கிளிநொச்சி இன்று தென்னிலங்கையில் தீபாவளி என்னடா கிளிநொச்சியைப் பிடித்துவிட்டோம். தமிழினத்தின் தலைவன் மட்டுப்பட்டுவிட்டான். எங்கே போய் ஒழிக்கப்போகின்றாõன். தென்னாபிரிக்காவிலா இல்லா விட்டால் முல்லைத்தீவிலையா என்று ஊழையிடுகின்றன சில நரிகள் இந்த நரிகளின் ஊழை தான் இவ்வாறு என்றாலும் பரவாயில்லை.இந்தியா ஒரு படிமேல் போய் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரன் பிடிப்பட்ட பின் எங்களிடம் ஒப்படையுங்களாம்? என்ன கொடுமை சரவணா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. பிரபாகரன் என்ன கிள்ளுக்கிரையா இவர்களின் கனவு பலிப்பதற்கு. கிளிநொச்சியை முன்பும் ஸ்ரீலங்கா படையினர் பிடித்து வைத்திருந்தனர். அப்போது கொக்கரிக்காதவர்கள் இன்று கிளிநொச்சி பிடிபட்ட பின்னர் கொக்கரிப்பதுதான் ஆச்சரியம்.இதை எப்படிச் சொல்ல கவுண்ட மணியின் ஸ்டைலில் சொல்வதென்றால் இதேல்லாம் அரசியலில் சகஜமப்பா என்றுதான் சொல்லலாம்.அரசியல் நடகம் அல்ல அரசியல் திரைப்படங்களே இன்று தென்னிலங்கையில் அரசாங்க ஊடகங்கள் தொடக்கம் தனியார் ஊடகங்கள் வரை கிளிநொச்சியின் வெற்றியை ஒரு ஆங்கிலப் படத்தின் ரெய்லறை காட்டுவதுபோல் மக்களிடம் காட்டுகின்றார்கள்.ஒரு இனத்தின் தலைவனையும் அந்த இனத்தையும் அழிப்பதற்கு அவர்கள் போடும் கூத்துக்களுக்கும் கொண்டாட்டங்களும் இன்னும் இன மோதல்கøளேய அதிகரிக்கும் என்பது அரச தரப்பிற்கு தெரியாதோ?கிளி வெற்றியில் தீபாவளி வெடிகள் மாதிரி வெடிகள் கொழுத்துவதும் தமிழ் மக்களை கேவலமாக பேசுவதும் அவர்களை கிண்டல் செய்வதிலும் சிங்களப் பேரினவாதம் இடுபட்டுள்ளது.என்ன உங்கட தலைவரை ஆட்டம் சரி என்றும் தமிழ் பெண்கள் மீதான சில்மிசங்களிலும் பேரினாவதாதிகள் ஈடுபடுகின்றார்கள். கிளிநொச்சி பிடிபட்டது.... பிரபாகரனை பிடிக்கப்போறம் என்று கொக்கரிப்பவர்களே.. ஒரு நிமிடம் நீங்கள் உங்கள் இருப்பை கவனிக்க வேண்டும் தமிழன் என்ன கேனையனா? இல்லை லூசனா? ஒவ்வொரு தமிழனும் தூங்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் அடிவருடிகளையும் எட்டப்பர்களையும் விட்டு எத்தனை லட்சம் தமிழன் இருக்கின்றான் உலகம் உருண்டை என்பதை மறந்து விடக்கூடாது.எத்தனை ஆயிரம் உயிர்களை துறந்து எமக்கான தீர்வை நாம் பெறுவோம்.பாரதி பிறந்த நாட்டில் இன்று ஈழத் தமிழனுக்கு இருக்கும் ஆதரவும் எழுச்சியும் ஏன் தென்னிலங்கை தமிழர்களுக்கும் மலையக் தமிழர்களுக்கும் இல்லை.அவர்களும் பேரினவாதிகள் என்ன சொல்கின்றார்களோ அவ்வாறுத்தான் அவர்களின் செயற்பாடுகளும் மலையத்தில் இன்று எத்தனைப் பேரிற்கு ஈழப்பிரச்சினை என்றால் என்ன என்று தெரியம் ஏன் தென்னிலங்கையிலும் இன்று எத்தனை பேரிற்கு ஈழப்பிரச்சினை எதற்காக இடம்பெறுகின்றது என்று தெரியாது இருக்கின்றார்கள். இவர்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் மலையக அரசியல் தலைவர்களும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் தங்களது அரசியல் இலாபங்களையே குறியாக கொண்டு செயற்படுகின்றார்கள்.இவ்வாறு இவர்கள் செய்படுவதால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழர்களின் பிரச்சினைகள் பற்றித் தெரியாமல் போகின்றது.எமது மக்கள் எமது பிரச்சினை நமக்கு சலுகைகள் இல்லை என்பதை மக்கள் உணர்கின்றார்கள் இல்லை. ஏதோ வந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் .தருகின்றதை தாருங்கள் நாங்கள் அதை வைத்து சமாளிப்போம்.எனது நாட்டில் எனக்கு –அடிப்படை வசதிகளோடு வாழ்வதற்டு சுதந்திரம் இல்லாதபோது எனக்கொன்று ஒரு நாட்டை உருவாக்குவதில் தப்பில்லை.
வேறு இனத்தவனிடம் நாம் அடிமையாகவே இருப்போம் அவனின் சொல்படி நடப்போம் என்றால் தமிழன் என்று இனம் அழிவதை தவிர வேற கேவலமான செயல் ஒன்றும் இல்லை.செய் அல்லது செத்து மடி....பிரபாகரனை அழித்துவிட்டால் மட்டும் இந்தபிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று இந்தியா பகல் கனவு காண்கின்றது.இந்தியாவின் ஆயுத உதவிகள் இலங்கைக்கு தாராளாமாக வளங்கப்படுகின்றது.முகர்ஜி வருகின்றானாம்....அவன் வந்த என்ன வராட்டி என்ன வந்து எதோ வெட்டிப் புடுங்கிறமாதிரி.சரி முகர்ஜி வருகின்றார் என்று பார்தோமானால்..வருவார்... ஜனாதிபதியுடன் அலரிமாளிகையில் சந்திப்புஎதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்புதங்களுடன் ஒத்துப்போகும் தமிழ் அமைச்சர்கள்இப்படி சந்திப்புகள் இடம்பெறும்.பின்பு இருதரப்பும் சேர்ந்து ஒரு பத்திரிகையாளர் மாநாடு.பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும்.இந்த மண்ணாங்கட்டி கேள்விகளும் பதில்களும் எத்தனைத் தடவைதான் எத்தனைத் தலைவர்கள் வந்து சொல்லிட்டுபோயிட்டார்கள்.முகர்ஜியின் வருகை என்ன நடக்கப்போகுது என்று ஊடகங்கள் ஊகிக்கும் அளவுக்கு அது வெறும் கண் துடைப்பு நடகமே தவிர முகர்ஜியின் வருகையால் ஒரு பயனும் இல்லை.கிளிநொச்சியைப் பிடித்து விட்டார்கள் இன்னும் முகர்ஜி வரவில்லை என்று தமிழக கட்சிகள் கத்தி பயன் இல்லை.நீங்கள் உங்களது போராங்களை வலுவடையச் செய்தால்மட்டும் போதும் எழுச்சிகொள்ளுங்கள் உங்கள் உறவுகள் இங்கு செத்து மடிகின்றதை அறிக்கைகள் மூலம் வருத்தத்தை தெரிவிக்காமல் போராட்டத்தில் இறங்கி போராடுங்கள் தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்.இலங்கையில் சிங்களவனின் ஆட்சிஇந்தியாவில் சிங்கின் ஆட்சிஇந்த இரண்டு அடக்கு முறையான ஆட்சிகளுக்கும் விரைவில் முடிவு வரும் அதுவும் தமிழனாலேயே வரும்.வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் நாடு
Subscribe to:
Post Comments (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...
-
இளவரசர்களை வைத்துகாமடி கீமடி பன்னல்லையே இலங்கையில் உள்ள இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக சக்தி.ரி.வியில் பல கட்டங்களாக நடைபெற்று இசை இளவ...
-
இந்தியாவின் தேர்தல் ஒரு புறம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் மறுபுறம் என்று இன்று காதுகளையும் மனங்களையும் காயப்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்கள்...
-
இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியு...
1 comment:
வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் நாடு
Post a Comment