Saturday, July 23, 2022

இது மக்களுடைய பலம்



ஊரடங்கு சட்டம் போட்டாலும் கொழும்புக்கு நாங்கள் வந்தோம். நாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை. யாருடைய பலம் இது.மக்களுடைய பலம் இது. இதை யாராலும்  அசைக்க முடியாது. இந்தப் போராட்டதை நாம் நிறுத்தப்போவதில்லை. மஹிந்த குடும்ப ஆட்சியினால்தான் இன்று மக்கள்  கஷ்டத்தில் விழுந்துள்ளார்கள் என்று  காலிமுகத்திடலில் போராட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்தார்கள்.

கொழும்பில் இடம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள்  விசேடமாக வழங்கிய கருத்துக்களை இங்கு தருகின்றோம்.


கோட்டா கோ கம போராட்டக்களத்தின் ஏற்பாட்டாளர்

நாட்டில் ஆட்சிமாற்றமொன்றை ஏப்ரல் 09 ஆம் திகதி முதல் 94 நாட்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வ


ருகின்றோம். எனினும் எமது கோரிக்கைகைள செவிமடுக்காத வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர். நாட்டு மக்கள் வரிசையில் நிற்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் எமது மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினர். முழு நாடும் பாரிய அழிவுப் பாதையை நோக்கி சென்றது. நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தது.

நாட்டில் தற்போது முறைமை மாற்றமொன்றையே நாம் எதிர்பார்க்கின்றோம். எவ்வித பிரயோசனமுமற்ற முறைமையே நாட்டில் காணப்படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகுபவர்கள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும். நீண்டகால முறைமையுடன் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். நாடு என்ற முறையில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு தேவையான  வளங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் தற்போது ஏற்பட்டுள்ளது. 13ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை யார் முன்னோக்கிக் கொண்டு செல்லவுள்ளார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். சகல துறைகளிலும் வளமிக்க நாடாக எமது நாட்டை மாற்றும் வரை எமது போராட்டம் தொடரும்.


பௌத்த துறவி சுமணரத்ன



பௌத்த பிக்குகளுக்கும் அரசியல் காணப்படுகின்றது. எனினும் அது கட்சிசார்ந்த அரசியல் அல்ல. ஆனால் தற்போது ஒரு சில பௌத்த தேரர்கள் கட்சி அரசியலையே முன்னெடுக்கின்றனர். இதனால் என்னை போன்ற பௌத்த தேரர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சில தேரர்களின் செயற்பாடுகள் காரணமாக தேரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. வழமையாக பஸ்களில் நாங்கள் பயணித்தால் எம்மை கண்டவுடன் பயணிகள் எழுந்து அவர்கள் ஆசனத்தை எமக்கு வழங்குவார்கள். ஆனால் தற்போது அந்த கௌரவம் கூட எமக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு ஒரு சில தேரர்களின் அரசியல் செயற்பாடுகளே காரணம். அத்துடன் நாட்டின் தலைவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். மக்கள் குறித்து சிந்திக்கும் தலைவர்களை காண முடியவில்லை. இவ்வாறானவ ஆட்சியாளர்கள் நாட்டு மக்களே பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எரிவாயு, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனது சகோதரர் இராணுவத்தில் கடமைபுரிகின்றார். அவர் அண்மையில் ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றபோது அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் வைத்தியசாலையில் இருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழத்தான் வேண்டும். எனினும் நாட்டு மக்கள் மருந்துகள் இல்லாமல், வரிசையில் நின்று உயிரழக்கும்போது அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் உருவாக வேண்டும்.


 ஸ்ரீதரக்குமார்


கோட்டா பதவி விலகுவாரா என்பதே காலையில் எழுந்தவுடன் நினைவுக்கு வரும் ஒரு விடயமாக உள்ளது. கோட்டா விலகுவாரா இல்லையா என்பதை அடிப்படையாக வைத்தே நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு எரிபொருள் இல்லை. மனைவி மண்ணெண்ணெய் வரிசையில் பல மணித்தியாலங்கள் காத்திருக்கின்றால். எதனையும் செய்துகொள்ள முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டில் முறைமை மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்-

இன்று தினக் கூலிகளாக வேலை செய்பவர்களுக்கு அவர்களின் வருமானத்தை விட செலவு அதிகமாக காணப்படுகின்றது. ஒரு கிலோ பால்மா பைக்கட் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு தினக் கூலியின் சம்பளம் வெறும் 1000 ரூபாவாகத்தான் இருக்கின்றது.இப்படி இருக்கையில் எப்படி குடும்பத்தை நடத்தி செல்ல முடியும்.

சாதாரண ஒரு காச்சல் வந்தால் கூட அதற்கான மருந்தை பெறுவது என்றாலும் நாங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருந்தைக் கூட நாங்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைகொடுத்துத்தான் வாங்க முடிகின்றது. இதனால்தான் நாங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கின்றோம் என்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமான

அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம்

அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ அலுவகம் மற்றும் பிரதம  மந்திரி ஆகியோரின் அலுவலகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே தற்போது உள்ளது. அங்கு வரும் மக்களை வழி நடத்தி உணவு வழங்கி  வரிசையிலேயே நின்று பார்வையிடுமாறு அறிவுறுத்துகின்றனர்.

முற்றுகையிட்டு 2 நாட்களின்பின் நேற்றைய நாளான மூன்றாவது நாளில் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அதிபர் மற்றும் பிரதமரின் முக்கியமான அறைகளை பூட்டி மக்கள் பார்வைக்கு தடைவிதித்து. அதற்கு பாதுகாப்பு வழங்கிவருகின்றனர். இரவு பகலாக அங்கு தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் மக்களுக்கு உரிய தேவைகளை வழங்கிவருகின்றனர்.

Tuesday, June 14, 2022

 இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டம் 



இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி இரண்டாவது மாதத்தில் காலடி எடுத்துவைத்துக்கின்றது கோட்டா கோ கம (Gota Go Home)போராட்டம் . இலங்கை பெரும் அரசியல் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த நெருக்கடிக்கு அரசியல் தலைமைகளே பொறுப்பு கூறவேண்டிய நிலை காணப்படுகின்றது. சீரற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் தலைமைத்துவம் இன்மையால் இலங்கை இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம்  எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பால்மா வகைகளின் தட்டுப்பாடுகாரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பத்தார்கள்.அரசாங்கததை பதவி விலகுமாறு கோரியும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை வீடு செல்லுமாறு வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் முதல் ஆரம்பப்புள்ளியே காலிமுகத்திடலில்  பல்கலைக்கழக மாணவர்களினால்  ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கோம் போராட்டம். காலிமுகத்திடலுக்கு கோட்டா கோ கோம் எனும் கிராமம்  ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டது.  இரவு பகலாக  தொடர் போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கின நாளுக்கு நாள் இந்த காலிமுகத்திடல் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.
இதற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்துக்கு வலுசேர்த்தனர். ஜனாதிபதி கோட்டா பாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொழிற்சங்கங்கள்  வேலைபகிஷ்கரிப்பில் ஈடுபட்டன. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. போக்குவரத்துத்துக்கள்  ஸ்தம்பிதமடையத் தொடங்கியது. மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக உருவெடுத்தது காலிமுகத்திடல் போராட்டம்.

கோட்டா கோ கம (Gota Go Home)

கோட்டா கோ கோம்  காலிமுகத்திடல் போராட்டம் மிகவும் வித்தியாசமான முறையிலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள்  தமது கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்கள் எழுப்பியும்  வீதி நாடகங்கள் பாடல்கள் மூலமாகவும் தமது எதிர்ப்பினை காட்டிவருகின்றனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களம் மிகவும் வித்தியாசமான ஒருபோராட்டகளமாகவே காணப்படுகின்றது. இனம், மதம், பேதங்கள் இன்றி அனைத்து மக்களும், மத தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அமைதி வழியில் மக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக  சுமார் 100 இக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்து  போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உண்பது உறங்குவது  அனைத்தும் போராட்டக்களத்தில்தான். அங்கேய  உடுப்புக்களை துவைத்து அங்கேயே காயவைத்து ஆடைகளை அணிகின்றார்கள். அவர்களுக்கான  கழிவறை வசதிகள் ( மொபைல் டொய்லெட்) காலை மதியம் இரவு என மூன்று வேளைகளும்  உணவுகள்  வழங்கப்படுகின்றன. குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் பானங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவம்  இலவசமாக போன்கள் சார்ஜ் செய்து கொடுகின்றார்கள்.  சூரிய ஒளி மூலம் மீன்சாரம் கோட்டா கோ கமவுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் வழங்கப்படுகின்றது. அங்கு தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் காலை எழுந்தவுடனேயே போராத்தில் ஈடுபடுகின்றார்கள். ஆர்ப்பாட்டத்தில் அமைந்துள்ள கூடாரங்களில்  சட்டம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு, தலைமைத்துவ பண்புகள், பெண் தலைமைத்துவம், மனித உரிமை, நாட்டின் குடிமகன் மன்றம் (CITIZEN FORUM)   நூலகம் போன்ற விடயங்கள்  கூடாரங்கள் அமைத்து மக்களுக்கு தெளிவூட்டப்படுகின்றது.


  இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்
இங்கு அமைக்கப்பட்டுள்ள நூலங்களில் ஸ்டோரி டெல்லிங்  மூலம் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வினையும் சிறுவர் சம்பந்தமான பிரச்சினைகளுக்ககான கலந்துரையாடல்களும் அடுத்த தலைமுறையினருக்கான தகவல்களையும் வழங்குகின்றோம் .
இலங்கையில் ஒரு குடிமகன் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினை என்னவென்றால் சாதாரணதபன குடிமகன் வாழ்க்கை கொண்டு செல்வதற்கு கஷ்டமாகவே இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலரின் வீழ்ச்சியால் இலங்கை அரசாங்கம் அதிகளவிலான பணத்தை அச்சடித்துள்ளார்கள். அதற்கான தீர்வினை மேற்கொள்ளாமல் தொடர்சியாக பணத்தை அச்சடிப்பதால்  தொடர்ந்தும்  அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான விலை உயர்வுமே இன்று எங்களை பாதிக்கின்றது. குறிப்பாக அன்றாட கூலித் தொழில் செய்பவர்களின் நிலைமை ஒரு நேரத்துக்கே சாப்பிடுவதற்கு வழியில்லாமல் இருக்கின்றார். ஆகவே ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்றார்.

இது ஒரு  அமைதியான போராட்டம் என்பதால் நாம் நின்று நிதானமாக ஒரு டெஸ் கிரிக்கெட் மாதிரி போராட வேண்டும்.  பகலில் வேலைகளுக்கு செல்பவர்கள் கூட தங்களது வேலையை முடித்து விட்டு இரவில் வந்து எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றார்கள். கலைஞர்கள் சட்டத்தரணிகள் மாணவர்கள் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள் என  அனைத்து துறைசார்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சுயநல அரசியல் வாதிகளினால் நாடு அதள பாதாளத்தக்கு சென்றுகொண்டிருக்கின்றது. ராஜபக்ஷ குடும்பம் பதவிகளை விட்டு விலகவேண்டும். ஊழல் அரசியல் வாதிகள் பதவிகளை துறவுங்கள். அரசியல் திருடர்கள் நாட்டைகொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்.  என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருக்கின்றார்கள்.
குறிப்பாக கோட்டா கோ கம போராட்ட களத்தில் அதிகளவான பெண்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டிவருகின்றனர். நாட்டை மேம்படுத்துவார் என்றுதான் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் நாட்டை மேம்படுத்தவில்லை. அவரது குடும்பத்தைத்தான் மேம்படுத்தியிருக்கிறார். நாட்டை எத்தியோப்பியா சோமாலியா போன்ற நாடுகளைப் போல ஆக்கிவிடாமல் ஆட்சியாளர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  கோட்டாபா ராஜபக்ஷவுக்கு வாக்களித்த ஒருவர் தெரிவித்தார்.


போராட்டக்காரர்களது கோரிக்கைகள்

*உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலக வேண்டும்.
* பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.
*அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.
* இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
*ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

 பேராசிரியர் சர்வேஸ்வரன்

கொழும்பு பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் சர்வேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்  பிரதமர் பதவி விலக வேண்டும்  பாராளு





மன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என்று போராடுகின்றார்கள். இதில் ஜனாதிபதி தானாக பதவி விலகினாலே தவிர அவரை பதவி விலக்க முடியாது. அது அரசியல் அமைப்புக்கு முரணானது.எந்த வகையிலும் ஜனாதிபதி தனது பதவியை விட்டு விலகமாட்டார். அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து அதை நீதிமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க முடியும். அது சாத்தியமற்றது. பிரதமரை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரரேணை கொண்டு வந்து பதவி விலக்க முடியும்.  இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று 2 வருடங்கள்தான். 5 வருடத்தில் அவர்களுக்கு இப்பொழுது 2 வருடங்கள்தான் முடிவடைந்திருக்கின்றது. இவர்களில் பலர் அடுத்த முறை தேர்தலில் வெற்றிபெறப்போவதில்லை. இதனால் அவர்கள் பதவி விலகமாட்டார்கள். ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம். ஆனால் அதுவும் தற்போதைய நிலையில் சாத்தியமற்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால்தான் இன்று நாடு மோசமான நிலைக்கு வந்துள்ளது. தன்னிச்சையான நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் இதனால் அந்த நிறுவனங்கள்  நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. உர பயன்பாட்டை நிறுத்தியமை இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனாலேயே மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
போராட்டக்காரர்களை பொறுத்தமட்டத்தில்  அரசியல் அமைப்புக்கு அமைவாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கோஷங்கள் போடுதல் ,பாததைகள் பிடித்தல் , ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு முரணாக வன்முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபடாமல் இருப்பது இங்கு வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

Monday, February 11, 2019

இராவணன் குகை...





இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில்  மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.  அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை....
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து  2கிலோ மீற்றர்  தொலைவான மலையில்தான் இந்த இராவணா குகை அமைந்திருக்கின்றது.  இராவணன் குகை  50 அடி அகலமும் 150 அடி நீளமும்  60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.




இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணிவரைதான் செல்ல முடியும். இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்துவிடுவார்கள் ....இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.... செங்குத்தாகவும் சமாந்திரமாகவும்  வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள்  அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் அரை மணி நேரப்பயணத்தில்  உச்சியை அடைந்துவிடலாம்.
குகைக்கு செல்லும் பாதையில்  குருவிகளின் சத்தங்களும் நீர் வீழ்ச்சிகளின் சத்தங்கள் மனங்களை சாந்தப்படுத்துகின்றன. .....
உயரத்தை சென்றடை  ஏதோ மகிழ்ச்சி மெது மெதுவாக குகையை நோக்கி கால்கள் நகர்கின்றன.... சிறிது தூரத்தில் படிகற்கள் இல்லாமல் பாறைகளின் நடுவே  செல்லவேண்டும்....... அதன்பின்  இருண்ட குகைகள் செல்கின்றோம்.... ஒரே இருட்டு ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கிவைத்தால் போல் குகை... அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய  ஔி உள்ளே நுழைகின்றது......

ஞானிகள் முனிவர்கள் ஏன் குகைகள் தியானம் செய்தார்கள் என்ற என்பது அந்த  குகைக்குள் செல்லும் போது மனதில் ஒரு அமைதி சிறிது தூரம் உள்ளே நகரும்போது குருவிகள் சத்தம் மட்டுமே கேட்கின்றது..... குகை ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மனதில்  சந்தோசம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த குகைக்கு சென்றுவந்தால் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களே......

https://youtu.be/ifKCVf6gzzq


Sunday, August 27, 2017

யார் தமிழர்களின் தலைவர்? பிக் பஸ்....... (02)

முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்வதற்காக பஸ் நிலையம் சென்றேன்… அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நிறைந்திருந்தால்…. பஸ் கிடைப்பதற்கு கஷ்டமாக இருந்தது…. இரவு 12 மணியளவில்தான் ஒரு பஸ் கிடைத்தது. அடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறி ஒரு சீட் பிடித்து அமர்ந்துகொண்டேன்….
பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது…. பக்கத்தில் ஒரு சகோத மொழியைச் சேர்ந்த நபர் ஒருவரர் வந்து அமர்ந்தகொண்டார்… அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது….

நான் மெல்ல அவரிடம் நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டேன்  அதற்கு அவர்
நான் யாழ்ப்பாணத்திற்கு வியாபார விடயமாக செல்கின்றேன் என்றார்….
ஆ…. அப்படியா ரொம்ப நல்லது என்றேன்….

அவரது சொந்த இடம் மாத்தறை…..
இருவரும் பரஸ்பரம் நலன்களை விசாரித்துக்கொண்டிருக்கும்போது….

அந்த சகோதர இன நபர் கேட்டார்…
தமிழர்களுக்கு ஏன் சலுகைகள் வேண்டும். நிர்வாகம் வேண்டும் என்று கேட்கின்றீர்கள் என்றார். உடனே நான் சொன்னேன். நீங்களும் இலங்கையர் நானும் இலங்கையர் என்றால் உங்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள். பதவிகள். நிர்வாக கட்டமைப்புக்கள் மாகாண சபை அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்தானே என்றேன்.

அதற்கு அந்த நபர்  …
நீங்கள் வடக்கு மாகாண சபையை ஒழுங்கா ஆட்சி செய்கின்றீர்கள். இல்லைத்தானே.. ஒரே ஊழலும் அமைச்சர்கள் பதவி விலகலும் முதலமைச்சர் ஒரு புறமும் கூட்டமைப்பு மறுபுறமுமாக சண்டைபிடித்துக்கொண்டுதானே இருக்கின்றீர்கள் மக்களுக்கு தேவையானதை எதையாவது செய்தீர்களா? மாகாண சபைக்கு கிடைக்கும் நீதிகள் கூட திரும்பிப்போகின்றதாமே… அவ்வாறு ஒரு வேலைத்திட்டமும் செய்யாமல் மக்களை ஏன் மாகாண சபை அமைச்சர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்று அந்த நபர் கேட்டபோது….
அதில் சில விடயங்களில் நாமும் ஒன்றுபடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம்..

அதற்கு காரணம் யார்? அரசியல் வாதிகளா? இல்லை நிர்வாக அதிகாரிகளா? இல்லை அமைச்சர்களா?  இல்லை சமூக விரோத குழுக்களா?
கலாசாரத்திலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் ஒரு காலத்தில் ஒரு கட்டமைப்புடனும் வாழ்ந்தவர்கள் இன்று தெறிகெட்டுப்போனதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்… இன்னொரு இனம்  எம்மவர்களை சாடுவதற்கு இடம் கொடுத்ததுயார்? என்று தொடர்ந்து மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

(சகோதர இனத்தவருடனான உரையாடலின் மிகுதி அடுத்த பதிவில்)

Sunday, August 13, 2017

பிக் பஸ்....... (01)




அடடடடா என்னடா அதை இதிலையும் எழுதுகின்றார்களா? என்னகொடுமை சரவணா என்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் வாய்க்குள் முணுமுணுப்பது விளங்குது… அது வேற இது வேற என்று சொன்னா நம்பவா போறீங்க…

சரி…. சுரி…விடயத்திற்கு வருவமே ஏன் வீண் அளப்பறை….. பிக் பஸ் என்றால் பெரி;ய பஸ்…… அட அதிலும் நாமும் பயணம் செய்து பார்போம் என்று கோட்டை பஸ் நிலையத்தி;ல்  களுத்துறைக்கு போகலாம் என்று அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஒருசீட்டைப்பிடித்து அமர்ந்துகொண்டேன்….
நம்மளுக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் இருந்தார்கள் அதில ஒருவனிடம் கேட்டேன் களுத்துறைக்கு நான் செல்கின்ற இடத்தை அவன் சொன்னான் எனக்கு தெரியாது… உங்களிடம் போன் இருக்கா என்று நான் ஆம் என்றேன் … உடனே அவன் கூகுல் மப்பை பார்த்து போங்கள் என்றான்.
நம்மலுக்கு கூள்தான் தெரியும் கூகிள் எங்கதெரியும் என்றேன்….

உடனே அந்த பையன் எனது போனை வாங்கி கூகிள் மப்பை டவுண்லோட் பண்ணி நாம  எந்த இடத்திற்கு பயணிக்கபோறமோ அந்த இடத்திற்கு வழிகாட்டிற விதத்தை சொல்லித்தான் தந்தான்….  விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று எனக்கு மறு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன்…
அவருக்கு வந்தது கோபம் என்னை அடிக்காத குறைதான்…. நீங்களும் உங்கட விஞ்ஞானமும் என்று கோபப்பட்டார்…..


ஏன் அப்படி கோபப்படுகின்றீர்கள் என்று கேட்டால்…..
அதுவா… வீட்டில் யாரும் என்னுடன் பேசுகின்றார்கள் இல்லை.
ஏன் வீட்டில்  சண்டைய என்றேன்….
இல்லை ஏல்லோரும் ஏதோ பேஸ் புக்காம் காலையில் எழுந்ததில இருந்து அதுகள் தூங்கும்மட்டும் அதோடுதானே இருக்கிதுகள்…. என்னத்தை சாப்பிடுதுகள் என்னதை குடிக்குதுகள் என்று அதுகளுக்கே தெரியாது எந்த நேரம் பார்த்தாலும் பேஸ்புக் அதில… அவன் இவ்வளவு லைக் போட்டிக்கான் இவன் இவ்வளவு லைக் போட்டிருக்கான் என்று சண்டைவேற…..

திடீர் என்று தூக்கத்தில சத்தம் போட்டு சிரிக்கிறார்கள்; ஏன் என்று போய் பார்த்தால் பேஸ் புக்கில ஜோக் போட்டிருக்காம் அதைபார்த்து சிரிக்கிறாங்க… இரவு 12 மணிக்கு பிறகு தூங்காமல் விடியும் மட்டும் பேஸ் புக்கில இருக்கிறதுகளாம் (கேட்டா நைட் டேட்டா இலவசமாம்.) அதனால் ஸ்கூலுக்கு கூட லேட்டாக போகிறது. அங்க போய் தூங்கி ரீச்சரிடம் அடிவே வாங்கிக்கட்டுறாங்;கள் என்று தனது ஆதங்கத்தை சொல்லி முடித்தார்.
அப்பதான் நான் யோசிச்சேன் குடும்பம் என்றால் எப்படி கூட்டாக இருந்து கதைத்து மகிழந்திருப்போம் இப்ப குடும்பத்தைவிட பெயர் ஊர் தெரியாத ஆணோடு பெண்ணும் தங்களது குடும்பத்தை பற்றி சொல்வதும் நல்லவர்களா கேட்டவர்களா என்று கூடதெரியாது உறவை வளர்த்துக்கொள்வதுமே இன்று பல குற்றங்களுக்கும்கொலைகளுக்கும் காரணமாகிப்போய்விடுகின்றது. ஏதையும் நாம் கவனத்தோடு இருந்தால்தான் நாம்  எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்..
அட களுத்துறை வந்துவிட்டது நான் இறங்குகின்றேன்…இந்துமுறை எனது அளப்பறையை நிறுத்திக்கொள்கின்றேன்… மீண்டும் அடுத்த பஸ்ஸில் சந்திக்கின்றேன்…








Tuesday, January 24, 2017

இலங்கையில் ஜல்லிக்கட்டு பேரணியும் விதண்டா வாதங்களும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள் தொடர்ந்து 7 நாட்களாக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் எழுச்சியை கண்டுள்ளனர்.. இளைஞர்கள் சமூகவலைத்தளங்களினூடாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். வெற்றியும் கண்டனர்.
தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகநாடுகள் பலவற்றில் இளைஞர்களும் மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் தான் இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு போன்ற இடங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு இலங்கையில் இளைஞர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பொழுது அந்த இளைஞர்களை கொச்சப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நான் இந்த பதிவை மேற்கொள்கின்றேன்……
தமிழக இளைஞர்கள ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராடத்த்தை அன்று ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மேற்கொண்டிருந்தால் அத்தனை உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். அப்படி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வீண் போராட்டம் என்று கொச்சைப்படுத்துகின்றனர்.
2009 ஆம் ஆண்டுதான் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்ட ஆண்டு. சமூகவலைத்தளங்கள் என்பது அறிமுகப்படுததப்பட்டு பெரிதும் இளைஞர்களால் அறியப்படாத ஆண்டாகவே இருந்தது. ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமூகவலைத்தளங்களில் பரவவும் இல்லை பேஸ்புக் டுவிட்டர் கடந்த 5 ஆண்டுகள்தான் மக்களிடத்தில் சென்றடைந்திருக்கின்றது அவ்வாறு இருக்கும்போது எப்படி இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்திருப்பார்கள் அறிவு ஜீவிகளே சொல்லுங்கள் பார்ப்பம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள்தான் மாறிமாறி ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக தமது கட்சிகள் சார்பாகவே ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன தவிர கட்சி பேதம் இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை.
இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கையில் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையத்தளத்தை பார்வையிட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் இது வசைபாடுபவர்களுக்கு தெரியாதா?
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அரசியல் சாராத இளைஞர்களே திரண்டு தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை உளவுத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். சிங்கள இணையத்தளம் ஒன்று கொழும்பில் புலிகள் வந்துவிட்டனர். இது அவர்களின் ஆர்ப்பாட்டம் என்று எழுதியிருந்தது.
தமிழக இளைஞர்களுக்கு நாம் ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று ஒரு நபர் பேஸ்புக்கில் கேட்டிருக்கின்றார்.
ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அண்ணன் முத்துக்குமார் தீக் குளித்தானே அவன்மட்டுமா எத்தனை தமிழக இளைஞர்கள் தீக்குளித்து தமது உயிரை நீத்தார்களே அதுயாருக்காக அவன் ஏன் தன் உயிரை எமக்காக தரவேண்டும். அவனும் தமிழன்தானே அவனுக்கு செய்யும் நன்றிக்கடன் கூட எமக்கு இல்லை.
(தமிழகம் எமக்கு செய்த உதவிகளை சொல்லப்போனால் அதற்கு ஒருபுத்தகமே போடலாம்)
நன்றி மறப்பது நன்றறன்று……
வசைபடுபவர்கள் இப்பவும் நண்டுகளாகவே இருக்கின்றனர்…….
(நண்டுக்கதை தெரியும்தானே எல்லோருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை)
இளைஞர்களை ஊக்கப்படுத்தாமல் அப்ப செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் இப்ப செய்திருக்கலாம் என்ன்? என்ன? கேள்வி முதலில் நீங்கள் வந்து எங்களுடன் களத்தில் இறங்குகள் வீட்டில் இருந்துகொண்டு பேஸ்புக்கில் போட்டுவீட்டு சோம்போறிகளாக இருக்காதீர்கள்…..
விரைவில் …. எமது நாட்டில் இடம்பெறும் உரிமைகளுக்காகவும் காலிமுகத்திடல்லிஎமது இளைஞர் கூட்டம் விரைவில் கூடும்….



காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...