Monday, February 2, 2009

தீக்குச்சி

ஈழத்தின் விடிவெள்ளிக்கு தீக்குச்சியாய் இருந்தவனே.... எங்கள் இதயத்தில் மட்டுமல்ல உலகத் தமிழனின் இதயத்தில் வீற்றிருக்கும் முத்துக்குமாரே. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லட.
நீ தலையை மட்டும் மல்ல உன் உயிரையே எம்மக்களுக்காய் தந்துவிட்டாயே.
நாம் என்ன பரிகாரம் செய்யப்போகின்றோமோ தெரிய வில்லை நீ மூட்டியது தீயா அல்லது சுனாமியா என்று தெரியவில்லை ஆனால் அது ஒரு எழுச்சி என்றே சொல்லலாம்.
ஈழத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு இந்தியாவின் (மத்தியஅரசின்) நிலையில் மாற்றமில்லை. அது வரலாற்றில் மீண்டும் ஒரு தவறையே செய்கின்றது. அது முதலில் செய்த தவறுக்கே இன்னும் மன்னிக்கப்படாமல் இருக்கின்றது. அது இப்பொழுது மீண்டும் ஒரு தவறை செய்கின்றது.
ஈழத்தமிழனுக்கு தொப்புல் கொடி உறவாக இருக்கும் இந்தியாவே
நீ உனது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவா? இல்லையேல் ஈழத் தமிழன் உன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் ஏன் தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் உன்னை மன்னிக்க மாட்டார்கள்.
காந்தி தேசத்தில் அஹிம்சைக்கு இப்பொழுது மதிப்பே இல்லை. உண்ணாவிரதப் போராட்டங்களை மதிப்பதும் இலலை அவர்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பும் இல்லை.
மத்திய அரசியன் வாலைப்பிடித்துக் கொண்டு அரசியல் நடத்தும் கருணாநிதிக்கு உலகத் தமிழர்களின் தலைவன் என்ற கனவு காண்பதை முதலில் விட்டு விடு.
ஈழத்தமிழனின் நலனில் அக்கைறகொள்வது போல் நடிக்காதே.. கனிமொழி ஈழத்தமிழர்களுக்காக ஒரு பக்கம் குரல் கொடுக்கின்றார். கருணாநிதி சோனியாவின் கதையேக் கேட்டுத் தலையசைத்துக் கொண்டிருந்து என்ன பலன்.
இன்று ஒரு முத்துக்குமார் நாளை எத்தனை முத்துக்குமார்கள் தமிழகத்தில் உருவாகப்போகின்றார்களோ தெரியவில்லை .
அப்படி உருவாக யார் காரணம்?
கருணாநிதியா மத்திய அரசா இரண்டும் ஒன்றுதானே 4 இலட்சம் தமிழர்கள் காடுகளின் மரநிழல்களில் வாழ்கின்றார். இது கூட அந்த கிழவனுக்குப் புரியவில்லையா?
விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் காங்கிரஸ்காரரின் ஒரு குறிக்கோள் அதற்கு வெளியில் நல்லவர்கள் போல் நடித்துக்கொண்டும் ஈழத்தமிழனை அழிப்பதற்கு இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு அனுப்பி சிங்களப் பேரினவாதத்தோடு சேர்ந்து இன அழிப்பை மேற்கொண்டுள்ளது.
அமைதிப்படைய என்று பெயரில் முன்பு வந்துவாங்கிக் கட்டிக்கொண்டுபோனது தெரியாதோ?
வல்லரசாக நீ நினைப்பது சரி அதற்காக ஒரு இனத்தை அழித்து நீ வல்லரசாக முடியும் என்றால் அது நீ கானும் பகல் கனவு.
தமிழ் நாட்டில் இன்று இளைய சமுதாயத்தில் மூண்டுள்ள இன பற்று ஏன் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படவிலலை.
கொழும்பில் உள்ள இளையசமுதாயமே நீ உனது இருப்பை இழந்து கொண்டு இருக்கின்றாய் என்று தெரியாமல் வில்லும்,படிக்காதவனும் பார்த்துக்கொண்டு திரிகின்றாய் தமிழ் நாட்டில் தீக்குழித்த முத்துக்குமாருக்கு நீ ஒரு தமிழனாய் என்ன செய்தாய்?
ஒரு நினைவஞ்சலிக்கூட்டம் ஆவது நடத்தினியா?
கொழும்பு தமிழ் சங்கமே ஈழத்தில் எம்மவர்கள் படும் வேதனை உனக்கு புரியவில்லையா?
ஆடலும் பாடலுடன் நீ நடத்தும் நாடகங்கள் என்ன உனக்காக ஒருவன் அங்கு உயிர் திறந்தானே அது கூட உனக்கு தெரியாதா? அவன் என்ன விடுதலைப் புலியா இல்லையே அவன் ஒரு தமிழன் .
கூட்டங்கள் தான் நடத்துவதற்கு பயம் வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்றுவிடுவார்கள் என்று நீங்கள் சொல்லுவதும் கேட்கின்றது. ஏன் ஒருவர் இருவர் என்று நடத்தாமல் ஒரு கூட்டமாகசேர்ந்து நடத்தினால் வெள்ளை வான் உங்கைள என்ன செய்யப்போகின்றது.
இன்று கொழும்பில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சுயநலத்தோடு இருக்கின்றீர்கள்.
இளைய சமுதாயமோ.. களியாட்டங்களிலேயே தனது காலத்தை கடத்திக்கொண்டு இருக்கின்றது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்களுக்கே தெரியாது.
நாளைய சமுதாயமே உன் கையில் தான் இருக்கின்றது. முத்துக்குமாருக்கு வந்த ஆத்திரம் வெறி உனக்கு வரவில்லையா? மானம் கேட்டவனே…

No comments:

Short movie