Monday, February 11, 2019
இராவணன் குகை...
இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை....
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீற்றர் தொலைவான மலையில்தான் இந்த இராவணா குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.
இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணிவரைதான் செல்ல முடியும். இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்துவிடுவார்கள் ....இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.... செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் அரை மணி நேரப்பயணத்தில் உச்சியை அடைந்துவிடலாம்.
குகைக்கு செல்லும் பாதையில் குருவிகளின் சத்தங்களும் நீர் வீழ்ச்சிகளின் சத்தங்கள் மனங்களை சாந்தப்படுத்துகின்றன. .....
உயரத்தை சென்றடை ஏதோ மகிழ்ச்சி மெது மெதுவாக குகையை நோக்கி கால்கள் நகர்கின்றன.... சிறிது தூரத்தில் படிகற்கள் இல்லாமல் பாறைகளின் நடுவே செல்லவேண்டும்....... அதன்பின் இருண்ட குகைகள் செல்கின்றோம்.... ஒரே இருட்டு ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கிவைத்தால் போல் குகை... அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய ஔி உள்ளே நுழைகின்றது......
ஞானிகள் முனிவர்கள் ஏன் குகைகள் தியானம் செய்தார்கள் என்ற என்பது அந்த குகைக்குள் செல்லும் போது மனதில் ஒரு அமைதி சிறிது தூரம் உள்ளே நகரும்போது குருவிகள் சத்தம் மட்டுமே கேட்கின்றது..... குகை ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மனதில் சந்தோசம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த குகைக்கு சென்றுவந்தால் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களே......
https://youtu.be/ifKCVf6gzzq
Friday, May 25, 2018
Sunday, August 27, 2017
யார் தமிழர்களின் தலைவர்? பிக் பஸ்....... (02)
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா….. நல்லூர் முருகனுக்கு அரோகரா….. முருகனை தரிசிக்க நல்லூர் தேர்திருவிழாவுக்கு முதல் நாள் இரவு பஸில் செல்வதற்காக பஸ் நிலையம் சென்றேன்… அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நிறைந்திருந்தால்…. பஸ் கிடைப்பதற்கு கஷ்டமாக இருந்தது…. இரவு 12 மணியளவில்தான் ஒரு பஸ் கிடைத்தது. அடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறி ஒரு சீட் பிடித்து அமர்ந்துகொண்டேன்….
பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது…. பக்கத்தில் ஒரு சகோத மொழியைச் சேர்ந்த நபர் ஒருவரர் வந்து அமர்ந்தகொண்டார்… அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது….
நான் மெல்ல அவரிடம் நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்
நான் யாழ்ப்பாணத்திற்கு வியாபார விடயமாக செல்கின்றேன் என்றார்….
ஆ…. அப்படியா ரொம்ப நல்லது என்றேன்….
அவரது சொந்த இடம் மாத்தறை…..
இருவரும் பரஸ்பரம் நலன்களை விசாரித்துக்கொண்டிருக்கும்போது….
அந்த சகோதர இன நபர் கேட்டார்…
தமிழர்களுக்கு ஏன் சலுகைகள் வேண்டும். நிர்வாகம் வேண்டும் என்று கேட்கின்றீர்கள் என்றார். உடனே நான் சொன்னேன். நீங்களும் இலங்கையர் நானும் இலங்கையர் என்றால் உங்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள். பதவிகள். நிர்வாக கட்டமைப்புக்கள் மாகாண சபை அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்தானே என்றேன்.
அதற்கு அந்த நபர் …
நீங்கள் வடக்கு மாகாண சபையை ஒழுங்கா ஆட்சி செய்கின்றீர்கள். இல்லைத்தானே.. ஒரே ஊழலும் அமைச்சர்கள் பதவி விலகலும் முதலமைச்சர் ஒரு புறமும் கூட்டமைப்பு மறுபுறமுமாக சண்டைபிடித்துக்கொண்டுதானே இருக்கின்றீர்கள் மக்களுக்கு தேவையானதை எதையாவது செய்தீர்களா? மாகாண சபைக்கு கிடைக்கும் நீதிகள் கூட திரும்பிப்போகின்றதாமே… அவ்வாறு ஒரு வேலைத்திட்டமும் செய்யாமல் மக்களை ஏன் மாகாண சபை அமைச்சர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்று அந்த நபர் கேட்டபோது….
அதில் சில விடயங்களில் நாமும் ஒன்றுபடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம்..
அதற்கு காரணம் யார்? அரசியல் வாதிகளா? இல்லை நிர்வாக அதிகாரிகளா? இல்லை அமைச்சர்களா? இல்லை சமூக விரோத குழுக்களா?
கலாசாரத்திலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் ஒரு காலத்தில் ஒரு கட்டமைப்புடனும் வாழ்ந்தவர்கள் இன்று தெறிகெட்டுப்போனதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்… இன்னொரு இனம் எம்மவர்களை சாடுவதற்கு இடம் கொடுத்ததுயார்? என்று தொடர்ந்து மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
(சகோதர இனத்தவருடனான உரையாடலின் மிகுதி அடுத்த பதிவில்)
பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது…. பக்கத்தில் ஒரு சகோத மொழியைச் சேர்ந்த நபர் ஒருவரர் வந்து அமர்ந்தகொண்டார்… அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது….
நான் மெல்ல அவரிடம் நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்
நான் யாழ்ப்பாணத்திற்கு வியாபார விடயமாக செல்கின்றேன் என்றார்….
ஆ…. அப்படியா ரொம்ப நல்லது என்றேன்….
அவரது சொந்த இடம் மாத்தறை…..
இருவரும் பரஸ்பரம் நலன்களை விசாரித்துக்கொண்டிருக்கும்போது….
அந்த சகோதர இன நபர் கேட்டார்…
தமிழர்களுக்கு ஏன் சலுகைகள் வேண்டும். நிர்வாகம் வேண்டும் என்று கேட்கின்றீர்கள் என்றார். உடனே நான் சொன்னேன். நீங்களும் இலங்கையர் நானும் இலங்கையர் என்றால் உங்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள். பதவிகள். நிர்வாக கட்டமைப்புக்கள் மாகாண சபை அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்தானே என்றேன்.
அதற்கு அந்த நபர் …
நீங்கள் வடக்கு மாகாண சபையை ஒழுங்கா ஆட்சி செய்கின்றீர்கள். இல்லைத்தானே.. ஒரே ஊழலும் அமைச்சர்கள் பதவி விலகலும் முதலமைச்சர் ஒரு புறமும் கூட்டமைப்பு மறுபுறமுமாக சண்டைபிடித்துக்கொண்டுதானே இருக்கின்றீர்கள் மக்களுக்கு தேவையானதை எதையாவது செய்தீர்களா? மாகாண சபைக்கு கிடைக்கும் நீதிகள் கூட திரும்பிப்போகின்றதாமே… அவ்வாறு ஒரு வேலைத்திட்டமும் செய்யாமல் மக்களை ஏன் மாகாண சபை அமைச்சர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்று அந்த நபர் கேட்டபோது….
அதில் சில விடயங்களில் நாமும் ஒன்றுபடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம்..
அதற்கு காரணம் யார்? அரசியல் வாதிகளா? இல்லை நிர்வாக அதிகாரிகளா? இல்லை அமைச்சர்களா? இல்லை சமூக விரோத குழுக்களா?
கலாசாரத்திலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் ஒரு காலத்தில் ஒரு கட்டமைப்புடனும் வாழ்ந்தவர்கள் இன்று தெறிகெட்டுப்போனதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்… இன்னொரு இனம் எம்மவர்களை சாடுவதற்கு இடம் கொடுத்ததுயார்? என்று தொடர்ந்து மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
(சகோதர இனத்தவருடனான உரையாடலின் மிகுதி அடுத்த பதிவில்)
Sunday, August 13, 2017
பிக் பஸ்....... (01)
அடடடடா என்னடா அதை இதிலையும் எழுதுகின்றார்களா? என்னகொடுமை சரவணா என்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் வாய்க்குள் முணுமுணுப்பது விளங்குது… அது வேற இது வேற என்று சொன்னா நம்பவா போறீங்க…
சரி…. சுரி…விடயத்திற்கு வருவமே ஏன் வீண் அளப்பறை….. பிக் பஸ் என்றால் பெரி;ய பஸ்…… அட அதிலும் நாமும் பயணம் செய்து பார்போம் என்று கோட்டை பஸ் நிலையத்தி;ல் களுத்துறைக்கு போகலாம் என்று அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஒருசீட்டைப்பிடித்து அமர்ந்துகொண்டேன்….
நம்மளுக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் இருந்தார்கள் அதில ஒருவனிடம் கேட்டேன் களுத்துறைக்கு நான் செல்கின்ற இடத்தை அவன் சொன்னான் எனக்கு தெரியாது… உங்களிடம் போன் இருக்கா என்று நான் ஆம் என்றேன் … உடனே அவன் கூகுல் மப்பை பார்த்து போங்கள் என்றான்.
நம்மலுக்கு கூள்தான் தெரியும் கூகிள் எங்கதெரியும் என்றேன்….
உடனே அந்த பையன் எனது போனை வாங்கி கூகிள் மப்பை டவுண்லோட் பண்ணி நாம எந்த இடத்திற்கு பயணிக்கபோறமோ அந்த இடத்திற்கு வழிகாட்டிற விதத்தை சொல்லித்தான் தந்தான்…. விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று எனக்கு மறு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன்…
அவருக்கு வந்தது கோபம் என்னை அடிக்காத குறைதான்…. நீங்களும் உங்கட விஞ்ஞானமும் என்று கோபப்பட்டார்…..
ஏன் அப்படி கோபப்படுகின்றீர்கள் என்று கேட்டால்…..
அதுவா… வீட்டில் யாரும் என்னுடன் பேசுகின்றார்கள் இல்லை.
ஏன் வீட்டில் சண்டைய என்றேன்….
இல்லை ஏல்லோரும் ஏதோ பேஸ் புக்காம் காலையில் எழுந்ததில இருந்து அதுகள் தூங்கும்மட்டும் அதோடுதானே இருக்கிதுகள்…. என்னத்தை சாப்பிடுதுகள் என்னதை குடிக்குதுகள் என்று அதுகளுக்கே தெரியாது எந்த நேரம் பார்த்தாலும் பேஸ்புக் அதில… அவன் இவ்வளவு லைக் போட்டிக்கான் இவன் இவ்வளவு லைக் போட்டிருக்கான் என்று சண்டைவேற…..
திடீர் என்று தூக்கத்தில சத்தம் போட்டு சிரிக்கிறார்கள்; ஏன் என்று போய் பார்த்தால் பேஸ் புக்கில ஜோக் போட்டிருக்காம் அதைபார்த்து சிரிக்கிறாங்க… இரவு 12 மணிக்கு பிறகு தூங்காமல் விடியும் மட்டும் பேஸ் புக்கில இருக்கிறதுகளாம் (கேட்டா நைட் டேட்டா இலவசமாம்.) அதனால் ஸ்கூலுக்கு கூட லேட்டாக போகிறது. அங்க போய் தூங்கி ரீச்சரிடம் அடிவே வாங்கிக்கட்டுறாங்;கள் என்று தனது ஆதங்கத்தை சொல்லி முடித்தார்.
அப்பதான் நான் யோசிச்சேன் குடும்பம் என்றால் எப்படி கூட்டாக இருந்து கதைத்து மகிழந்திருப்போம் இப்ப குடும்பத்தைவிட பெயர் ஊர் தெரியாத ஆணோடு பெண்ணும் தங்களது குடும்பத்தை பற்றி சொல்வதும் நல்லவர்களா கேட்டவர்களா என்று கூடதெரியாது உறவை வளர்த்துக்கொள்வதுமே இன்று பல குற்றங்களுக்கும்கொலைகளுக்கும் காரணமாகிப்போய்விடுகின்றது. ஏதையும் நாம் கவனத்தோடு இருந்தால்தான் நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்..
அட களுத்துறை வந்துவிட்டது நான் இறங்குகின்றேன்…இந்துமுறை எனது அளப்பறையை நிறுத்திக்கொள்கின்றேன்… மீண்டும் அடுத்த பஸ்ஸில் சந்திக்கின்றேன்…
Tuesday, January 24, 2017
இலங்கையில் ஜல்லிக்கட்டு பேரணியும் விதண்டா வாதங்களும்
தமிழகத்தில்
ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி
மாணவர்கள் தொடர்ந்து 7
நாட்களாக
அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு
பெரும் எழுச்சியை கண்டுள்ளனர்..
இளைஞர்கள்
சமூகவலைத்தளங்களினூடாக
இணைந்து இந்த போராட்டத்தை
முன்னெடுத்தனர்.
வெற்றியும்
கண்டனர்.
தமிழக
இளைஞர்களின் போராட்டத்திற்கு
ஆதரவாக உலகநாடுகள் பலவற்றில்
இளைஞர்களும் மக்களும்
போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதேபோல்
தான் இலங்கையில் வடக்கு
கிழக்கு மலையகம் கொழும்பு
போன்ற இடங்களிலும் இளைஞர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு தமது
ஆதரவினை மேற்கொண்டனர்.
தமிழக
இளைஞர்களின் போராட்டத்திற்கு
இலங்கையில் இளைஞர் ஆதரவு
தெரிவித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இப்பொழுது
அந்த இளைஞர்களை கொச்சப்படுத்தும்
விதமாக சமூக வலைத்தளங்களில்
பலர் கருத்துக்களைத் தெரிவித்து
வருகின்றனர்.
அவர்களுக்கு
பதிலளிக்கும் விதமாகவே நான்
இந்த பதிவை மேற்கொள்கின்றேன்……
தமிழக
இளைஞர்கள ஜல்லிக்கட்டுக்காக
நடத்திய போராடத்த்தை அன்று
ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில்
கொல்லப்படும் போது மேற்கொண்டிருந்தால்
அத்தனை உயிர்களையும்
காப்பாற்றியிருக்கலாம்.
அப்படி
இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக
வீண் போராட்டம் என்று
கொச்சைப்படுத்துகின்றனர்.
2009
ஆம்
ஆண்டுதான் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்ட
ஆண்டு.
சமூகவலைத்தளங்கள்
என்பது அறிமுகப்படுததப்பட்டு
பெரிதும் இளைஞர்களால் அறியப்படாத
ஆண்டாகவே இருந்தது.
ஈழத்தில்
நடக்கும் பிரச்சினைகளை
சமூகவலைத்தளங்களில் பரவவும்
இல்லை பேஸ்புக் டுவிட்டர்
கடந்த 5
ஆண்டுகள்தான்
மக்களிடத்தில் சென்றடைந்திருக்கின்றது
அவ்வாறு இருக்கும்போது எப்படி
இளைஞர்கள் போராட்டத்தில்
இணைந்திருப்பார்கள் அறிவு
ஜீவிகளே சொல்லுங்கள் பார்ப்பம்.
தமிழகத்தில்
அரசியல் கட்சிகள்தான் மாறிமாறி
ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக
தமது கட்சிகள் சார்பாகவே
ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன
தவிர கட்சி பேதம் இன்றி அனைத்து
கட்சிகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடவில்லை.
இறுதி
யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது
இலங்கையில் இணையத்தளங்கள்
தடைசெய்யப்பட்டன.
அவ்வாறு
தடைசெய்யப்பட்ட இணையத்தளத்தை
பார்வையிட்ட பல இளைஞர்கள்
கைது செய்யப்பட்டனர் இது
வசைபாடுபவர்களுக்கு தெரியாதா?
கொழும்பு
காலிமுகத்திடலில் இடம்பெற்ற
ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான
இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல்
சாராத இளைஞர்களே திரண்டு
தமது ஆதரவினை மேற்கொண்டனர்.
காலிமுகத்திடலில்
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
எத்தனை உளவுத்துறை அதிகாரிகள்
வந்திருந்தனர்.
சிங்கள
இணையத்தளம் ஒன்று கொழும்பில்
புலிகள் வந்துவிட்டனர்.
இது
அவர்களின் ஆர்ப்பாட்டம்
என்று எழுதியிருந்தது.
தமிழக
இளைஞர்களுக்கு நாம் ஏன் ஆதரவு
தெரிவிக்கவேண்டும் என்று
ஒரு நபர் பேஸ்புக்கில்
கேட்டிருக்கின்றார்.
ஈழப்போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து அண்ணன்
முத்துக்குமார் தீக் குளித்தானே
அவன்மட்டுமா எத்தனை தமிழக
இளைஞர்கள் தீக்குளித்து தமது
உயிரை நீத்தார்களே அதுயாருக்காக
அவன் ஏன் தன் உயிரை எமக்காக
தரவேண்டும்.
அவனும்
தமிழன்தானே அவனுக்கு செய்யும்
நன்றிக்கடன் கூட எமக்கு இல்லை.
(தமிழகம்
எமக்கு செய்த உதவிகளை
சொல்லப்போனால் அதற்கு
ஒருபுத்தகமே போடலாம்)
நன்றி
மறப்பது நன்றறன்று……
வசைபடுபவர்கள்
இப்பவும் நண்டுகளாகவே
இருக்கின்றனர்…….
(நண்டுக்கதை
தெரியும்தானே எல்லோருக்கும்
சொல்லவேண்டிய அவசியம் இல்லை)
இளைஞர்களை
ஊக்கப்படுத்தாமல் அப்ப
செய்திருக்கலாம் இப்படி
செய்திருக்கலாம் இப்ப
செய்திருக்கலாம் என்ன்?
என்ன?
கேள்வி
முதலில் நீங்கள் வந்து எங்களுடன்
களத்தில் இறங்குகள் வீட்டில்
இருந்துகொண்டு பேஸ்புக்கில்
போட்டுவீட்டு சோம்போறிகளாக
இருக்காதீர்கள்…..
விரைவில்
….
எமது
நாட்டில் இடம்பெறும்
உரிமைகளுக்காகவும்
காலிமுகத்திடல்லிஎமது இளைஞர்
கூட்டம் விரைவில் கூடும்….
Wednesday, August 12, 2015
Saturday, August 8, 2015
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மடல்.....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு வணக்கம்.
பாராளுமன்ற தேர்தல் வருவதும் வாக்குறுதிகள் கொடுப்பதும் அவை பின்பு காணாமல்போவதும் உலக அரசியலில் நிகழ்ந்து வரும் ஒரு விடயம்தான் அதற்கு கூட்டமைப்பு மட்டும் விதிவிலக்காகிவிட முடியாது....
சரி அது எதற்கு நமக்கு அரசியலில் இது சாதாரணப்பா கவுண்ட மணி ஸ்டைலில் சொல்லவேண்டியிருககின்றது.
இன்முறை பாராளுமன்ற தேர்தல் ஆனது நாட்டில் அமைதி நிலவுகின்ற காலத்தில்வருகின்ற தேர்தல். இம்முறை வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளி;ல் கூடுதல் எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். (சந்தோசம்தான்)
சம்பந்தன் ஐயா கூறியது போன்று இம்முறை தமிழர்களில் தேர்தலில் வெற்றி பெற்று பேரம் பேசும் அரசியலை உருவாக்க கூடிய தகுதி அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகுத்தான் இருக்கின்றது.
வடக்கு கிழக்கில் மாண்டவர்களின் ஏன் விதைக்கப்பட்டவர்களின் கனவு.... தமிழர்கள் சுதந்தரமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே.
இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் ஆவியை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். உலகமே மிகவும் வேதனை அடைந்த அந்த நாட்கள்.........
ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை... வருது.... அது வந்தால் தமிழர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும் என்று நினைக்கலாமா?
தேர்தல் மேடைகளில் ஐ.நா.விசாரணை அறிக்கையை பற்றி பேசுவதை விடுங்கள்....... அது வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதுபோல் வரும்....
உரிமை இழந்து உறவை இழந்து உணர்வுகளோடு மட்டும்தான் இருக்கின்றோம்.
இன்று மீள் குடியேற்றப்பட்டு வசதிகள் இன்றி மக்கள் கண்ணீர் தவி;கின்றனர்.
அவர்களுக்கு ஐ.நா. அறிக்கையை பற்றி பேசி என்ன பயன்? உயிர் வாழ்வதற்கு அவர்களுக்கு ஒரு அதிகாரம் வேண்டும். அதை இம்முறை பேரம் பேசும் அரசியல் மூலம் நீங்கள் பெற்றுக்கொடுக்கலாம்.
கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டாது என்று வீரவசனம் பேசலாம். அதற்கு ஒரு 1000 பேர் வரவேற்பார்கள்..
ஆனால் பாதிக்கப்படப்போவதும் எமது எதிர்கால சந்ததியே... அதை உணர்ந்து
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் அவர்களுக்காக இந்த தேர்தலில் பேரம்பேசும் சக்கியாக மாறி அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டும்.
தமிழர் பிரதேசங்கள் எங்கும் தொழில்சாலைகள் அமைக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும். என்பாட்டன்.. முப்பாட்டான் காலத்தில் இருந்த அதே தெரு அதே கடை இனறும் அதே இடத்தில் இருக்கின்றது. என்றால் நாமும் அதே இடத்தில் தான் நிற்கின்றோம் என்று அர்த்தம்.
அஸ்ரப் காலத்தில் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு பேரம் பேசும் அரசியல் மூலம் அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிவனங்களிலும் அனைத்து திணைக்களங்களிலும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
ஆனால் தமிழ் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.
அவர்களுக்கு உரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் கடமை பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே இருக்கின்றது.
அதை செய்வீர்கள் என்ற ஆதங்கத்துடன்....
நன்றி
இப்படிக்கு
வருங்காலம்
Subscribe to:
Comments (Atom)
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...
-
லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்...
-
கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையி...
-
இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகவேண்டும் என்று வலியு...












