Wednesday, December 9, 2009

பரதநாட்டியம் என்பது ஒரு யாத்திரை ரமா வைத்தியநாதன்



பாவங்களின் நாயகியா? இல்லை தச அவதாரங்களின் நாயகியா? அத்தனைக்கும் சொந்தக்காரரான நாட்டியத்தாரகை ரமா வைத்தியநாதன். இவர் கடந்த 20 வருடங்களாக பரத நாட்டிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவரை இசை உலகத்திற்காக நான் சந்தித்தபோது, அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விடயங்கள்......


*உங்களுக்கு பரதநாட்டியம் கற்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?
எல்லோரும் டாக்டர், எஞ்சினியர், வக்கீலாக வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றார்கள். அதுபோல நானும் பரதநாட்டியத்தில் சிறந்தவளாக திகழ வேண்டும் என்று ஆறாவது வயதில் இருந்தே பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டேன். நாட்டியத்தை யாமினி கிருஷ்ணமூர்த்தியிடம் கற்றுக்கொண்டேன்.


*பரதநாட்டியத் துறைக்கு நீங்கள் வந்து 20 வருடங்களாகின்றன. உங்களுக்கு அது முழுத் திருப்பதியைத் தருகின்றதா?
பரதநாட்டியம் என்பது ஒரு யாத்திரை. அந்த யாத்திரையில் ஒரு இலக்கு இருக்கு. அந்த இலக்கை அடைய இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் இப்பொழுது அரைவாசி தூரத்தைத்தான் தாண்டியிருக்கின்றேன். இன்னும் நீண்ட தூரப் பயணம் இருக்கின்றது.

*உங்களுக்குள் ஒரு தனித்துவமான அடையாளத்தை நீங்கள் எவ்வாறு ஏற்படுத்திக்கொண்டீர்கள்?
பரதநாட்டியத்தின் அடிப்படையை மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு உரிய பாணியை நான் உருவாக்கிக் கொண்டதால்தான் என்னை இன்று தனித்துக் காட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எனது கடுமையான உழைப்பும் பரதநாட்டியத்தை நான் ஆத்மார்த்தமாக கற்றுக்கொண்டதும் தான் காரணம். எனதுகுடும்பத்தினரது ஒத்துழைப்பும்தான் என்னை இன்று இந்த இடத்திற்குகொண்டு வந்திருக்கின்றது.


*அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உங்களது நிகழ்ச்சி
பற்றி............?

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி பத்திரிகையின் ஏற்பாட்டில், இந்தியகலாசார நிலையத்தின் அனுசரணையுடன் என்னை இங்கு அழைத்திருந்தார்கள்.
உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. சுமார் 4000 மக்கள் வரை வந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்திருக்கின்றார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
நாம் சாந்தமாகக் கொடுக்கும் பொழுது மக்களின் மனங்களும் நிறைவடைகின்றன. நமக்கு அதில் திருப்தியும் கிடைக்கும்.

*வெளிநாடுகள் பலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றீர்கள்.
உங்கள் பரதநாட்டியத்திற்குக் கிடைத்த வரவேற்பு எப்படி
இருக்கின்றது?

இந்திய அரசின் கலாசார உறவுகள் அமைப்பின் அனுசரணையுடன் ஜப் பான், மெக்சிக்கோ, பனாமா, கொலம்பியா, அமெரிக்கா, கௌதமாலா, வெனிசுலா, ரஷ்யா போன்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி
வருகின்றேன். கூடுதலாக அங்குள்ள தமிழ் மாணவர்கள் பரதநாட்டியத்தை மிகவும் விரும்பிப் படிக்கின்றார்கள். அரங்கேற்றங்களும் செய்கின்றார்கள். அங்கு நிகழ்ச்சிகளை நடத்தும்போது
எனக்கு மிகவும் வரவேற்புக்கிடைக்கின்றது.

*உங்களுக்கு கிடைத்த விருதுகள்...?
இலங்கை அரசின் கலாசார நிலையத்தால் 1998 இல் "பரத ரத்னா' விருது, "ஜய ஜய கங்கை' நிகழ்வுக்காக 1992 இல் இந்திய அரசாங்க கலாசார நிலையத்தினால் சான்றிதழ், அகில இந்திய தேசிய
ஒற்றுமைக்கான தேசிய திறனாற்றல் விருது, 2001 ஏப்ரல் மாதத்தின் அதிசிறந்த நடனக் கலை ஞர், சென்னை மியூஸிக் அகடமியின் "அதிசிறந்த நடனத் தாரகை' விருது, சென்னை ஸ்ரீ ராகம்
நுண்கலை நிலைய "பாலசரஸ்வதி' விருது, 2001இல் சென்னை கார்த்திக் நுண்கலை நிலைய "நடன மாமணி' விருது போன்ற விருதுகள்கிடைத்துள்ளன. ஒவ்வொரு விருது கிடைக்கும் பொழுதும் புதுமையாக
ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...