தமிழர்கள் மீதான அடுக்குமுறைகள் தமிழர்கள் மீதான கொடுமைகள் தமிழர்கள் மீதான வன்முறைகள் என்று சிங்களப் பேரினவாத அரசாங்கம் செய்துவரும் நிலையில் இன்று தென்னிலங்கையில் தமிழ் ஊடகங்கள் மீதும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
சுடர் ஒளி - தினக்குரல் - வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது ஊடகவியலாளர்களை கடத்திக் கொலை செய்வது என்று தனது பாரிய பங்களிப்பை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
சிவராம்-நடேசன்-நிமலராஜன் என்று தொடங்கிய கொலைகள் இன்று லசந்த வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
திஸ்ஸ நாயகம்.. தொடங்கி இன்று வித்தியாதரன் ( வித்தி) வரை துணிந்து தமிழ் மக்களின் குரலாகத் திகழ்பவர்களை பொலிஸ் விசாரணை என்ற பெயரில் கைது செய்து அடைத்து வைத்திருக்கின்றது மஹிந்த அரசு.உரிமைக்குரல் இனத்தில் வெளிப்பாடு இந்த இனத்தின் ஊடககங்களே அந்த ஊடகங்களில் துணிந்து செயற்படுபவர்கள் இன்று ஒரு சிலரே..
வித்தியாதாரன் கைது இன்று தமிழ் உலகுக்கும் ஒரு வேதனையான செய்தி மட்டும் மல்ல சோதனையும் கூட அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அரசு செய்யும் தவறுகளை தன் நெற்றிக் கண் கொண்டு செய்திகளை வெளியிடுபவர்... தமிழினம் இன்று நல்ல ஊடகவியலாளர்களை இழந்து வருகின்றது.யாரும்... ஊடகவியலாளன் ஆகலாம்… ஆனால் ஒரு சிலரே அதை தொழில் என்று நினைக்காமல் தமது கடமைகடப்பாடுகட்டாயம் என்று தங்களை ஊடகங்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள். அவ்வாறு அற்பணிப்பவர்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றது.இன்று ஒரு வித்தி நாளை எத்தனை வித்தியோ... தெரியவில்லை... தமிழ் மக்களின் உரிமைகள் குரல்கள் நசுக்கப்படுகின்றன.அண்மையில் கொழும்பில் உள்ள தமிழ் ஊடகங்களின் தலைவர்களை மஹிந்த அரசு சந்தித்ததாகவும் முல்லைத்தீவில் நடைபெறும் பேரில் இறக்கின்ற காயப்படுகின்ற தமிழ் மக்களின் படங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம் என்றும் அந்த படங்கள் விடுதலைப் புலிகளினால் கிராபிக்ஸ் செய்து அனுபப்படுகின்ற என்றும் ஊடகங்களை அவ்வாறான படங்களை பிரசுரிக்க வேண்டாமாம்?ஓகே... அவர்கள் சொல்கின்றது சரியென்றால் வவுனியா வைத்தியசாலைக்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும் முல்லைத்தீவில் இருந்து வருபவர்கள் என்ன சுற்றுலாவா வருகின்றார்களா?மக்கள் படும் வேதனைகள் மக்களுக்குத் தெரிவிப்பது ஊடகங்களின் கடமை அவற்றை விடுத்து தமிழ் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் விதிக்குமானால்.. பேனா முனை பிடிக்கும் ஊடகவியாளர்களை துப்பாக்கி முனை பிடிக்க வைக்காதீர்கள்
No comments:
Post a Comment