Tuesday, March 17, 2009

கடலை போடுவதால் ஆபத்து

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை.
ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)
ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.
அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.
என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.
இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல.. சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம். கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர். அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம். ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி. ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.

1 comment:

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Short movie