Skip to main content

தாய் மண்ணே வணக்கம்...

ஒஸ்கார் விருது வென்ற சந்தோஷத்தை தனது தாய்மண்ணில் கொண்டாடினால்தான் அதற்கு ஒரு முழுமை.. அந்த முழுமையை நேற்று ரஹ்மான் தனது தாய்மண்ணில் காலப்பதிக்கும்போது உணர்ந்துகொண்டார்.

அதை அவரது முகத்தில் வருகின்ற உண்மையான சந்தோஷத்தில் இருந்து கண்டுகொள்ளலாம்.நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் தளவாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டார்.தாய் மண்ணில் தனது கழுத்தில் விழுகின்ற மலர்மாலைகளும் ஒவ்வொரு ஒஸ்காருக்குச் சமமம் என்பதை நிறுபித்துக்கொண்டு இருக்கின்றது.விருது பெறும் போது தமிழகத்தில் நடந்த சில சந்தோஷ நிகழ்வுகள் இங்கே..ஒஸ்கார் விருது பெறும்போது ரஹ்மானின் மகள் சகோதரி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷம் கொண்டாடுகின்றனர்.பாடசாலை மாணவர்கள் ரஹ்மான் முகமூடி அணிந்து தமது சந்தோஷங்களைத் தெரிவிக்கின்றனர்.

Comments

alwaysarafath said…
நல்லா இருக்கு உங்க பதிவு...
ரஹ்மான் பத்தி
இங்க போய் படிங்க.. நல்லா இருக்கு

Popular posts from this blog

காதல் காவியம் லைலா மஜ்னு

லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது.

பெரும் செல்வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அழகிய பெண் லைலா. காயிஸ் ஏழ்மையான ஒரு கவிஞன். அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். லைலாவுக்காக ஏராளமான கவிதைகளை அவன் எழுதுகிறான்.
ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. லைலாவும் காயிஸும் காதல் கொண்டிருப்பதை அறிந்த லைலாவின் பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு பிரித்து வைக்கிறார்கள்.செல்வந்த இளைஞன் ஒருனுக்கு லைலாவை திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுடன் மாளிகையில் வசித்த போதிலும் காயிஸை பிரிந்ததை லைலாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள்.லைலாவின் திருமணத்தை அறிந்த காயிஸ் பித்துப்பிடித்தவனாகிறான். இறுதியில் லைலாவின் கல்லறைக்கு அருகிலேயே அவன் இறந்து கிடக்கக் காணப்படுகிறான். லைலாவைப் பிரிந்து துயரத்தில் காயிஸ் பித்தனாக அலைந்தமையால் அவன் மஜ்னு அல்லது லைலாவின் மஜ்னுன் என அழைக்கப்பட்டான். இதற்கு "லைலா பைத்…

தலையில் மண்ணை கொட்டிய சூர்யா..

புவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது.
பத்திரிகைக்காயாளர்களினால் தான் இந்த நடிகை நடிகர்கள் வளர்ந்திருக்கின்றார்கள். இன்று நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக மதிப்பதற்கு பத்திரிகைகள் அவர்களுக்கு கொடுத்த ஆதரவுதான் காரணம். அதனால்தான் அவர்கள் ரசிகர்கர்களது மனங்களில் இடம்பிடிக்கவும் செய்திருக்கின்றார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு காட்டாயம் இப்படியான ஒரு எதிர்ப்பு வந்தது நல்லது என்றுதான் சொல்லலாம்.
நடிகர்களை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருத்த்தியவர்கள் பத்திரிகையாளர்கள்.
இன்று சூர்யா நல்ல நிலைக்கு வருவதற்கு அவரது உழைப்பு ஒரு காரணமாகா இருக்கலாம். அந்த உழைப்பை அங்கீகரித்தவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதை சூர்யா மறந்துவிட்டார்போல.
தொடர் வெற்றிகள் என்பது ஒருவனுக்கு தலைகணத்தை ஏற்படுத்தும் அது சூர்யாவுக்கு மிகவும் பொறுந்தும்.
ரஜினி கூட பேசுகையில் பத்திரிகையாளர்ளை மதித்துத்தான் பேசினார்.
அவர் இருக்கும் உச்சத்துக்கு பத்திரிகைகள்தான் காரணம் என்று நன்கு புரிந்தவர்.
நடிகைகள் ஏதோ பத்தினிகள் மாதிரி இவ்வளவு முழக்கமும் போராட்டமும்.
நட…