Skip to main content

எங்க ஊரு பொங்கல்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா.... என்னடா ராமராஜன் ஸ்டைலில் பட்டெல்லாம் அமர்க்களமாக இருக்கின்றது என்கின்றீர்களா?
ஆமாங்க தைப்பொங்கல் கலண்டரிலதான் பார்த்து இப்போதுகொண்டாட வேண்டியதாக இருக்கின்றது.
தை மாதம் 14 கலண்டரில் சிவப்பு நிறமாக இருக்கும் ஓ இன்றுதான் தை பொங்கல் என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை .
நமது கலாசாரங்கள் பண்பாடுகள் இன்றைய கால ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றது. நமது பாரம் பரிய பண்டிகைகள் மறைந்து போகின்றன என்றுதான் சொல்லலாம்.
தைப் பொங்கள் இன்று நகர் புறங்களில் பொங்கல் காஸ் அடுப்பினிலேயே இன்றைய பொங்கல் முடிந்துவிடும்.
ஆனால் கிராமப்புறங்களில் தைப்பொங்கல் எவ்வளவு அழகாக கொண்டாடப்படுகின்றது.
தை மாதம் பிறந்தால் காலைப் பனியினில் கதிரவனின் ஒளியைக் காண எவ்வளவு சந்தோஷம்.
இன்று மதியம் 12 மணி சென்றபிறகுதான் கதிரவன் உதிக்கின்றான் என்று தெரிகின்றது.
கிராமப்புறங்களில் தைப் பொங்கல் என்றால் அந்த நாள் முழுவதும் எவ்வளவு சந்தோஷங்கள். சொந்தங்களைத் தேடி சென்று பார்ப்பது கோயில் குளம் என்று திரிவது...
பொங்கல் அன்றுதான் வீட்டை விட்டு வெளியே செல்லாத பெண்களும் கோயிலுக்கு வருவார்கள் அதுவும் அவர்கள் பாவாடை தவணியில்... வந்தால்...
தேரடி வீதியில் தேவதை வந்தால்...தை பொங்கல் என்று தெரிந்துகொள் என்றுதான் பாடத்தோன்றுகின்றது.
சின்ன சின்ன சந்தோஷங்கள் சின்ன சின்ன சேட்டைகள்
சின்ன சின்ன குறும்புகள் பொங்கல் தினத்தில் கொழுத்தும் வெடிகள்.
எத்தனை அழகு அன்று.....
விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்தான் தைப் பொங்கல்...
இன்று விவசாயிகள் நன்றிக் கடன் செலுத்துகின்றார்களோ இல்லையோ நமீதா கட்டாயம் நன்றி செலுத்திவிடுவா?
என்னடா மொட்டைத் தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப்போடுகின்றான் என்று நினைக்கவேண்டாம்.
வருகின்ற தலைமுறைக்கு தைப் பொங்கல் என்றால் என்னவென்று தெரியாத நிலைமையை தொலைக்காட்சிகள் செய்யத்தொடங்கிவிட்டன.
நடிகர்கள் இல்லாவிட்டால் பெங்கல் இல்லை என்ற நிலை ஆகிவிட்டது இந்தத் தொலைக்காட்சிகளுக்கு அதிகாலை 6 மணிக்கு நமீதானவின் பொங்கல் அதனைத் தொடர்ந்து மும்தாஜின் பொங்கல் அதைத் தொடர்ந்து இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. என்று எதாவது ஒரு கன்றாவிப்படங்களைப் போடுவதும்... பொங்கல் தினம் திரைக்குவரும் திரைப்படங்கள்.... என்று போட்டிக்கு போட்டியாக அனைத்துத் தொலைக்காட்சிகளும் இப்படியே செய்துகொண்டு போய்கொண்டிருதால் அடுத்த தலைமுறை என்பது... நமது பண்பாடுகளில் இருந்து வேறுபட்ட கோணத்திலேயே பொங்கலை நோக்க வேண்டி வரும்.
சரி... உங்களது பிள்ளையை நீங்கள் கேட்டுப்பாருங்கள் பொங்கலுக்கு என்ன செய்வீங்கள் என்று... உடனே அந்தப் பிள்ளை சொல்லும் காலையில் கோயிலுக்குப் போவோம் பின்பு ரி.வியில பொங்கல் நிகழ்ச்சிகள் பார்ப்போம்.
இவ்வாறான நிகழ்ச்சிகளில் நீங்களும் முழ்கி உங்களது பிள்ளைகளையும் முழ்க விட்டீர்கள் என்றால் என்றால் நாளை பொங்கல் என்பது விதியையே மாற்றிவிடும்.
தொலைக்காட்சிகளாவது திருந்துமா?
இல்லை அவர்களுக்கு வேண்டும் வருமானம். அதற்காக அவர்கள் நமது பண்பாடுகளை மாற்றுகின்றார்கள். நீங்களும் அதற்கு அடிபணிந்து மாறுகின்றீர்கள்.
பொங்கலை ரிவி பார்க்காமல் உங்களது சொந்தங்களோடு உறவாடிக் கொண்டாடினால் உங்களது வாழ்க்கையே பொங்கல் போல் மகிழ்சியாக இருக்கும்.
என்னட ரி.வி பொங்கல் நிகழ்ச்சிகள் பார்க்காமல் இருந்தால் பக்கத்து வீட்டார் அந்த நிகழ்சிகள் பற்றி நமக்கு சொன்னால் நம்மட கௌரவம் என்ன ஆகின்றது என்று பார்க்காமல்.
(இது பெரிய கௌரவமாக்கம்)
பொங்கலை அன்பு கலந்த பொங்கலாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கு
ரி.வியில இல்லை.

Comments

Anonymous said…
தம்பி உங்கள யாரு காஷ் குக்கரில பொங்கச் சொன்னது? வீட்டு முற்றத்தில அதுதான் தம்பி பிளட்போர்ம்ல மூன்று கல்லை வைச்சி பானையை வெள்ளவத்தை சந்தையில வாங்கி பொங்குங்க. அப்படி ஏலாது என்டா கொட்டாஞ்சேனை ரவுண்டப்போர்ட்டில வைச்சி பொங்க வேண்டியது தானே. சூரியனை நல்லா தரிசித்ததும் ஆகுது. வடிவா பொங்கினதும் ஆகுது.

Popular posts from this blog

காதல் காவியம் லைலா மஜ்னு

லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது.

பெரும் செல்வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அழகிய பெண் லைலா. காயிஸ் ஏழ்மையான ஒரு கவிஞன். அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். லைலாவுக்காக ஏராளமான கவிதைகளை அவன் எழுதுகிறான்.
ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. லைலாவும் காயிஸும் காதல் கொண்டிருப்பதை அறிந்த லைலாவின் பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு பிரித்து வைக்கிறார்கள்.செல்வந்த இளைஞன் ஒருனுக்கு லைலாவை திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுடன் மாளிகையில் வசித்த போதிலும் காயிஸை பிரிந்ததை லைலாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள்.லைலாவின் திருமணத்தை அறிந்த காயிஸ் பித்துப்பிடித்தவனாகிறான். இறுதியில் லைலாவின் கல்லறைக்கு அருகிலேயே அவன் இறந்து கிடக்கக் காணப்படுகிறான். லைலாவைப் பிரிந்து துயரத்தில் காயிஸ் பித்தனாக அலைந்தமையால் அவன் மஜ்னு அல்லது லைலாவின் மஜ்னுன் என அழைக்கப்பட்டான். இதற்கு "லைலா பைத்…

தலையில் மண்ணை கொட்டிய சூர்யா..

புவனேஸ்வரி விடயத்தில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டதனால் கோடம்பாக்கமே குமுறுறி தனது கோபத்தை தீர்த்துவிட்டது.
பத்திரிகைக்காயாளர்களினால் தான் இந்த நடிகை நடிகர்கள் வளர்ந்திருக்கின்றார்கள். இன்று நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக மதிப்பதற்கு பத்திரிகைகள் அவர்களுக்கு கொடுத்த ஆதரவுதான் காரணம். அதனால்தான் அவர்கள் ரசிகர்கர்களது மனங்களில் இடம்பிடிக்கவும் செய்திருக்கின்றார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு காட்டாயம் இப்படியான ஒரு எதிர்ப்பு வந்தது நல்லது என்றுதான் சொல்லலாம்.
நடிகர்களை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருத்த்தியவர்கள் பத்திரிகையாளர்கள்.
இன்று சூர்யா நல்ல நிலைக்கு வருவதற்கு அவரது உழைப்பு ஒரு காரணமாகா இருக்கலாம். அந்த உழைப்பை அங்கீகரித்தவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதை சூர்யா மறந்துவிட்டார்போல.
தொடர் வெற்றிகள் என்பது ஒருவனுக்கு தலைகணத்தை ஏற்படுத்தும் அது சூர்யாவுக்கு மிகவும் பொறுந்தும்.
ரஜினி கூட பேசுகையில் பத்திரிகையாளர்ளை மதித்துத்தான் பேசினார்.
அவர் இருக்கும் உச்சத்துக்கு பத்திரிகைகள்தான் காரணம் என்று நன்கு புரிந்தவர்.
நடிகைகள் ஏதோ பத்தினிகள் மாதிரி இவ்வளவு முழக்கமும் போராட்டமும்.
நட…