Sunday, August 27, 2017

யார் தமிழர்களின் தலைவர்? பிக் பஸ்....... (02)

முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்வதற்காக பஸ் நிலையம் சென்றேன்… அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நிறைந்திருந்தால்…. பஸ் கிடைப்பதற்கு கஷ்டமாக இருந்தது…. இரவு 12 மணியளவில்தான் ஒரு பஸ் கிடைத்தது. அடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறி ஒரு சீட் பிடித்து அமர்ந்துகொண்டேன்….
பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது…. பக்கத்தில் ஒரு சகோத மொழியைச் சேர்ந்த நபர் ஒருவரர் வந்து அமர்ந்தகொண்டார்… அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது….

நான் மெல்ல அவரிடம் நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டேன்  அதற்கு அவர்
நான் யாழ்ப்பாணத்திற்கு வியாபார விடயமாக செல்கின்றேன் என்றார்….
ஆ…. அப்படியா ரொம்ப நல்லது என்றேன்….

அவரது சொந்த இடம் மாத்தறை…..
இருவரும் பரஸ்பரம் நலன்களை விசாரித்துக்கொண்டிருக்கும்போது….

அந்த சகோதர இன நபர் கேட்டார்…
தமிழர்களுக்கு ஏன் சலுகைகள் வேண்டும். நிர்வாகம் வேண்டும் என்று கேட்கின்றீர்கள் என்றார். உடனே நான் சொன்னேன். நீங்களும் இலங்கையர் நானும் இலங்கையர் என்றால் உங்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள். பதவிகள். நிர்வாக கட்டமைப்புக்கள் மாகாண சபை அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்தானே என்றேன்.

அதற்கு அந்த நபர்  …
நீங்கள் வடக்கு மாகாண சபையை ஒழுங்கா ஆட்சி செய்கின்றீர்கள். இல்லைத்தானே.. ஒரே ஊழலும் அமைச்சர்கள் பதவி விலகலும் முதலமைச்சர் ஒரு புறமும் கூட்டமைப்பு மறுபுறமுமாக சண்டைபிடித்துக்கொண்டுதானே இருக்கின்றீர்கள் மக்களுக்கு தேவையானதை எதையாவது செய்தீர்களா? மாகாண சபைக்கு கிடைக்கும் நீதிகள் கூட திரும்பிப்போகின்றதாமே… அவ்வாறு ஒரு வேலைத்திட்டமும் செய்யாமல் மக்களை ஏன் மாகாண சபை அமைச்சர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்று அந்த நபர் கேட்டபோது….
அதில் சில விடயங்களில் நாமும் ஒன்றுபடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம்..

அதற்கு காரணம் யார்? அரசியல் வாதிகளா? இல்லை நிர்வாக அதிகாரிகளா? இல்லை அமைச்சர்களா?  இல்லை சமூக விரோத குழுக்களா?
கலாசாரத்திலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் ஒரு காலத்தில் ஒரு கட்டமைப்புடனும் வாழ்ந்தவர்கள் இன்று தெறிகெட்டுப்போனதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்… இன்னொரு இனம்  எம்மவர்களை சாடுவதற்கு இடம் கொடுத்ததுயார்? என்று தொடர்ந்து மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

(சகோதர இனத்தவருடனான உரையாடலின் மிகுதி அடுத்த பதிவில்)

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...