Sunday, March 8, 2009

வரலாறாக வாழ்கின்ற பெண்களுக்கு ஒரு சலூட்.என்னை வாழவைத்துக்கொண்டிருப்பதும் எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக நிற்பவர்கள் பெண்கள்… அந்தப் பெண்களுக்காக ஒரு தினம் இன்று அந்த தினத்தைப் பற்றியும் பெண்கள் பற்றியும் எழுதவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன் ஆனால் சற்று பிந்தித்தான் எனது பதிவை இடவேண்டிய சூழ்நிலை.. என்ன பிந்தி வந்தாலும்.. என் மனம் கவர்ந்த பெண்களைப் பற்றி நான் பதியாமல் போனால் நான் வாழ்ந்துதான் என்ன?
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பால் என்பது உண்மை அது தாயாக தாரமாக நண்பியாக எத்தனை பரிமாணங்களில் தோற்றம் கொடுக்கின்றனர்.
பெண்கள் இன்று ஆணுக்கு சரிநிகராக வளர்ந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகின்றது. இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நிமிர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அது அவர்களுக்குக் கிடைத்த தன்னம்பிக்கையென்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
பத்துமாதம் ஒரு குழந்தையைச் சுமந்து பின் அதை சீராட்டி பாலூட்டி வளர்த்து எடுக்கின்றபொறுப்பு இருக்கின்றதே அதை விட இனிமையான ஒரு சுமை இருக்க முடியாது.கணவனுக்கு அடுத்தப் படியாக தனது குழந்தையை கண்ணும் கருத்துமாக காக்கின்றாள் ஒரு தாய் அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றுதான் சொல்லவேண்டும் இத்தனை வருடங்களாக என்னை சுமந்தது மட்டுமல்லமல் இன்று வரையும் அன்பில் ஒரு குறைகூட விடாமல் பார்த்துக்கொள்ளும் தாய்கு நான் என்ன பரிகாரம் செய்யப்போகின்றேனோ தெரியவில்லை....
மனைவி.... அதைப்பற்றி அறிய எனக்கு இன்னும் வயது வராதபடியினால்..
தோழிகள்
நான் இன்று துணிந்து ஒரு வார்த்தை வாயினால் ஏன் இந்த பதிவினைக்கூட இடுவதற்கு காரணம் எனது தோழிகள் தான் என்று சொல்லலாம் நான் விடும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதிலும் என்னை நான் திருத்திக் கொள்வதில்லும் பெரிய பங்கு எனது தோழிகள் இந்த தோழிகள் இல்லையேல் நான் இன்று எங்கே? எப்படி? ஏன் உயிரோடு கூட இருந்திருப்பேனா தெரியவில்லை.
நான் அவர்களிடம் பெற்ற அன்பு என் வாழ் நாள் முழுவதும்.. ஏன் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் கூட நான் மறக்க முடியாது நான் துவண்டு போயிருக்கும் வேளைகளில் எனக்கு ஏணியாக இருந்தவர்கள் எனது தோழிகள்தான்.இந்த பெண்கள் தினத்தில் அவர்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்.
(அது சரி சுய புராணம் பாடமல் எதாவது எழுத முடியாத என்று நிங்கள் நினைக்கின்றது எனக்கு தெரியும் இன்று பெண்கள் தினம் அதுவும் தமிழன் கண்டு பிடித்தான இல்லை அமெரிக்கன் கண்டு பிடித்த இந்தப் பெண்கள் தினத்தை இன்று மீடியாக்கள் தங்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
பெண்களில் சாதித்தவர்களின் பேட்டிகள் என்ற போர்வையில் நடிகைகளை பேட்டிகாண்பது என்ன நியாயம்?ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையை பெற்று வளர்ப்பதும் சாதனைதான். பூமா தேவிக்கு பொறுமையிருக்கு என்று சொல்கின்றார்கள் அதை நான் பார்த்ததில்லை ஆனால் பெண்களிடம் பொறுமையும் விவேகமும் இருக்கின்றது.

வரலாற்றில் வாழ்ந்த பெண்ளுக்கும் இன்றும் வரலாறாக வாழ்கின்ற பெண்களுக்கும் ஒரு சலூட்.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

மங்கையர்களுக்கு வாழ்த்துக்கள்!

யார் தமிழர்களின் தலைவர்? பிக் பஸ்....... (02)

முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்...