Sunday, April 12, 2009

சிந்திக்க வேண்டிய சித்திரை


தமிழர்களின் புதுவருடப் பிறப்பு நாளை உலகத் தமிழர்களின் தமிழ் முதலாம் நாள் இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்பு சித்திரை வருடப்பிறப்பு என்றால் எத்தனை சந்தோஷம் ஈழத்தமிழனுக்கு.


ஆனால் இன்று ஈழத்தமிழன் சொல்லொண துயரத்தில் இருக்கின்றான் அவனது இருப்புக் கூட கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை மலரப்போகும் விரோதி வருடம் ஈழத்தமிழனுக்கு என்ன செய்யப்போகின்றதோ தெரியவில்லை.


இன்னொரு சோமாலியா போல் முல்லைத்தீவில் பஞ்சம் பட்டிணி மக்களை வாட்டுகின்றது உணவுப்பொருட்களின் விலையோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றது.சிங்களப் பேரினவாதம் விடுதலைப் புலிகளையும் தமிழனையும் அழித்து விட்டுத்தான் தனது சிஙக்ள புதுவருடத்தைக் கொண்டாட திட்டமிட்டிருக்கின்றது.


தமிழனைக் கொன்று குவித்து அவனது இரத்தத்தில் சுகம் காணத் துடிக்கின்றது. விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விட்டதாக நினைக்கின்றது சிங்களப் பேரினவாதம்.


ஆனால் அது இன்னும் விரிவடைந்து வந்து ஒரு ஏழுச்சி நிலையில் நிற்கின்றது. ஆயுதப் போராட்ட ரீதியில் புலிகள் தோல்வியை அடைந்திருப்பது உண்மைதான்.


ஆனால் அவர்களை உலகம் அங்கீரிக்கின்ற ஒரு நிலையை இன்று புலம்பெயர் தமிழர்கள் செய்துவருகின்ற ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் உணர்த்துகின்றன.


வீட்டின் ஒரு கோடியில் இருந்த தமிழீழத் தேசியக் கொடி இன்று உலகத்தின் அத்தனை கோடிக்கரைகளையும் தொட்டு நின்று பறக்கின்றது.


ஒரு புறம் உலகப் பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் ஈழத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலை தமிழனின் வாழ்க்கைக்கு எப்போது நிம்மதி கிடைக்கப்போகின்றதோ வாழப் பிறந்தவனா இல்லை சாகப் பிறந்தவனா தமிழனா என்று எண்ணத் தோன்றுகின்றது.தமிழர்கள் ஒன்று பட்டால் இந்த சித்திரையில்லை எத்தனை சித்திரைகள் வந்தாலும் தமிழனை அழிக்க முடியாது.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...