Monday, May 10, 2010

ஒப்பாரிகளின் கூடமாகிப்போய்விட்ட வானொலிகள்



என்னடா வானொலி நிலையங்களில் யாராவது இறந்துவிட்டார்களா ஒப்பாரி வைக்கின்றார்கள் என்று எல்லாம் நினைக்கவேண்டாம்.

அறிவிப்பாளர்கள் என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் படி அவர்களின் திறமையும் தனித்தன்மையும் வெளிப்படும் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம் என்றால் அவர்களின் நிகழ்சிசயைக் கேட்பதற்கு என்றே கூட்டம் இருந்தது. அதற்கு அடுத்த தலைமுறையினர் என்று வந்த இளைய தம்பி தயானந்தா, எழில்வேந்தன், நடராஜ சிவம் போன்றவர்கள் தமது திறமையினையையும் நேயர்களிடம் பெற்றிருந்தினர்.
நேயர்களிடம் ஒலிபரப்பாளர்கள் சகஜமாகப் பேசவேண்டும் என்று வானொலிகளில் மாற்றத்தைக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அன்றுதான் வானொலிகளுக்கு சனியன் பிடித்தது என்று சொல்லலாம். பிடித்த சனியன் சும்மா சனியன் இல்லை ஏழரைச் சனியன் என்றுதான் நினைக்கின்றன்.

சக்தி, சூரியன், சுவர்ணஒலி (அழிந்துபோன வானொலி), வெற்றி. வசந்தம் என்று வானொலி நிலையங்கள் தங்கள் ஒலிபரப்பைச் செய்துகொண்டு இருக்கின்றன.
ஆரம்பத்தில் சக்தி, சூரியன் ஆகியன காலையில் சக்தியென்றால் அது லோசனும் எழில்வேந்தனும் சூரியன் என்றால் வியாசாவும் அபர்னாவும், தென்றல் அது வழமையான நிகழ்ச்சி காலையில் ஒரு கலாட்டாவாக ஆரம்பித்தன இந்த நிகழ்ச்சிகள் இது மக்களிடையே பெரு வரவேற்பபை பெற்றது என்றால் உண்மைதான்.

நாள் ஒரு வண்ணம் பொழுதுவண்ணம் என்று வந்து குவிந்த வானொலி அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சி செய்ய வந்தார்களா இல்லை தாங்கள் கூத்தடிக்க வந்தார்களா என்று தெரியவில்லை ஒரே ஒப்பாரி மயம்தான். காலையில் தொடங்கிய இந்த ஒப்பாரிகள் இரவில் கூட அமைதியாக செல்லும் என்று பார்த்தால் அங்கையும் காதுக்கடிகள் எப்படித்தான் மக்கள் வானொலிகளைக் கேட்டு அறிவைப் பெருக்க முடியும் இந்தக்காலத்தில். ஒரு தகவலும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை அவன் அவளைக் கடிப்பதும் அவள் அவனைக் கடிப்பதும்தான் கெ.. கெ.. கெ.. என்று சிரிப்பதும் தான் நிகழ்ச்சி என்று செய்துகொண்டிருக்கின்றார்கள்.

சக்தி, சூரியன் வானொலிகளில் மாலை நேர நிகழ்ச்சிகள் செய்பவர்கள் திருவிழாவில் பிள்ளையை தொலைத்துவிட்டு கத்தும் குடும்பம் மாதிரி கத்துகின்றார்கள் ஏதோ சவுண் எஞ்சினியரின் பிள்ளைகள் என்று நினைப்புப்போல.

வானொலி அறிவிப்பாளர்கள் என்றால் அது கடல் கடந்தும் இந்தியாவரை பிரபல்யமான காலம் ஒன்று இருக்கு ஏன் இப்ப கூட அங்குள்ள தனியார் வானொலிகளில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அறிவிப்பாளர்களாக பிரகாசிக்கின்றனர். அப்படி இலங்கை அறிவிப்பாளர்களுக்கு ஒரு மவூசு இருக்கு. இதய ராகம் என்றால் அது ரவூப். நேற்றைய காற்று என்றால் அது ரமணன். என்று மக்களால் அறியப்பட்டார்கள். இன்று யார்தான் என்ன நிகழ்ச்சி செய்கின்றார்களோ தெரியவில்லை நிகழ்ச்சிகளின் பெயர்தான் மாறியிருக்கே தவி காலையில் தொடங்கினால் இரவு வரைக்கும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளே செய்கின்றனர்.

அண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியை கேட்டபோது....
ஒரு நேயர் தொலைபேசியில் வாப்பாவுக்கும் உம்மாவுக்கும் நானாவுக்கும் பாடல் தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த அறிவிப்பாளர் வாப்பா என்றால் யார்? உம்மா என்றால் யார்? நானா என்றால் யார் என்று அந்த நேயரை ரொம்பவும் நக்கலாக கையாண்டார். இது அவருக்கு நகைச்சுவைபோல தெரிந்திருக்கிறதுபோல. ஒரு இனம் சார்ந்த மொழி வழக்கங்கள் கூடத் தெரியாதவர் எப்படி அறிவிப்பாளராக வந்தாரோ தெரியவில்லை.

நம கத்துவதைத்தான் கத்துவோம் என்று நினைத்து நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர்கள் செய்வார்கள் ஆனால். அவர்களின் தனித் திறமை மங்கிப்போய்... 10 இல 11 ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்போல.

ஏன்.. லோசன் கூட ஆரம்பத்தில் நல்லாகத்தான் அறிவிப்பு செய்துகொண்டிருந்தார். அவருக்கு என்ன நடந்ததோ தெரியல.. அவரும் இந்த மந்தைகளின் வாசனை கொஞ்சம் தொற்றிக்கொள்வதுபோல் இருக்கு.
அறிவிப்பாளர்கள்... ஒரு ஊடகமாகவே செயற்படவேண்டியவர்கள்.. அவர்களே இப்படியான நிகழ்ச்சிகளை செய்தால் அடுத்த தலைமுறை நாய் மாதிரித்தான் குலைக்க வேண்டி வரும் என்பதை புரிந்து செயற்படுங்கள்.

3 comments:

Anonymous said...

neenga romba sooda erukeerenga pola.konjam spelling mistakeum erukku.parungo...................

அன்பு நண்பன் said...

சரியாகத்தான் சொன்னீர்கள்,,, ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இவ்வாறு மாற்றத்துடன் மேற்கொள்ளலாம் ஆனால் ஒரு சில தரமான நிகழ்ச்சிகள் இதனால் தரம் குறைந்து விட்டன என்பதையும் யாராலும் மறுக்க இயலாது,,,,,

அன்பு நண்பன் said...

சரியாகத்தான் சொன்னீர்கள்,,, ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இவ்வாறு மாற்றத்துடன் மேற்கொள்ளலாம் ஆனால் ஒரு சில தரமான நிகழ்ச்சிகள் இதனால் தரம் குறைந்து விட்டன என்பதையும் யாராலும் மறுக்க இயலாது,,,,,

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...