விஸ்வரூபமா.?........... இல்லை ஜெயாரூபமா என்று தெரியவில்லை... இன்று உலக அளவில் தமிழர்களின் மனங்களை கவலைகொள்ள செய்துள்ளது. விஸ்வரூபம் படம் தடையும் தடை நீடிப்பும் அதற்கு எதிரான போராட்டங்களும்தான்.
- ஏன் தடை?
- யாரால் தடை ?
- எதற்காக தடை?....
முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் விஸ்வரூபம் படத்தில் காட்சிகள் இருக்க்கின்றன என்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து படத்தை தங்களுக்கு போட்டுக்காட்டினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று தெரிவித்தனர்.. அதனடிப்படையில் படம் வெளியிடுவதற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காட்டியிருக்கின்றார்.் அதன் பிறகு படம் வெளியிடுவதற்கு முதல் நாள் எப்படி இவர்களால் போராட்டத்தில் இறங்க முடிந்தது. யார் இவர்களின் பின்னணியில் உள்ளனர்?
படத்தை முதலில் ஆளும் கட்சியின் தொலைக்காட்சி வேண்டுவதற்கு போட்டி போட்டது. ஆனால் எதிர்த்தரப்பு தொலை க்காட்சிக்கு கமல் தனது தொலைக்காட்சி உரிமையை கொடுத்து இருக்கின்றார். அதை விட படத்தை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்தவள் விநியோகிஸ்தர்களாக படங்களை வேண்டியதா? இல்லை அண்மையில் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் சிதம்பரம்தான் பிரதமராக வரவேண்டும் என்று கமல் பேசியதா? இவை அனைத்தும் தான் ஜெயாவின் கோபத்திற்கு ( விஸ்வரூபத்திற்கு) ஆளாக்கியிருக்கின்றது.
படத்தை வெளியிடுவதற்கு முன்பு சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த சென்சார் சான்றிதழை தமிழக சென்சரில் இருந்தவர் ஒருவர் இஸ்லாமியர் அவருக்கு தெரியவில்லையா இது இஸ்லாமியருக்கு எதிரான படம் என்று?
ஆளும் கட்சியின் அடிவருடிகளௌக இருக்கின்ற பங்காளிக்கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்ககத்திலும் அவர்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தமிழக அரசு தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தொடர் வழக்குகள் தொடர் தாக்குதல் இது இந்து இஸ்லாமிய பிரச்சினையை தமிழக அரசு கட்டவிழ்ந்து விட்டதாகவே தோன்றுகின்றது?
நடிகர்கள் கைவிட்ட நிலையில் கமல்...
விஸ்வரூபத்திற்கு பிரச்சினை ஆரம்பத்திலி வந்த போது நடிகர்கர்கள் கமலுக்கு கைகொடுக்கவில்லை.. நடிகர் சங்கம் ஏதோ ஒரு போக்கு சாக்கிற்கு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டது.
ஆரம்பத்தில் கமலுக்கு துணிந்து ஆதரவு கொடுத்தது பிரகாஷ்ராஜ் குஷ்பு மனோ பாலா கும்கி நாயகன் விக்ரம் ஆனால் அடுத்த முதலமைச்சர் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் விஜய் ஏன் கமலுக்கு ஆதரவாக இதுவரை ஒரு குரல் கொடுக்க வில்லை ஆளும் கட்சி்யை பகைத்துக்கொள்ள பயத்திலா? அஜித் ஏன் ஆதரவு கொடுக்கவில்லை..
கமலுக்கு நேரில் சென்று சிம்பு, சரத்குமார், ராதிகா, அரவிந்தசாமி, மணிரத்தினம் போன்றவர்கள் ஆறுதல் தெரிவித்திருக்கின்றார்கள்.
ரஜினியும் தன் நண்பனுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்தான் இயக்குநர் பாராதிராஜா இயக்குநர் கேயார் இயக்குநர் வசந் அர்ஜுன் என்று நடிகர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
இதே வேறு ஒரு நடிகருக்கு பிரச்சினை என்றால் நடிகர் சங்கம் உண்ணாவிரத்தில் ஈடுபடவேண்டும். அதில் கட்டாயம் கமல் கலந்துகொாள்ள வேண்டும். ஆனால் கமலுக்கு பிரச்சினை தமிழ்சினிமாவின் உயிர்மூச்சு அந்த மூச்சைக்க காப்பாற்ற யாரும் இல்லையா?
கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் மதச்சார்பற்ற ஒரு மாநிலமோ ஒரு நாடோ இருந்தால் நான் அங்கு குடியேறத் தயரார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவ்வாறு கமல் தெரிவித்தது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
தமிழனுக்கே தமிழ் நாட்டில் வசிக்க இடமில்லையா?
எங்கே செல்கின்றது தமிழ் நாடு.
சரி படத்திற்கு வருவம் விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியது. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக காட்டமல் எப்படி காட்ட முடியும்????தலிபான் தீவிரவாத தலைவர் முல்லா உமர் குர் ஆன் படிப்பது போல் காட்டியிருப்பதாக குற்றம் சாட்டுக்கின்றார்கள். நான் கேட்கின்றேன் முல்லா உமர் குர் ஆன் படிக்காமல் கந்தசஷ்டி கவசமா படிக்க முடியும்?
இலங்கையிலும் இப்படத்திற்கு தடையாம்? எந்த நோக்கத்திற்காக இலங்கையில் தடை விதித்தார்கள் இலங்கை அரசாங்கம் தலிபான் தீவிரவாதத்திற்கு ஆதரவு குரல் கொடுப்பதற்காககவா? இல்லை முஸ்ஸில் மக்களையும் முஸ்லிம்அரசியல் வாதிகளையும் தம்பால் ஈர்த்து வைத்துக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. இல்லை கமல் ஒரு தமிழ் என்ற ரீதியில் தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லையா இலங்கையில்?
இதே ஈழத்தமிழன் தன் போராட்ட வரலாற்றை படமாக்கினால் அதை இலங்கை அரசு தடை செய்யாமல் திரையிடுமா? அப்ப முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டமா?
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் படத்திற்கு தடை என்று தமிழ்நாடு அரசு தெரிவிக்கின்றது என்றால் படத்தை தடை செய்வதால்தான் சட்டம் ஒழுங்கு பதிப்படைகின்றது.இது தமிழ் நாட்டு அரசுக்கு தெரியாதா?
கமல் உலக நாயகன் அவன் எந்த நாட்டிலும் எந்த கிரகத்திலும் வாழ்வான் அவனது திறமையும் அவனது அன்பு உள்ளங்களும் இருக்கின்றது.