Sunday, April 26, 2009

தமிழீழம் தமிழனால் சாத்தியமா?

இந்தியாவின் தேர்தல் ஒரு புறம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் மறுபுறம் என்று இன்று காதுகளையும் மனங்களையும் காயப்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்கள் ஆயிரக்கணக்கு.


ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

(நீண்ட நாட்களாக பதிவுகள் இட முடியாமல் வேலைப்பழு என்ன செய்யமுடியும் உங்களை ஏமாற்றக்கூடாதே. அரசியல் தலைவர்கள்தான் ஏமாற்றுவார்கள் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். தினமும் பதிவு இட வேண்டும் என்றுதான் நினைப்பேன் முடியாமல் போய்விடும். இந்தப் பதிவும் இரவு 2 மணியளவில்தான் பதியவேண்டிய சூழ்நிலை)

நேற்று ஒரு செய்தியைக் கேட்டு புல்லரித்துப் போனேன் ஒரு நிமிடம் எனது கையை நானே கிள்ளிப் பார்த்துவிட்டேன் என்றால் பாருங்களன்.

தனிஈழம்தான் தமிழர்களுக்குத் தீர்வு என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இவ்வளவு காலமும் உலகத் தமிழர்களின் தலைவன் என்று தன்னை பெருமையோடு கூறிக்கொண்டிருந்த கருணாநிதிக்குக் கூட இந்தச் செய்தி ஒரு இடியாகவேத்தான் இருக்கும்.

வைகோவை பொடா சட்டத்தில் உள்ளுக்குத் தள்ளியதும் இந்த ஜெயலலிதாதான் ஆனால் இன்று வைகோவுடன் கூட்டும் தனித் தமிழீழந்தான் தீர்வு என்றும் சொல்லியிருக்கின்றார் என்றால் அவரின் மனதில் ஏற்பட்ட மாற்றமா? இல்லை இதுவும் ஒரு தேர்தல் வியூகமா என்று தெரியவில்லை.

கருணாநிதியின் கபடநாடகங்கள் அரங்கேற்றப்பட்டு இன்று தோல்வியில் முடிந்து நிற்கின்றது. சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களும் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் இராணுவம் விடுகின்றது என்று கலைஞர் ரி.வி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது.

முன்பு சினிமாக்காரர்களின் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் யார் நேரடியாக ஒளிபரப்புவது என்ற போட்டியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்த கருணாநிதி அரசாங்கம் இன்று ஈழம் தொடர்பான செய்திகளை மூடி மறைக்கின்றது என்றால் சோனியாவுக்கு பயந்துதான் இவ்வளவும் செய்கின்றார் இந்த கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் சொன்னதுதான் உண்மை என்று தோன்றுகின்றது.


6 கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ் நாட்டில் ஒரு கோடி தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் ஈழப்பிரச்சினைக்கு எப்போதே தீர்வு கிடைத்திருக்கும்.ஆனால் 100 தமிழனுக்கு பிரச்சினை என்றால் ஒரு தமிழன்õதான் குரல் கொடுகின்றான்.

ஒரு ராஜீவ் காந்தியை கொண்டதற்காக ஒரு இனத்தையே அழிக்கின்றார் சோனியா காந்தி.
கர்நாடகத்தில் பிரச்சினையென்றால் முழுக்கர்நாடகமே கொந்தழிக்கின்றது.

சீக்கியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முழு சீக்கிய இனமுமே கலவரத்தில் ஈடுபடுகின்றது.


ஆனால் ஒரு தமிழனுக்கு பிரச்சினை என்றால்????????


அண்மையில் இலங்கை வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருந்த கருத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இந்தப் பிரச்சினையை கையாண்டிருந்தால் எப்போதே தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் இன்று ஒற்றுமையாக இருக்கின்றார்களா என்றுதெரியவில்லை.


தமது சுகபோக வாழ்க்கைக்கும் பணத்திற்குமாக தமிழன் இன்று விலைபோய்க்கொண்டுதான் இருக்கின்றான்.

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் என்றால் இன்று பிரபாகரனுக்கு எத்தனை எட்டப்பர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்தமாக போராட்டினால்தான் அந்த இனத்திற்கு விடுதலை கிடைக்கும்.

ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருபோதும் தமிழன் என்ற இனம் போராடாது அப்படி போராடினால் அந்த இனம் உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.

4 comments:

Suresh Kumar said...

ஒரு இனத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்தமாக போராட்டினால்தான் அந்த இனத்திற்கு விடுதலை கிடைக்கும்.//////////////


ஆனால் இன்று ஒரு புறம் ஆயுத போராட்டமாகவும் மறுபுறம் மக்கள் புரட்சியாகவும் மாறி விட்டது இதுவே நல்ல ஒரு முன்னேற்றம் தான் காலங்கள் மாறும் தமிழ் ஈழம் வெல்லும் .

http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_26.html

Anonymous said...

ஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ஒன்று
இந்த பதிவில் இருக்கிறது .படித்து உங்கள் கருத்தை எழுதவும்
http://tamizhinithu.blogspot.com/2009/04/blog-post_05.html

NAMNAADHU said...

முடியும்..

இன்னமும் முடியாதது எதனால்..

எட்டப்பன் கெட்டுப் போகவில்லை..

கக்கத்தில் இருந்தே கருணா பிறந்தான்..

கக்கத்தில் ஒன்று கற்பழிப்புக்கு இன்னொன்று..
இடக்ளஸ்முதல் கருணாவரை இன்று
இலட்சோப இலட்சங்களில் வாழ்க்கை..

கூட்டிச் செல்லப்பட்டவர்கள் எங்கே..

சிவராமைக் கொன்றவனுக்கு வாகனமும்
தொலைபேசி வைத்திருவனுமே கொலையாளிகள்..

நிமில ராசனைக் கொன்றவன்
பிரிட்டனில் நித்திரை கொள்கிறான்..

யோசப், குமார், ரவிராசன், ஐயகோ..
இன்னும் எத்தனை எத்தனை..
தமிழ் வல்லாளர்கள்..

எட்டப்பர்கள்.. இவர்களை யாருக்காகக் கொன்றார்கள்..?

இந்திரா வாரிசுகளுக்கும், இலங்கா அரக்கனுக்காகவும் தான்..!

இந்த எட்டப்பன்கள் இத்தனை மக்கள் இறந்தும்
வாய்திறந்தார்களா..?

புலிகளை அழித்து எலிகளோடு உறைவதற்காய்..
இந்த எட்டப்பர்கள்..

எந்த வரலாற்றும் இல்லாத இவர்களால்

இவர்களை வைத்தே
இந்தியா புலனாய்கிறது..

இந்தியாவால் பிடிக்க
இராசபக்சா கொன்று தள்ளுகிறான்..

குண்டுகளை
கண்டுபிடிக்கும் கதுவீகளை அள்ளிக் கொடுக்கிறது..
இந்தியா..

உலக நாடுகள் எங்கும், தமிழகத்திலும்
போரை நிறுத்தச் சொல்கிறார்கள்..

டெல்லி மட்டும் இலங்கைக்குப்போய்
நல்லாக அடி என்றுவிட்டு வருகிறார்கள்..

எட்டப்பன்களாலும், கெட்டப்பன்களாலும்
இன்னும் தமிழீழம் வெல்லப்படவில்லை..

ஆனால் வென்றே தீரும்..

எட்டப்பனும் கெட்டப்பனும்
துட்டப்பன்களும்
துடைத்தெறியப்படும் நாட்கள்
தொலைவில் இல்லை..

-எல்லாளன்.

Anonymous said...

எல்லாளன் நீங்கள் சொல்வது நடந்தால் முதலில் சந்தோஷப்படுவேன்
ஆனால் அது சாத்தியமற்றது.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...