Monday, April 20, 2009

வெறுங்குடங்களின் கையில் பத்திரிகை

இலங்கையில் ஊடகத்துறை வருங்காலத்தில் ஏன் அடுத்த சந்ததியினருக்கு எப்படி பயனளிக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

அண்மையில் எனக்கு ஒரு பத்திரிகை நண்பருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்ன விடயங்கள் எனது மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது என்றுதான் சொல்லலாம்.

பத்திரிகைத்துறையில் நுழைவதற்காக கனவுடன் திரிபவர்கள் எத்தனை பேர்.... பாரதியர் தொடங்கி இன்று எஸ்.டி.சிவநாயகம் வரை எத்தனை பத்திரிகை ஜாம்பவான்கள் இருந்தார்கள்.

ஏன் இன்றும் எத்தனைபேர் தங்களது திறமைகளை இலைமறை காயாக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

(அது சரி உங்கட நண்பன் உங்களுக்கு சொன்னதை முதலில் சொல்லுங்கள் என்று திட்டுவது எனக்கு தெரிகின்றது)

முன்பெல்லாம் பத்திரிகையாளன் ஆவது என்றால் எழுத்துத்துறையில் ஆர்வமும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று இன்டர் நெட் பார்க்கத் தெரிந்தால் போதும். அதில் வருவதை அப்படியே எடுத்து பிரசுரிக்கின்றார்கள்.அப்படிப் பிரசுரிப்பவர்கள்தான் ஊடகவியலாளர்கள் என்றால், தனது எழுத்தாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லையாம்?ஒருவன் தனது முகவரியைத் தேடிக்கொள்ள முடியாத நிலை பத்திரிகை நிறுவனங்களில் உள்ளதாகவும், அப்படி அவர்கள் தாங்களாகவே தேடிக்கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் அந்தப் பத்திரிகை நிறுவனத்தில் குறைவாகவே இருக்கும்.
திறமைகளுக்கு முக்கியத்துவமா? இல்லை வால்பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவமா?நிறைகுடங்கள் தளம்பாது என்பது நிதர்சனம். ஆனால் வெறும்குடங்களாக இருப்பவர்களின் கையில் நாளை பத்திரிகை ஆசிரியர் பதவி கிடைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...