ஈழத்தமிழனின் வாழ்க்கை இன்று மிகவும் கொடூரமான மூர்க்கத்தனமானஈவிரக்கமற்ற தாக்குதல்களால் இன்று அன்றாடம் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றது.
அண்மையில் இணையத் தளமொன்றில் ஏறிகணைத் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சாலை வளாகத்திலேயே உயிரை விடுகின்ற இளைஞனை பார்த்தபோது சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பயந்துதான் இருக்கின்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.
(அந்த வீடியோ இங்கே
பலவீனமான இதயம் கொண்டவர்கள்
இதைப் பார்க்க வேண்டாம்)
http://www.tamilkathir.com/news/1279/75//d,video.aspx
http://www.tamilkathir.com/news/1279/75//d,video.aspx
அமெரிக்கா பிரிடடன் போன்ற நாடுகள் இலங்கைக்கு கண்டனங்களையும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டிருக்கின்றன ஒழிய அந்த நாடுகளின் செயல் வடிவங்கள் ஒன்றும் முற்றுப்பெறவில்லை.
சீனாவும் ராஷ்யாவும் இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.ஈழத்தில் இடம் பெறுவது ஒரு இனப்பிரச்சினை அதை சீனா ஒரு மதப்பிரச்சினை வடிவிலேயே கையாழ்கின்றது.
சீனா புத்த மதத்தைக் கடைப்பிடிப்பதால் தனது மதத்தை கடைப்பிடிக்கும் இலங்கைக்கு அது ஆதரவு வளங்குகின்றது.இலஙகையில் தங்களது தளங்களை நிறுவவதற்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.அதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றது.
இந்தியாவோ ஒரு படி மேல் தனது இராணுவத்தை நான்காம் கட்ட ஈழப்போருக்கு (தமிழர்களை பூண்டோடு அழிக்கும் போருக்கு) அனுப்பிவைத்திருக்கின்றது.
வல்லரசாக முயலும் இந்தியா இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்தால்தான் . தான் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசாக திகழமுடியும் . விடுதலைப் புலிகள் முப்படைகளையும் உடைய ஒரு வலுப்பெற்ற ஒரு அமைப்பாக இருப்பதால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்துக்கொண்டு இலங்கைக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழனை அழிக்கும் இலங்கை அரசின் கொள்கைக்கு துணை போகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இப்போது தேர்தல் காலம் ஈழப்பிரச்சினை என்பது அவர்களது தேர்தல் கால கொள்கையாகவே வெளியிடப்படுகின்றது.
ஈழத்தமிழனின் பிரச்சினை என்ன தேர்தல் அறிக்கையா?முத்துக்குமார் தீக்குழிப்பு அதனைத் தொடர்ந்து எத்தனை தீக்குளிப்புக்கள் அத்தனைபேரின் உயிர்கள் ஈழத் தமிழனுக்காக.
கட்சி ரீதியான தீக்குழிப்புக்கள் இனி தேர்தல் கால பிரச்சாரத்தில் முதன்மை வகிக்கப்போகின்றது.ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்திலும் இருந்து ஒருவர் இருவர் என்று தீக்குழித்துவிட்டார்கள்.
என்ன செய்தோம் என்பதை விட என்ன செய்கின்றோம் என்பதுதான் முக்கியம்.உலகத் தொலைக்காட்சிகளும் செய்தி நிறுவனங்களும் இன்று தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் வெளியிட்டு வருகின்றன.ஆனால் ஈழத்தமிழர்களாலாலேயே வாழ்கின்றது சன் ரி.வியும் கலைஞர் ரி.வியும் ஆனால் அன்றாடம் கொல்லப்படும் தமிழர்களைப் பற்றி என்ன செய்கின்றது இந்த ஊடக நிறுவனங்கள்.
வெளிநாட்டில் வாழ்கின்றவர்களின் பணத்தில் கலைஞரின் குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது. மத்திய அரசுக்கு நாங்கள் ஈழப்பிரச்சினை பற்றி சொல்லிவருகின்றோம் என்கிறார் கலைஞர் ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை.
சோனியா கருணாநிதியின் சொல்லைக் கேட்கின்றாரா இல்லையா என்று தெரியவிலலை.ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்தியா இராணுமும் வந்து போரிடுகின்றது. இதுகூட கருணாநிதிக்கு தெரியவிலலையா?மத்திய அரசில் அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதற்கு கருணாநிதி காலில் கூட விழுந்து வாங்குவார் போல் தெரிகின்றது.
ஈழத் தமிழனைக்காப்பாற்ற ஒபமாதான் இனி வரவேண்டும் இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை.கூட இருந்து குழி பறிக்கின்றது இந்தியா (சோனியா) காலங்கள் மாறும் அப்பொழுது என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆவியாகத் திரியும் ஈழத்தமிழன் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பான்.
1 comment:
http://www.youtube.com/watch?v=I5DA46IhcE4
Post a Comment