Friday, January 30, 2009
Thursday, January 29, 2009
Wednesday, January 28, 2009
Monday, January 26, 2009
Friday, January 23, 2009
Thursday, January 22, 2009
Wednesday, January 21, 2009
Monday, January 19, 2009
Friday, January 16, 2009
ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டும்
தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் தைப்பொங்கலுக்கு வாழ்த்துக்கள் வருதோ இல்லையோ மாட்டுப் பொங்கலுக்கு கட்டாயம் வந்து சேரும் ஏன் என்றால் மனிதர்களும் மாடுகள் தானே.
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுக் காளைப் போட்டி நடைபெறுவது வழக்கம் அதுவும் இந்தியாவில் தான் அதிகமாக ஜல்லிக்காட்டுப் போட்டிகள் நடைபெறுக்கின்ற.
இலங்கையில் எங்க ஜல்லிக்கட்டு நடக்கும் மனிதர்களே உயிரோடு வாழ முடியாத நிலை... எப்படிங்க ஜல்லிக்கட்டுக்காளைப் போட்டிஎல்லாம் நடக்கும்.
15.01.2009 (நேற்று) மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளையை அடக்க இந்தக் காளைகள் எவ்வளவு மல்லுக்கட்டிக்கொண்டு பாடுபடுகின்றார்கள் என்றுதான் பருங்களேன்...

Thursday, January 15, 2009
விமானத்தின் நீச்சல்
என்னது வானத்தில் பறக்கவேண்டியது கடலில் உல்லாசமாக நீச்சலடிக்கின்றதா என்று எல்லாம் ஜோசிக்க வேண்டாம். அமெரிக்காவில் நியோர்கில் உள்ள Hudson ஆற்றில் தான் 150 பயணிகளுடன் இந்த விமானம் தரை இறங்கியது. யூ.எஸ்.எயார் வைஸ் விமானம் ஒன்றுதான் இவ்வாறு ஆற்றில் தரை இறங்கியது. நல்ல வேளை பயணிகள் ஒருவருக்கும் பாதிப்பில்லை.

Tuesday, January 13, 2009
Sunday, January 11, 2009
எங்க ஊரு பொங்கல்

ஆமாங்க தைப்பொங்கல் கலண்டரிலதான் பார்த்து இப்போதுகொண்டாட வேண்டியதாக இருக்கின்றது.
தை மாதம் 14 கலண்டரில் சிவப்பு நிறமாக இருக்கும் ஓ இன்றுதான் தை பொங்கல் என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை .
நமது கலாசாரங்கள் பண்பாடுகள் இன்றைய கால ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றது. நமது பாரம் பரிய பண்டிகைகள் மறைந்து போகின்றன என்றுதான் சொல்லலாம்.
தைப் பொங்கள் இன்று நகர் புறங்களில் பொங்கல் காஸ் அடுப்பினிலேயே இன்றைய பொங்கல் முடிந்துவிடும்.
ஆனால் கிராமப்புறங்களில் தைப்பொங்கல் எவ்வளவு அழகாக கொண்டாடப்படுகின்றது.
தை மாதம் பிறந்தால் காலைப் பனியினில் கதிரவனின் ஒளியைக் காண எவ்வளவு சந்தோஷம்.
இன்று மதியம் 12 மணி சென்றபிறகுதான் கதிரவன் உதிக்கின்றான் என்று தெரிகின்றது.
கிராமப்புறங்களில் தைப் பொங்கல் என்றால் அந்த நாள் முழுவதும் எவ்வளவு சந்தோஷங்கள். சொந்தங்களைத் தேடி சென்று பார்ப்பது கோயில் குளம் என்று திரிவது...
பொங்கல் அன்றுதான் வீட்டை விட்டு வெளியே செல்லாத பெண்களும் கோயிலுக்கு வருவார்கள் அதுவும் அவர்கள் பாவாடை தவணியில்... வந்தால்...
தேரடி வீதியில் தேவதை வந்தால்...தை பொங்கல் என்று தெரிந்துகொள் என்றுதான் பாடத்தோன்றுகின்றது.
சின்ன சின்ன சந்தோஷங்கள் சின்ன சின்ன சேட்டைகள்
சின்ன சின்ன குறும்புகள் பொங்கல் தினத்தில் கொழுத்தும் வெடிகள்.
எத்தனை அழகு அன்று.....
விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்தான் தைப் பொங்கல்...
இன்று விவசாயிகள் நன்றிக் கடன் செலுத்துகின்றார்களோ இல்லையோ நமீதா கட்டாயம் நன்றி செலுத்திவிடுவா?
என்னடா மொட்டைத் தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப்போடுகின்றான் என்று நினைக்கவேண்டாம்.
வருகின்ற தலைமுறைக்கு தைப் பொங்கல் என்றால் என்னவென்று தெரியாத நிலைமையை தொலைக்காட்சிகள் செய்யத்தொடங்கிவிட்டன.
நடிகர்கள் இல்லாவிட்டால் பெங்கல் இல்லை என்ற நிலை ஆகிவிட்டது இந்தத் தொலைக்காட்சிகளுக்கு அதிகாலை 6 மணிக்கு நமீதானவின் பொங்கல் அதனைத் தொடர்ந்து மும்தாஜின் பொங்கல் அதைத் தொடர்ந்து இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. என்று எதாவது ஒரு கன்றாவிப்படங்களைப் போடுவதும்... பொங்கல் தினம் திரைக்குவரும் திரைப்படங்கள்.... என்று போட்டிக்கு போட்டியாக அனைத்துத் தொலைக்காட்சிகளும் இப்படியே செய்துகொண்டு போய்கொண்டிருதால் அடுத்த தலைமுறை என்பது... நமது பண்பாடுகளில் இருந்து வேறுபட்ட கோணத்திலேயே பொங்கலை நோக்க வேண்டி வரும்.
சரி... உங்களது பிள்ளையை நீங்கள் கேட்டுப்பாருங்கள் பொங்கலுக்கு என்ன செய்வீங்கள் என்று... உடனே அந்தப் பிள்ளை சொல்லும் காலையில் கோயிலுக்குப் போவோம் பின்பு ரி.வியில பொங்கல் நிகழ்ச்சிகள் பார்ப்போம்.
இவ்வாறான நிகழ்ச்சிகளில் நீங்களும் முழ்கி உங்களது பிள்ளைகளையும் முழ்க விட்டீர்கள் என்றால் என்றால் நாளை பொங்கல் என்பது விதியையே மாற்றிவிடும்.
தொலைக்காட்சிகளாவது திருந்துமா?
இல்லை அவர்களுக்கு வேண்டும் வருமானம். அதற்காக அவர்கள் நமது பண்பாடுகளை மாற்றுகின்றார்கள். நீங்களும் அதற்கு அடிபணிந்து மாறுகின்றீர்கள்.
பொங்கலை ரிவி பார்க்காமல் உங்களது சொந்தங்களோடு உறவாடிக் கொண்டாடினால் உங்களது வாழ்க்கையே பொங்கல் போல் மகிழ்சியாக இருக்கும்.
என்னட ரி.வி பொங்கல் நிகழ்ச்சிகள் பார்க்காமல் இருந்தால் பக்கத்து வீட்டார் அந்த நிகழ்சிகள் பற்றி நமக்கு சொன்னால் நம்மட கௌரவம் என்ன ஆகின்றது என்று பார்க்காமல்.
(இது பெரிய கௌரவமாக்கம்)
பொங்கலை அன்பு கலந்த பொங்கலாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கு
ரி.வியில இல்லை.
Saturday, January 3, 2009
பகல் கனவு காணும் இந்தியா
கிளிநொச்சி இன்று தென்னிலங்கையில் தீபாவளி என்னடா கிளிநொச்சியைப் பிடித்துவிட்டோம். தமிழினத்தின் தலைவன் மட்டுப்பட்டுவிட்டான். எங்கே போய் ஒழிக்கப்போகின்றாõன். தென்னாபிரிக்காவிலா இல்லா விட்டால் முல்லைத்தீவிலையா என்று ஊழையிடுகின்றன சில நரிகள் இந்த நரிகளின் ஊழை தான் இவ்வாறு என்றாலும் பரவாயில்லை.இந்தியா ஒரு படிமேல் போய் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரன் பிடிப்பட்ட பின் எங்களிடம் ஒப்படையுங்களாம்? என்ன கொடுமை சரவணா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. பிரபாகரன் என்ன கிள்ளுக்கிரையா இவர்களின் கனவு பலிப்பதற்கு. கிளிநொச்சியை முன்பும் ஸ்ரீலங்கா படையினர் பிடித்து வைத்திருந்தனர். அப்போது கொக்கரிக்காதவர்கள் இன்று கிளிநொச்சி பிடிபட்ட பின்னர் கொக்கரிப்பதுதான் ஆச்சரியம்.இதை எப்படிச் சொல்ல கவுண்ட மணியின் ஸ்டைலில் சொல்வதென்றால் இதேல்லாம் அரசியலில் சகஜமப்பா என்றுதான் சொல்லலாம்.அரசியல் நடகம் அல்ல அரசியல் திரைப்படங்களே இன்று தென்னிலங்கையில் அரசாங்க ஊடகங்கள் தொடக்கம் தனியார் ஊடகங்கள் வரை கிளிநொச்சியின் வெற்றியை ஒரு ஆங்கிலப் படத்தின் ரெய்லறை காட்டுவதுபோல் மக்களிடம் காட்டுகின்றார்கள்.ஒரு இனத்தின் தலைவனையும் அந்த இனத்தையும் அழிப்பதற்கு அவர்கள் போடும் கூத்துக்களுக்கும் கொண்டாட்டங்களும் இன்னும் இன மோதல்கøளேய அதிகரிக்கும் என்பது அரச தரப்பிற்கு தெரியாதோ?கிளி வெற்றியில் தீபாவளி வெடிகள் மாதிரி வெடிகள் கொழுத்துவதும் தமிழ் மக்களை கேவலமாக பேசுவதும் அவர்களை கிண்டல் செய்வதிலும் சிங்களப் பேரினவாதம் இடுபட்டுள்ளது.என்ன உங்கட தலைவரை ஆட்டம் சரி என்றும் தமிழ் பெண்கள் மீதான சில்மிசங்களிலும் பேரினாவதாதிகள் ஈடுபடுகின்றார்கள். கிளிநொச்சி பிடிபட்டது.... பிரபாகரனை பிடிக்கப்போறம் என்று கொக்கரிப்பவர்களே.. ஒரு நிமிடம் நீங்கள் உங்கள் இருப்பை கவனிக்க வேண்டும் தமிழன் என்ன கேனையனா? இல்லை லூசனா? ஒவ்வொரு தமிழனும் தூங்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் அடிவருடிகளையும் எட்டப்பர்களையும் விட்டு எத்தனை லட்சம் தமிழன் இருக்கின்றான் உலகம் உருண்டை என்பதை மறந்து விடக்கூடாது.எத்தனை ஆயிரம் உயிர்களை துறந்து எமக்கான தீர்வை நாம் பெறுவோம்.பாரதி பிறந்த நாட்டில் இன்று ஈழத் தமிழனுக்கு இருக்கும் ஆதரவும் எழுச்சியும் ஏன் தென்னிலங்கை தமிழர்களுக்கும் மலையக் தமிழர்களுக்கும் இல்லை.அவர்களும் பேரினவாதிகள் என்ன சொல்கின்றார்களோ அவ்வாறுத்தான் அவர்களின் செயற்பாடுகளும் மலையத்தில் இன்று எத்தனைப் பேரிற்கு ஈழப்பிரச்சினை என்றால் என்ன என்று தெரியம் ஏன் தென்னிலங்கையிலும் இன்று எத்தனை பேரிற்கு ஈழப்பிரச்சினை எதற்காக இடம்பெறுகின்றது என்று தெரியாது இருக்கின்றார்கள். இவர்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் மலையக அரசியல் தலைவர்களும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் தங்களது அரசியல் இலாபங்களையே குறியாக கொண்டு செயற்படுகின்றார்கள்.இவ்வாறு இவர்கள் செய்படுவதால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழர்களின் பிரச்சினைகள் பற்றித் தெரியாமல் போகின்றது.எமது மக்கள் எமது பிரச்சினை நமக்கு சலுகைகள் இல்லை என்பதை மக்கள் உணர்கின்றார்கள் இல்லை. ஏதோ வந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் .தருகின்றதை தாருங்கள் நாங்கள் அதை வைத்து சமாளிப்போம்.எனது நாட்டில் எனக்கு –அடிப்படை வசதிகளோடு வாழ்வதற்டு சுதந்திரம் இல்லாதபோது எனக்கொன்று ஒரு நாட்டை உருவாக்குவதில் தப்பில்லை.
வேறு இனத்தவனிடம் நாம் அடிமையாகவே இருப்போம் அவனின் சொல்படி நடப்போம் என்றால் தமிழன் என்று இனம் அழிவதை தவிர வேற கேவலமான செயல் ஒன்றும் இல்லை.செய் அல்லது செத்து மடி....பிரபாகரனை அழித்துவிட்டால் மட்டும் இந்தபிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று இந்தியா பகல் கனவு காண்கின்றது.இந்தியாவின் ஆயுத உதவிகள் இலங்கைக்கு தாராளாமாக வளங்கப்படுகின்றது.முகர்ஜி வருகின்றானாம்....அவன் வந்த என்ன வராட்டி என்ன வந்து எதோ வெட்டிப் புடுங்கிறமாதிரி.சரி முகர்ஜி வருகின்றார் என்று பார்தோமானால்..வருவார்... ஜனாதிபதியுடன் அலரிமாளிகையில் சந்திப்புஎதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்புதங்களுடன் ஒத்துப்போகும் தமிழ் அமைச்சர்கள்இப்படி சந்திப்புகள் இடம்பெறும்.பின்பு இருதரப்பும் சேர்ந்து ஒரு பத்திரிகையாளர் மாநாடு.பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும்.இந்த மண்ணாங்கட்டி கேள்விகளும் பதில்களும் எத்தனைத் தடவைதான் எத்தனைத் தலைவர்கள் வந்து சொல்லிட்டுபோயிட்டார்கள்.முகர்ஜியின் வருகை என்ன நடக்கப்போகுது என்று ஊடகங்கள் ஊகிக்கும் அளவுக்கு அது வெறும் கண் துடைப்பு நடகமே தவிர முகர்ஜியின் வருகையால் ஒரு பயனும் இல்லை.கிளிநொச்சியைப் பிடித்து விட்டார்கள் இன்னும் முகர்ஜி வரவில்லை என்று தமிழக கட்சிகள் கத்தி பயன் இல்லை.நீங்கள் உங்களது போராங்களை வலுவடையச் செய்தால்மட்டும் போதும் எழுச்சிகொள்ளுங்கள் உங்கள் உறவுகள் இங்கு செத்து மடிகின்றதை அறிக்கைகள் மூலம் வருத்தத்தை தெரிவிக்காமல் போராட்டத்தில் இறங்கி போராடுங்கள் தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்.இலங்கையில் சிங்களவனின் ஆட்சிஇந்தியாவில் சிங்கின் ஆட்சிஇந்த இரண்டு அடக்கு முறையான ஆட்சிகளுக்கும் விரைவில் முடிவு வரும் அதுவும் தமிழனாலேயே வரும்.வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் நாடு

Friday, January 2, 2009
Subscribe to:
Posts (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...

-
இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவ...
-
என்னடா வானொலி நிலையங்களில் யாராவது இறந்துவிட்டார்களா ஒப்பாரி வைக்கின்றார்கள் என்று எல்லாம் நினைக்கவேண்டாம். அறிவிப்பாளர்கள் என்றால் குறிப்பி...
-
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையி...