Saturday, November 8, 2008

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே

இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே
இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவரசர்களுக்கு முடிசூட்டும் விழாவும் விழாவில் ஏற்பட்ட சறுக்கல்களும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ஏன் என்று நீங்கள் கேட்கிறது புரிகிறது.அன்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும்சரி சக்தி ரி.வியில் பார்த்தவர்களும் சரி நிகழ்ச்சியின் ஏற்பாட்டிலும் சரி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மிகவும் சிறப்பாக செய்தார்களா?அவர்கள் நிகழ்ச்சிய நடத்துவதில் இருந்த ஆர்வத்தைக்காட்டிலும் ஏதோ மாட்டு மந்தையை அடுக்குவது போன்று காட்டுக்கத்தல் இருக்கிறதே அதை ரசிக்க ரசிகர்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டார்கள்.குறிப்பாக சக்தி எப்.எம் பொறுப்பாளர் மாயா ( உண்மையான பெயர் மாயாண்டி) அவர் மேடை நிகழ்ச்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்துதான் செய்தாரா?அல்லது வடிவேலுமாதிரி எதாவது காமடி கிமடி பண்ணினாரா என்று தெரியவில்லை.அவர் உச்சரிக்கும் பல வார்த்தைகள் சரியில்லை குறிப்பாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊதியம் கொடுக்கபோகிறோம் என்று அறிவித்தார்.இவரை எல்லாம் யார் மேடை நிகழ்ச்சிக்கு விட்டது?.................................................... இந்த புள்ளி ஏன் இட்டேன் என்றால் வார்த்தைகளால் சொல்ல முடியாத தவறுகள் மயாவில்.
கஜமுகன் ஏனோ தானோ என்று அடிக்கடி விளம்பர இடைவேளை சொல்வதில்லையே கவனமாக இருந்தார்.
பிரியா சக்தி ரி.வி( சக்தி ரி.வியில் வேற அறிவிப்பாளர்கள் இல்லைப்போல)தனக்கும் மேடை நிகழ்ச்சியை நடத்தும் திறமை இருக்கு என்று காட்டிக்கொண்டு திருவிழாவில் காணாமல் போன குழந்தை எவ்வாறு கத்துமோ அவ்வாறு இருந்தது அவரது அறிவிப்பும் ஏனோ தனக்கும் காமடி பண்ண முடியும் என்று ரை பண்ணியிருக்கிறா போலா.
பாராட்டக்கூடிய சில விடயங்கள்
1. நமது கலைஞர்களை ஊக்குவித்தமை
2. இறுதி நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைக்காமை
3. நமது பாடகர்களை நடுவர்களா பயன் படுத்தியது வரவேற்கத்தக்கது
4. இசை இளவரசர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து இவ்வளவு காலமும் நடத்தியமை வரவேற்கத்தக்கது.
சக்தி ரி .வி. இசை இளவரசர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷியா எங்கே?இசை இளவரசர்கள் முடிசூட்டியவர்களுக்கும் முடிசூட்டாதவர்கள் தழைத்தவர்கள் அல்ல அனைவரும் திறமை சாளிகள் என்றே தெரிகிறது.ஏதோ இந்தியா தரத்துடன் ஒப்பிடாமல் நமது கலைஞர்களை நாம் வளர்ப்போம் வாழ்த்துவோம் .

5 comments:

Anonymous said...

வாழ்க வளமுடன்......
(யாரோ ஒருவன்)

வந்தியத்தேவன் said...

இதனைப் பற்றி எழுத இருந்தேன் ஆனாலும் விட்டுவிட்டேன் எழுதியும் திருந்தாத ஜென்மங்கள் சக்தி ரிவிகாரர்கள்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

உண்மையில் நானும் பார்த்து தலையிலடித்துக்கொண்டு நிகழ்ச்சி இது.
மாயா சத்தி வானொலியோடு நின்றுக்கொண்டால் சரி என்று தோன்றுகிறது. அவர் இலங்கை இரசிகர்களை கிள்ளுக்கீரை என்று நினைத்துக்கொண்டாரோ தெரியவில்லை. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஒரு திரைப்படத்தில் வடிவேலு அல்லது கவுண்டமணி திரையில் தோன்றி பேச ஆரம்பிக்கும் முன்னரே சிரிக்க ஆரம்பித்து விடுவர்.ஆனால் இலங்கையில் உள்ள இரசிகர்கள் நகைச்சுவை இருந்தால் மட்டுமே இரசிக்கும் திறனுடவயவர்கள்.சும்மா காட்டுக்கத்தலுக்கும் குரங்கு சேஷ்டைகளுக்கெல்லாம் சிரிப்பவர்கள் அல்லர் என்பது மாயாவுக்கு தெரியவில்லை போலும்.மண்டபத்தில் இருப்பவர்களை சிரிக்க வைக்க நகைச்சுவை என்ற பெயரில் அவர் செய்த விடயங்களை நினைத்து வேதனை தான் படவேண்டியுள்ளது. பாவம் கஜனும் ப்ரியாவும் அவர்களை இவர் பேசவிடவேயில்லை. (எங்க வலைப்பதிவெல்லாம் பார்க்க மாட்டிங்களோ?)

Anonymous said...

cool,i didnt read the topic but my friend is great good luck

LYDIA

Anonymous said...

நண்பன் ஆதியின் கருத்துக்கள் வெளிப்படையாக உள்ளது. அவர் சார்ந்த கருத்துக்களாயினும் சில சருக்கள்கள் உள்ளன. சற்று சிந்திப்பாராயின் சறுக்கள்கள் புரியும். இன்னும் சிறைய தீட்ட வாழ்த்துக்கள்

தினா கொழும்பு 14.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...