கமலஹாசனின் குரலில் பொன்னியின் செல்வனின் கதைச்சுருக்கத்தில் ஆரம்பமாகின்றது. வீரம் நிறைந்த சோழ நாட்டை ஆட்சிசெய்கின்ற சுந்தர சோழனின் புதல்வர்கள்தான் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) அருண்மொழிவருமன் (ஜெயம்ரவி ) குந்தவை (த்ரிஷா). சுந்தர சோழன் (பிரகாஷ்ராஜ் )நோய்வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் அடுத்த அரசனாக ஆதித்தகரிகாலனையே நியமிக்கலாம். ஆனால் அதற்கு எதிராக ஒரு சதி நடக்கின்றது என்று கதை ஆதித்தகரிகாலனை நோக்கி நகர்கின்றது. ஆதித்தகரிகாலனும் (விக்ரம்) வத்தியத்தேவனும்(கார்த்தி) சேர்ந்து போரில் வெற்றிகொள்கின்றனர். அந்த வெற்றியைத் தொடர்ந்து ஆதித்த கரிகாலன் வந்தியத் தேவனை அழைத்து நீ அவசரமாக தஞ்சை நோக்கி செல் அங்கு ஏதோ ஒரு பிரச்சினை நடக்கப்போகின்றது என்று உளவுத்தகவல் வந்திருக்கின்றது. மன்னருக்கும் இளவரசிக்கும் இரு ஓலைகளைக் கொடுத்து உனடியாக நீ சென்று பார்த்து வா என்று தனது வாளைக்கொடுத்து அனுப்புகின்றான்.
காஞ்சியிலிருந்து தஞ்சையை நோக்கி செல்கின்றான் வந்தியன் தேவன் ( அப்பொழு ஒலிக்கின்றது பொன்னி நதி பாடல்) தஞ்சையை அடைந்த வந்திய தேவனுக்கு அங்குள்ள குறுநில மன்னர்களும் பளுவேட்டையர்கள் (சரத்குமார்,பார்த்திபன்) ஆகியோர் இணைந்து சுந்தர சோழனின் அண்ணனின் மகனான மதுராந்தகனைதான் ( ரஹ்மான்)அரசனாக்க வேண்டும் என்று சதித்திட்டம் திட்டுக்கின்றார்கள். இதனை வந்தியத் தேவன் (கார்த்தி) மறைந்திருந்து பார்க்கின்றாரன். பார்த்தவன் அந்த செய்தியை உடனடியாக சுதந்திர சோழனிடம் தெரிவித்துவிட வந்தியத்தேவனை பளுவேட்டையர்கள் சிறைப்பிடிக்கப்பாகின்றனர்.
மணிரத்தினம் இயக்கத்துக்கு ஒரு மணிமகுடம் தாராளமாக கொடுக்கலாம். பொன்னியின் செல்வனை செதுக்கியதற்காக....
ஒளிப்பதிவு ரவிவர்மன் எம்மை அந்த களத்துக்கே அழைத்துச் சென்று சம்பவங்களுடன் எம்மையும் ஒன்றிணையவைத்தததற்காக எவ்வளவு பாராட்டினாலும் போதாவது....
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் எம்மை அந்தக்காலத்துக்கு கொண்டுசென்றுவிடுகின்றது. ( குந்தவையை வந்தியத்தேவன் சந்திக்கும் பாடல் படத்துடன் ஒட்டவில்லை)
நடிப்பு ஆதித்தகரிகாலனாக மிரட்டியிருக்கின்றார் விக்ரம், வந்தியத்தேவானாக நம்முடன் பழகியிருக்கின்றார் கார்த்தி. பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி வாழ்ந்திருக்கின்றார்.
நந்தினியாக மொத்த நடிப்படையும் கொட்டியிருக்கின்றார் ஐஸ்வர்யாராய். குந்தவையாக அழகில் மிளிர்கின்றார் த்ரிஷா. சுந்தரத் சோழனாக நோய்வாய்ப்பட்டே முகத்தில் நடிப்படை வெளிப்படுத்தியிருக்கின்றார் பிரகாஷ் ராஜ். பெரிய பழுவேட்டையராக சரத்குமார் சில இடங்களில் நாடகத்தன்மை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். பார்த்திபன் சின்னப் பழுவேட்டையாகராக கலக்கல். பாண்டியராக கிஷோரின் நடிப்பு வெறித்தனம் .
(நாவலில் ஈழம் என்ற சொல்லுக்கு பதிலாக இலங்கை என்ற சொல்லும். புலிக்கொடியை பயத்தின் காரணமாக படத்தில் சிறிதாக காட்டியதும் நெருடலாகவே இருக்கின்றது)
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் மகுடம் இந்த பொன்னியின் செல்வன்