற்சி திருவினையாக்கும் என்று பஞ்டயலொக் எல்லாம் பேசி மீண்டும் மீண்டும் உங்கள் காதலை தெரியப்படுத்துவதற்கு நீங்கள் நல்லவன் போல் காட்ட முனைவதும் சமூகத்தில் உள்ள கெட்டவர்களை விட நான் நல்லவன் என்று தெரியப்படுத்துவதும்.


அது உங்கள் மீதான வெறுப்பையே ஏற்படுத்தும். நீங்கள் மற்றவர்களுடன் உங்களை உயர்த்திக் காட்டுவதற்கு அதற்கு உங்களுக்கு தகுதியில்லை மற்றவர்கள்தான் நீங்கள் நல்லவர் என்று சொல்லவேண்டும்.


காதலியுங்கள் அது தப்பே இல்லை.. இருவரும் காதலித்து திருமணத்தில் சேரமுடியாததுதான் காதல் தோல்வி.
அதைவிடுத்து..


ஒருதலையாக காதலித்து அது கிடைக்கவில்லை என்றால் பைத்தியம் பிடித்ததுபோல் அலைவதும். கிடைக்காத அந்த பெண்ணுக்கு துரோகி என்ற பட்டமும் கொடுக்கின்றதும் உங்களது இயலாத்தன்மையைத்தான் காட்டுகின்றது.


காதலின் வலி ஒரு மனிதனை நரகத்திற்கு தள்ளிவடும்... அதை உணர்ந்து செயற்படவேண்டும்.


(எங்கங்க கேட்கின்றாங்கள் பட்டுத்தான் புரியவேண்டும் என்றால் அந்தக் கடவுளால் கூட இவர்களைத்திருத்த முடியாதே)


அந்தக் காலத்து காதலை விட இந்தக்காலத்தில் ஆண் பெண் நட்பு நன்கு ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றது.
நட்பு கத்தி முனையில் நடப்பதுபோன்றதுதான். கொஞ்சம் சரிந்தால் காதலாகிவிடும்.
எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவரோ...
ஆயிரம் சேது படம் வந்தாலும் காதலையும் தோல்விகளையும் திருத்தவே முடியாது.


காய்ச்சலும் தடிமனும் தனக்கு வரும்போதுதான் அதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். இல்லையேல் காய்ச்சாலா என்று எள்ளிநகையாடிக்கொண்டிருப்பார்கள்.


(இது பாகம் 1) இன்னும் தொடரும்...




நீ நல்லவன்


Wednesday, November 25, 2009

இன்று பெண்கள் வன்முறைக்கு எதிரான நாள்


உலகில் எந்தவொரு வன்முறைகளும் பெண்களுக்கு எதிராகவே நடத்தப்படுகின்றன.
(ஏன் ஆண்களுக்கு எதிராக நடத்தப்பவிலலையா என்று முணு முணுக்க வேண்டாம்)
இன்றைய உலக மாற்றமும் கலாச்சார சீரழிவுகளும் நவீன நாகரிகத்தின் மாற்றமும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தோற்றுவிக்கின்றன.
பெண்கள் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இன்று கூடுதலாக காணப்படடாலும் வன்முறையாளர்கள் ஏன் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே...இதற்கு பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் .இல்லை பெண்களை அடக்கி ஆழ்கின்றனர்.
வீட்டு வேலைகளுக்கு பெண்கைள அமர்த்தி அவர்களை பாலியல் இம்மைகளுக்கு உட்படுத்துதல்.
சில பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் இம்மைச்சுக் உட்படுத்துதல்.
உயர் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களும் இவ்வாறான இம்சைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இம்சைக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் ஒரு சிலரே தாங்கள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.
ஏன் மற்றவர்கள் சொல்வதில்லை.
குடும்ப மானம்
குடும்பல நலன்
வாழ்வதற்கு பணம்
வேலை போய்விடுமோ என்ற கவலையின் காரணமாக தாம் அனுபவிக்கும் காஷ்டங்களை வெளியில் சொல்வது இல்லை. இதை ஆண் வர்க்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் மீதான வன்முறையாளர்களாக மாறி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆண்வர்க்கம் பெண்கள் மீதான வள்முறைகளை மேற்கொள்ளும்பொழுது இதற்கு இன்னொரு பெண் உடந்தையாகவே இருக்கின்றாள் என்பது மிகவும் வெட்கக்கேடான விடயம்.
மாமியார் மருமகள் சண்டை
மற்றும் அலுவலகங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கின்றனர்.
இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருப்பது என்பதே அரிதான விடயம் அப்படி அரிதாக இருந்தாலும் அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைசொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
அதை ஆண்வர்க்கம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு பெண்ணைவைத்துக்கொண்டே மற்றைய பெண்ணை காய்நகர்த்துவார்கள்.ஏன் பெண்கள் மீதான வள்முறைகளை பெண்களே தீர்மானித்துக்கொள்கின்றனர் என்பது மிகவும் வருந்தத் தக்கதும் வேட்கத்தக்கதுமா ஒரு விடயம்.

Wednesday, November 11, 2009

நவம்பர் 12 நிகழ்வுகள்

1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.
1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.
1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1938 - மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.
1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.
1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1982 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
1994 - இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
2001 - நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

Friday, October 9, 2009

தலையில் மண்ணை கொட்டிய சூர்யா..



புவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது.
பத்திரிகைக்காயாளர்களினால் தான் இந்த நடிகை நடிகர்கள் வளர்ந்திருக்கின்றார்கள்.
இன்று நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக மதிப்பதற்கு பத்திரிகைகள் அவர்களுக்கு கொடுத்த ஆதரவுதான் காரணம். அதனால்தான் அவர்கள் ரசிகர்கர்களது மனங்களில் இடம்பிடிக்கவும் செய்திருக்கின்றார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு காட்டாயம் இப்படியான ஒரு எதிர்ப்பு வந்தது நல்லது என்றுதான் சொல்லலாம்.

நடிகர்களை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருத்த்தியவர்கள் பத்திரிகையாளர்கள்.
இன்று சூர்யா நல்ல நிலைக்கு வருவதற்கு அவரது உழைப்பு ஒரு காரணமாகா இருக்கலாம். அந்த உழைப்பை அங்கீகரித்தவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதை சூர்யா மறந்துவிட்டார்போல.
தொடர் வெற்றிகள் என்பது ஒருவனுக்கு தலைகணத்தை ஏற்படுத்தும் அது சூர்யாவுக்கு மிகவும் பொறுந்தும்.

ரஜினி கூட பேசுகையில் பத்திரிகையாளர்ளை மதித்துத்தான் பேசினார்.
அவர் இருக்கும் உச்சத்துக்கு பத்திரிகைகள்தான் காரணம் என்று நன்கு புரிந்தவர்.

நடிகைகள் ஏதோ பத்தினிகள் மாதிரி இவ்வளவு முழக்கமும் போராட்டமும்.
நடிகைகள் விபச்சாரம் செய்யவில்லை என்று சத்தியம் செய்யட்டும் பார்ப்பம்.
வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி என்று செய்து இலட்சக்கணக்கில் விபச்சாரம் செய்யும் நடிகைகளின் பட்டியல்கள் கூட பத்திரிகையாளர்களிடம் இருக்கின்றது.

சூர்யா ஒரு படிமேல் போய் பத்திரிகையாளர்களை ரஸ்கல்ஸ் என்று திட்டியிருக்கின்றார் என்றால்.. அவருக்கு கோபம் வருவது நியாயம்தான்.
ஆனால் நடிகைகள் விபச்சாரம் செய்யவில்லை என்று சூர்யா சொல்லட்டும்.
விவேக் படங்களில் கூட இரட்டை அர்த்த வசனங்கள் பேசியே காமக்கூத்தடிக்கும் நடிகர் இவருக்கு என்ன தைரியம் இருக்கு பத்திரிகையாளர்களின் குடும்பங்களை விமர்சிக்க...
நீயே.. வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகளில் குடியும் குட்டியுமாக இருக்கின்றது தெரியாதுபோல பேசவந்திட்டார் விபச்சாரிகளுக்கு வாக்காளத்து வேண்டி.

சரத்குமார்.. இவர் ரொம்ப நல்லவராக்கம்...
ஷீலா தொடங்கி நக்மா அபிராமி ராதிகா என்று கூத்தடித்தவர் ஏதோ நடிகர் சங்கத்தலைவராக வந்தவுடன் எதற்கும் போராட்டம் நடத்துகின்றார்.

விஜயகுமார் என்ற பெரிய கொம்பனா?
குடும்பத்தையே வைத்து கலைச்சேவை செய்கின்றவர் மீனவிடம் கேட்டால் இவரது வண்டவாளங்கள் தண்ட வாளங்கள் ஏறும்.

குற்றம் உள்ள நெஞ்சங்கள் குறுகுறுக்கத்தான் செய்யும் அந்த யதார்த்தத்தை கோடம்பாக்கம் நிரூபித்துவிட்டது.

Monday, October 5, 2009

வேட்டைக்காரன் விமர்சனம்

விஜய் அனுஷ்கா மற்றும் வடிவேல் இணைந்து நடித்து வந்திருக்கின்றது. இந்த வேட்டைக்காரன் இயக்குநர் இன்னொரு பேரரசு என்று மட்டும் தெரிகின்றது படத்தைப் பார்க்கும்போது.தீபாவளிக்கு விஜய்க்கு இந்தப் படம் கட்டாயம் தோல்வியைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பாக வந்திருக்கின்றது.வேட்டைக்காரன் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த முழுநேரக் கமெடித்திரைப்படம்.நீங்கள் ரசிப்பதற்காகவே வேட்டைகரனை இங்கு இணைத்துள்ளேன்
http://www.youtube.com/watch?v=xscTV_c2zo8
நீங்கள் பார்த்து முடிவு பண்ணுங்கள் வேட்டைக்காரன் வசூலை குவிப்பான இல்லையா என்று படத்திலே பஞ்சு டயலோக் இருக்கலாம் ஆனால் படமே பஞ்சு டயலோக்காக இருந்து படம் பப்படம்தான்.விஜய்க்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று தெரியவில்லை.விஜய்க்குப் பின்னால் வந்த சூர்யா எவ்வளவு முன்னேறிப் போய்கொண்டிருக்கின்றார். என்பதை கூட விஜய் கவனிக்காமல்.ஒரே மாதிரியான படங்களில் இனியும் தொடர்ந்து நடிப்பார் என்றால் ரசிகர்கள் நாமம் போட்டு அனுபுவார்கள் இது கூட விஜய்கு புரியவில்லையோ.

Tuesday, September 29, 2009

சினிமாவில் கமல் என்பதை விட சினிமாவே கமல்

தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரம் ஏன் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். கமல் என்னும் கமல்ஹாசனை.

கமல் சினிமாவில் பிரவேசித்து 50 ஆண்டுகள் நிøறைவு பெறுகின்றது.... ஒரு தனிமனிதனாக தமிழ் சினிமாவை தனது தோளில் வேதனைகளையும் கஷ்டங்களையும் சுகங்களையும் சேர்த்து சுமந்து வருகின்ற ஒரு அற்புதக்கலைஞன்.

சினிமாவில் கமல் என்பதை விட சினிமாவே கமல் என்ற நிலை. சுவாசிக்கும் மூச்சுத்தொடங்கி உடலில் ஓடுகின்ற இரத்தம் வரைக்கும் கமலிடம் சினிமாதான்.

இந்த 50 நெடிய வருடங்களில் தனது நடிப்பு வாழ்க்கையில் கமல் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் ஏராளம். அவரது குறிப்பிடத்தக்க சில படங்கள் வெற்றியை ஈட்ட முடியாமல் போனாலும் உலக சினிமா ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. அதை பண ரீதியான வசூலுக்கும் மேலாக மதித்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர் கமல்.

குறிப்பாக ஹேராம் படத்தின் தோல்வி அவரைப் பெரிதும் பாதித்தது. சிம்பனி இசை, சிறந்த நடிப்பு, சர்வதேச தரத்திலான இய க்கம் எல்லாமிருந்தும் இந்தப் படத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

('இந்தப் படம் தோற்றதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் இந்த வருத்தத்தைத் தந்ததற்காக நமது ரசிகர்கள் நிச்சயம் ஒருநாள் வருந்துவார்கள்!' கமல்).

முதல்வர் கலைஞர் வாயால் கலைஞானி எனப் பாராட்டப்பட்டவர் கமல்.
புதுமைகளை விரும்பி ஏற்பவர். திரைத் தொழில் நுட்பத்தின் அத்தனை முதல் முயற்சிகளையும் ஆராய்ந்து அதை அறிமுகப்படுத்தவும் தயங்காதவர்.
சினிமா சார்நத கமலை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் சினிமா தவிர்ந்த தனிப்பட்ட வாழ்க்கை கமலை எத்தனை பேருக்குப்பிடிக்கும் என்பது குறைவுதான்.
அதற்கு கமல் எனும் மனிதன் தன்னையும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய ஏன் பேசுகின்ற மனிதன் அதனால் தான் கமலை சுற்றி சர்ச்சைகளும் வந்துகொண்டிருக்கின்றது.

தெளிந்த நீரோடையான கமலிடம் தெளிவான வாதங்களை நாம் அவரது உரைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
(திருமணம் என்பது மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த தான் செய்துகொண்ட ஒரு முட்டாள்தனமான காரியம் என்றும் தனக்கு விரும்பிய பெண்ணுடன் வாழ்வதற்கு திருமணத்தை தான் பயன்படுத்தியதாகவும் கமல் அண்மையில் தெரிவித்திருந்தார்.)
அதற்கு சர்சைகள் கிளம்பின... அதற்கு கமல் சொன்ன பதில் இது எனது தனிப்பட்ட கருத்த கமல் எனும் மனிதனின் கருத்து என்று தெரிவித்தார்.

அந்த கருத்தை நாம் பார்த்தால் இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் பதவிகளில் உள்ளவர்கள் எத்தனை பெண்களுடன் இருக்கின்றார்கள் அதுவும் கள்ளத் தொடர்புகள் மூலம்.

சமூகத்தினால் இதை எல்லாம் அங்கீகரிக்க முடிகின்றது.
ஏன் கமல் கூட சொல்லியிருந்தார் விவாகரத்துசட்டங்களும் விவாகரத்தும் ஏன்வருகின்றது. நமது முன்னோடிகளாலேயே இது ஏற்பட்டிருக்கின்றது. அப்போ பிழைகள் செய்தது சட்டமா? இல்லை சமுதாயமா? ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் வாழ்கின்றான் என்பதை இந்த சமுதாயம் ஏன் அங்கீகரிக்கின்றது.
என்னட கமலை பற்றி பதியப்போய் வேற பாதைய மறுகின்றது என்று நினைக்க வேண்டாம் எல்லாம் இந்த சமூதாயத்தின் மீது வருகின்ற கோபங்கள்தான்.

கமல் எத்தனை படங்களில் நடித்தான் என்பதை பார்க்காது எத்தனை பெண்களுடன் இருந்தான் என்பதைத்தான் பார்க்கும் இந்த சமூகம்.
கமல் சிறப்பாக நடித்துவிட்டார் என்று தலைப்புச் செய்திகள் போடாத நாளிதழ்கள் கூட தங்களது வியாபாரத்திற்காக கமல் விவாகரத்தை மட்டும் பெரிது படுத்திப்போடுகின்றன. இதை இந்த சமூகம் ஏன் அங்கீரிக்கின்றது?

விவாகரத்துக்களும் நடிகர்களின் அந்தரங்கள வாழ்க்கையையும் சுவைபட எழுதும் எழுத்துகள் ஏன் அவனது திறமைகளை அங்கீகரிப்பதில்லை?
உன்னைப் போல் ஒருவனும் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் கோபங்கள் ஏன் அவர்கள் கோபங்களை அடக்குகின்றார்கள் என்பது புரியவில்லை.

கமலை அரசியலுக்கு அழைக்கின்றார்கள் ஏன்? கமலது புகழை பயன்படுத்திக்கொள்ளத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஒரு நல்ல மனிதனால் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை கமல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

யாருக்கும் அடிபணியாத குணம்
தனது திறமையில் நம்பிக்கை உள்ள தன்மை
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நன்கு உணர்ந்தவர் என்பதினால்தான் கமல் அரசியலை வெறுகின்றார்.
அரசியலில் கமல் நுழைந்தால் கோபங்களும் சர்ச்சைகளும் புதிய அரசியல் நோக்கங்களையும் இந்த தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளாது.

அரைத்தமாவை அரைப்பதுதானே தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவிடயம்.
தி.மு.கா.வும் அ.தி.மு.காவும் தான் தொடர்ந்து ஆட்சியில் வரலாம் அவர்கள்தான் அரைத்தமாவை அரைத்துக் கொடுக்கக்கூடியவர்கள்.

Friday, September 4, 2009

விஜய்க்கு அரசியல் சரிவருமா?

விஜய்க்கு அரசியல் சரிவருமா? சரிவராதா என்பதுதான் இன்றைய கேள்வி எல்லோர் மனதிலும்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கி அதில் வெற்றி தோல்வி காண்பது என்பதும் சர்வசாதாரமாகி விட்ட நிலையில்.... மூன்றாவது தலைமுறை நட்சத்திரமான விஜய் அரசியலில் ஈடுபட இருக்கின்றார் . அதன் முதற்கட்டமாக ராகுல் காந்தியுடனான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் தனித்து போட்டியிட்டால் எத்தனை வீதமானவர்கள் அவருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்?
இதற்கு பழைய உதாரணங்கள் எதற்கு நமக்கு அண்மைய உதாரணமான சிரஞ்சிவியையே எடுத்துக் கொள்ளலாம்.
விஜயகாந்த் அரசியலில் இறங்க முன்பு அவரின் சினிமா எவ்வாறன ஒரு உயரமான இடத்தில் இருந்தார் என்பதும் அவர் அரசியலில் இறங்கிய பின்பு அவரின் படங்கள் தோற்பதற்கும் என்ன காரணங்கள்?
ஏன் தோற்கின்றன என்பதை அந்தப் படங்களை எடுக்க விடாமல் எவ்வளவு சதிவேலைகள் நடந்தன. நடக்கின்றன. விஜயகாந்த் கட்டிய திருமண மண்டபத்தைக்கூட இடித்தார்கள். இன்னும் எவ்வளவோ சோத்துக்களுக்குப் பிரச்சினை அத்தனையையும் சந்திப்பதற்கு விஜய் ரெடியா.
அரசியலில் இறங்கப்போகின்றார் என்றவுடன் எத்தனை தயாரிப்பாளர்கள் பின்வாங்குகின்றார்கள். இவர்களை வைத்து படம் எடுப்பதை விட சும்மாவே இருந்தால் நன்மை என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள்.
சினிமாவே வேண்டாம் அரசியலில் மட்டும் முழு மூச்சாகவே இறங்கவேண்டும் அதை செய்வாரா விஜய்?
ஒரு கையில் அரசியல் மறுகையில் சீனிமா என்பது சாத்தியப்பட்டுவராது?
ரஜனி ஏன் அரசியலில் இறங்கவில்லை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல மதிப்பும் நல்ல நட்பும்கொண்டவர்.
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.
அந்தச் சாக்கடையில் முழ்குவது என்பது ரஜனிக்கு சரிப்பட்டுவராத ஒன்று மக்களுக்கு தேவையானதை ஒரு அரசியல் வாதியாக இல்லாமல் ஒரு சமூக சேவகனாககொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
ரஜனி வழியைப் பின்பற்றும் விஜய் அரசியல் மட்டும் ஏன் அவர் வழியைப் பின்பற்ற வில்லை. தனிக்கட்சி தொடங்கினால் அனைத்துக்கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்பு வரும் என்பதால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என்றால் தி.மு.காவை எதிர்க்காமல் செயற்பாடமல் இருக்கலாம். ஒரு கட்சியுடன் இணைந்து செயற்பட்டால் வரும் பிரச்சினைகளை சமாளிக்கலாம் என்று எல்லாம் எண்ணித்தான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகி“ன்றாரா தெரியவில்லை.
அப்படி விஜய் அரசியலில் நுழைந்தால். முதலமைச்சராகவே வரமுடியாது. தி.மு.காவில் இப்பொழுது ஸ்டாலினின் கை ஓங்கியிருக்கின்றது. அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.
விஜய்க்கும் தி.மு.காவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்கின்றது அதை விஜய் பகைத்துக்கொள்ளமாட்டார்.
சிவாஜினால் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை அத்தனை ரசிகர் வட்டம் இருந்தும்.
ராமராஜன் அரசியலில் இறங்கி இன்று அவரின் நிலை என்ன?
சரத்குமார்?
கார்த்திக்?
ராதரவி?
எஸ்.வி.சேகர்?
என்று தொடர்கின்றது அந்த அரசியல் பட்டியல் .
விஜய் அரசியலில் குதிக்கப்போகின்றார் என்றவுடன் உலகத்தில் உள்ள தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். ஈழப்பிரச்சினைக்கு துணைபோன கட்சியுடன் கூடா என்று.
ஈழத்தமிழர்களின் உயிர்கள் பறிபோனதுக்கு கருணாநிதியும் உடந்தையாக இருந்திருக்கின்றார். அப்படி இருந்தும் தி.மு.கா. தேர்தலில் வெற்றி பெற்றதுதானே.
ஈழத்தமிழர் ஆதரவு தனி ஈழம்தான் என்று தெரிவித்த ஜெயலலிதாவின் நிலை என்ன?
தேர்தலில் தோல்வியே.
விஜயின் அரசியல் ஈழத்தைவைத்து தீர்மானிக்கக்கூடாது..
சாக்கடையில் முழ்குவது என்று தீர்மானித்த விஜயை ஆண்டவனால் கூட தடக்க முடியாதுஎன்பதே நிதர்சனம்.

Tuesday, August 25, 2009

பொக்கிஷம் காதலர்களுக்கு மட்டும்

சேரனின் கைவண்ணத்தில் வந்திருக்கும் 9 ஆவது படம். காதலை மையப்படுத்தி நீ எனக்கு எழுதிய கடிதங்களும் நான் உனக்கு எழுதிய கடிதங்களும் என்ற வாசகங்களுடன் வந்திருக்கின்றது பொக்கிஷம்.படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை ஏன் என்றால் அனைவரும் எழுதி விட்டார்கள்.
காதலின் சுகங்களும் காதலின் தவிப்புக்களும் காதலின் பிரிவுகளும் சேர்ந்து ஒரு வானவில்லா?
இல்லை வர்ணஜாலங்கலாக? என்று தெரியவில்லை அத்தனை அற்புதங்கள்.என்னடா இவன் சேரனுக்கு ஐஸ் வைக்கின்றான் என்று நினைக்க வேண்டாம்.
பேரரசு.... சக்தி சிதம்பரம்... ......... என்று அடுக்கிக்கொண்டு போகலாம் கதையே இல்லாமல் படம் இயக்கும் இயக்குநர்கள் மத்தியில்... சேரனின் படம் விதிவிலக்கு.
பத்மப்பிரியாவின் கண்களினாலே காதலை உணர்த்திய விதம் சூப்பர்.
அதே காதல் பிரியும்போது பார்ப்பவர்களின் கண்ணகளில் கசியும் கண்ணீர்.
உள் உணர்வுகளை காட்டுவதில் சேரனின் முத்திரை பதிகின்றது.
தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவது காதல்.
பழகுவது சுலபம் விளத்துவது கஷ்டம் போன்ற வசனங்கள் நச்சென்று இருக்கின்றது.
மத ஒற்றுமையை காதலுடன் சேர்ந்துகொடுத்த விதம் நல்லா இருக்கின்றது.
பத்மப்ரியாவின் காதாப்பாத்திரம் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளுது.
சபேஸ் முரளியின் இசையில் உருவான பாடல்கள் மூன்று ரசிக்கும்படியாக இருக்கின்றது அதில் நீ நிலா என்று தொடங்கும் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.
ஆரம்பக்காட்சிகளின் பின்னணியை கொஞ்சம் கவனித்திருந்தால் நல்லாயிருக்கும்.. வைத்தியசாலைக் காட்சிகளின் பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
1970 தொடங்குகின்ற கதை என்பதால் அதற்கேற்றால் போல் அனைத்துவிடயங்களையும் கவனித்து செய்திருக்கின்றார் சேரன்.
இளவரசு.. மற்றும் இஸ்லாமிய காதாபத்திரங்களில் நடித்தவர்கள் தமது பங்கை நிறைவாகச் செய்திருக்கின்றார்கள்.
விஜய் அஜித் போன்ற நாயகர்கள் கட்டாயம் சேரன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு நல்ல இயக்குநரை தமிழ் சினிமா தந்திருக்கின்றது. அதை நாம்தான் பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டும்.
சேரனின் இந்தப் பொக்கிஷம் காதலர்களுக்கு மட்டும்.

Friday, July 31, 2009

கம்பன் செய்த வம்பும் கருணாநிதி செய்கின்ற வம்பும்

இராமாயண காலத்தில் இருந்தே தமிழர்களை அடக்கிக்கி ஆளும் வட இந்தியக் கொள்கைவாதம்.வால்மீகியில் ஆரம்பித்து இன்றைய இந்து ராம் வரைக்கும் தமிழர்களின் தலைவனை கொடுரமான அரக்கர்கள் என்று வர்ணித்துக் கொண்டு வந்திருக் கின்றனர்.அன்று இராவணனை அரக்கன் என்று வர்ணித்தார் வால்மீகி.
கம்பன் ஏன் தமிழில் மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை.அன்று வடஇந்தியாவின் கொள்கைகளை தென்னிந்தியாவிற்கு மாற்றினார் கம்பர் இன்று சோனியா காந்தியின் கொள்கையினை தென்னிந்தியாவுக்கு மாற்றுகிறார் கருணாநிதி.
கம்பன் செய்த வம்பும் கருணாநிதி செய்கின்ற வம்பும் இன்று ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது. இராமாயணத்தில் விபூஸனன் எப்படி இராமரிடம் எட்டபன் போல் போய் ஒட்டிக்கொண்டானோ அதேபோல் இன்று எத்தனை தமிழ் அரசியல் வாதிகள் இந்தியாவின் கதையை நம்பி ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள் அதனால் அன்று இராவணனை இழந்தது தமிழ் இனம் இன்று பிரபாகரனை இழந்து நிற்கின்றது.
அதுசரி ஒரு கெட்டவனை இராமாயணத்தில் விபூசனன் நல்லன் என்று வாரலாறு நம்பவைத்துள்ளது.அதுபோல் பிரபாகரன் என்ற நல்ல வீரனைப்பற்றி வடஇந்திய கொள்கைவாதம் கேட்டவன் என்று வர்ணித்து அதை வரலாறாகவும் மாற்றுவதற்கு அது செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
அன்று ஒரு சீதையை கடத்தியதற்காக.... முழு இலங்கையையே அழித்தது இந்தியா இன்று ஒரு ராஜீவ்காந்திக்குப் பதிலாக முழுத் தமிழினத்தையே அழித்தொழித்திருக்கின்றது.

முன்பு வரதராஜா பெருமாளை தனது தேவைகளுக்காக பயன்படுத்திய இந்தியா அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தது.
இன்று அவரின் நிலைய என்ன???????
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டமாதிரிஇந்தியாவை நம்பி தமிழர்களை தமிழர்களே அழிக்கின்றார்கள்.

Monday, July 13, 2009

மாற்றங்களும் மனிதமும்


மனிதனில் மாற்றங்கள் ஏற்படுவது என்பது இயற்கை அது அவர்கள் வளரும் சூழலைப்பொறுத்து அவர்கள் மாற்றம் அடைவார்கள் என்று சொல்லலாம் அதற்காக மாற்றங்கள் மனிதனைப் புரணப்படுத்தும் என்பது நம்பிக்கை.
நான் இப்படித்தான் வாழ்வேன் என்பது உண்மை நிஜயம்கட்டாயம் என்று வாழ்ந்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தமாவது கிடைக்கும்.நாம் எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் அதுவாகவே தீர்மானிக்கட்டும் என்றுவிடுவது நாம் வாழப் போகின்ற வாழ்க்கைக்கு ஒரு தடையாகவே இருக்கும்.
நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே சூழலில் இருந்து விட்டு ஒருவாரமோ அல்லது ஒரு மாதமோ வேறு ஒரு சூழலில் வாழ்ந்து பார்த்துவிட்டு வந்தீர்கள் என்றால் உங்களில் பல மாற்றங்கள் தென்படும். ஏன் உங்களைச் சுற்றி இருக்கின்றவர்களில் கூட பல மாற்றங்களை நீங்கள் காணலாம். நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவை இழந்து விட்டோம் எவ்வளவை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது புரியும். எது நிஜயம்எது போலி எது நம்பிக்கை எது வாழ்க்கை என்றெல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள மாற்றம் என்பது கட்டாயம் அவசியம்.
மாற்றங்கள் மனிதனினை சீர்படுத்தும் அவனை ஒரு நிலைப்படுத்தும் அவனது இலக்கை அடையக்கூடிய முறையைக் கற்றுக்கொடுக்கும்.

Friday, July 3, 2009

என்ன கொடுமை சரவணா.....

நீண்ட இடைவெளியின் பின் உங்களை சந்திக்கின்றேன் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது.

மக்கள் இனி சுதந்திரமாக வாழ்வார்கள்.. வாழ்கின்றனர் என்ற பசப்பு வார்த்தையை நானும் நம்பி ஒரு தடவை யாழ்ப்பாணம் சென்று வந்தேன்.. சென்று வந்தேன் என்பதை விட நொந்து வந்தேன் என்று தான் சொல்ல முடியும்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாம்? அப்படி என்றால் ஏன் அங்கிருந்து விமானத்தில் வரும் பொழுது பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

மக்கள் நடமாட்டம் இல்லாதஇராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் கட்டுவன் பகுதியில் முதலில் பயணிகள் பொதிகள் அனைத்தும் இராணுத்தினரால் பரிசோதனை செய்யப்பட்டு பின் மொப்ப நாயின் மூலம் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகின்றது.

பின் பயணப் பொதிகளை பயணிகளே தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்ற வேண்டும். சரி அவ்வளவுதான் சோதனை என்று பெரு மூச்சு விட்டுவிட்டு இருந்தேன்.

பெருமூச்சு விட்டு சில நிமிடங்களில் வேறு வாகனங்களில் ஏற்றப்பட்ட பயணிகள் பலாலி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இன்னொரு சோதனை நடவடிக்கை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கும் மொப்ப நாய்களிடம் மீண்டும் எமது பயண பொதிகள் சோதனை செய்யப்படுகின்றது. பின் பயண பொதிகளை இராணுவத்தினர் அக்குவேறு ஆணி வேறாக சோதனை செய்கின்றனர்.

சோதனை செய்த பின் வாகனத்தில் மீண்டும் பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்ற வேண்டும்.. இத்தனைக்கு ஒரு வழி போக்குவரத்திற்கு 11 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது..

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வருவது என்றால் விமானத்தில் வருவது என்ற பெயர் ஒழிய ஆனால் அங்கிருந்து கொழும்பு வருவதென்றால் எவ்வுளவு கஷ்டங்கள்.

இத்தனைக்கும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாம்?
என்ன கொடுமை சரவணா ?

Tuesday, June 9, 2009

கோபங்களும் புரிந்துணர்வுகளும்


எனக்கு கோபத்தைப் பற்றி பதிவு ஒன்று பதிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆவா.ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை இன்று கோபத்தைப் பற்றியும் புரிந்துணர்வு பற்றியும் கொஞ்சம் அலசலம் என்று நினைக்கின்றேன்.
கோபம் எத்தனை வகை என்று எல்லாம் எனக்கு அவ்வளவாக அறிந்துகொள்ளும் அளவிற்கு அறிவில்லை.
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
எதற்காக ஏற்படுகின்றது?
ஏற்படுவதற்கான காரணங்கள்... இவை பற்றியும் பார்த்தோமானால் காதலர்களின் கோபங்களை நான் பார்த்திருக்கின்றேன்.
நேரத்திற்கு வராவிட்டால் கோபம்
வேறுபெண்ணுடக் கதைத்தால் கோபம்
டெலிபோன் வெயிட்டிங்கில நின்றால் கோபம்
தினமும் அவளை நினைக்கா விட்டால் கோபம்
இவை எல்லாம் காதலர்களுக்குள் இடையில் ஏற்படும் சின்ன சின்ன கோபங்கள்..
இதை நாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் அவ்வாறு செய்துகொண்டு இருந்தோம் என்றால் அதுவே நமது வாழ்கையை வேரோடு புடுங்கி எறிந்துவிடும்.
காதலிக்கும் போது எந்தப் பெண்ணும் எந்த ஆணும் யாருடனும் பழகலாம் என்று விடுவார்கள். ஆனால் அதுவே திருமணம் ஆனா பின்னர் அவ்வாறு நடப்பதற்கு இருவரும் அனுமதிப்பதில்லை அவ்வாறுநடந்தால் குடும்பத்தில் பிரிவுகள்தான் நிகழம் அது ஆணின் தப்பா பெண்ணின் தப்பா என்று சொல்ல முடியாது அது சமூகத்தின் தப்பாகவே இருக்கின்றது.
அந்தக் கோபங்களை நாம் எப்படி புரிந்துணர்வு மூலம் புரிய வைக்கலாம் என்றால் வெளிப்படையாக இருங்கள் எல்லாரிடமும் இல்லாவிட்டாலும் உங்களை நம்புபவர்கள் மீதும் நீங்கள் நம்புபவர்கள் மீதும் நீங்கள் தாராளமாக வெளிப்படையாக இருக்கலாம்.
அவர்கள்தான் உங்களைப் புரிந்து வைத்தவர்களாக இருப்பார்கள்.ஏன் அவர்களிடமும் உங்களுக்கு கோபம் வராத என்று கேட்ககூடாது அவர்களிடமும் கோபம் வரும் ஆனால் எந்த சூழ்நிலையில் அவருக்குக் கோபம் வந்தது என்பதை புரிந்து வைத்திருந்தால் அந்த உறவுக்குள் எந்தப்பிளவும் ஏன் எந்த விரிசலும் ஏற்படாது.
அப்படியிருந்தும் அவர்களுக்கிடையில் இடைவெளிகள் தோன்றும் என்றால் அவர்களிடையே புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்மையுமே காரணம்.
நீங்கள் ஒருவர் மீது கோபப்படும்போது அது அவர்களது உள்ளத்தை சுடாதவரைக்கும் நல்லது. அதை மிறி அது அவர்களது உள்ளத்தை சுட்டுவிட்டால்.
சுட்டாலும் மறக்காது நெஞ்சம் உயிர் உள்ளவரை அதை அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்.
(கோபம் இன்னும் தொடரும்)

Wednesday, May 27, 2009

சதியினால் விதியை அறியாத பிரபா

30 வரு காலப் போராட்டம் சில நிமிடங்களில் அழிக்கப்பட்டனவா அழிக்கப்படவில்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.எமக்காக போராடிய தலைவர் எமக்காக வாழ்ந்த தலைவர் எப்பொழுதும் எம்மோடு வாழும் ஒரே தலைவன் இறந்து விட்டாரா இல்லை உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் குழம்பிப்போயிருக்கின்றார்கள்.
ஒரு சிலர் தலைவர் இறந்துவிட்டார் என்று அஞ்சலிகளையும் இன்னும் ஒரு சிலரோ அவர் இறக்கவில்லை என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
முதலில் அந்த வாதங்களை விடுங்கள்.... அடுத்தது நாம் என்ன செய்யவேண்டும். பிரபாகரன் இறந்தது உண்மைய õக இருந்தால் அவருக்கு உரிய அங்கீகாரத்தை நாம் கட்டாயம் வழங்க வேண்டும். அதை நாம் காலம் தாழ்த்தி கொடுத்து எந்த பிரயோசனமும் இல்லை எங்களுக்காக தனது மகனைக் கூட இழந்து தன்னுயிரையும் சொந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்ற வீரமகன்.
அந்த மகனுக்கு உலகம் என்ன கைமாறு செய்யப்போகின்றதோ தெரியவில்லை.சதி வலைகள் விதியை நிர்ணயித்திருக்கி ன்றதை அறியாத தலைவர்.நம்பிக் கழுத்தறுத்த நம்பியார்கள் மற்றும் நாராயண சாமிகள். சோனியாவின் இதயம் ஆனந்த்தில் துள்ளுகின்றதாம். ராகுல் காந்தியின் மனசில் பட்டாம் பூச்சி பறக்கின்றதாம்.
ராஜீவை கொன்ற புலிகளை ராகுல் அழித்திருப்பதாக சொன்னாலும் இனி அவர்கள் இனி மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.தமிழர்களின் தேசியத் தலைவரை தாம் வீழ்த்திவிட்டோம் என்ற இறுமாப்புவேறை.
ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத் தையும் அழிக்கும் செயலில் சோனியாவின் அரசாங்கம் இறங்கியிருந்து வெற்றி கண்டுவிட்டது என்று உளறிக்கொண்டிருக்கின்றது. அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும் விடுதலைப் புலிகள் ஒரு புற்றுநோய் போன்றவர்கள் .
கருணாநிதிக்கும் இந்தச் சதிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிகின்றது. பிரபாகரனின் மரணத்தை அடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் நாராயணன்.
ராஜிவ் காந்தி காலத்துக்கு முன்னையா காலங்களில் இருந்தே விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி செயற்பட்டவர் இந்த நாராயணன்.தனது பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்றவுடன் கூட்டணியில் இருந்து பிரிந்து வெளியில் இருந்து ஆதரவு செய்யப்போவதாக அறிவித்திருந்த கருணாநிதி.
ஈழப்பிரச்சினை விடயத்தில் மட்டும் கபடநாடகங்களை மேடை ஏற்றினார். கருணாநிதியினால் அன்று அரசாங்கம் கலைக்கப்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் 1 இலட்சம் தமிழ் மக்கள் இறந்திருக்கமாட்டார்கள்.உலகத் தமிழீனத்தின் தலைவன் என்கின்ற நிலைக்கு வரஇருந்த கருணாநிதி இன்று உலகத் தமிழினத்தின் துரோகியாகவே மாறிவிட்டார்.
புலிகள் இப்பொழுது ஆயுத்த ரீதியாக தோல்வி கண்டு உள்ளனர் என்பது நிதர்சனம். அதற்காக அவர்களது கட்டமைப்புகள் பிரபாகரனால் உருவாக்கப்பட்டவை அவை அவ்வாறே இயங்கும் என்று மட்டக்களப்பு அரசயில் துறைப்பொறுப்பாளர் ஜெயமோகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.புலிகள் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டி சிலர் பேசிவருகின்றார்கள் இப்படியானவர்களைப் பார்க்கும் பொழுது ஏன் தமிழனாகப் பிறந்தோம் என எண்ணத் தோன்றுகின்றது.பிரபாகரனின் மரணத்தினால் சுகம் காணப்போவது சிங்கள தேசம் அதை அறியதா தமிழன் வாய்ஜாலங்கள் செய்யாமல் இருந்தால் சரி..... இனி தமிழனுக்கு விடிவுகாலம் என்பது அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாததொன்று.....

Tuesday, May 26, 2009

வரலாறு படைத்த பிரபாகரன்


அருட்தந்தை ஜெகத் கஸ்பர்
மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது. இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.
(நன்றி நக்கீரன் இணையம்)

Friday, May 8, 2009

கைவிட்ட இந்தியா கை கொடுக்கும் அமெரிக்கா?

4 அரைக்கிலோ மீற்றர் 1 இலட்சம் மக்கள் என்ன செய்யப்போகுது உலகம்?இந்தக் கேள்வி இன்று ஈழமக்களிடம் மட்டும் மல்ல உலகத்தில் உள்ள அனைவரது கேள்வியாகவும் மாறியுள்ளது.

இந்தியா என்று சொல்வதை விட மத்திய அரசு தான் இவ்வளவு மக்கள் பலியாகக் காரணமாக இருக்கின்றது.

இலங்கை அரசு இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது இந்தியா ஆயுதங்களையும் இராணுவத்தையும் கொடுக்க முடியாது என்றால் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் எங்களுக்கு தரும் என்று மன்மோகன் அரசாங்கத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இந்தியாவின் உதவியையும் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் உதவியையும் பெற்று ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றது மஹிந்த அரசாங்கம்.

உலக வல்லரசுக்களுக்கே தண்ணீ காட்டிக்கொண்டிருக் கின்றது இலங்கை அரசு என்றால் அது அவ்வாறு செய்வதற்கு எத்தனை நாடுகள் பின்னணியில் இருக்கின்றன.

தமிழ் நாட்டின் அரசியலில் இல்லை இந்திய அரசியலையே தீர்மானிக்கின்ற சக்தியாக இன்று ஈழத்தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒபாமா அரசாங்கம் இலங்கைப்பிரச்சினை பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடல்களை நடத்திப்பார்த்தது.

ஆனால் இந்திய அரசு தமிழ் மக்களை அழிக்கின்ற இலங்கை அரசுக்கே சாதகமான கருத்துக்களைத் தெரிவித்தது. கிளாரிக்கிளிண்டன் பிரணாப்முகர்ஜி உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியும் பலன் கிடைக்கவிலø. ஜெயலலிதாவின் தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு என்று சொன்னது இன்று ஜெயலலிதாவுக்கான ஆதரவுக்குரல்கள் கூடியே காணப்படுகின்றது.

இதனால் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.கட்சி தோல்வி என்பதை அறிந்த கருணாநிதி வைத்தியசாலையில் சென்று படுப்பதும் தமிழீழம் தான் தீர்வு என்றும் சொல்வதும் தோல்வியின் பயம்தான்.

ஈழமக்களின் இன்றைய அவலக்குரல் அரசியல் வாதிகளுக்கு கேட்குதோ இல்லையோ மக்களிடம் நன்றாக சென்றடைந்துவிட்டது.ஈழமக்களின் பிரச்சனைபற்றி ராகுல் காந்தி ஒரு கருத்தையும் காங்கிரஸ் காரர் ஒரு கருத்தையும் வெளியிட்டுக்கொண்டிருக் ன்றனர்.
அ.தி.மு.காவுடன் கூட்டுக்கும் தயாராக இருக்கின்றது காங்கிரஸ். ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து போட்டியிடும் ஜெயலலிதா காங்கிரஸுடன் எப்படிக் கூட்டணி அமைக்க முடியும்? அப்படி அமைத்தால் ஈழத்தமிழனை வைத்து பிச்சை எடுக்கிறத்துக்கு சமம்.

பிரிட்டன் இன்று தமிழ் மக்களுக்காகவே பேசுகின்றது அப்படி எந்த நாடு பேசுகின்றதோ அந்த நாடு தீவிரவாதத்திற்கு துணைபுரியும் நாடு என்று பச்சை குத்துகின்றது இலங்கை அரசு.

நோர்வேயைத் தொடர்ந்து இப்பொழுது பிரிட்டனும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இனி அமெரிக்காவையும் அந்தப் பட்டியலில் இணைத்துவிடும் இலங்கை அரசு.இந்திய ஐ.ரி. தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியது அமெரிக்கா . அதைவிட ஐ.ரி. நிறுவனங்களை அமெரிக்காவில் அமைத்து அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்று ஒபாமா அறிவித்திருக்கின்றார்.

இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மாற்றத்தையும் கொண்டு வரலாம். இலங்கை அரசுக்கு உதவும் இந்தியாவின் நிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கின்றது.

ஒபமா எதனையும் மாற்று கோணத்தில் சிந்திக்கக்கூடியவர் அதனால்ததான் இலங்கை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் கலந்துரையாடல்கலை மேற்கொண்டார். ஆனால் இது தெரியாத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தங்களது நிலையில் மாற்றம் இலங்கை ஆசிய பிராந்தியத்தில் ஒரு தீவிரவாத இயக்கம் வளர்ச்சியடைகின்றது அதை முற்றாக அழிப்பதற்கே தாம் பயங்கரவாத யுத்தத்திற்கு உதவுவதாக அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தார்.

ஒபாமா என்ன இந்திய அரசியல் வாதிகள் மாதிரி அனைத்திற்கும் தலையாட்டிவிடுவாரா என்ன?இலங்கையில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றார் .

அதனால் தான் தனது இராஜதந்திர நகர்வுகளை மிகவும் கவனமாக கையாண்டுகொண்டிருக்கின்றார். அதன் முதல் கட்டமாகவே பெண்டகன் அண்மையில் செய்மதி மூலம் முல்லைத்தீவில் தமிழ் மக்களை இலங்கை அரசு விமானங்கள் மூலம் கொல்லப்படும் படங்களை ஐ.நாவுக்கு கொடுத்திருக்கின்றது.இதுதான் முதல் கட்டம் என்றும் இனி வரும் நாட்களில் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கபோகின்றது.

இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படப்போகின்றது என்றும் அமெரிக்கத் தவல்கள் தெரிவிக்கின்றன.தமிழனை அழிக்க செய்மதியை கொடுத்து உதவுது இந்தியா .6 கோடி தமிழ் மக்கள் உள்ள நாட்டில் தமிழனுக்காக இருப்பிடம் இல்லைப்போலும். ஒரு அமெரிக்கனுக்குப் புரிந்த விடயம் கூட இந்த அரசியல் வாதிகளுக்கு புரியவில்லை என்றால் இந்திய அரசியல் வாதிகள் பணத்திற்காகவும் பதவிக்காவும் தான் வாழ்கின்றனர் என்பது நிதர்சனம்.

இந்தக் கண்ணீருக்கு யார் பொறுப்பு

Friday, May 1, 2009

இது அரசியல் வாதிகளுக்கு மட்டும்



நம் நாட்டு தலைவர்கள் ஒபாமாவைப் பார்த்து திருந்துவார்களா? இல்லை ஒரு கூட்டம் வால்பிடித்துக்கொண்டிருக்குமா அவர்களைச் சுற்றி.















Sunday, April 26, 2009

தமிழீழம் தமிழனால் சாத்தியமா?

இந்தியாவின் தேர்தல் ஒரு புறம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் மறுபுறம் என்று இன்று காதுகளையும் மனங்களையும் காயப்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்கள் ஆயிரக்கணக்கு.


ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

(நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியாமல் வேலைப்பழு என்ன செய்யமுடியும் உங்களை ஏமாற்றக்கூடாதே. அரசியல் தலைவர்கள்தான் ஏமாற்றுவார்கள் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். தினமும் பதிவு இட வேண்டும் என்றுதான் நினைப்பேன் முடியாமல் போய்விடும். இந்தப் பதிவும் இரவு 2 மணியளவில்தான் பதியவேண்டிய சூழ்நிலை)

நேற்று ஒரு செய்தியைக் கேட்டு புல்லரித்துப் போனேன் ஒரு நிமிடம் எனது கையை நானே கிள்ளிப் பார்த்துவிட்டேன் என்றால் பாருங்களன்.

தனிஈழம்தான் தமிழர்களுக்குத் தீர்வு என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இவ்வளவு காலமும் உலகத் தமிழர்களின் தலைவன் என்று தன்னை பெருமையோடு கூறிக்கொண்டிருந்த கருணாநிதிக்குக் கூட இந்தச் செய்தி ஒரு இடியாகவேத்தான் இருக்கும்.

வைகோவை பொடா சட்டத்தில் உள்ளுக்குத் தள்ளியதும் இந்த ஜெயலலிதாதான் ஆனால் இன்று வைகோவுடன் கூட்டும் தனித் தமிழீழந்தான் தீர்வு என்றும் சொல்லியிருக்கின்றார் என்றால் அவரின் மனதில் ஏற்பட்ட மாற்றமா? இல்லை இதுவும் ஒரு தேர்தல் வியூகமா என்று தெரியவில்லை.

கருணாநிதியின் கபடநாடகங்கள் அரங்கேற்றப்பட்டு இன்று தோல்வியில் முடிந்து நிற்கின்றது. சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களும் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் இராணுவம் விடுகின்றது என்று கலைஞர் ரி.வி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது.

முன்பு சினிமாக்காரர்களின் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் யார் நேரடியாக ஒளிபரப்புவது என்ற போட்டியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்த கருணாநிதி அரசாங்கம் இன்று ஈழம் தொடர்பான செய்திகளை மூடி மறைக்கின்றது என்றால் சோனியாவுக்கு பயந்துதான் இவ்வளவும் செய்கின்றார் இந்த கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் சொன்னதுதான் உண்மை என்று தோன்றுகின்றது.


6 கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ் நாட்டில் ஒரு கோடி தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் ஈழப்பிரச்சினைக்கு எப்போதே தீர்வு கிடைத்திருக்கும்.ஆனால் 100 தமிழனுக்கு பிரச்சினை என்றால் ஒரு தமிழன்õதான் குரல் கொடுகின்றான்.

ஒரு ராஜீவ் காந்தியை கொண்டதற்காக ஒரு இனத்தையே அழிக்கின்றார் சோனியா காந்தி.
கர்நாடகத்தில் பிரச்சினையென்றால் முழுக்கர்நாடகமே கொந்தழிக்கின்றது.

சீக்கியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முழு சீக்கிய இனமுமே கலவரத்தில் ஈடுபடுகின்றது.


ஆனால் ஒரு தமிழனுக்கு பிரச்சினை என்றால்????????


அண்மையில் இலங்கை வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருந்த கருத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இந்தப் பிரச்சினையை கையாண்டிருந்தால் எப்போதே தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் இன்று ஒற்றுமையாக இருக்கின்றார்களா என்றுதெரியவில்லை.


தமது சுகபோக வாழ்க்கைக்கும் பணத்திற்குமாக தமிழன் இன்று விலைபோய்க்கொண்டுதான் இருக்கின்றான்.

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் என்றால் இன்று பிரபாகரனுக்கு எத்தனை எட்டப்பர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்தமாக போராட்டினால்தான் அந்த இனத்திற்கு விடுதலை கிடைக்கும்.

ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருபோதும் தமிழன் என்ற இனம் போராடாது அப்படி போராடினால் அந்த இனம் உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.

Monday, April 20, 2009

வெறுங்குடங்களின் கையில் பத்திரிகை

இலங்கையில் ஊடகத்துறை வருங்காலத்தில் ஏன் அடுத்த சந்ததியினருக்கு எப்படி பயனளிக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

அண்மையில் எனக்கு ஒரு பத்திரிகை நண்பருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்ன விடயங்கள் எனது மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது என்றுதான் சொல்லலாம்.

பத்திரிகைத்துறையில் நுழைவதற்காக கனவுடன் திரிபவர்கள் எத்தனை பேர்.... பாரதியர் தொடங்கி இன்று எஸ்.டி.சிவநாயகம் வரை எத்தனை பத்திரிகை ஜாம்பவான்கள் இருந்தார்கள்.

ஏன் இன்றும் எத்தனைபேர் தங்களது திறமைகளை இலைமறை காயாக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

(அது சரி உங்கட நண்பன் உங்களுக்கு சொன்னதை முதலில் சொல்லுங்கள் என்று திட்டுவது எனக்கு தெரிகின்றது)

முன்பெல்லாம் பத்திரிகையாளன் ஆவது என்றால் எழுத்துத்துறையில் ஆர்வமும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று இன்டர் நெட் பார்க்கத் தெரிந்தால் போதும். அதில் வருவதை அப்படியே எடுத்து பிரசுரிக்கின்றார்கள்.அப்படிப் பிரசுரிப்பவர்கள்தான் ஊடகவியலாளர்கள் என்றால், தனது எழுத்தாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லையாம்?ஒருவன் தனது முகவரியைத் தேடிக்கொள்ள முடியாத நிலை பத்திரிகை நிறுவனங்களில் உள்ளதாகவும், அப்படி அவர்கள் தாங்களாகவே தேடிக்கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் அந்தப் பத்திரிகை நிறுவனத்தில் குறைவாகவே இருக்கும்.
திறமைகளுக்கு முக்கியத்துவமா? இல்லை வால்பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவமா?நிறைகுடங்கள் தளம்பாது என்பது நிதர்சனம். ஆனால் வெறும்குடங்களாக இருப்பவர்களின் கையில் நாளை பத்திரிகை ஆசிரியர் பதவி கிடைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...