Friday, November 4, 2011

ரஹ்மான் இசையில் பாட ஆசை-
சூப்பர் சிங்கர்ஸ் என்றவுடன் ஞாபகம் வருவது.. பாடகர்களா? இல்லை நடுவர்களா? என்று தெரியவில்லை... ஆனால் அனைவரது மனங்களை கொள்ளைக்கொண்டவர் தொகுப்பாளினி.. திவ்யாதான்.. ஒரு பாடகியாக இருந்துகொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் திவ்யா இலங்கை வந்திருந்திருந்தார். இவரை தீபாவளி மித்திரன் வாரமலருக்குக்காக சந்தித்தபோது....


உங்களது திரை இசைப் பயணம் பற்றி..

எனது இசைப் பயணம் தெலுங்கில் வெளியான ரெடி என்ற படத்தில் இடம்பெற்ற ஓம் நமஸதே என்ற பாடலுடன் ஆரம்பமானது. அதற்கு அப்புறம் தமிழில் வில்லுபடத்தில் “தீம் தனக்க தில்லானா என்ற பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தின் இசைப்யில் பாடினேன். தமிழில் தீராதவிளையாட்டுப் பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்று, கனகவேல் காக்க இப் போது டூ படத்தில் கையை தொட.. போன்ற பாடல்களைப் பாடியுளளேன். தொடர்ந்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பாடிக்கொண்டிருக்கின்றேன்.

தமிழ் இசையமைப்பாளர்களில் யார் யாருடன் பணியாற்றியிருக்கின்றீர்கள்?

அவர்கள் உடனான அனுபவங்கள்?தமிழில் தேவிஸ்ரீபிரசாத், யுவன் சங்கர்ராஜா, விஜசூ அன்டனி, ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், மணி சர்மா போன்றோரின் இசையமைப்பில் பாடியிருக்கினறேன்.

தேவிஸ்ரீபிரசாத்


தேவிஸ்ரீபிரசாத்தை எனக்கு சின்ன வயத்தில் இருந்து தெரியும். நான் சின்னவயதில் எப்படி பாடுவேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரது இசையமைப்பில் எந்தப் பாடகராக இருந்தாலும் ஈஸியா பாடுவார்கள் . எங்களுக்கு அழுத்தம் கிடையாது. இப்படித்தான் பாடனும் என்று யாருமே வந்து ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இதுதான் டியூன் அதற்கு ஏற்ற மாதிரி பாடுங்கள் பிறகு அதை சரி செய்யலாம் என்று சொல்லுவார். அந்த மாதிரி ஒரு சுதந்திரம் கிடைக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜ்,

ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு வரியை 10 தடவை பாடச் சொல்லுவார். அவ்வளவு ஆத்மார்த்தமாக செய்வார். சரியாக வரும் வரைக்கும் பாடச் சொல்லுவார் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்திடுவார். ஆனால் பாடினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ்வளவு அழகாக அந்த பாடல் வந்திருக்கும். ஒரு பாடல் முடிப்பதற்கு நிறைய நேரம் எடுப்பார். புதிய பாடகர்கள் என்று இல்லாமல் பெரிய பாடகர்களும் அப்படித்தான் பாடவேண்டும். இவ்வாறான பெரிய இசையமைப்பாளரிடம் பாடுவதை நான் பெருமையாக நினைக்கின்றேன்.

விஜய் அன்டனி,

அவரிடம் பாடுவது ரொம்ப ஈஸி.. ரெககொடிங் போனால் அவர் இருக்கமாட்டார். யாராவது ரியூனைத் தருவார்கள். அதைப்பாடிவிட்டு வரவேண்டியதுதான். பிறகு அவர் திருத்திக்கொள்வார். அவருக்கு எந்த விதமாக பாடினாலும் சரி.

யுவன்,

யுவன் சங்கர்ராஜா இசையில் மூன்று பாடல்கள் பாடியிருக்கினறேன். ஆனால் அந்த மூன்று பாடல்களைப் பாடும் போதும் அவர் இல்லை. அங்கு பாடுமபோது ஒரு புதுவித அனுபவம். இசையமைப்பாளர் இல்லாமேலயே பாடியிருக்கின்றேன். பாடலைக் கேட்டுவிட்டு அவர் சொல்வார் ""நல்லாயிருக்கு நான் மிக்ஸ் பண்ணிவிடுறேன் என்று. நீயும் சவுண்ட் இன்ஜினியரும் பாடிக்கொள்ளுங்கள். நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன் என்பார்.

நல்லது பிரபல்யமான இசையமைப்பாளகளுடன் பணியாற்றியுள்ளீர்கள். எந்த இசையமைப்பாளர் இசையில் பாடவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளது?

கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாட்டாவது பாடவேண்டும். எல்லோரும் இருக்கிற ஆசை தான். எனக்கும் உள்ளது.
பாடகியாக வலம்வந்த நீங்கள் இப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறீர்கள். இதில் எது உங்களுக்கு பிடித்தமானதாகவுள்ளது?

பாடல்கள் பாடுவதுதான் எனக்கு பிடிக்கும். அது சுலபம் தொகுப்பாளினியாக இருப்பது ரொம்ப கஷ்டம். ஒரு தொகுப்பாளினி பார்வையாளர்களின் மனதைக் கவரவேண்டும். அது ரொம்பா கஷ்டமான விடயம். ஆனால் பாடுவது இப்படியானதல்ல. இசையமைப்பாளர் சொல்லித் தருவதை பாடிவிட்டு வந்தால் போதும். ஆனால், ரி.வி.யில் அப்படியில்லை. ஒவ்வொரு விடயத்தையும் நாமதான் பார்த்து பண்ணணும்.

நல்லது இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களில் இந்தப் பாடலை நான் பாடியிருக்கலாம் என்று நினைக்கும் பாடல் எது?..

யுவனின் இசையில் வந்த "இதுவரை இல்லாத உணர்விது' என்ற பாடல். இதனை அன்ரியாதான் பாடியிருந தாங்க அவங்க பாடினது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் பாடியிருக்கலாமே என்று யோசிப்பேன்.

சூப்பர் சிங்கர் திவ்யாவைப்பற்றி சொல்லுங்களேன்..

.தாய் மொழி மலையாளம் என்பதால் நான் முதலில் மலையாளத்தில் தான் ரி.வி தொகுப்பாளினியாக இருந்தேன். பிறகு அதற்கு விடைகொடுத்துவிட்டு அப்புறம் பாடகியாகிடடேன். அப்பொழுதுதான் விஜய் ரி.வியில் ஒரு நிகழ்ச்சிக்காக என்னை பாட அழைத்திருந்தார்கள். அப்பொழுது என்னை கேட்டார்கள். தொகுப்பாளினியாக செய்ய முடியுமா என்று நானும் ஓகே சொல்லி விட்டேன்.சூப்பர் சிங்கர் தான் என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அது ஆரம்பித்தபோது மக்களிடம் எப்படிபோய் சேரும் என்று எனக்குத் தெரியாது. அதற்கு முன்னர் நான் பாடியிருந்தாலும் சூப்பர் சிங்கர் ஆரம்பித்த பின்புதான் ஓ.. இவங்கதான் திவ்யா என்று மக்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். கண்டிப்பாக சூப்பர் சிங்கர் குழுவுக்கு நான் நன்றிக்கடமைப்பட்டிருக்கின்றேன். சூப்பர் சிங்கர் இல்லை என்றால் திவ்யாவே இல்லை. இந்த மாதிரி மக்கள் மத்தியில் ஒரு பெயர் வேண்டித் தந்தது அந்த நிகழ்ச்சிதான். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் ஏன்றால் நான் ஒரு மலையாளி. வீட்டில் மலையாளம் பேசுறனான். ஆனால், தமிழில் ஒரு நிகழ்ச்சி அதுவும் தொலைக்காட்சியில் செய்ய வேண்டும் என்றால் அந்த மொழயே தெரியாமல் பண்ணவேண்டிய சூழ்நிலையில் இருநதேன். முதலில் மக்கள் என்னை விரும்பவில்லை. நிறையபேர் ஏன் இந்த பெண்ணு பண்ணுது என்று கேட்டிருக்காங்க. அதற்கு பிறகு மக்களுக்கு என்னை ரொம்ப பிடித்துபபோய்விட்டது. பார்த்தவுடன் ஈஸியான தொழில் என்று நினைப்பார்கள். அங்கு வந்துபார்த்தாத்தான் தெரியும் அந்த குழு எவ்வளவு கஷ்டப்பட்டு செய்யுறாங்கள் என்று.

இலங்கை வந்திருக்கீங்க. இங்குள்ள ரசிகர்கள் பற்றி..

ஆஹா.. ஆஹா.. என்றுதான் சொல்ல முடியும்.. நான் முதலில் வந்தது திருகோணமலைக்குத்தான். அங்கு பெரிய மைதானத்தில்தான் எங்களது நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நான் உடனே கேடடேன் ஏன் இவ்வளவு பெரிய மைதானத்தில் என்று பிறகுதான் தெரிந்தது அந்த மைதானம் முழுவதும் மக்கள் திரண்டிருந்து நல்ல வரவேற்பைத் தந்திருந்தார்கள். எப்ப கூப்பிட்டாலும் நான் வந்து நிகழ்ச்சி செய்ய ரெடியா இருக்கினறேன்...

No comments:

Short movie