Tuesday, December 15, 2009

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதற்கு?


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கப்போகின்றது என்பதை ஊடகங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனவே தவிர மக்கள் அதை எதிர்பார்க்கவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயருக்குத்தான் இருக்கின்றார்கள்.

அவர்கள் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்?. வெளிநாடுகளில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அங்கிருந்தபடியே அறிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து என்ன பயன்?
விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் அவர்கள் யாரை பரிந்துரைக்கின்றார்களோ அவர்களைத்தான் மக்கள் தெரிவு செய்தார்கள்.
ஆனால் இன்றைய நிலை தலைகீழாக உள்ளது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

யாழ்.மக்களுக்கு எதுவுமே செய்யாத கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து என்ன பயன்?.
மக்களுக்கு வேலைவாய்புக்கள் பெற்றுக்கொடுப்பதில்லை. நாடாளுமன்றத்தில் தங்களது தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை செய்வதில்லை.
உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் இருப்பதால் என்ன பயன்?
யாழ்.மக்களைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் இராவணன் ஆண்டாள் என்ன? இராமன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு என்ன பயன் என்ற நிலையே?
சரத்பொன்சேகாவை நம்பி சில தமிழ் அரசியல் கட்சிகள் இன்று அவருக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றது.

இதேபோல இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும் பிள்ளையான், கருணா போன்ற தமிழ் அமைப்புக்களும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றனர்.

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் பிரித்தளாப்படுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மலையகம் என்று மூன்று பிரிவுகளையும் சிங்களப் பேரினவாதம் பிரித்து பந்தாடுவது தமிழர்களின் நிலையை சீர் குலைப்பதற்கே அன்றி தமிழர்களின் நலனில் அக்கறைகொண்டு அல்ல என்பதை முதலில் தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அமைச்சுப் பதவிகளுக்காககவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் தமது இனத்தையே கூறுபோடவைத்துவிட்டு வேடிக்க்கை பார்க்கின்றது என்றால் அது தமிழ் இனத்திற்கு கிடைத்த சாபம். தமிழ்க் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத இவர்களால் எப்படி தமிழர் பிரச்சினையில் முன்னேற்த்தைக் காணமுடியும்?
சரத்பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று ஐ.தே.கூட்டமைப்பு கோரிக்கை வைத்தாலும் தமிழ் மக்கள் மனதை வெல்வது என்பது கஷ்டமானகாரியமே.
ஏன்னெனில் சரத்பொன்சேகாவும் வன்னி மனிதப் பேரழிவை மேற்கொண்டவர்களில் ஒருவர் . அதை விட தமிழர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை, இது பௌத்த சிங்கள நாடு என்று சொன்னவர்.

இன்று அரசியல்வாதியாக தன்னை முன்னிலைப்படுத்தி தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அதிகமான சலுகைகளைக் கொடுப்பேன் என்று சொல்வது
அரசியல் நாடகத்தின் உச்சக்கட்டமே. இதை புரிந்துகொள்ளாமல் தமிழ்க்கட்சிகள் அவரின் சொல்லை நம்பி நாசமாகப்போவது மட்டும் உறுதி.
சம்பந்தன் ஐயா என்ன செய்கின்றார் என்றால் தங்களது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மக்களிடம் கணிப்பு எடுக்கப்போகின்றோம் என்று ஒரு புறுடா செய்தியை விட்டு நலுவப் பாக்கின்றார்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான கலாச்சார சீரழிவை நோககிகச் சென்றுக்கொண்டிருக்கிறது. என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் இன்று விபச்சாரம் , குடிப்பழக்கம் என்பன பாடசாலை மாணவர்களை ஆட்டிப்படைக்கின்றன.

அதைவிட மிகவும் மோசமாக பாடசாலை மாணவிகளின் கருக்கலைப்பு நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தமிழர்களின் உரிமையை வென்று எடுக்கின்றோம் என்று சும்மா இருக்காமல் நாளைய நமது தமிழ் சமூகம் சின்னபின்னமாகிப்போய்விடாமல் காக்க துடிப்பான இன்னொரு இளைய தமிழ்த் தலைமை கட்டாயம் தேவை.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...