Tuesday, December 30, 2008

நடந்து வந்த பாதை

2008 எப்படியிருந்தது சுவடுகளின் நிழலா- சுமைகளின் சுமையா- துன்பங்களின் ரணங்களா- நிலவில் பனியா தெரியவில்லை.(என்னடா சாத்திரக்காரன் மாதிரி சாத்திரம் சொல்லுகின்றனே என்று நினைக்க வேண்டாம்)
2008 இல் அரசியல் என்ன நடந்தது சினிமாவில் என்ன நடந்தது உலகத்தில் என்ன நடந்ந்து என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் அதைப்ப பற்றி நான் இங்கு பதிய வரவில்லை.
ஏன் என்றால் நமக்குள் நடக்கும் போராட்டங்களும் ஒரு அரசியல்தானே நம்மைச்சுற்றி எத்தனை சினிமாக்கள்.
உலகமே ஒரு நாடக மேடைதானோ அதில் நாம் எல்லாம் நடிகர்கள்தானே.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போதும் நாம் எதாவது ஒரு சபதத்தை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம் அந்த சபதத்தில் நாம் வெற்றி பெறுகின்றோமா இல்லையா?
என்று நாம் பார்தால் 100 இற்கு 50 வீதமானோர்தான் வெற்றி பெறுகின்றார்கள்.தோல்வி பெறுப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் நேரம் சரியில்லை காலம் சரியில்லை ஜாதகத்தில் கோளாறு அதிஷ்டம் இல்லை என்று என்னென்னவோ சொல்கின்றார்கள்.
அவர்கள் ஏன் அப்படிச் சொல்கின்றார் என்றால் அவர்களிடம் முயற்சி இல்லை- தன்னம்பிக்கை இல்லை-சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- உதவிகள் யாரும் செய்ய மாட்டேன்றார்கள் என்று குறைகளையே அடுக்கிக்கொண்டு போய்கொண்டு இருப்பார்கள். குறைகளை அடுக்குவதை விட உங்களிடம் உள்ள சின்ன சின்ன நிறைகளை நீங்கள் நிவர்த்தி செய்து பார்த்திங்கள் என்றால் போன ஆண்டை விட அடுத்த ஆண்டு உங்களுக்கு நல்ல நிலையையேக் கொடுக்கும்.
ஆனால் சிலபேர் எடுக்கின்ற சபதங்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது.
(அதற்காக நான் றோம்ப உத்தமன் இல்லை)பிறக்கப்போகும் ஆண்டில் இருந்து
நான் குடிக்கமாட்டேன்
நான் இனி கடலைபோட மாட்டேன்
நான் இனி சைட் அடிக்கமாட்டேன்
இனி நான் ஒழுங்காக கோயிலுக்குப்போவேன்
ஏதோ அடுத்த வருடம் தொடங்கி இவர்கள் ஞானிகள் ஆகிவிடுவார்கள் போல் இன்றைகே ஆரம்பித்து விட்டார் அவர்களது சபதங்களைச் செல்கின்றதுக்கு.அது அவர்களுக்கு ஓவரா தெரியவில்லையோ? கேட்டால் சொல்கின்றார்கள் வருட முடிவை துக்கத்தோடு கொண்டாடுவதற்கு இரவு இரவாக தண்ணி அடிக்க வேண்டியது. பின் காலை விடிந்த வுடன் நல்லா நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு கோயில் கும்பிட வேண்டியது .
இப்படி நீங்கள் செய்வதால் நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு கடவுளையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
( என்னடா இவன் காதை கடிக்கின்றனே என்று திட்ட வேண்டாம் )
இதுதான் உண்மை நிலை வருட முடிவில் எத்தனை பேர் தண்ணியடித்துவிட்டு விபத்துக்களில் இறக்கின்றனர்.
சரி தண்ணி அடிப்பவர்கள் பற்றி விவாதத்திற்கு வரவில்லை.
நாம் அடுத்த ஆண்டு இவ்வாறுதான் இருப்போம் என்று ஒரு முடிவை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்றால். அதில் நீங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
(அதற்காக நம்பிக்கைதான் வாழ்கை என்று பஞ்சு டயலொக் பேசிக் கொண்டிருந்தால் சரிவராது)
முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள்..
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த ஊரு உலகம் உன்னை நம்பி...
பாடல் வரிகளில் எத்தனை உண்மை .
என்னால் முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களால் மட்டும் தான் முடியும்.முடியாதது என்று ஒன்றுமில்லை ஆனால் அவை நடக்கின்ற கால எல்லைகள் கூடலாம். இதற்காக ஒரு வாரத்தில் ஒரு மாதத்தில் ஒரு வருடத்தில் நடந்து விடும் என்று நினைக்க வேண்டாம் நான் போன வருடம் போட்ட திட்டம் இன்னும் நிறைவேறவில்லை என்று நினைக்க வேண்டாம்.
ஏன் அதை அடுத்த வருடமும் தொடர்ந்தால் உங்களுக்கு வெற்றிதான் கிடைக்கும்.அதை விடுத்து நான் போனவருடம் போட்ட திட்டம் நிறைவேறவில்லை என்று மனம் வருந்தத் தேவையில்லை.
2009 எப்படி இருக்கப்போகின்றதோ தெரியவில்லை என்று சொல்லாதீர்கள் வருட ஆரம்பத்தில் ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள் இந்த இந்த மாதங்களில் இவற்றை செய்யலாம் என்று அவற்றுக்கேற்றமாதிரி உங்களது வாழ்க்கையை அமையுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெறலாம்.
(இவர் பெரிய பருப்பு நாங்கள் இவர் சொல்லுறத கேட்கிறத்துக்கு என்று நிங்கள் நினைக்கின்றது தெரிகின்றது.)
அப்படித்தான் போன வருடம் செய்தனான் ஒன்றும் நடக்கவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அதற்குள் எத்தனை புயல் எத்தனை சூறாவளி வாழ்க்கையில் நடந்திருக்கின்றது.
அதுதான் விதியின் சதி.....
2009 வருடத்தை.... வரவேற்போம்.
வாழ்த்துவோம் வெற்றியோடு வாழ்வோம்....

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...