காதலின் சுகங்களும் காதலின் தவிப்புக்களும் காதலின் பிரிவுகளும் சேர்ந்து ஒரு வானவில்லா?
இல்லை வர்ணஜாலங்கலாக? என்று தெரியவில்லை அத்தனை அற்புதங்கள்.என்னடா இவன் சேரனுக்கு ஐஸ் வைக்கின்றான் என்று நினைக்க வேண்டாம்.
பேரரசு.... சக்தி சிதம்பரம்... ......... என்று அடுக்கிக்கொண்டு போகலாம் கதையே இல்லாமல் படம் இயக்கும் இயக்குநர்கள் மத்தியில்... சேரனின் படம் விதிவிலக்கு.
பத்மப்பிரியாவின் கண்களினாலே காதலை உணர்த்திய விதம் சூப்பர்.
அதே காதல் பிரியும்போது பார்ப்பவர்களின் கண்ணகளில் கசியும் கண்ணீர்.
உள் உணர்வுகளை காட்டுவதில் சேரனின் முத்திரை பதிகின்றது.
தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவது காதல்.
பழகுவது சுலபம் விளத்துவது கஷ்டம் போன்ற வசனங்கள் நச்சென்று இருக்கின்றது.
மத ஒற்றுமையை காதலுடன் சேர்ந்துகொடுத்த விதம் நல்லா இருக்கின்றது.
பத்மப்ரியாவின் காதாப்பாத்திரம் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளுது.
சபேஸ் முரளியின் இசையில் உருவான பாடல்கள் மூன்று ரசிக்கும்படியாக இருக்கின்றது அதில் நீ நிலா என்று தொடங்கும் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.
ஆரம்பக்காட்சிகளின் பின்னணியை கொஞ்சம் கவனித்திருந்தால் நல்லாயிருக்கும்.. வைத்தியசாலைக் காட்சிகளின் பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
1970 தொடங்குகின்ற கதை என்பதால் அதற்கேற்றால் போல் அனைத்துவிடயங்களையும் கவனித்து செய்திருக்கின்றார் சேரன்.
இளவரசு.. மற்றும் இஸ்லாமிய காதாபத்திரங்களில் நடித்தவர்கள் தமது பங்கை நிறைவாகச் செய்திருக்கின்றார்கள்.
விஜய் அஜித் போன்ற நாயகர்கள் கட்டாயம் சேரன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு நல்ல இயக்குநரை தமிழ் சினிமா தந்திருக்கின்றது. அதை நாம்தான் பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டும்.
சேரனின் இந்தப் பொக்கிஷம் காதலர்களுக்கு மட்டும்.