Friday, September 4, 2009

விஜய்க்கு அரசியல் சரிவருமா?

விஜய்க்கு அரசியல் சரிவருமா? சரிவராதா என்பதுதான் இன்றைய கேள்வி எல்லோர் மனதிலும்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கி அதில் வெற்றி தோல்வி காண்பது என்பதும் சர்வசாதாரமாகி விட்ட நிலையில்.... மூன்றாவது தலைமுறை நட்சத்திரமான விஜய் அரசியலில் ஈடுபட இருக்கின்றார் . அதன் முதற்கட்டமாக ராகுல் காந்தியுடனான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் தனித்து போட்டியிட்டால் எத்தனை வீதமானவர்கள் அவருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்?
இதற்கு பழைய உதாரணங்கள் எதற்கு நமக்கு அண்மைய உதாரணமான சிரஞ்சிவியையே எடுத்துக் கொள்ளலாம்.
விஜயகாந்த் அரசியலில் இறங்க முன்பு அவரின் சினிமா எவ்வாறன ஒரு உயரமான இடத்தில் இருந்தார் என்பதும் அவர் அரசியலில் இறங்கிய பின்பு அவரின் படங்கள் தோற்பதற்கும் என்ன காரணங்கள்?
ஏன் தோற்கின்றன என்பதை அந்தப் படங்களை எடுக்க விடாமல் எவ்வளவு சதிவேலைகள் நடந்தன. நடக்கின்றன. விஜயகாந்த் கட்டிய திருமண மண்டபத்தைக்கூட இடித்தார்கள். இன்னும் எவ்வளவோ சோத்துக்களுக்குப் பிரச்சினை அத்தனையையும் சந்திப்பதற்கு விஜய் ரெடியா.
அரசியலில் இறங்கப்போகின்றார் என்றவுடன் எத்தனை தயாரிப்பாளர்கள் பின்வாங்குகின்றார்கள். இவர்களை வைத்து படம் எடுப்பதை விட சும்மாவே இருந்தால் நன்மை என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள்.
சினிமாவே வேண்டாம் அரசியலில் மட்டும் முழு மூச்சாகவே இறங்கவேண்டும் அதை செய்வாரா விஜய்?
ஒரு கையில் அரசியல் மறுகையில் சீனிமா என்பது சாத்தியப்பட்டுவராது?
ரஜனி ஏன் அரசியலில் இறங்கவில்லை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல மதிப்பும் நல்ல நட்பும்கொண்டவர்.
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.
அந்தச் சாக்கடையில் முழ்குவது என்பது ரஜனிக்கு சரிப்பட்டுவராத ஒன்று மக்களுக்கு தேவையானதை ஒரு அரசியல் வாதியாக இல்லாமல் ஒரு சமூக சேவகனாககொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
ரஜனி வழியைப் பின்பற்றும் விஜய் அரசியல் மட்டும் ஏன் அவர் வழியைப் பின்பற்ற வில்லை. தனிக்கட்சி தொடங்கினால் அனைத்துக்கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்பு வரும் என்பதால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என்றால் தி.மு.காவை எதிர்க்காமல் செயற்பாடமல் இருக்கலாம். ஒரு கட்சியுடன் இணைந்து செயற்பட்டால் வரும் பிரச்சினைகளை சமாளிக்கலாம் என்று எல்லாம் எண்ணித்தான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகி“ன்றாரா தெரியவில்லை.
அப்படி விஜய் அரசியலில் நுழைந்தால். முதலமைச்சராகவே வரமுடியாது. தி.மு.காவில் இப்பொழுது ஸ்டாலினின் கை ஓங்கியிருக்கின்றது. அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.
விஜய்க்கும் தி.மு.காவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்கின்றது அதை விஜய் பகைத்துக்கொள்ளமாட்டார்.
சிவாஜினால் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை அத்தனை ரசிகர் வட்டம் இருந்தும்.
ராமராஜன் அரசியலில் இறங்கி இன்று அவரின் நிலை என்ன?
சரத்குமார்?
கார்த்திக்?
ராதரவி?
எஸ்.வி.சேகர்?
என்று தொடர்கின்றது அந்த அரசியல் பட்டியல் .
விஜய் அரசியலில் குதிக்கப்போகின்றார் என்றவுடன் உலகத்தில் உள்ள தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். ஈழப்பிரச்சினைக்கு துணைபோன கட்சியுடன் கூடா என்று.
ஈழத்தமிழர்களின் உயிர்கள் பறிபோனதுக்கு கருணாநிதியும் உடந்தையாக இருந்திருக்கின்றார். அப்படி இருந்தும் தி.மு.கா. தேர்தலில் வெற்றி பெற்றதுதானே.
ஈழத்தமிழர் ஆதரவு தனி ஈழம்தான் என்று தெரிவித்த ஜெயலலிதாவின் நிலை என்ன?
தேர்தலில் தோல்வியே.
விஜயின் அரசியல் ஈழத்தைவைத்து தீர்மானிக்கக்கூடாது..
சாக்கடையில் முழ்குவது என்று தீர்மானித்த விஜயை ஆண்டவனால் கூட தடக்க முடியாதுஎன்பதே நிதர்சனம்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...