கண்ணமா கண்ணாமா அழகுப்பூஞ்சிலை பாடல் இசையில் இந்த வரிகளைப் பொருத்திப்பாடினால் அழகோ தனி அழகு....
முருகா முருகா அலங்கார முருகனே
கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே
உன்னை நினைத்து எந்தன் உள்ளம் உருக்குதே....
கண்கள் கலங்கிடத்தான் உனையே எண்ணுதே
வரம் தருவாயோ பிணி நீங்க.... முருகா... கந்தா....நீயே
முருகா முருகா அலங்கார முருகனே
கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே.......
நல்லூரினிலே பதிகொண்ட வீரமான வேலனே
அப்பனுக்கு பாடம் சொன்ன சக்தியின் புதல்வனே
விநாயகன் சோதரா சூரனை வென்றியே
ஆறுபடை வீட்டிலிருந்து காக்கும் தெய்வமே..மே....
துன்பங்கள் நீக்கீடும் வடி வேலனே
முருகா முருகா முருகா சொல்லையா...
துன்பம் எப்போ நீங்கும் ஐயா.....
முருகா முருகா அலங்கார முருகனே
கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே
உன்னுடைய கண்பார்வை வேண்டியே
நித்தம் நித்தம் நானும் உந்தன் வாசால் தேடி வந்தனே.......
முருகா கந்தா வேலனே.....துன்பங்கள் நீக்கீடும் துயவனே....
முருகா அஅஅஅ முருகா....அலங்கார முருகனே
முருகா முருகா அலங்கார முருகனே
கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே
No comments:
Post a Comment