Sunday, May 7, 2023

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் காங்கேசன்
துறை துறைமுகத்துக்கும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலுக்குமிடையில் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இடம்பெற இருக்கின்றது. பல தசாப்தங்களாக தடைப்பட்டிருந்த இந்த பயணிகள் சேவை மீண்டும் ஆரம்பமாகவிருப்பது இரு நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இன்ட்சிறி ஃபெரி சேர்விஸ் தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.



காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக் கொண்டது. இந்தப் கப்பல் சேவை மே 15 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும்.
இந்தப் கப்பல் சேவையில் பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர். கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது .
பயணிகள் கப்பல் சேவை கட்டணமாக 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி வசூலிக்கப்படும் . 120 முதல் 150 பேர் வரை  பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.
இந்தப் கப்பலில் பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும்.  காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுச்சேவை தொடர்பில் திட்டமிடுவதற்கு ஐந்து வருடங்கள் எடுத்தன என தெரிவிக்கும் அவர், முதலில், இந்து யாத்திரீகர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆலய தரிசனத்துக்காக அழைத்துச்செல்வதற்கு 5 கப்பல் சேவைகளை நடத்துவதற்கான திட்டத்தினை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
படகு சேவையை தொடங்குவதற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. படகு சேவையை தொடங்குவது இந்தியாவே என இலங்கைதுறை முகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சி டி ல்வா தெரிவித்துள்ளார்.
கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது ..இந்த படகுச்சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம்150 மில்லியனை செலவிட்டுள்ளது. பயணிக்களுக்கான வசதிகள் மற்றும் குடிவரவு திணைக்களத்தின் பிரிவு ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இந்த கப்பல் போக்குவரத்து காரணமாக இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் தமது வியாபாராத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கம் பல வசதிகளை செய்துகொடுப்பதற்கு முன்வந்துள்ளது. காங்கேசன்துறை முகத்தை வச்த வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் காங்கேசன்துறையிலிருந்து ரயில் மூலம் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கான விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்தியாவுக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்கள் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும்.  தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும்.

இதேவேளை, கப்பல் சேவையை தொடங்குவதற்கு ஏதுவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டங்களை அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

Saturday, October 8, 2022

பொன்னியின் செல்வன் மகுடம் சூடினான?




கமலஹாசனின் குரலில் பொன்னியின் செல்வனின் கதைச்சுருக்கத்தில்  ஆரம்பமாகின்றது.  வீரம் நிறைந்த சோழ நாட்டை ஆட்சிசெய்கின்ற  சுந்தர சோழனின் புதல்வர்கள்தான் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) அருண்மொழிவருமன்  (ஜெயம்ரவி ) குந்தவை (த்ரிஷா).  சுந்தர சோழன்  (பிரகாஷ்ராஜ் )நோய்வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் அடுத்த அரசனாக  ஆதித்தகரிகாலனையே நியமிக்கலாம். ஆனால் அதற்கு எதிராக ஒரு சதி நடக்கின்றது என்று கதை ஆதித்தகரிகாலனை நோக்கி நகர்கின்றது. ஆதித்தகரிகாலனும் (விக்ரம்) வத்தியத்தேவனும்(கார்த்தி) சேர்ந்து போரில் வெற்றிகொள்கின்றனர். அந்த வெற்றியைத் தொடர்ந்து ஆதித்த கரிகாலன் வந்தியத் தேவனை அழைத்து  நீ அவசரமாக தஞ்சை நோக்கி செல் அங்கு ஏதோ ஒரு பிரச்சினை நடக்கப்போகின்றது என்று உளவுத்தகவல் வந்திருக்கின்றது. மன்னருக்கும் இளவரசிக்கும் இரு ஓலைகளைக் கொடுத்து  உனடியாக நீ சென்று பார்த்து வா என்று தனது வாளைக்கொடுத்து அனுப்புகின்றான். 



காஞ்சியிலிருந்து தஞ்சையை நோக்கி செல்கின்றான் வந்தியன் தேவன் ( அப்பொழு ஒலிக்கின்றது பொன்னி நதி பாடல்) தஞ்சையை அடைந்த வந்திய தேவனுக்கு அங்குள்ள குறுநில மன்னர்களும் பளுவேட்டையர்கள் (சரத்குமார்,பார்த்திபன்) ஆகியோர் இணைந்து சுந்தர சோழனின் அண்ணனின் மகனான  மதுராந்தகனைதான் ( ரஹ்மான்)அரசனாக்க வேண்டும் என்று சதித்திட்டம் திட்டுக்கின்றார்கள். இதனை வந்தியத் தேவன் (கார்த்தி) மறைந்திருந்து பார்க்கின்றாரன். பார்த்தவன் அந்த செய்தியை உடனடியாக சுதந்திர சோழனிடம் தெரிவித்துவிட வந்தியத்தேவனை பளுவேட்டையர்கள்  சிறைப்பிடிக்கப்பாகின்றனர். 


அதிலிருந்து தப்பியபோது பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினையை (ஐஸ்வர்யா ராய்) பார்க்கின்றான் அவனை வைத்து குந்தவைக்கு ஆதித்த கரிகாலன் அனுப்பி செய்தியை படிக்கின்றாள். அதேபோல் வந்தியத்தேவனிடம்  குந்தவை கொடுக்கும் செய்தியை கொண்டு வந்து தரும்படி சொல்கின்றாள்.அதற்கு தலையசைத்துவிட்டு  குந்தவையை (திரிஷா) பார்க்கப்போகின்றான் வந்தியன் தேவன் (கார்த்தி) அவன் தஞ்சையில் நடக்கும் சதியைப்பற்றி சொல்கின்றாள். அவள் உடனே இலங்கையில் உள்ள அருண்மொழிவர்மனை (ஜெயம்ரவி ) அழைத்துக்கொண்டுவா என்று வந்தியத்தேவனை அனுப்புகின்றாள் வந்தியத் தேவன் இலங்கை சென்றான அருண்மொழிவர்மனை சந்தித்தான என்பது படத்தை பார்த்தால் புரியம்.

மணிரத்தினம் இயக்கத்துக்கு ஒரு மணிமகுடம் தாராளமாக கொடுக்கலாம். பொன்னியின் செல்வனை செதுக்கியதற்காக....

ஒளிப்பதிவு ரவிவர்மன் எம்மை அந்த களத்துக்கே அழைத்துச் சென்று சம்பவங்களுடன் எம்மையும் ஒன்றிணையவைத்தததற்காக எவ்வளவு பாராட்டினாலும் போதாவது....

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் எம்மை அந்தக்காலத்துக்கு கொண்டுசென்றுவிடுகின்றது. ( குந்தவையை வந்தியத்தேவன் சந்திக்கும் பாடல்  படத்துடன் ஒட்டவில்லை)

நடிப்பு  ஆதித்தகரிகாலனாக மிரட்டியிருக்கின்றார் விக்ரம், வந்தியத்தேவானாக நம்முடன் பழகியிருக்கின்றார் கார்த்தி. பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி வாழ்ந்திருக்கின்றார்.

நந்தினியாக மொத்த நடிப்படையும் கொட்டியிருக்கின்றார் ஐஸ்வர்யாராய். குந்தவையாக அழகில் மிளிர்கின்றார் த்ரிஷா. சுந்தரத் சோழனாக நோய்வாய்ப்பட்டே முகத்தில் நடிப்படை வெளிப்படுத்தியிருக்கின்றார் பிரகாஷ் ராஜ். பெரிய பழுவேட்டையராக சரத்குமார் சில இடங்களில் நாடகத்தன்மை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.  பார்த்திபன் சின்னப் பழுவேட்டையாகராக கலக்கல். பாண்டியராக கிஷோரின் நடிப்பு வெறித்தனம் .

(நாவலில் ஈழம் என்ற சொல்லுக்கு பதிலாக இலங்கை என்ற சொல்லும். புலிக்கொடியை பயத்தின் காரணமாக படத்தில்  சிறிதாக காட்டியதும் நெருடலாகவே இருக்கின்றது)

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் மகுடம் இந்த பொன்னியின் செல்வன்


Saturday, August 27, 2022

முருகா முருகா அலங்கார முருகனே

 கண்ணமா கண்ணாமா அழகுப்பூஞ்சிலை பாடல் இசையில் இந்த வரிகளைப் பொருத்திப்பாடினால் அழகோ தனி அழகு....





முருகா முருகா அலங்கார முருகனே

கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே

உன்னை நினைத்து எந்தன் உள்ளம் உருக்குதே.... 

கண்கள் கலங்கிடத்தான் உனையே எண்ணுதே

வரம் தருவாயோ  பிணி நீங்க.... முருகா... கந்தா....நீயே



முருகா முருகா அலங்கார முருகனே

கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே.......

நல்லூரினிலே பதிகொண்ட வீரமான வேலனே

அப்பனுக்கு பாடம் சொன்ன சக்தியின் புதல்வனே

விநாயகன் சோதரா சூரனை வென்றியே

ஆறுபடை வீட்டிலிருந்து காக்கும் தெய்வமே..மே....

துன்பங்கள் நீக்கீடும் வடி வேலனே

முருகா முருகா முருகா   சொல்லையா...

துன்பம் எப்போ நீங்கும் ஐயா.....


முருகா முருகா அலங்கார முருகனே

கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே


உன்னுடைய கண்பார்வை வேண்டியே

நித்தம் நித்தம் நானும் உந்தன் வாசால்  தேடி வந்தனே.......

முருகா கந்தா வேலனே.....துன்பங்கள் நீக்கீடும் துயவனே....

முருகா அஅஅஅ முருகா....அலங்கார முருகனே


முருகா முருகா அலங்கார முருகனே

கண்ணுள்ளே கண்ணுள்ளே தோன்றும் தெய்வமே









Wednesday, August 10, 2022

'கோட்டா கோ கம'வில் இருந்து வெளியேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

 

 


 


கொழும்பு, காலிமுகத்திடல்  முன்னாள் அதிபர் கோத்தாபாய ராஜபக்ஷவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 'கோட்டா கோ கம'. இந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து இடம்பெற்று வந்தது. புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க  பதவியேற்றதன் பின்னர் போராட்டக்கார்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

இதனடிப்படையில் பல குழுக்காளக இயங்கிய போராட்டக்காரர்கள் பிரிவடைந்து சில குழுக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் ஒரு சில குழுக்கள் மட்டும் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திவந்தனர். இதன்அடிப்படையில் இறுதியாக இருந்த அனைவரும் நேற்று  வெளியேறினர்,வெளியேறிய போராட்டக்காரர்கள் இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் அனைத்த மக்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர்.

  
போராட்டக்காரர்கள் கருத்து

நாம் இங்கிருந்து வெளியேறினாலும் எமது போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம். அதன்படி நாம் முக்கிய 7 அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். அடக்குமுறைகளுக்கு எதிராக எழுச்சியடைவோம், அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும், மக்களாணை இல்லாத ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலகவேண்டும், மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்காத பாராளுமன்றத்தைக் கலைக்கப்பட்டு உடனடியாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும், நாட்டுமக்களின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்படவேண்டும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும், கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்தி அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணையவேண்டும் ஆகியவையே அந்த 7 அம்சங்களாகும் என்று குறிப்பிட்டனர்.

 

Saturday, July 23, 2022

இது மக்களுடைய பலம்



ஊரடங்கு சட்டம் போட்டாலும் கொழும்புக்கு நாங்கள் வந்தோம். நாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை. யாருடைய பலம் இது.மக்களுடைய பலம் இது. இதை யாராலும்  அசைக்க முடியாது. இந்தப் போராட்டதை நாம் நிறுத்தப்போவதில்லை. மஹிந்த குடும்ப ஆட்சியினால்தான் இன்று மக்கள்  கஷ்டத்தில் விழுந்துள்ளார்கள் என்று  காலிமுகத்திடலில் போராட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்தார்கள்.

கொழும்பில் இடம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள்  விசேடமாக வழங்கிய கருத்துக்களை இங்கு தருகின்றோம்.


கோட்டா கோ கம போராட்டக்களத்தின் ஏற்பாட்டாளர்

நாட்டில் ஆட்சிமாற்றமொன்றை ஏப்ரல் 09 ஆம் திகதி முதல் 94 நாட்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வ


ருகின்றோம். எனினும் எமது கோரிக்கைகைள செவிமடுக்காத வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர். நாட்டு மக்கள் வரிசையில் நிற்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் எமது மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினர். முழு நாடும் பாரிய அழிவுப் பாதையை நோக்கி சென்றது. நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தது.

நாட்டில் தற்போது முறைமை மாற்றமொன்றையே நாம் எதிர்பார்க்கின்றோம். எவ்வித பிரயோசனமுமற்ற முறைமையே நாட்டில் காணப்படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகுபவர்கள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும். நீண்டகால முறைமையுடன் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். நாடு என்ற முறையில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு தேவையான  வளங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் தற்போது ஏற்பட்டுள்ளது. 13ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை யார் முன்னோக்கிக் கொண்டு செல்லவுள்ளார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். சகல துறைகளிலும் வளமிக்க நாடாக எமது நாட்டை மாற்றும் வரை எமது போராட்டம் தொடரும்.


பௌத்த துறவி சுமணரத்ன



பௌத்த பிக்குகளுக்கும் அரசியல் காணப்படுகின்றது. எனினும் அது கட்சிசார்ந்த அரசியல் அல்ல. ஆனால் தற்போது ஒரு சில பௌத்த தேரர்கள் கட்சி அரசியலையே முன்னெடுக்கின்றனர். இதனால் என்னை போன்ற பௌத்த தேரர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சில தேரர்களின் செயற்பாடுகள் காரணமாக தேரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. வழமையாக பஸ்களில் நாங்கள் பயணித்தால் எம்மை கண்டவுடன் பயணிகள் எழுந்து அவர்கள் ஆசனத்தை எமக்கு வழங்குவார்கள். ஆனால் தற்போது அந்த கௌரவம் கூட எமக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு ஒரு சில தேரர்களின் அரசியல் செயற்பாடுகளே காரணம். அத்துடன் நாட்டின் தலைவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். மக்கள் குறித்து சிந்திக்கும் தலைவர்களை காண முடியவில்லை. இவ்வாறானவ ஆட்சியாளர்கள் நாட்டு மக்களே பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எரிவாயு, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனது சகோதரர் இராணுவத்தில் கடமைபுரிகின்றார். அவர் அண்மையில் ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றபோது அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் வைத்தியசாலையில் இருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழத்தான் வேண்டும். எனினும் நாட்டு மக்கள் மருந்துகள் இல்லாமல், வரிசையில் நின்று உயிரழக்கும்போது அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் உருவாக வேண்டும்.


 ஸ்ரீதரக்குமார்


கோட்டா பதவி விலகுவாரா என்பதே காலையில் எழுந்தவுடன் நினைவுக்கு வரும் ஒரு விடயமாக உள்ளது. கோட்டா விலகுவாரா இல்லையா என்பதை அடிப்படையாக வைத்தே நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு எரிபொருள் இல்லை. மனைவி மண்ணெண்ணெய் வரிசையில் பல மணித்தியாலங்கள் காத்திருக்கின்றால். எதனையும் செய்துகொள்ள முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டில் முறைமை மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்-

இன்று தினக் கூலிகளாக வேலை செய்பவர்களுக்கு அவர்களின் வருமானத்தை விட செலவு அதிகமாக காணப்படுகின்றது. ஒரு கிலோ பால்மா பைக்கட் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு தினக் கூலியின் சம்பளம் வெறும் 1000 ரூபாவாகத்தான் இருக்கின்றது.இப்படி இருக்கையில் எப்படி குடும்பத்தை நடத்தி செல்ல முடியும்.

சாதாரண ஒரு காச்சல் வந்தால் கூட அதற்கான மருந்தை பெறுவது என்றாலும் நாங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருந்தைக் கூட நாங்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைகொடுத்துத்தான் வாங்க முடிகின்றது. இதனால்தான் நாங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கின்றோம் என்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமான

அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம்

அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ அலுவகம் மற்றும் பிரதம  மந்திரி ஆகியோரின் அலுவலகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே தற்போது உள்ளது. அங்கு வரும் மக்களை வழி நடத்தி உணவு வழங்கி  வரிசையிலேயே நின்று பார்வையிடுமாறு அறிவுறுத்துகின்றனர்.

முற்றுகையிட்டு 2 நாட்களின்பின் நேற்றைய நாளான மூன்றாவது நாளில் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அதிபர் மற்றும் பிரதமரின் முக்கியமான அறைகளை பூட்டி மக்கள் பார்வைக்கு தடைவிதித்து. அதற்கு பாதுகாப்பு வழங்கிவருகின்றனர். இரவு பகலாக அங்கு தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் மக்களுக்கு உரிய தேவைகளை வழங்கிவருகின்றனர்.

Tuesday, June 14, 2022

 இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டம் 



இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி இரண்டாவது மாதத்தில் காலடி எடுத்துவைத்துக்கின்றது கோட்டா கோ கம (Gota Go Home)போராட்டம் . இலங்கை பெரும் அரசியல் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த நெருக்கடிக்கு அரசியல் தலைமைகளே பொறுப்பு கூறவேண்டிய நிலை காணப்படுகின்றது. சீரற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் தலைமைத்துவம் இன்மையால் இலங்கை இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம்  எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பால்மா வகைகளின் தட்டுப்பாடுகாரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பத்தார்கள்.அரசாங்கததை பதவி விலகுமாறு கோரியும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை வீடு செல்லுமாறு வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் முதல் ஆரம்பப்புள்ளியே காலிமுகத்திடலில்  பல்கலைக்கழக மாணவர்களினால்  ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கோம் போராட்டம். காலிமுகத்திடலுக்கு கோட்டா கோ கோம் எனும் கிராமம்  ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டது.  இரவு பகலாக  தொடர் போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கின நாளுக்கு நாள் இந்த காலிமுகத்திடல் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.
இதற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்துக்கு வலுசேர்த்தனர். ஜனாதிபதி கோட்டா பாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொழிற்சங்கங்கள்  வேலைபகிஷ்கரிப்பில் ஈடுபட்டன. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. போக்குவரத்துத்துக்கள்  ஸ்தம்பிதமடையத் தொடங்கியது. மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக உருவெடுத்தது காலிமுகத்திடல் போராட்டம்.

கோட்டா கோ கம (Gota Go Home)

கோட்டா கோ கோம்  காலிமுகத்திடல் போராட்டம் மிகவும் வித்தியாசமான முறையிலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள்  தமது கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்கள் எழுப்பியும்  வீதி நாடகங்கள் பாடல்கள் மூலமாகவும் தமது எதிர்ப்பினை காட்டிவருகின்றனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களம் மிகவும் வித்தியாசமான ஒருபோராட்டகளமாகவே காணப்படுகின்றது. இனம், மதம், பேதங்கள் இன்றி அனைத்து மக்களும், மத தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அமைதி வழியில் மக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக  சுமார் 100 இக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்து  போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உண்பது உறங்குவது  அனைத்தும் போராட்டக்களத்தில்தான். அங்கேய  உடுப்புக்களை துவைத்து அங்கேயே காயவைத்து ஆடைகளை அணிகின்றார்கள். அவர்களுக்கான  கழிவறை வசதிகள் ( மொபைல் டொய்லெட்) காலை மதியம் இரவு என மூன்று வேளைகளும்  உணவுகள்  வழங்கப்படுகின்றன. குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் பானங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவம்  இலவசமாக போன்கள் சார்ஜ் செய்து கொடுகின்றார்கள்.  சூரிய ஒளி மூலம் மீன்சாரம் கோட்டா கோ கமவுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் வழங்கப்படுகின்றது. அங்கு தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் காலை எழுந்தவுடனேயே போராத்தில் ஈடுபடுகின்றார்கள். ஆர்ப்பாட்டத்தில் அமைந்துள்ள கூடாரங்களில்  சட்டம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு, தலைமைத்துவ பண்புகள், பெண் தலைமைத்துவம், மனித உரிமை, நாட்டின் குடிமகன் மன்றம் (CITIZEN FORUM)   நூலகம் போன்ற விடயங்கள்  கூடாரங்கள் அமைத்து மக்களுக்கு தெளிவூட்டப்படுகின்றது.


  இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்
இங்கு அமைக்கப்பட்டுள்ள நூலங்களில் ஸ்டோரி டெல்லிங்  மூலம் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வினையும் சிறுவர் சம்பந்தமான பிரச்சினைகளுக்ககான கலந்துரையாடல்களும் அடுத்த தலைமுறையினருக்கான தகவல்களையும் வழங்குகின்றோம் .
இலங்கையில் ஒரு குடிமகன் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினை என்னவென்றால் சாதாரணதபன குடிமகன் வாழ்க்கை கொண்டு செல்வதற்கு கஷ்டமாகவே இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலரின் வீழ்ச்சியால் இலங்கை அரசாங்கம் அதிகளவிலான பணத்தை அச்சடித்துள்ளார்கள். அதற்கான தீர்வினை மேற்கொள்ளாமல் தொடர்சியாக பணத்தை அச்சடிப்பதால்  தொடர்ந்தும்  அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான விலை உயர்வுமே இன்று எங்களை பாதிக்கின்றது. குறிப்பாக அன்றாட கூலித் தொழில் செய்பவர்களின் நிலைமை ஒரு நேரத்துக்கே சாப்பிடுவதற்கு வழியில்லாமல் இருக்கின்றார். ஆகவே ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்றார்.

இது ஒரு  அமைதியான போராட்டம் என்பதால் நாம் நின்று நிதானமாக ஒரு டெஸ் கிரிக்கெட் மாதிரி போராட வேண்டும்.  பகலில் வேலைகளுக்கு செல்பவர்கள் கூட தங்களது வேலையை முடித்து விட்டு இரவில் வந்து எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றார்கள். கலைஞர்கள் சட்டத்தரணிகள் மாணவர்கள் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள் என  அனைத்து துறைசார்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சுயநல அரசியல் வாதிகளினால் நாடு அதள பாதாளத்தக்கு சென்றுகொண்டிருக்கின்றது. ராஜபக்ஷ குடும்பம் பதவிகளை விட்டு விலகவேண்டும். ஊழல் அரசியல் வாதிகள் பதவிகளை துறவுங்கள். அரசியல் திருடர்கள் நாட்டைகொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்.  என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருக்கின்றார்கள்.
குறிப்பாக கோட்டா கோ கம போராட்ட களத்தில் அதிகளவான பெண்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டிவருகின்றனர். நாட்டை மேம்படுத்துவார் என்றுதான் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் நாட்டை மேம்படுத்தவில்லை. அவரது குடும்பத்தைத்தான் மேம்படுத்தியிருக்கிறார். நாட்டை எத்தியோப்பியா சோமாலியா போன்ற நாடுகளைப் போல ஆக்கிவிடாமல் ஆட்சியாளர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  கோட்டாபா ராஜபக்ஷவுக்கு வாக்களித்த ஒருவர் தெரிவித்தார்.


போராட்டக்காரர்களது கோரிக்கைகள்

*உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலக வேண்டும்.
* பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.
*அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.
* இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
*ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

 பேராசிரியர் சர்வேஸ்வரன்

கொழும்பு பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் சர்வேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்  பிரதமர் பதவி விலக வேண்டும்  பாராளு





மன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என்று போராடுகின்றார்கள். இதில் ஜனாதிபதி தானாக பதவி விலகினாலே தவிர அவரை பதவி விலக்க முடியாது. அது அரசியல் அமைப்புக்கு முரணானது.எந்த வகையிலும் ஜனாதிபதி தனது பதவியை விட்டு விலகமாட்டார். அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து அதை நீதிமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க முடியும். அது சாத்தியமற்றது. பிரதமரை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரரேணை கொண்டு வந்து பதவி விலக்க முடியும்.  இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று 2 வருடங்கள்தான். 5 வருடத்தில் அவர்களுக்கு இப்பொழுது 2 வருடங்கள்தான் முடிவடைந்திருக்கின்றது. இவர்களில் பலர் அடுத்த முறை தேர்தலில் வெற்றிபெறப்போவதில்லை. இதனால் அவர்கள் பதவி விலகமாட்டார்கள். ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம். ஆனால் அதுவும் தற்போதைய நிலையில் சாத்தியமற்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால்தான் இன்று நாடு மோசமான நிலைக்கு வந்துள்ளது. தன்னிச்சையான நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் இதனால் அந்த நிறுவனங்கள்  நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. உர பயன்பாட்டை நிறுத்தியமை இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனாலேயே மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
போராட்டக்காரர்களை பொறுத்தமட்டத்தில்  அரசியல் அமைப்புக்கு அமைவாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கோஷங்கள் போடுதல் ,பாததைகள் பிடித்தல் , ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு முரணாக வன்முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபடாமல் இருப்பது இங்கு வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

Monday, February 11, 2019

இராவணன் குகை...





இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில்  மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.  அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை....
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து  2கிலோ மீற்றர்  தொலைவான மலையில்தான் இந்த இராவணா குகை அமைந்திருக்கின்றது.  இராவணன் குகை  50 அடி அகலமும் 150 அடி நீளமும்  60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.




இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணிவரைதான் செல்ல முடியும். இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்துவிடுவார்கள் ....இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.... செங்குத்தாகவும் சமாந்திரமாகவும்  வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள்  அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் அரை மணி நேரப்பயணத்தில்  உச்சியை அடைந்துவிடலாம்.
குகைக்கு செல்லும் பாதையில்  குருவிகளின் சத்தங்களும் நீர் வீழ்ச்சிகளின் சத்தங்கள் மனங்களை சாந்தப்படுத்துகின்றன. .....
உயரத்தை சென்றடை  ஏதோ மகிழ்ச்சி மெது மெதுவாக குகையை நோக்கி கால்கள் நகர்கின்றன.... சிறிது தூரத்தில் படிகற்கள் இல்லாமல் பாறைகளின் நடுவே  செல்லவேண்டும்....... அதன்பின்  இருண்ட குகைகள் செல்கின்றோம்.... ஒரே இருட்டு ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கிவைத்தால் போல் குகை... அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய  ஔி உள்ளே நுழைகின்றது......

ஞானிகள் முனிவர்கள் ஏன் குகைகள் தியானம் செய்தார்கள் என்ற என்பது அந்த  குகைக்குள் செல்லும் போது மனதில் ஒரு அமைதி சிறிது தூரம் உள்ளே நகரும்போது குருவிகள் சத்தம் மட்டுமே கேட்கின்றது..... குகை ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மனதில்  சந்தோசம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த குகைக்கு சென்றுவந்தால் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களே......

https://youtu.be/ifKCVf6gzzq


காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...