Wednesday, August 10, 2022

'கோட்டா கோ கம'வில் இருந்து வெளியேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

 

 


 


கொழும்பு, காலிமுகத்திடல்  முன்னாள் அதிபர் கோத்தாபாய ராஜபக்ஷவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 'கோட்டா கோ கம'. இந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து இடம்பெற்று வந்தது. புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க  பதவியேற்றதன் பின்னர் போராட்டக்கார்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

இதனடிப்படையில் பல குழுக்காளக இயங்கிய போராட்டக்காரர்கள் பிரிவடைந்து சில குழுக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் ஒரு சில குழுக்கள் மட்டும் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திவந்தனர். இதன்அடிப்படையில் இறுதியாக இருந்த அனைவரும் நேற்று  வெளியேறினர்,வெளியேறிய போராட்டக்காரர்கள் இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் அனைத்த மக்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர்.

  
போராட்டக்காரர்கள் கருத்து

நாம் இங்கிருந்து வெளியேறினாலும் எமது போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம். அதன்படி நாம் முக்கிய 7 அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். அடக்குமுறைகளுக்கு எதிராக எழுச்சியடைவோம், அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும், மக்களாணை இல்லாத ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலகவேண்டும், மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்காத பாராளுமன்றத்தைக் கலைக்கப்பட்டு உடனடியாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும், நாட்டுமக்களின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்படவேண்டும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும், கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்தி அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணையவேண்டும் ஆகியவையே அந்த 7 அம்சங்களாகும் என்று குறிப்பிட்டனர்.

 

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...