Tuesday, December 15, 2009

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதற்கு?


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கப்போகின்றது என்பதை ஊடகங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனவே தவிர மக்கள் அதை எதிர்பார்க்கவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயருக்குத்தான் இருக்கின்றார்கள்.

அவர்கள் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்?. வெளிநாடுகளில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அங்கிருந்தபடியே அறிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து என்ன பயன்?
விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் அவர்கள் யாரை பரிந்துரைக்கின்றார்களோ அவர்களைத்தான் மக்கள் தெரிவு செய்தார்கள்.
ஆனால் இன்றைய நிலை தலைகீழாக உள்ளது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

யாழ்.மக்களுக்கு எதுவுமே செய்யாத கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து என்ன பயன்?.
மக்களுக்கு வேலைவாய்புக்கள் பெற்றுக்கொடுப்பதில்லை. நாடாளுமன்றத்தில் தங்களது தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை செய்வதில்லை.
உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் இருப்பதால் என்ன பயன்?
யாழ்.மக்களைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் இராவணன் ஆண்டாள் என்ன? இராமன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு என்ன பயன் என்ற நிலையே?
சரத்பொன்சேகாவை நம்பி சில தமிழ் அரசியல் கட்சிகள் இன்று அவருக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றது.

இதேபோல இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும் பிள்ளையான், கருணா போன்ற தமிழ் அமைப்புக்களும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றனர்.

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் பிரித்தளாப்படுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மலையகம் என்று மூன்று பிரிவுகளையும் சிங்களப் பேரினவாதம் பிரித்து பந்தாடுவது தமிழர்களின் நிலையை சீர் குலைப்பதற்கே அன்றி தமிழர்களின் நலனில் அக்கறைகொண்டு அல்ல என்பதை முதலில் தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அமைச்சுப் பதவிகளுக்காககவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் தமது இனத்தையே கூறுபோடவைத்துவிட்டு வேடிக்க்கை பார்க்கின்றது என்றால் அது தமிழ் இனத்திற்கு கிடைத்த சாபம். தமிழ்க் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத இவர்களால் எப்படி தமிழர் பிரச்சினையில் முன்னேற்த்தைக் காணமுடியும்?
சரத்பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று ஐ.தே.கூட்டமைப்பு கோரிக்கை வைத்தாலும் தமிழ் மக்கள் மனதை வெல்வது என்பது கஷ்டமானகாரியமே.
ஏன்னெனில் சரத்பொன்சேகாவும் வன்னி மனிதப் பேரழிவை மேற்கொண்டவர்களில் ஒருவர் . அதை விட தமிழர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை, இது பௌத்த சிங்கள நாடு என்று சொன்னவர்.

இன்று அரசியல்வாதியாக தன்னை முன்னிலைப்படுத்தி தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அதிகமான சலுகைகளைக் கொடுப்பேன் என்று சொல்வது
அரசியல் நாடகத்தின் உச்சக்கட்டமே. இதை புரிந்துகொள்ளாமல் தமிழ்க்கட்சிகள் அவரின் சொல்லை நம்பி நாசமாகப்போவது மட்டும் உறுதி.
சம்பந்தன் ஐயா என்ன செய்கின்றார் என்றால் தங்களது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மக்களிடம் கணிப்பு எடுக்கப்போகின்றோம் என்று ஒரு புறுடா செய்தியை விட்டு நலுவப் பாக்கின்றார்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான கலாச்சார சீரழிவை நோககிகச் சென்றுக்கொண்டிருக்கிறது. என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் இன்று விபச்சாரம் , குடிப்பழக்கம் என்பன பாடசாலை மாணவர்களை ஆட்டிப்படைக்கின்றன.

அதைவிட மிகவும் மோசமாக பாடசாலை மாணவிகளின் கருக்கலைப்பு நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தமிழர்களின் உரிமையை வென்று எடுக்கின்றோம் என்று சும்மா இருக்காமல் நாளைய நமது தமிழ் சமூகம் சின்னபின்னமாகிப்போய்விடாமல் காக்க துடிப்பான இன்னொரு இளைய தமிழ்த் தலைமை கட்டாயம் தேவை.

Wednesday, December 9, 2009

பரதநாட்டியம் என்பது ஒரு யாத்திரை ரமா வைத்தியநாதன்



பாவங்களின் நாயகியா? இல்லை தச அவதாரங்களின் நாயகியா? அத்தனைக்கும் சொந்தக்காரரான நாட்டியத்தாரகை ரமா வைத்தியநாதன். இவர் கடந்த 20 வருடங்களாக பரத நாட்டிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவரை இசை உலகத்திற்காக நான் சந்தித்தபோது, அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விடயங்கள்......


*உங்களுக்கு பரதநாட்டியம் கற்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?
எல்லோரும் டாக்டர், எஞ்சினியர், வக்கீலாக வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றார்கள். அதுபோல நானும் பரதநாட்டியத்தில் சிறந்தவளாக திகழ வேண்டும் என்று ஆறாவது வயதில் இருந்தே பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டேன். நாட்டியத்தை யாமினி கிருஷ்ணமூர்த்தியிடம் கற்றுக்கொண்டேன்.


*பரதநாட்டியத் துறைக்கு நீங்கள் வந்து 20 வருடங்களாகின்றன. உங்களுக்கு அது முழுத் திருப்பதியைத் தருகின்றதா?
பரதநாட்டியம் என்பது ஒரு யாத்திரை. அந்த யாத்திரையில் ஒரு இலக்கு இருக்கு. அந்த இலக்கை அடைய இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் இப்பொழுது அரைவாசி தூரத்தைத்தான் தாண்டியிருக்கின்றேன். இன்னும் நீண்ட தூரப் பயணம் இருக்கின்றது.

*உங்களுக்குள் ஒரு தனித்துவமான அடையாளத்தை நீங்கள் எவ்வாறு ஏற்படுத்திக்கொண்டீர்கள்?
பரதநாட்டியத்தின் அடிப்படையை மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு உரிய பாணியை நான் உருவாக்கிக் கொண்டதால்தான் என்னை இன்று தனித்துக் காட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எனது கடுமையான உழைப்பும் பரதநாட்டியத்தை நான் ஆத்மார்த்தமாக கற்றுக்கொண்டதும் தான் காரணம். எனதுகுடும்பத்தினரது ஒத்துழைப்பும்தான் என்னை இன்று இந்த இடத்திற்குகொண்டு வந்திருக்கின்றது.


*அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உங்களது நிகழ்ச்சி
பற்றி............?

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி பத்திரிகையின் ஏற்பாட்டில், இந்தியகலாசார நிலையத்தின் அனுசரணையுடன் என்னை இங்கு அழைத்திருந்தார்கள்.
உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. சுமார் 4000 மக்கள் வரை வந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்திருக்கின்றார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
நாம் சாந்தமாகக் கொடுக்கும் பொழுது மக்களின் மனங்களும் நிறைவடைகின்றன. நமக்கு அதில் திருப்தியும் கிடைக்கும்.

*வெளிநாடுகள் பலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றீர்கள்.
உங்கள் பரதநாட்டியத்திற்குக் கிடைத்த வரவேற்பு எப்படி
இருக்கின்றது?

இந்திய அரசின் கலாசார உறவுகள் அமைப்பின் அனுசரணையுடன் ஜப் பான், மெக்சிக்கோ, பனாமா, கொலம்பியா, அமெரிக்கா, கௌதமாலா, வெனிசுலா, ரஷ்யா போன்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி
வருகின்றேன். கூடுதலாக அங்குள்ள தமிழ் மாணவர்கள் பரதநாட்டியத்தை மிகவும் விரும்பிப் படிக்கின்றார்கள். அரங்கேற்றங்களும் செய்கின்றார்கள். அங்கு நிகழ்ச்சிகளை நடத்தும்போது
எனக்கு மிகவும் வரவேற்புக்கிடைக்கின்றது.

*உங்களுக்கு கிடைத்த விருதுகள்...?
இலங்கை அரசின் கலாசார நிலையத்தால் 1998 இல் "பரத ரத்னா' விருது, "ஜய ஜய கங்கை' நிகழ்வுக்காக 1992 இல் இந்திய அரசாங்க கலாசார நிலையத்தினால் சான்றிதழ், அகில இந்திய தேசிய
ஒற்றுமைக்கான தேசிய திறனாற்றல் விருது, 2001 ஏப்ரல் மாதத்தின் அதிசிறந்த நடனக் கலை ஞர், சென்னை மியூஸிக் அகடமியின் "அதிசிறந்த நடனத் தாரகை' விருது, சென்னை ஸ்ரீ ராகம்
நுண்கலை நிலைய "பாலசரஸ்வதி' விருது, 2001இல் சென்னை கார்த்திக் நுண்கலை நிலைய "நடன மாமணி' விருது போன்ற விருதுகள்கிடைத்துள்ளன. ஒவ்வொரு விருது கிடைக்கும் பொழுதும் புதுமையாக
ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது.

Wednesday, December 2, 2009

காதலின் பிரிவுகள்



காதலின் வலிகளையும் காதலின் பிரிவுகளையும் எத்தனைகாலங்கலாக நாம் மறைத்து வைத்திருந்தாலும் அந்த ரணங்களை மீட்டும் போது மனதில் ஒரு வலி ஏற்படும்.. அந்த வலி சுமையாக இருந்தது..


இப்போது மீட்டும்போது சுகமாக இருக்கின்றது.
காதல்... நாம் விரும்பும் பெண்ணை விட நம்மை விரும்பும் பெண்ணை நாம் ஏற்றுக்கொண்டால் அந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்..


(இது எங்கேயோ படத்தில கேட்டமாதிரி என்று நினைக்கின்றீர்கள் அதுசரிதான்)


நாம் ஒரு பெண்ணை விரும்பினால் அந்த பெண் நம்மளை விரும்புகிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு உடனேயே நீங்கள் அந்த பெண்ணிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள் அதற்கு பதில் நல்லதோ ?கேட்டதோ? அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


அதைவிடுத்து ஒரு பெண்ணுடன் நீங்கள் பழகுகின்றீர்கள் அதை நட்பா? காதலா? என்று முதலில் நீங்கள் உங்கள் மனதில் தீர்மானித்துக்கொள்ளுங்கள் நட்பாக பழகிவிட்டு திடீர் என்று காதலை நீங்கள் வெளிப்படுத்தும்போது அது உங்கள் மீதான வெறுப்பாகவே இருக்கும்.


அப்படியான காதலை ஒரு போதும் பெண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


அப்படி ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் முயற்சி திருவினையாக்கும் என்று பஞ்டயலொக் எல்லாம் பேசி மீண்டும் மீண்டும் உங்கள் காதலை தெரியப்படுத்துவதற்கு நீங்கள் நல்லவன் போல் காட்ட முனைவதும் சமூகத்தில் உள்ள கெட்டவர்களை விட நான் நல்லவன் என்று தெரியப்படுத்துவதும்.


அது உங்கள் மீதான வெறுப்பையே ஏற்படுத்தும். நீங்கள் மற்றவர்களுடன் உங்களை உயர்த்திக் காட்டுவதற்கு அதற்கு உங்களுக்கு தகுதியில்லை மற்றவர்கள்தான் நீங்கள் நல்லவர் என்று சொல்லவேண்டும்.


காதலியுங்கள் அது தப்பே இல்லை.. இருவரும் காதலித்து திருமணத்தில் சேரமுடியாததுதான் காதல் தோல்வி.
அதைவிடுத்து..


ஒருதலையாக காதலித்து அது கிடைக்கவில்லை என்றால் பைத்தியம் பிடித்ததுபோல் அலைவதும். கிடைக்காத அந்த பெண்ணுக்கு துரோகி என்ற பட்டமும் கொடுக்கின்றதும் உங்களது இயலாத்தன்மையைத்தான் காட்டுகின்றது.


காதலின் வலி ஒரு மனிதனை நரகத்திற்கு தள்ளிவடும்... அதை உணர்ந்து செயற்படவேண்டும்.


(எங்கங்க கேட்கின்றாங்கள் பட்டுத்தான் புரியவேண்டும் என்றால் அந்தக் கடவுளால் கூட இவர்களைத்திருத்த முடியாதே)


அந்தக் காலத்து காதலை விட இந்தக்காலத்தில் ஆண் பெண் நட்பு நன்கு ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றது.
நட்பு கத்தி முனையில் நடப்பதுபோன்றதுதான். கொஞ்சம் சரிந்தால் காதலாகிவிடும்.
எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவரோ...
ஆயிரம் சேது படம் வந்தாலும் காதலையும் தோல்விகளையும் திருத்தவே முடியாது.


காய்ச்சலும் தடிமனும் தனக்கு வரும்போதுதான் அதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். இல்லையேல் காய்ச்சாலா என்று எள்ளிநகையாடிக்கொண்டிருப்பார்கள்.


(இது பாகம் 1) இன்னும் தொடரும்...




நீ நல்லவன்


காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...