Skip to main content

திறந்தவெளிச் சிறையில் தமிழ் உயிர்கள்.......

ஈழத்தமிழன் போர் இன்னல்களிலும் விட மிகவும் கொடுமையான துன்பத்தை இன்று வவுனியா திறந்தவெளி சிறையில் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றான்.தமிழன் என்றால் விடுதலைப் புலி..என்று சொல்லும் அரசாங்கம் போர் நடைபெறும் பிரதேசத்தை விட்டு வாருங்கள் உங்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தருகின்றோம் என்று சொல்லி முல்லைத்தீவில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை அகதி முகாம் என்ற பெயரில் கம்பிவேலிகள் அமைத்து அவர்களை அதற்கு வாழும்படியும் எக்காரணங்கள் கொண்டும் அவர்கள் வெளியேறாதபடி கடும் பாதுகாப்பும் போட்டு இன்று மக்களை கடும் சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.துப்பாக்கி முனையில் கல்வி.... துப்பாக்கி முனையில் குளியல்... என்ன கொடுமை.... எமது சகோதர உறுவுகளுக்கு ...விசாரணையின் பேரில் கற்பழிப்புக்கள்.....யாருக்குத் தெரியும்.....உள்ளுக்குள் நடப்பவை??உலக நாடுகள் கூட சொல்லிப்பார்த்துவிட்டது அரசாங்கத்திற்கு வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு சுதந்திரமாக விடவேண்டும் என்று ஆனால் அரச தரப்பு குருடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.ஒரு அகதி முகாமுக்குள்ளேயே எமது மக்களால் சுதந்திரமாக சுபீட்சமாக வாழ முடியாத நிலையில் எப்படி இந்த நாட்டில் தமிழ் மக்களால் சுபீட்சமாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும்.தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிøமயைக் கொடுப்போம் அவர்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்போம் என்று மஹிந்த அரசாங்கம் சொல்வது... நடக்காத காரியம்.இதை இந்தியா நம்பி (சேர்ந்து) தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணை போகின்றது.பிரிட்டன் அமெரிக்கா ஈழப்பிரச்சினையில் கொண்டிருக்கும் அக்கறை கூட இந்தியாவிடம் இல்லாதது... தேச துரோகமே... அவர்களின் பாணியில் சொன்னால் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே செய்துகொண்டிருக்கின்றது.வெளிநாடுகள் போர்ரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டவுடன் இந்தியா விழுந்து அடித்துக்கொண்டு மக்களை போரில் இருந்து காப்பற்றவேண்டும் என்று பிரணாப் கூறுவது சிரிப்பாகவே இருக்கின்றது.ஐ.நா.வின் அறிக்கைகளைப் பார்த்து இந்தியா பயந்து விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.ஐ.நா.படைகளை இலங்கைக்கு அனுப்பு என்று உலக நாடுகள் பல வற்றில் தமிழர்கள் போராட்டம் மட்டும் மல்ல தீக்குளிப்புக்களையும் நிகழத்திக்கொண்டிருக்கின்ற வேளையில்....சில நேரம் ஐ.நா படைகள் வந்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. பாக்குநீரினையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் வருகை... இந்தியாவின் சகோதர நாடான இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து. குரங்கு ஆப்பு இழுத்த கதையாகத்தான் இந்தியாவின் நிலை மாறப்போகின்றது என்பது நிதர்சனம்.

Comments

இலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்
ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.
தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//
//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//
//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//
//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

அடி மனதில் இரத்தம் வருகிறதா.
வரும்...
Canada Kesava said…
நன்றிகள் உங்கள் தகவல்களுக்கு .....பார்க்க நெஞ்சு பொறுக்குதிலையே இந்த ஈழத்தமிழன் படும்பாட்டை எண்ணி ....என்று விடியுமோ அவர்களின் சுதந்திரம். வாழ்க தமிழ் ............

Popular posts from this blog

காதல் காவியம் லைலா மஜ்னு

லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது.

பெரும் செல்வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அழகிய பெண் லைலா. காயிஸ் ஏழ்மையான ஒரு கவிஞன். அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். லைலாவுக்காக ஏராளமான கவிதைகளை அவன் எழுதுகிறான்.
ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. லைலாவும் காயிஸும் காதல் கொண்டிருப்பதை அறிந்த லைலாவின் பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு பிரித்து வைக்கிறார்கள்.செல்வந்த இளைஞன் ஒருனுக்கு லைலாவை திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுடன் மாளிகையில் வசித்த போதிலும் காயிஸை பிரிந்ததை லைலாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள்.லைலாவின் திருமணத்தை அறிந்த காயிஸ் பித்துப்பிடித்தவனாகிறான். இறுதியில் லைலாவின் கல்லறைக்கு அருகிலேயே அவன் இறந்து கிடக்கக் காணப்படுகிறான். லைலாவைப் பிரிந்து துயரத்தில் காயிஸ் பித்தனாக அலைந்தமையால் அவன் மஜ்னு அல்லது லைலாவின் மஜ்னுன் என அழைக்கப்பட்டான். இதற்கு "லைலா பைத்…

தலையில் மண்ணை கொட்டிய சூர்யா..

புவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது.
பத்திரிகைக்காயாளர்களினால் தான் இந்த நடிகை நடிகர்கள் வளர்ந்திருக்கின்றார்கள். இன்று நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக மதிப்பதற்கு பத்திரிகைகள் அவர்களுக்கு கொடுத்த ஆதரவுதான் காரணம். அதனால்தான் அவர்கள் ரசிகர்கர்களது மனங்களில் இடம்பிடிக்கவும் செய்திருக்கின்றார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு காட்டாயம் இப்படியான ஒரு எதிர்ப்பு வந்தது நல்லது என்றுதான் சொல்லலாம்.
நடிகர்களை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருத்த்தியவர்கள் பத்திரிகையாளர்கள்.
இன்று சூர்யா நல்ல நிலைக்கு வருவதற்கு அவரது உழைப்பு ஒரு காரணமாகா இருக்கலாம். அந்த உழைப்பை அங்கீகரித்தவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதை சூர்யா மறந்துவிட்டார்போல.
தொடர் வெற்றிகள் என்பது ஒருவனுக்கு தலைகணத்தை ஏற்படுத்தும் அது சூர்யாவுக்கு மிகவும் பொறுந்தும்.
ரஜினி கூட பேசுகையில் பத்திரிகையாளர்ளை மதித்துத்தான் பேசினார்.
அவர் இருக்கும் உச்சத்துக்கு பத்திரிகைகள்தான் காரணம் என்று நன்கு புரிந்தவர்.
நடிகைகள் ஏதோ பத்தினிகள் மாதிரி இவ்வளவு முழக்கமும் போராட்டமும்.
நட…