Monday, February 23, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் நடந்து வந்த பாதை

தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலை.இந்த நிலையில், 1989ம் ஆண்டு இஸ்லாமுக்கு மாறினார் ரஹ்மான். இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக மாறினார் ரஹ்மான். தனது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார்.கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார். ஆனால் சிந்தசைசரில்தான் அவருக்கு அதிக பிரியம். இசையையும், தொழில்நுட்பத்தையும் சரியான கலவையில் இணைக்கும் கருவி என்பதால் சிந்தசைசரில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார்.பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார். இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.1992ம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை தொடங்கினார் ரஹ்மான். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது.இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் தொடங்கிய பின்னர் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு ரஹ்மான் மட்டுமே. ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார்.இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான்.குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிப் போனார் ரஹ்மான். திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் படைத்துள்ளார் ரஹ்மான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்றைய தேதிக்கு இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரஹ்மான்.1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான்.2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான்.இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார். கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 3 வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான்.2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அல்வா சாப்பிடுவது போல.ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.ரஹ்மானின் முதல் படங்கள் ...தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது. இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.மலையாளத்தில் முதல் படம் யோதா.தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ்.ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.ரஹ்மானை அலங்கரித்த விருதுகள் ...எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதை விட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான்.அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).தேசிய விருதுகள்ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).பிலிம்பேர் விருதுகள்ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)ஸ்க்ரீன் விருதுகாதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).தினகரன் சினி விருதுகள்மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).தமிழக அரசு விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).சினிமா எக்ஸ்பிரஸ் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).கலாசாகர் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).பிலிம்பேன்ஸ் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).சினி கோயர்ஸ் விருதுரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).ஜீ விருதுஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007), சர்வதேச இந்திய திரைப்பட விருதுதால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),குளோபல் இந்தியன் திரை விருதுசிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...