அண்மையில் தான் அவளுக்கு அவர்களின் ஊர் வழக்கப்படித்தான் திருமணம் நடந்தது. ஆனால் நடந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அந்த ஊர்வழக்கமும் அவர்களது கலாசாரமும் அவளை என்ன கொடுமைப்படுத்துகின்றது.
திருமணம் ஆகி இரண்டு நாட்கள்தான் தாலி கட்டும்போது மாப்பிள்ளை தாலியை மாற்றிக் கட்டிவிட்டாராம் பெண்ணுக்குக் கட்டாமல் தங்கைக்கு கட்டினதாக நீங்கள் நினைக்க வேண்டாம் தாலி தலைகீழாக கட்டிவிட்டாராம்.
அதற்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் பெண் வீட்டார் நீ வந்த நேரம் தான் இப்படி நடக்கின்றது என்று அவளது முகத்திற்கு முன்னாலே சொல்கின்றனராம்.
நான் கேட்கின்றேன் மாப்பிள்ளை ஒழங்காக தாலியைக் கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.
அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் பெண் அழகில்லாதவள் என்று மாப்பிள்ளையை விட பெண் அழகாக இருப்பது தான் அந்த ஊர் மக்களிடமும் அவனது உறவினர்களிடமும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
வயது போன பட்டி கூட என்ன கோயில்ல இருக்கின்ற சிலையை கொண்டு வந்து விட்டானா. பொம்மை மாதிரியே இருக்கு.
என்ன இந்தப் பெண் இப்படி மெல்லிசாக இருக்குதே என்று சொல்கின்றார்.
அந்தக் காலத்தில பெண்கள் உரல் குத்திமாதிரியோ தெரியவில்லை.தாலியை
தலைகீழாகக் கட்டியதற்காக முதல் இரவைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள் என்ன கொடுமை பாருங்களேன்.
பூனை குறுக்கே போனால் பயணத்தை ரத்துச் செய்கின்றார்கள்.காகம் பசியினால் கத்தினால் கூட அதற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடித்து விருந்தினர் வரப்போகின்றார்கள் என்று சொல்வது.
விதவைப் பெண்களை நற்காரியங்கள் செய்வதற்கு முன்னிலையில் விடுவதில்லை.இப்படியன செயல்களால் பலரது மனங்கள் வேதனைப்படுகின்றது.
ஏன் ஒரு கூட்டத்தில் சமூகத்தில் தள்ளி வைக்கப்படுகின்றார்கள். சம்பிர்தாயங்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்று என்ன என்ன கொடுமைகளை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment